Author Archive

பிள்ளையார் பெருமை

பிள்ளையார் பெருமை
சுலோசனா பிள்ளையார் வழிபாடு என்பது பாரதம் முழுவதுமே பரவியுள்ள மிகப் பழமையான வழிபாடும் மிகப்பிரசித்தமானதும் ஆகும்.. படித்த பண்டிதர் முதல் பாமரன் வரையிலும் பிள்ளையார் வழிபாடு என்பது பொதுவானதாகவே இருக்கின்றது. செல்வச் சீமான்களுடைய அபிஷேக ஆராதனைகள் அஷ்டோத்திரம் சகஸ்ரநாம அர்ச்சனைகள் அனைத்தையும் மகிழ்வுடன் ஏற்றுக்கொள்ளும் விநாயகப் பெருமான் அதே மகிழ்வுடன் ஏழை விவசாயிகள் களத்து மேட்டில் மஞ்சளில் பிள்ளையார் பிடித்துவைத்து அருகம்புல்லை வைத்துவிட்டு தலையில் குட்டிக்கொண்டு தோப்புக்கரணமும் போட்டுவிட்டு ... Full story

சுவாமி விவேகானந்தர்

சுவாமி விவேகானந்தர்
சுலோசனா 5ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு விடுமுறை பண்பாட்டு பயிற்சி வகுப்பில் ஆற்றிய உரை. மகான்கள் பூமிக்கு வருவதன் நோக்கம் தாய்மையின் பங்கு விவேகானந்தரின் இளமைப் பருவம் இந்திய பண்பாட்டின் உயர்வு . விவேகமும் வைராக்கியமும், ஒழுக்கம், தன்னை வளர்த்தல், சகோதரத்துவம்,சேவை மனப்பான்மை, சராசரி மனிதர்களாகப் பிறக்கும் எத்தனையோ உயிர்களை கடைத்தேற்றுவதின் பொருட்டு சாதாரண மனிதன் ... Full story

புரட்டாசியில் பூத்த புதுமை மலர்

புரட்டாசியில் பூத்த புதுமை மலர்
சுலோச்சனா அருட் பெருஞ்ஜோதி தனிப்பெருங் கருணை அருட்பெருஞ்ஜோதி. பூமியில் எத்தனையோ விதமான மலர்கள் பூத்துப் பொலிகின்றன. பூமியை அலங்கரிக்கின்றன. சில மலர்களே பூமியை புனிதமாக்க ,பூமியில் பிறந்த மக்களை புனிதமாக்க பூக்கின்றன. அப்படிப் பூத்த மலர்கள் புதுமை மலர்கள் . இவற்றில் ஒன்றுதான் புரட்டாசியில் பூத்த புதுமை மலரான அருட்பிரகாச வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார். தனிப்பெருங்கருணையே அருட்பெருஞ்ஜோதி என அடிகளார் கடலூர் மாவட்டத்தில் ... Full story

பாரினில் பாரதப் பெண்கள் (5)

பாரினில் பாரதப் பெண்கள்  (5)
சுலோசனா பெண்களின் தந்தை பெரியார் - பகுத்தறிவு பகலவன் ------- தந்தை பெரியார்   எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு யாதொரு பொருளை எவரெவர் சொல்லக் கேட்பினும்; அப்பொருளின் மெய்யாய பயனைக் காணவல்லது அறிவு என்பி லதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை அறம். எலும்பில்லாத புழு பூச்சிகளினால் ... Full story

பாரினில் பாரதப் பெண்கள் (4)

பாரினில் பாரதப் பெண்கள் (4)
சுலோசனா இல்லறம் எனும் நல்லறம் இந்து தருமம் கூறும் நான்கு நெறிகளில் முதலான நூல் பிரம்மச்சரியம் என்பது பாலகனாக இருந்து வாலிபப்பருவத்தின் நுனழவாயிலில் முதல் படியில் மட்டும் அன்றி ,மகான்களால் வகுத்துக் கூறப்பட்ட அறநெறி நூல்கள் முதலான பலகலைகளையும் ஆழ்ந்து கற்க முற்படும் முன்னேற்றமான காலம்.சாண்றோர்களால் சாண்றோன் என அழைக்கும்படி வாழ்வது.,என்பது எவ்வாறு என்றும் அறிகின்ற பொற்காலம்.அறிந்த அறிவை தரும நெறிகளை அவரவர் குணநலன்களுக்கு ஏற்ப வாழ்வில் வாழ்ந்து பார்க்கும் காலம்.நாயன்மார்கள் வரலாற்றில் சுந்தரர் இரண்டு திருமணம் புரிந்து வாழ்கின்றார். ஊழ்வினையின் பயனாக ... Full story

