Author Archive

ஓடாதே…

ரிஷி ரவீந்திரன் ”ஓடாதே…” அம்மா பயத்துடன் கத்திக்கொண்டிருந்தார். 10 வயது துருதுருப்புடன் எப்பொழுதும் நான் ஓடி விளையாடுவதைப் பார்த்து எங்கள் வீட்டில் அனைவருமே “ஓடாதே” என எச்சரிப்பர். இதிலென்ன அதிசயம்...? இது எல்லார் வீட்டிலும் சகஜம்தானே...? அடடா... நான் என்னைப் பற்றி உங்களுக்குச் சொல்லவேயில்லையே..! நான்...? என் பெயர் சீனிவாசன். என்னை சீனு என்றே செல்லமாக அழைப்பர். நான் என் அண்ணனின் தம்பியா அல்லது மகனா என்று தெரியவில்லை. என்ன தலை சுழல்கின்றதா….? வெங்கடேஷ் அண்ணாவின் உடலிலிருந்து செல்லினை எடுத்து க்ளோனிங்க் முறையில் உருவாக்கப்பட்ட ... Full story

நிஜம்

நிஜம்
  ரிஷி ரவீந்திரன் உனக்குத் தெரிந்த நானும் எனக்குத் தெரிந்த நீயும் யாரோ ?... என்னைப் பற்றி நீ அறிந்த நிஜமும் உன்னைப் பற்றி நான் அறிந்த நிஜமும் நிஜமான நிஜமா ? Full story

மழை!….

மழை!....
ரிஷி ரவீந்திரன்   பால்ய காலத்தில் மழையில் நனைந்து ரசிப்பது மிகவும் பிடிக்கும்.. கல்லூரிக்காலங்களில் எங்கள் கிராமத்திலிருந்து கல்லூரிக்கு சைக்கிளில் பயணிப்பது வழக்கம்.பெருமழைக் காலங்களில் சிலசமயம் சைக்கிளை மேற்செலுத்த இயலாமல் பேய்மழை கண்களை மறைக்கும். ஒரு புறம் மழையில் நனைவதென்பது  மற்றவர்கள் நினைப்பது போல் எதோ ஷவர் பாத்தில் தூவாளையாகக் குளிப்பது போலன்று. எங்கள் கிராமங்களில் பெய்யும் மழையானது பேய்மழை ! கன்னத்திலும் உடலிலும் பொளேர் பொளேர் என அறையும். அதிக திசைவேகத்துடன் புவியீர்ப்பு முடுக்கத்தினால் வேகமாய் நம் மீது வந்தறையும். அறைதலின் வலி அனுபவித்தவர்களுக்கே புரியும். ஒரு புறம் புத்தகப் ... Full story

How to Reduce Weight…

Rishi Raveendran   How_to_Reduce_Weight..click here to view the pdf file                    Full story

நிர்வாண நேனோ செகண்ட்ஸ்… -11

ரிஷி ரவீந்திரன் முன் கதை: 00, 01 ,02, 03, 04, 05, 06, 07, 08, 09, 10 இனி …. புத்தாலயம். ”ஆரா...வானோ பிந்திசாரம்...போதிசத்வா…தந்திரம் ப்ரஸ்ன்னா….” என்ற அந்தப் புகழ்வாய்ந்த பாடலினைப் பாடிக்கொண்டிருந்தனர். நித்ய சாந்தி பிக்கு தவத்திற்கு வந்த அப்சியாசிகளின் கேள்விகளுக்கு விடையளிக்கும் நேரம் வந்தது. “Enlightenment என்றால் என்ன…..?” என ஒரு பயிற்சியாளர் கேட்க, ”ஞானம் அல்லது Enlightenment ... Full story

நிர்வாண நேனோ செகண்ட்ஸ்…-10

  நிர்வாண நேனோ செகண்ட்ஸ்... -10       முன் கதை: 00, 01 ,02, 03, 04, 05, 06, 07, ... Full story

நிர்வாண நேனோ செகண்ட்ஸ் (9)

