Author Archive

தாய்மை

தாய்மை
திருவாரூர் ரேவதி   முல்லை மலர் போன்ற முத்து பல் விரித்து சின்ன கருவிழியில் மின்னும் ஆனந்தம்   நடராஜரை நினைவூட்டி நர்த்தனமாடும் கருங்குடுமி வட்ட முகத்தின் வடிவழகை கூட்டும் சின்ன கன்னங்கள்   குப்புற வைத்த  குடைமிளகாயின் கீழ் ஒட்ட வைத்த உதடுகள்   வெள்ளி அரைஞனுடன் தாயிடம் கற்ற தமிழின் முற்று பெறாத  வார்த்தையுமாய்   விளையாட முடியாமல் அடைப்பட்டு கிடக்கும் அரண்மனைக் கிளியும்   அரையாடையும் அணியாத சின்ன குயிலின் சிரிப்பும் தாலாட்டும் தாய்க்கு ஒன்றுதான் படத்திற்கு நன்றி   http://ayurvedaelements.com/articledivinedelivery.php Full story

மலர்கள்!

மலர்கள்!
  திருவாரூர் ரேவதி   சோம்பல் முறித்த சூரியக் கதிர்கள் மெல்ல எட்டிப்பார்க்கும் மென் காலைப் பொழுது வாசல் தெளிக்கும் வஞ்சியர் அணிந்த வளையோசை சிரிப்பில் மெல்லத் தலையாட்டி வண்ணக் கதிரை  வரவேற்கும் தென்னங்கீற்றுகள் இரம்மியமாய் இதை  ரசிக்க, ரகசியமாய்  மூச்சுக்குள் முன்னேறி  என்னை எழ வைத்தன  மலர்கள்   படத்துக்கு நன்றி http://shoaibnzm2.blogspot.in/2012/08/flowers-beauty-desktop-wallpapers.html    Full story

உன் கண்கள் வாசித்த கவிதைகள்

உன் கண்கள்  வாசித்த கவிதைகள்
திருவாரூர் ரேவதி கள்ளமில்லா சிரிப்பும் கருணை பார்வையும் நெஞ்சை உலுக்கிய  நேச வார்த்தைகளுமாய் உதறவும் முடியாமல் உணர்த்தவும் முடியாமல் நெருப்பில் வலம் வந்த - நம் நேரங்கள் மாறியது  காலம் பரிசளித்த  பிரிவின் கடைசி  நிமிடங்களில்    உன் கண்கள்  வாசித்த கவிதைகள் இதம் தரும் குளிராய்  என்னுள் வாழும்  இறுதி வரை   படத்துக்கு நன்றி   http://ansrana.blogspot.in/2011/12/beautiful-eyes.html Full story

இளமையில் வறுமை

இளமையில் வறுமை
திருவாரூர் ரேவதி சில்லரையாய்ச் சிரிக்கும்சின்ன வயது எனக்கு.ஆடத் துடிக்கும் கால்களைஅடக்கி வைக்கிறது வயிறுஓடி விளையாட ஆசைதான்பாரதி மாமா,ஆடி அடங்கிய பின்ஆடத் துவங்கும் வயிற்றுக்குவழி தெரியவில்லையேஎன்ன செய்ய.   படத்திற்கு நன்றி:http://articles.businessinsider.com/2012-02-24/markets/31093922_1_debt-collectors-borrowers-pesticide   Full story

நிஜம்

நிஜம்
திருவாரூர் ரேவதி சமுதாயச் சலசலப்பில்திறந்த விழிகளுக்குள் உறங்கும் மனது,மூடிய விழிகளில்உறக்கம் தொலைக்கும்சலசலக்கும் மனது,சட்டென விலகும்நட்பும் உறவும்நஞ்சாய்த் தோன்றும்நிஜவுலகில் நிலையாய்வாழ நெஞ்சுக்குத்தெளிவில்லை.   படத்திற்கு நன்றி:http://www.free-stockphotos.com/download-free-heart-with-flowers-pictures Full story

நேசம்

நேசம்
திருவாரூர் ரேவதி மாளிகையில் ஜோதியாய்வீட்டுக்குள் விளக்காய்உள்ளுக்குள் உயிராய் மௌனத்தின் வார்த்தைகளாய்மந்தகாச புன்னகையாய்இரவில் நிலவாய்பட்டொளி வீசும் நேசம் மூளையை அடக்கி முழுதாய் ஆட்சியை தானே ஏற்கும்நாணத்தால் சுருங்கிநான்காய் விரியும் நீரான பனிநெருப்பாய் ஆவதுண்டுசில நேரம் மிதமாய் நெஞ்சைஅணைத்த நேசம்இருளாய் மாறிஇறுக்கவும் செய்யும் சுழலில் சிக்கியசூழலால்  படத்திற்கு நன்றி :  http://media.photobucket.com/image/inspirational%20love%20quotes/x2xsimonx2x/Quotes%20Inspirational%20Love/Ballons.jpg?o=9 Full story

நானெனும்

 நானெனும்
திருவாரூர் ரேவதி     என்னைச் சுற்றும் வண்டுகள் என்னில் பூக்கும் மலர்கள் விண்ணில் தவழும்  நிலவும் விழுந்து கிளம்பிடும் விதையும் பூவுலகில் பூத்து விட்ட களிப்பில் பூத்திடும் கருத்தடம் மறக்கும் தவழும் என்னருமை தென்றல் தரணி கொழித்திடும் கொண்டல் ஏறிவிட்ட எக்களிப்பில் வாட்டினாலும் வாழ்வேனே ஏராளமாய் வாசம் தந்து..    படத்திற்கு நன்றி: http://www.wallcoo.net/flower/hitsuji_01/_flower_wallpaper_161.html Full story
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.