பாரினில் பாரதப் பெண்கள் (3)

பாரினில் பாரதப் பெண்கள்  (3)
சுலோசனா பெண்களின் தந்தை பெரியார் - பகுத்தறிவு பகலவன் - தந்தை பெரியார் எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு யாதொரு பொருளை யாவர் யாவர் சொல்லக் கேட்பினும்; அப்பொருளின் மெய்யாய பயனைக் காணவல்லது அறிவு என்பி லதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை அறம். எலும்பில்லாத ... Full story

பாரினில் பாரதப் பெண்கள் (2)

பாரினில் பாரதப் பெண்கள்  (2)
இதிகாசமும்- சரித்திரமும் காட்டும் பெண்மை வேதசாரமான இதிகாச புராணங்களில் வரும் பெண்மணிகளையே இந்திய பெண்மணிகளுக்கு எடுத்துக்காட்டாக வழிகாட்டுகின்றனர். இந்து சமயம் சார்ந்தோர் இராமாயணமும் மகாபாரதமுமே இந்தியாவின் இந்து மதத்தின் பெருங்காவியங்கள். சீதா தேவியும் கெளசல்யா சுமித்திரை கைகேயி, ஊர்மிளா, அனுசூயா அகலிகை, பக்த சபரி முதலியோர் வனத்தில் வசித்து தவ வாழ்வு வாழ்ந்தவர்கள். சபரி அம்மையைத் தவிர்த்து ஏனையோர் ரிஷி பத்தினிகள். இராமனைப் பெற்ற கவுசல்யா தேவி ... Full story

பாரினில் பாரதப் பெண்கள் (1)

 பாரினில் பாரதப் பெண்கள்  (1)
சுலோசனா முன்னுரை தமிழ் ஆந்திரா, கேரளம் ,கர்னாடகா எனத் தெற்கிலும் மஹாராஷ்டிரா,குஜராத்,ஹரியானா,பிஹார் பஞ்சாப்,எனப் பலவாக நாடுகள் பிரிந்து இருந்தாலும், ஹிந்து தர்மம் சொந்த தர்மம் எனும் அடி நாதமே அஸ்திவாரமாக இருக்கின்றது. பலவித மனம் உள்ள பல வித பூக்களால் தொடுக்கப்பட்ட கதம்பமாலையாக பாரதம் உள்ளது. பாரதத்தில் மங்கையரும் பல விதமான மலர்களே. அவைகள் பூத்துக் காயாகி கனியாகிப் பக்குவமடைகிறது. பாரதம் போன்ற கதம்பமாலையே அதன் பல்வேறு நாட்டுப் பெண்களும். அந்த ... Full story

அன்புத் தோழி மணிமொழிக்கு

சுலோச்சனா அன்புள்ள மணிமொழிக்கு நட்பிற்கும், நம்பிக்கைக்கும் உரிய தோழி, தொலைபேசி வாயிலாக உன்னைத் தொல்லை செய்யாமல் விஷயத்தை ஓரிரண்டு வரிகளில் சொல்லிவிடாமல் - “இதென்ன வள வளவென்று கடிதம் எழுதிக்கொண்டு” என்று நினைக்கின்றாயா? மணிமொழி வளவள கடிதமல்ல வளமான கடிதம் எழுதுதல் ஒரு கனவு என்பதை நினைவூட்டும் நெகிழ்வான கடிதமாக்கும். நேற்று ஓவியக் கண்காட்சிக்கு சென்றிருந்தேன். அங்குள்ள படங்களை பார்த்துக்கொண்டே வந்தபொழுது ஒரு அழகிய படத்தைப் பார்த்தேன். அது ... Full story