நிர்வாண நேனோ செகண்ட்ஸ் (9)
ரிஷி ரவீந்திரன் கோபால்சாமித் தாத்தா வெல வெலத்துப் போனார். இந்த  விஞ்ஞான உலகில் பில்லி சூன்யம்  இதெல்லாம் எப்படி நம்புவது….?  என மிகவும் குழம்பிப் போனார். யார் ரங்கராஜின் மீது பில்லி சூன்யம் ஏவியிருப்பர்….? யாரும் அப்படி பகைவர்கள்  இல்லையே….? எல்லோரையுமே நாங்கள் நண்பர்களாகத்தானே பாவிக்கின்றோம்….? ஏன் வஞ்சம்…? ஏன் பழியுணர்ச்சி….? மனிதர்களில் இத்தனை நிறங்களா….? தாயுறவுள்ள ஒருத்தி…? யார் அவர்….? இரத்த உறவினில் அப்படி யாரும் இல்லையே….? ‘சரி  சுவாமிஜி…. இந்த பில்லி சூன்யம்  ... Full story

நிர்வாண நேனோ செகண்ட்ஸ்… -8

நிர்வாண நேனோ செகண்ட்ஸ்...  -8
ரிஷி ரவீந்திரன் ரங்கராஜின் உடல் மெல்ல மெல்ல அந்தரத்தில் உயர்ந்து கொண்டிருந்ததைக் கண்டு டாக்டர் பால சுப்ரமணியன், டாக்டர் ராதாகிருஷ்ணன், கோபால்ஜி, ஐஐடி சிவா, தாத்தா, பாட்டி மற்றும் அனைவரும் வெல வெலத்துப் போயினர். டாக்டர் பாலாவின் உடல் உரோமங்கள் சிலிர்த்துக் கொண்டன. முகமெல்லாம் குப்பென்று வியர்த்துக் கொட்டியது. ரங்கராஜின்  உடல் மூன்று நான்கு அடிகளுக்கும் மேலெழும்பியது. ஐஐடி  சிவா தன் பலமனைத்தையும்  ஒன்று திரட்டி ரங்கராஜின் வலக்கையைப் பிடித்துக் கீழ்நோக்கி இழுக்க…. கோபால்ஜி இடக்கையை ... Full story

நிர்வாண நேனோ செகண்ட்ஸ்- 7

நிர்வாண நேனோ செகண்ட்ஸ்- 7
ரிஷி ரவீந்திரன் நாரணாபுரம். ரங்கராஜின் கிராமம். சிவகாசியிலிருந்து கிழக்கே இரண்டு மைல் தொலைவு. கிருஷ்ணன் கோவில். திறந்த வெளி மைதானம்.  மடைப்பள்ளியையொட்டி ஒரு மேடை.  மேடையில் கோபால்ஜி பிரசங்கம்  ஆரம்பிக்கும் முன் அருகிலிருந்த பட்டாபி ராமர் கோலத்திலிருக்கும் ராமரையும் சீதாப் பிராட்டியையும் வணங்கிவிட்டு….. ஹரே ராமா…. ஹரே ராமா…. ராம ராம ஹரே ஹரே…. ஹரே க்ருஷ்ண… ஹரே க்ருஷ்ண… க்ருஷ்ண……க்ருஷ்ண ஹரே ஹரே….. ஹரே ராமா…. ஹரே ராமா…. ராம ராம  ஹரே ஹரே…. ... Full story

நிர்வாண நேனோ செகண்ட்ஸ்… – 6

நிர்வாண நேனோ செகண்ட்ஸ்... - 6
ரிஷி ரவீந்திரன்   ஐஐடி. கெளஹாத்தி. பத்தாம் ஆண்டு பட்டமளிப்பு விழா. சிறப்பு விருந்தினர்கள். சோடா புட்டிக் கண்ணாடிகளில் மொசைக் தலை விஞ்ஞானிகள் மற்றும் பேராசிரியர்கள். கெளஹாத்தி ஐஐடியின் இயக்குனர் பேரா.கவுதம் பருவா சந்தன நிற ஜிப்பாவினுள் ஐக்கியமாகி நீண்ட துண்டு ஒன்றினைத் தன் முழங்காலினைத் தொடும்படித் தொங்க விட்டிருந்தார். அரங்கம் இருட்டாக்கப்பட்டு மேடையின் மீது ஒளிக் குவிப்பான் விளக்குகளை ஒளிர விட்டு ப்ரஜக்ட்டர் ஓட விடப்பட்டது. புரஜக்டரில் பட்டம் வாங்கும் மாணவர்களின்  பெயரினையும் துறையினையும் ஓட விட்டனர். ஒவ்வொரு ... Full story

