Author Archive

Page 1 of 41234

காகிதக்குறிப்புகள்..

காகிதக்குறிப்புகள்..
  சாந்தி மாரியப்பன்   காற்தடம் பதியாப்பாதையெனவும், எழுதப்படாத வெற்றுக்காகிதமெனவும் முன் நீண்டு கிடக்கிறது இன்றைய தினம். புட்களின் அதட்டலுக்குப் பயந்த விடிகாலைச்சூரியன் மேகப்போர்வை விலக்கி மெல்ல முகம் காட்டவும் தலையசைத்துப் பூமழை சொரிந்து பச்சையம் சுமந்த பயிர்களெலாம். வரவேற்பு அளிக்கவுமென நன்றாகத்தான் ஆரம்பிக்கின்றன ஒவ்வொரு தினமும், வெற்றுக்காகிதமென. Full story

சிறகுதிர்த்த மின்மினி

சிறகுதிர்த்த மின்மினி
சாந்தி மாரியப்பன் மின்மினி மந்தையினின்று வழி தப்பிய எரிகல்லொன்று கவணிடை எறிகல்லாய்ப்புறப்பட்டது.. வெகுதூரப்பயணமோவென ஏங்கி வினவிய சகாக்களைப் புறங்கையால் ஒதுக்கிவிட்டு உல்லாசமாய்ப்புறப்பட்ட உற்சாகத்துடன் துள்ளித்துழைந்தது அண்டப்பெருவெளியில். இலக்கில்லாப்பயணத்தில் அதிரும் பிம்பங்களைச் சிதற விட்டபடி துழாவித்துழாவி உணர்கொம்புகள் நீட்டி முன்னேறிக்கொண்டுதானிருந்தது அது. இலக்கில்லா எவரோ.. எதுவோ.. என்றேனும் ஓர் நாளில் இலக்கினை அடைந்தே தீரவேண்டிய நியதிக்குட்பட்டு பூமாதேவியிடம் மயங்கி முத்தமிட முயன்றதில் சீறி எரித்தது லக்ஷ்மண ரேகை.. உதிர்ந்து வீழ்ந்தது மின்மினி ஆயிரமாயிரம் பரப்பளவில் தன் சிறகுகளை உதிர்த்தபடி.. படத்திற்கு நன்றி: http://www.foxnews.com/science/2013/02/15/injuries-reported-after-meteorite-falls-in-russia-ural-mountains Full story

இடப்பெயர்ச்சி

இடப்பெயர்ச்சி
சாந்தி மாரியப்பன் பக்கத்து வீட்டுத் தாத்தாதிரும்பாப்பயணம் புறப்பட்டு விடசலனமின்றிஇடம் பெயர்ந்தது சாவிக்கொத்துமுன்னுரிமைப்படி.. சாய்வு நாற்காலிக்கு அடுத்த தலைமுறையும்சொகுசு நாற்காலிக்கு மூன்றாம் தலைமுறையும்அவசரமாய் அடித்துக்கொண்டுஆரவாரமாய் இடம் பெயரஅமைதியாய் நிகழ்ந்ததோர் இடப்பெயர்ச்சி..துணி மூட்டையுடனும் தட்டுடனும்திண்ணையில் பாட்டி.   படத்திற்கு நன்றி : http://valerioberdini.photoshelter.com/gallery/Life-on-the-Pavement-Kolkata-India/G0000.2lGdfeOmrg Full story

கையறு நிலையில்

கையறு நிலையில்
சாந்தி மாரியப்பன் "எப்போதான் கண் திறந்து பார்க்கப்போறியோ?"அங்கலாய்த்த பக்தனுக்குக்கூரையைப்பிய்த்துக்கொண்டாவதுஉதவிடும் துடிப்பில்ஓடி வந்த கடவுள்பேச்சற்று நின்றார்..பிய்ப்பதற்குப்பொத்தல் கூரைக்கும் வழியின்றிவானமே கூரையாய்உறங்கும்நடைபாதை வாசியாய்க்கண்டு.   படத்திற்கு நன்றி:http://www.123rf.com/photo_10678670_kolkata-india--february-03-streets-of-kolkata-man-sleeping-on-the-streets-of-kolkata-india-on-februa.html Full story