இந்தியப் பெண்மணிகள் – புத்தக மதிப்புரை

இந்தியப் பெண்மணிகள் - புத்தக மதிப்புரை
சுலோச்சனா புத்தகத்தின் பெயர் : இந்தியப் பெண்மணிகள் எழுதியவர் : ஸ்வாமி விவேகானந்தர் அச்சிட்டோர் : ஸ்ரீ ராம கிருஷ்ணமடம் அச்சகம் மயிலாப்பூர், சென்னை-4. வெளியிடுபவர் : தலைவர் ஸ்ரீ ராம கிருஷ்ண மடம், மயிலாப்பூர், சென்னை-4. தமிழ் மொழிபெயர்ப்பு விலை ரூ.25 பக்கங்கள் -114 ‘யத்ர ஸ்த்ரியாக பூஜிந்தே தத்ர தேவதாக ரமயந்தே” ‘எங்கு பெண்கள் மதிக்கப்படுகிறார்களோ அங்கு தேவர்கள் மகிழ்கின்றார்கள் அப்படி பூஜிக்கப்படுவதற்குத் தக்கவளாக பெண் புனிதமானவளாக இருத்தல் வேண்டும்” ... Full story

வேற்றுமையில் ஒற்றுமை

சுலோச்சனா மனிதன் பிறப்பால் அங்க அமைப்புகளினால் அவைகளின் செயல் பாடுகளினால் ஒன்றுபட்டவனாக இருக்கின்றான்.ஆனால் சிந்தனைகளில் அதன் விளைவான செயல்களில் பழக்க வழக்கங்களில் வேறு பட்டவனாக இருக்கின்றான். நல்லவன்,தீயவன் செல்வந்தன் ஏழை என இரு பிரிவாகப் பொதுவாகப் பிரித்தாலும் மதம் முதல் மனப்போக்கு வரை உட்பிரிவுகள் கொள்கைப் பிரிவுகளெனவும் பல உட்பிரிவுகள்.ஆனால் அனைவருக்கும் பொதுவானவை பின்பற்ற வேண்டியவை என சில குண நலன்கள் சான்றோர்களால் குறிப்பிடபட்டுள்ளன. யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன்.(குறள் : 341) மற்றவர் ... Full story

திருமூலத் தேவரின் சமத்துவ நெறி

திருமூலத் தேவரின் சமத்துவ நெறி
  சுலோச்சனா யாவர்க்குமாம் இறைவர்க்கோர் பச்சிலையாவர்க்குமாம் பசுவிற்கோர் கையுறையாவர்க்குமாம் உண்ணும் போது ஓர் கைப்பிடியாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரைதானே இந்தப் பூவுலகில் பிறந்து சராசரியான மக்களாக சாதாரண வாழ்க்கை வாழும் எண்ணற்ற மக்களின் பொருட்டும் ஏன் மாக்களின் பொருட்டும் மகான்கள் மண்ணுலகிற்கு வருகை தருகின்றனர். இந்த சராசரியான உயிர்கள் உய்யும் பொருட்டு நல்லுரைகள் பல புகல்கின்றனர். ... Full story

மதம் கடந்த மகான்கள்!

மதம் கடந்த மகான்கள்!
சுலோச்சனா சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம், வைத்ததொரு கல்வியும் மனப் பழக்கம் என்பது தமிழ் பாடல் வைத்ததொரு கல்வி மட்டும் மனப் பழக்கம் அன்று - மதமும் - அதன் பிரிவுகளான ஜாதிகளும் கூட மனிதனை வதைக்கும் மனதிற்கும் ஊட்டப்பட்ட பழக்கமே ஆகும். பரம்பரை பரம்பரையாக வரும் இந்தப் பழக்கமே - வழக்கமாகி பின்பற்றவேண்டிய கட்டாயமாகிவிடுகின்றது. இந்த பழக்கங்களும் - வழக்கங்களும் குழந்தை பருவத்திலேயே விதைக்கப்பட்டு, குழந்தை வளர - வளர அந்த வித்தும் வளர்ந்து விடுகிறது. அந்த வளrச்சி என்பது அளவோடும் அமைகின்றது. அளவின்றியும் ... Full story
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.