நிர்வாண நேனோ செகண்ட்ஸ்… -5

ரிஷி ரவீந்திரன் குழாயினுள்ளிருந்து ரத்தம் வருவதைக் கண்ட பாட்டி ‘வீல்’ என அலறி மயக்கமாகிக் கீழே விழுந்தார். ரங்கராஜ்  திடுக்கிட்டான். அதிர்ச்சியில்  கை கால்களெல்லாம் நடுங்க ஆரம்பித்தன. இனம்புரியா ஒருவித பய உணர்வு அட்ரிலினை ஆட்டிப்படைத்தது. உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால்கள்வரை ஜிவ்வென பய உணர்வுகள் பீரிட்டன. இதயம் மிக வேகமாக அடிக்க ஆரம்பித்தது. இதயத்துடிப்பின் ஓசையை நன்றாக உணரமுடிந்தது. ஆழமாய்  மூச்சினை உள்ளிழுத்து மூச்சினை மெதுவாய் வெளியேற்றி சில  நொடிகளில் தன் நிலைக்கு வந்தான். மூளையின்  நியூரான்கள் வேகமாக ... Full story

நிர்வாண நேனோ செகண்ட்ஸ்…4

நிர்வாண நேனோ செகண்ட்ஸ்...4
ரிஷி ரவீந்திரன் பாட்டி  வேங்கடம்மாள் பெரும் கவலையிலாழ்ந்தார். இது எதோ தோஷம் எனவும் என்னவோ கெட்ட காரியம் ஒன்று  நடப்பதற்கு  ஒரு சகுனம் என்றும் கூறிக்கொண்டிருந்தார். ஜீயரிடம் இதைப்பற்றி ஆலோசிக்க வேண்டும் என்றார். ‘ம்…. இதெல்லாம் மூட நம்பிக்கைகள்….’ தாத்தா. ‘இப்டி  வியாக்யானம் பேசாம அடுத்து  என்ன செய்யணும்..னு யோசிங்க….’ ரங்கராஜின்  தாத்தாவும் பாட்டியும் நேரெதிர் துருவங்கள். பாட்டி  ஆழ்ந்த கடவுள் நம்பிக்கை. தாத்தா எதையும் அலசி ஆராயும் சுபாவம். வட தென் துருவங்கள். ‘நல்ல சகுனம்….கெட்ட சகுனம்….. அப்படி எதுவும் இல்லை… இதெல்லாம் மனிதனாய் கற்பித்துக்கொண்டது….’ தாத்தா. ’பூனை குறுக்கே போவதும்…. சிலர் எதிரே வருவதும்… இன்னும் இப்படி எத்தனையோ கெட்ட சகுனங்கள் என நாம் குறிப்பிடுகின்றோமே….?’ ரங்கராஜ். ‘பூனை, பன்றி, நாய்… இவைகளுக்கெல்லாம் உயிர்ச்சுழல் ஆண்ட்டி க்ளாக்வேய்ஸ் டைரக்‌ஷன்ல இருக்கும்…. மனிதனுக்க்கு க்ளாக் வேய்ஸ் டைரக்‌ஷன்…. இதனால் நம் உயிராற்றலில் மின்காந்தக் கலத்தில் ஒரு Short Circuit ஏற்படுகின்றது….. இதனால் மனத்தின் சமநிலையில் சிறு மாற்றம். அமைதியற்ற மனதினிலிருந்து வெளிப்படும்  செயல்களின் விளைவுகள் நாம் விரும்பும் பலனைத் தரா. அதனை சமன் செய்யவே நாம் சிறிது நேரம் அமர்ந்து… உயிராற்றலின் சுழலை சீரமைக்கின்றோம்…. இதனையே  ஒரு குண்டலினியோகம் தெரிந்தவர் மூலாதாரத்தினில் உயிராற்றிலினை  கண நொடியில் நிறுத்தி…. மின்காந்தக்  கலத்தில் ஏற்படும் Magnetic Flux ஐ  நிலைப்படுத்தலாம்…’ ‘பாம்பு….? ’பாம்புகளின்  தகவமைப்புகளின்படி அவை  உஷ்ணப் ப்ரதேசங்களை நாடிச் செல்கின்றன. அவைகளுக்கு எங்கே  உணவு கிடைக்கின்றதோ அதை  நோக்கி நகரும்…. மேலும் ஒரு  பாதுகாப்பான இருப்பிடத்தினைத் தேடிக்கொள்ளும்… இவைகளெல்லாம் டார்வினின் Survival of Fittest தியரிப்படி சரியே….’ ”சரி  தாத்தா… மனிதர்கள் எதிர்  வருவது எப்படி கெட்ட சகுனமாகும்….?” “ஒரு  புத்தரோ… ஒரு வள்ளுவரோ… ஒரு ராமகிருஷ்ண பரமஹம்ஸரோ எதிரே வந்தால் அதனை கெட்ட சகுனமாக யாரும் நினைப்பதில்லையே….? அது அவரவர்களின் காந்தக் கலனைப் பொறுத்த விஷயம்…. ” “………………………………….” நீண்ட மெளனம்…. ரங்கராஜ்  குடுகுடுப்பைக்காரன் சொன்ன  விஷயத்தினை இப்பொழுது பாட்டியிடம்  சொல்லிக்கொண்டிருந்தான். பாட்டி  மிகவும் படபடப்பானார். தாத்தாவை உடனே ஜீயரிடம் விரட்டினார். சகுனங்கள்…  வேதங்கள்… கடவுள்கள்….. இதெல்லாம்  மனிதனால் கற்பிக்கப்பட்டவை… சாமியும் இல்லை…. பூதமும் இல்லை… எல்லாம் விஞ்ஞானமே…! இதெல்லாம் மனம் சார்ந்த நம்பிக்கைகள். உண்மையில் ஒருவன் மனோ வலிமையுடன் இருக்கும்பொழுது எதுவும்  ஒன்றும் செய்ய முடியாது. அப்படியானால்  நல்லவர்கள் வந்தால் நல்ல சகுனம். கெட்டவர்கள் வந்தால்  கெட்ட சகுனமா…? நல்லவர்  கெட்டவர் என்றால் என்ன….? எண்ணங்களோ….? ஆக எண்ணங்கள் எது வலுவாகின்றதோ… அது ஜெயிக்கும்…. டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி தன்  எண்ணங்கள் என்ற புத்தகத்தில் சொன்னது ஞாபகம் வந்தது…  “வாழச் சொன்னது வாழ்ந்தது…. “ என இரு பாக்டீரியாக்களை  ஆய்வகத்தில் விஞ்ஞானிகள்  நடத்திய சோதனைகளில் குறிப்பிட்டிருப்பார். வலிமையான  எண்ணங்களால் எதையும் சாதிக்கலாம். நீ  இக்கணத்தில் எங்கே இருக்கின்றாய்  என்பது முக்கியமில்லை. நீ இக்கணத்தில்  யாராய் இருக்கின்றாய் என்பது முக்கியமில்லை…. நீ இக்கணத்தில்  என்னவாய் இருக்கின்றாய்  என்பது முக்கியமில்லை…. எந்த ஒரு குறிக்கோளையும் வலிமையான எண்ணங்களால் நாம் அடையலாமோ…? இப்படியாக இப்பொழுது ரங்கராஜின் Magnetic Fieldல் பல Fluxகள்  ஏற்பட்டுக்கொண்டிருந்தன. எண்ணங்கள் எங்கிருந்து வருகின்றன….? மனதிலிருந்து…. மனம்  என்றால் என்ன….? அது எங்கிருக்கின்றது….? மருத்துவ  அறிவியல் என்ன சொல்கின்றது….? எண்ணங்கள் உற்பத்தியாகுமிடம் மனம் என்கின்றனர்…. சிலர் இதயத்தினைக் காட்டுவர். அறிவியல் மூளையைக் காட்டுகின்றது…. அப்படியானால்  மூளை இறந்துவிட்டால் மனம் இறந்துவிடுமா….? ஆனால் இறந்தபின்னும் சிலர் இதே கிராமத்தில் ஆவியாக இன்னொரு உடலில் இறங்கி தான் கொலைசெய்யப்பட்ட விதம் பற்றி விளக்குகின்றனரே…? அது எப்படி….? ஒரே கிராமத்தில் பார்த்த மனிதன் என்பதனாலா…? மல்டிபிள் பெர்சனாலிட்டி…? இல்லை .. இல்லை… இன்னும் சில நேரத்தில் புரியாத  ஒரியா பாஷையில் பேசி தான் இன்னவிதமாகக் கொலைசெய்யப்பட்டேன் என அந்த ஆவி இறங்கிய உடலிலிருந்து பேசுகின்றதே….? ஒரியா சென்று தகவலை சோதித்தால் மிகத் துல்லியமாக இருக்கின்றதே…? இறந்த பின்னும் மனம் இறக்கவில்லையோ…?  இதுதான் ஆன்மா என்பதா…? ஆன்மா என்றால் என்ன….? உயிர் என்றால்  என்ன….? அது எங்கிருந்து  வருகின்றது…? மரணம் என்றால் என்ன….? இதயம் நின்றுவிடுவதா…? மூச்சு நின்றுவிடுவதா…? மூளை இறந்துவிடுவதா…? அப்படியெனில் இவைகளெல்லாம் செயலிழந்தாலும்கூட அனன்ஸெஃபாலிக்காய் இருக்க முடிகின்றதே….? நாம்  பிறப்பதற்கு முன் நம் நிலை என்ன…? இறந்த பின் நம் நிலை என்ன….? இடையில் இத்தனை அறியாமையா…? ஆனாலும் இந்த அறியாமையில்  எத்தனை அதிகாரங்கள்…? எத்தனை அக்கிரமங்கள்….? எத்தனை தத்துவங்கள்….? எத்தனை ஆர்ப்பாட்டங்கள்….? நான் பெரியவன்…? எல்லாம் எனக்குக் கீழே….  