சாயம் வெளுத்த நீல நிலா

சாயம் வெளுத்த நீல நிலா
சாந்தி மாரியப்பன் ஒவ்வொரு மாதமும் ஒரே ஒரு பௌர்ணமி மட்டுமே வருவதுண்டு. அப்படியில்லாமல் இரண்டு பௌர்ணமி வந்தால் இரண்டாவதாக வரும் பௌர்ணமியை நீல நிலவு ("ப்ளூ மூன்") என்று அழைக்கிறார்கள். சென்ற ஆகஸ்ட் மாதமும் இப்படித்தான் 2-ம் தேதி ஒரு பௌர்ணமியும், 31-ம் தேதி இன்னொரு பௌர்ணமியும் வந்தது. இதில் 31-ம் தேதி வந்த பௌர்ணமியே "ப்ளூ மூன்" என்று அழைக்கப்பட்டது. உலகெங்கும் இதைப் பார்க்கவும்,படம் பிடிக்கவும் ... Full story

துளியில் மலர்ந்த பூக்கள்

துளியில் மலர்ந்த பூக்கள்
சாந்தி மாரியப்பன் மலர்தலும் உதிர்தலும்இயல்பெனினும்காலக்கணக்கில் கட்டுண்டு நிகழாமல்சிறு தூறலிலும்உடன் மலர்ந்து விடுகின்றனசாலைச்சோலையில்பூக்கள்... குடைகளாய்;தேனருந்தும் வண்டுகள்தாம்மூக்குடைந்து திரும்புகின்றனமுயற்சியில் தோற்று. ஊன்றுகோலாகவும் ஒத்தாசை செய்யும்முதுகு வளைந்தமுதிய தலைமுறையினர் முன்வெட்கிப் பதுங்கியநாகரீக இளைய தலைமுறையினர்அடைக்கலம் தேடுகின்றனர்கைப்பைகளுக்குள்,மூன்று சாண் உடம்பைஒரு சாணாய்க் குறுக்கியபடி. ஆரவாரத்துடன் நாட்டு வளம் காணபாய்ந்து வந்த நொடியில்சரேலென்று பறந்தகறுப்புக்கொடிகள் கண்டுதிரும்பி விட எத்தனித்தாலும்குடை ... Full story

உதவிக்கரங்கள்

உதவிக்கரங்கள்
சாந்தி மாரியப்பன் இரண்டு நாட்களாய் எப்படியெப்படியெல்லாமோ கேட்டுப் பார்த்து விட்டாள் ரங்கம்மா. நயமாகவும் பயமாகவும் விசாரித்துப் பார்த்தாலும் பயல் பிடி கொடுத்துப் பேசவில்லை. சரி,.. அவன் போக்கிலேயே விட்டுப்பிடிக்கலாம் என்று அவன் ஓரளவு நல்ல மன நிலையில் இருக்கும்போது, “உனக்கு எந்தூருப்பா.. சொல்லு மக்கா.” என்று கொஞ்சலாகக் கேட்டாள். கீழுதட்டைப் பற்களால் அழுந்தக் கடித்தபடி தலை குனிந்து நின்றான். சட்டென்று கண்ணீர் திரையிட்டு எப்போது வேண்டுமானாலும் விழுந்து விடுவேன் என்று பயமுறுத்தியது. அவன் ... Full story

ஒரு வீடு பெயரிடப்படுகிறது

ஒரு வீடு பெயரிடப்படுகிறது
சாந்தி மாரியப்பன் "சுத்தம் சோறு போடும்.." வீட்டின் முகப்பில் பொறிக்கப்பட்டிருந்த பெயரை நிறுத்தி நிதானமாக வாசித்து விட்டு வீட்டைச் சுற்றிப் பார்ப்பதற்காக நகர்ந்தனர் புதுமனை புகுவிழாவுக்கு வந்திருந்தவர்கள். “சும்மா சொல்லக்கூடாது.வீட்டை நல்லாப் பார்த்துப் பார்த்துதான் கெட்டியிருக்கான் உம்ம மருமவன்..” என்றார் ஒரு பெரியவர். “ஏன் பெரியத்தான் பிரிச்சுப்பேசறீங்க?.. எனக்கு மருமவன்னா ஒங்களுக்கு மவன் முறை வருது இல்லையா?.. தம்பி மகன் தன் மகனைப் போலன்னு சொல்லுவாங்க. ஆனாலும் உங்களுக்கு ... Full story

