Author Archive

அந்த வெடி வெடிக்கையில் அந்த விதைகள் முளைக்கிறது..

வித்யாசாகர்   கொலம்போ விமான நிலையைம். தலையை ஒதுக்கி வாரி, தலைப்பாகையை எடுத்து மேல்கட்டிக் கொண்டு, காவித் துண்டு ஒன்றினை அகல விரித்து மார்பு முதுகு சுற்றி பின்னிடுப்பில் சொருகிக்கொண்டு, பொத்தான்போலயிருந்த மினி காமிரா ஒன்றினையெடுத்து துண்டு துண்டாக கழற்றி சிறு சிறு பிரத்தியேக காகிதத்தில் சுற்றி மடித்து அதை சாப்பாட்டுப் பொட்டலத்திற்கு நடுவில் திணித்துவைத்துக்கொண்டு தோள்பையொன்றினை எடுத்து மாட்டிக்கொண்டவாறு கழிப்பறையிலிருந்து வெளியேறி இமிக்ரேசனில் நுழைந்து அதிகாரிக்கு வணக்கம் தெரிவிக்கிறானவன் ஆங்கிலத்தில்.. “பாஸ்போர்ட் கொடு..” “ம்ம்.. “ “உன் பேரென்ன ?”... Full story

என் தாய் வீடு..

என் தாய் வீடு..
வித்யாசாகர் முன்பெல்லாம் எனக்கு அம்மா என்று அழைக்கவாவது ஒருத்தி இருந்தாள்; என்றேனும் அவளைப் பார்க்கப் போகையில் மாதத் தவணையில் பணம் கட்டியேனும் எனக்கொரு புடவை வாங்கி வைத்திருப்பாள்; முடியாவிட்டாலும் எழுந்து எனக்குப் பிடித்ததை பார்த்துப் பார்த்து சமைத்துத் தருவாள்; உதவி செய்யப் போனால் கூட “வேண்டாண்டி இங்கையாவது நீ உட்கார்ந்து தின்று போ; அங்கே உனக்குத் தர யாரிருக்கா?” என்பாள். என்னதான் நான் பேசாவிட்டாலும் இரண்டொரு நாளைக்கேனும் எனை அழைத்து “எப்படி இருக்க.. என்னடி செய்த.. உடம்பெல்லாம் பரவாயில்லையா”யென்று கேட்பாள்; இப்போது எனக்கென்று யாருமேயில்லை. நானெப்படி இருக்கேனோ என்று வருந்த அம்மா போல் யார் வருவா??? அம்மா இல்லாத வீடென்றாலும் எப்பொழுதேனும் அங்கே சென்று அவள் இருந்த இடத்தை, தொட்ட பொருட்களை யெல்லாம் தொட்டுப் பார்க்க ... Full story

அம்மா அப்பாயெனும் வானமும் பூமியும் – வாழ்வியல் கட்டுரை

அம்மா அப்பாயெனும் வானமும் பூமியும் - வாழ்வியல் கட்டுரை
வித்யாசாகர் ஆயிரம் கண்ணாடிகளில் பிரதிபலித்து கண்ணைப்பறிக்கும் வெளிச்சமாகவே இருக்கிறது வாழ்க்கை. நாம் தான் அதில் பொய்யையும் புரட்டையும் கலந்து வளத்தையும் நலத்தையும் இழந்து நம்பிக்கைக்கு அப்பாற்பட்ட ஒரு வாழ்க்கையை வாழ்ந்து சோகத்தையும் சரிவையுமே கொண்டு ஒளியிழந்தும் மகிழ்விழந்தும் வாழ்கிறோம். சற்று சரிவரப் பார்த்தால் நமக்கான அனைத்தும் நம்மைச் சுற்றியே நிறைந்து கிடக்கிறது. அதை எடுத்துக் கொள்ளும் தெளிவில்தான் நாம் ஒருவரில் ஒருவர்   மாறுபட்டுப் போகிறோம். எடுத்துக்காட்டாக நம்மோடுள்ள பெரியவர்களின் பெரும்பான்மையான நிலையை எடுத்துக் கொள்ளுங்கள். உண்மையில் அவர்கள் நமக்கு நல்ல வழிகாட்டிகளாக மட்டுமல்லாமல் நல்ல தோழமையையும் அன்பையும் ... Full story