இது என் சொத்து…. இது என் வீடு…. ஒன்றுமே புரியாமல் குழம்பி குழம்பி  ரங்கராஜ் அயர்ச்சியானான். தன்னறையில்  படுத்துக்கொண்டு இப்பொழுது யோசிக்கலானான். எண்ணங்கள் எவ்வளவு வலிமையானவை என்பதனைத் தன் அனுபவத்திலிருந்து  அசைபோடலானான். இந்தியாவின்  ஒரு பிரபலமான பல்கலைக்கழகம். இப்பல்கலைக் கழகத்திலிருந்தே  பெளதிகத்தில் பெயர் சொல்லிக்கொள்ளும்படியான பல விஞ்ஞானிகள் வெளிவந்திருந்தனர்… அதில் ரங்கராஜ் பெளதிகம் பயின்றபொழுது நிகழ்ந்த ஒரு நிகழ்வு, ஒரு முறை தான் ஒரு முக்கியமான இறுதி பல்கலைக் கழகத் தேர்விற்குச் செல்லும் பொழுது பூனை குறுக்கேச் சென்றது…. அது மட்டுமின்றி அங்கிருந்த ஒரு பாம்புடன் அது சண்டையிட்டுக் கொண்டிருந்தது… மிகவும் கெட்ட சகுனம் என எண்ணி  சக மாணவ நண்பர்கள் தங்களது அறைக்குத் திரும்பிச் சென்று நீர் அருந்திவிட்டு சிறிது நேரம் கழித்து வந்தனர். அப்பொழுது ரங்கராஜ் தன் மனதினில் பலமுறை ஆழமாய் சொல்லிக்கொண்டான்…. “இன்று  எனக்கு நல்ல நாள்… நான் எக்ஸாமில்  சிக்ஸரும், ஃபோருமாய் விளாசி விளையாடுவேன்….” இத்தனைக்கும்  அந்த தேர்வினை எழுத இயலா நிலை. நல்ல காய்ச்சல், தலைவலி, இரத்தப் போக்கு எனப் பல சிக்கல்கள்…. எழுந்து நடமாட முடியா நிலை….. ஆனால் எண்ணங்களின் வலிமையினால்  எளிதாக வெற்றி கொள்ள முடிந்தது. யோகா, தவம், ப்ரணாயாமம் என அதிகமாய் பரீட்சைக்காகப் பண்ணியதால் இப்படி உடல்நிலை பாதித்தது. அனைவரும் பரீட்சைக்காக இரவு பகலாய் மூன்று மாதங்களாய் மும்முரமாய் படித்துக்கொண்டிருந்தால் இவன் மட்டும் இரவு பகலாய் பரீட்சைக்காக Mind Concentration & Memoryக்காக யோகா,தவம், ப்ரணாயாமம்  என பண்ணிக்கொண்டிருந்தான். பொதுவாக அந்த வருடம் முழுதும் விளையாடிவிட்டு பரீட்சைக்கு ஒரு நாள் இரவு மட்டுமே படிப்பது ரங்கராஜின் வாடிக்கை. ஆனால் இம்முறை அதுவும் முடியாமல் போனது. இந்த ஒரு பேப்பர் மட்டுமே மிகவும் கடினமான பரீட்சை. இதை மட்டும் பாஸ் பண்ணினால் போதும். M.S Degree வந்துவிடும். சிலபஸ்  ஒன்று இருக்கும். பேராசான்கள் ஒன்று பாடம் நடத்துவர். Prescribed புத்தகங்களையும் வேறு சில புத்தகங்களையும்,  அந்தத் துறையிலிருந்து வெளிவரும் Latest Journals என எல்லாம் Integrate பண்ணி படித்துவிட்டு எக்ஸாமுக்கு சென்றால் இதிலிருந்து ஒரு வினா கூட கேட்கப்படுவதில்லை. இரண்டு வெவ்வேறு மிகப்பெரிய இண்ஸ்டிட்யூட்/யுனிவர்சிடிகளில் தனித்தனியே Valuations.  யாரையும் எளிதில் பாஸ் ஆக்கிவிடமாட்டார்கள். கல்வித் தர நிர்ணயம். Full story

நிர்வாண நேனோ செகண்ட்ஸ்… பாகம்- 3

ரிஷி ரவீந்திரன். ரங்கராஜ் நகைத்தான். பில்லிசூனியமாவது மண்ணாங்கட்டியாவது.... இந்த விஞ்ஞான உலகில் இதெல்லாம் வெறும் புரூடா. வேலையற்ற வீணர்களின் வீண் பயமுறுத்தல். பில்லிசூனியம் பலிக்கட்டும். வா... நீ என்னிடம் வா...? எப்படி என்னிடம் நெருங்குகின்றாய் எனப் பார்க்கின்றேன்.  அதனை அக்கு வேறு ஆணி வேறாக ஆராய்ச்சி செய்யவேண்டும். என்ன நடந்துவிடும்...? மிஞ்சி மிஞ்சிப் போனால் மரணம்தானே...? அதையும் ஒரு கை பார்த்துவிடலாம். மரணத்தைக் கண்டு ஏன் பயப்பட வேண்டும். The Art of Dyeing ... Full story

“நிர்வாண நேனோ செகண்ட்ஸ்… – 2 “

ரிஷி ரவீந்திரன்   ஆயிரம்  வாட் ஷாக்.....! ‘குற்றங்கள் எண்ணத் துணியாதவன்.... வலிய சென்று மாட்டிக்கொள்வாய்.... உன்  கருமையப் பதிவுகள் இவை.... ’ பெரியவரின் வார்த்தைகள் ரங்கராஜினுள் எக்கோவாக ஒலித்துக் கொண்டிருந்தது. நோ.... விதி எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். நான் இதிலிருந்து வெளியே வரவேண்டும்... என்ன செய்யலாம்....? நாமனைவரும்  யார்....? சக பயணிகள்தானோ...? ஏன்  வீணான பற்று...? அவரவர் நிறுத்தம்  வந்தால்....? Move towards your goal with detached attachment like a wheel. பெரியவரின் சிந்தனைகள் மனதினுள் ஓடியது. முதலில் இங்கிருந்து தப்பியோட வேண்டும். நான் ஏன் ஓடவேண்டும்....? ... Full story

நிர்வாண நேனோ செகண்ட்ஸ்… – 1

(புதிய தொடர் கதை) ரிஷி ரவீந்திரன் | எழுத்தாளர் ரிஷி ரவீந்திரன் பற்றி | பயணிகள் கவனிக்கவும். வண்டி எண் இரண்டு ஆறு ஒன்பது மூன்று, சென்னை எழும்பூரிலிருந்து விழுப்புரம், திருச்சி, மதுரை, விருதுநகர் வழியாகத் தூத்துக்குடி செல்லும் முத்துநகர் விரைவு வண்டி சரியாக இரவு ஏழு மணி முப்பது ... Full story
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.