என் தேசம் தூயதேசம்

என் தேசம் தூயதேசம்
வித்யாசாகர் ஆம் அப்போதெல்லாம் என் தேசம் தூயதேசம்.. மனிதர்கள் அன்றெல்லாம், மழை பெய்யும் ஈரத்தின் வாசம்போல் மனதிற்கு ஈர்ப்பாக வாழ்ந்திருக்கின்றனர்; பிறருக்குக் கொடுப்பதும் பிறரை மதிப்பதும் உயிர்விடும் செயலிற்கரிய - மனிதரின் மாண்பாக விளங்கியிருக்கிறது; விலங்குகளுக்கு மட்டுமே பயந்து வேலியமைத்தோம், மானம் மறைக்கவே ஆடையுடுத்தினோம் தேவைக்குட்பட்டே வாழ்தலிருந்தது; வேற்றுமொழி திணித்துப் பேசத் தெரிந்திருக்கவில்லை, வேற்று மனிதராய் யாரையும் பிரிக்க அவசியப்படவுமில்லை; விவசாயம் சுயமாக நடந்ததில் வாரி மறைக்கவோ, உழைப்பின்றி உயிர்கொள்ளும் நோயுறவோ வாய்ப்பேற்பட்டிருக்கவில்லை; தானம் பரிவு ஒழுக்கம் உண்மை தைரியம் தெளிவு வேகம் வரலாறெல்லாம் உணவு மறுக்கப் பட்டாலும் பாடத்தில் போதிக்கப் பட்டது; இப்போது நாங்கள் கால் வைத்த ... Full story

என் பால்ய காலம்

என் பால்ய காலம்
வித்யாசாகர் மண்சோறு தின்ற நாட்களது.. சனி ஞாயிற்றுக் கிழமைகளில் விடுமுறையெனில் அம்மாவிற்கும் அப்பாவிற்கும் அத்தனை பயம் வரும்; வீடெல்லாம் விளையாட்டு நிறையும் 'வாஷிங் பவ்டர் நிர்மா' விளம்பரம் கூட இனிக்கும் ஒளியும் ஒலியும் மாற்றி விட்டு வேறு சானலில் - வயலும்வாழ்வும் வைக்க முடியாது அன்று; தொலைக்காட்சியை நிறுத்தி விட்டால் திருடன் போலீஸ் விளையாட பிளாட் போடாத இடங்கள் நிறைய இருந்தன; தும்பி பிடித்துத் தலை திருகிப் போடுவதால் ஒரு உயிர் போகிறதே என்று கூட அத்தனை அறிந்திருக்காத நாட்களது; ஓடும் தெருவில் கோவில் இருந்தால் உள்ளே சாமிதான் இருக்கிறதென்று முழுமையாக நம்பிய மனது அது; மறைத்து வைக்கத் தெரியாத பொருட்களை கொடுக்க மனமின்றி அழுத அந்த ... Full story

திருநெல்வேலி அல்வாவும் பல கோடிப் பணமும்!!

திருநெல்வேலி அல்வாவும் பல கோடிப் பணமும்!!
வித்யாசாகர் பள்ளியில் கட்டுரைப் போட்டியிலோ ஓவியப் போட்டியிலோ கலந்து கொள்ளும் ஒரு மாணவனை அழைத்து 'இந்தா, நீ உலகத்தின் முதல் பரிசினைப் பெற்றாய்' என்று கையில் கொடுத்தால் அந்த மாணவனின் முகத்தில் எத்தனை வெளிச்சங்கள் சிரிப்பாய்ப் பிரகாசிக்குமோ அப்படித் தான் பிரகாசித்தான் இனியன். 'தமிழினியன்' அவன் முழுப் பெயரென்றாலும் இனியனென்றே நண்பர்கள் அழைத்துக் கொண்டு அவன் பின்னால் ஓடினார்கள். இனியனுக்கு வாழ்வின் அத்தனை வெற்றிகளும் உள்ளங்கையில் விழுந்து கிடப்பதாய் ஒரு ... Full story

‘கத்தாமா’ ஒரு பெண்ணின் கதை!!

‘கத்தாமா’ ஒரு பெண்ணின் கதை!!
வித்யாசாகர் பணத்தை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு மனிதம் விற்கும் ஒரு நபரின், மனிதம் ஏன் பணத்திற்கெனில் எதையும் விற்கும் ஒரு நபரின் அலுவல் அது. அங்கே வெளிநாட்டிற்கு ஆட்களை விற்கும் பணி நடந்து கொண்டிருந்தது. கேட்டால் 'வெளிநாட்டில் வேலை செய்ய ஆள் எடுக்கிறோம்' என்றார்கள். அதும் ‘குவைத்திற்கு படித்த பெண்கள் தேவை’ என ஆங்காங்கே விளம்பரம் வேறு. மீரா வெகு ஆவலாக அந்த அலுவலை நோக்கி ... Full story
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.