வாழ விடுங்கள்

வாழ விடுங்கள்
சாந்தி மாரியப்பன் பிறந்த நாட்டைத் தாய்நாடென்று போற்றுகிறோம். நதிகள், மலைகள் யாவற்றையும் பெண்ணாக உருவகித்து வர்ணிக்கிறோம், வணங்குகிறோம். ஏன்!.. நிலவிலும், மலர்களிலும், இப்பூமியிலும் கூட பெண்ணின் மென்மையையும் குளுமையான பண்பையும், பொறுமையையுமே காண்கிறோம். இப்படி அனைத்திலும் பெண்மையைப் போற்றும் இப்பூமியில்தான் பெண்ணைச் சுமையாக எண்ணி அழிக்கும் மனிதர்களும் இருக்கின்றனர். இந்தியாவில் பெண்சிசுக்கொலை என்பது 1789-லிருந்தே ராஜஸ்தான் மாநிலத்தில் செயல்பாட்டில் இருக்கிறது. மற்றும் குஜராத்தின் மேற்குப்பகுதியிலிருக்கும் சூரத், கட்ச், மற்றும் உ.பியில் ராஜபுத்திரர்கள் வாழும் ... Full story

மந்திரச்சொல்

மந்திரச்சொல்
சாந்தி மாரியப்பன் தாள முடியாமற் போகிறதுஉனதன்பைச்சில சமயங்களில்.. மெல்லிய நீரோடையாய்ச் சலசலக்குமதுகாட்டாறாய்ப் பொங்கிப் பிரவகிக்கும்போதுமூச்சுத்திணறி நிற்கும் பொழுதுகளில்அருவியாய்ப்பொழிந்துஉருட்டிச்செல்கிறாய் என்னை.. பூனைப்பாதம் வைத்துப் பின் வந்துமெல்லக் கண்பொத்திகன்னம் கடித்த தருணங்களில்சீறிச்சினந்ததைப் பொருட்படுத்தாமல்சில்லறையாய்ச் சிதற விடும் சிரிப்பால்தண்ணீர் பட்ட பொங்கிய பாலாய்அமிழ்த்தி விடுகிறாய் என் மனதை.. சுமக்க இயலாமல்எங்கேனும் எவரிடமேனும்இறக்கி வைக்க முயலுந்தோறும்பேரன்பாய்ப் பல்கிப்பெருகுவதும்ஓராயிரம் வலிகளையும், சுமைகள் தந்த காயங்களையும்துடைத்துப்போடும் மாமருந்தாய்... Full story

மும்பையில் தாய்லாந்து வர்த்தகக் கண்காட்சி

மும்பையில் தாய்லாந்து வர்த்தகக் கண்காட்சி
சாந்தி மாரியப்பன் தாய்லாந்து நாட்டிற்கும் இந்தியாவுக்குமிடையேயான நல்லுறவை மேலும் வலுப்படுத்துமுகமாக கடந்த ஜூன் 28ம் தேதியிலிருந்து ஜூலை 1-ம் தேதி வரை  நடைபெற்றது. மும்பையின் கஃப பரேட் பகுதியிலிருக்கும் உலக வர்த்தக வளாகத்தில் இந்தக் கண்காட்சி நடைபெற்றது. வருடந்தோறும் நடக்கும் இந்தக் கண்காட்சியில் அழகு சாதனங்கள், கைவினைப் பொருட்கள், செயற்கை மலர்கள், மூலிகைத்தைலங்கள், தாய்லாந்து மசாலா வகைகள், வீட்டு உபயோகப்பொருட்கள், பழச்சாறு வகைகள், விளையாட்டுப்பொருட்கள் போன்றவை தாய்லாந்திலிருந்து கப்பலில் இறக்குமதி செய்யப்பட்டு கண்காட்சி ... Full story

தீராத விளையாட்டுப்பிள்ளை

தீராத விளையாட்டுப்பிள்ளை
சாந்தி மாரியப்பன் சிறைப்படும்ஒவ்வொரு தருணங்களிலும்குதித்துக் கூத்தாடுகிறது காற்றுகுழந்தைகள் கைகளில்பலூன்களாய்.. ஊழிக்கூத்தாடியதும்ஊரையே புரட்டிப்போட்டதும்வேறெதுவோ என்று மறுதலித்து விட்டுகட்டிச்சமர்த்தாய்ப்புல்லாங்குழற் சிறுவன் பின்ஆட்டுக்குட்டியென வந்த தென்றல் பரிந்தூட்டும் தாயெனவியர்த்த முகங்கள் துடைத்தபின்கலைத்து விளையாடுகிறது மேகங்களைதீராத விளையாட்டுப்பிள்ளையாய்.. Full story

மும்பை ரயில் நிலையங்களில் ஆரம்பித்திருக்கும் புரட்சி..

மும்பை ரயில் நிலையங்களில் ஆரம்பித்திருக்கும் புரட்சி..
சாந்தி மாரியப்பன் மும்பையின் ரயில் நிலையங்களில் ப்ளாஸ்டிக் உறைகளில் அடைக்கப்பட்ட ஜங்க்ஃபுட், பிஸ்கட் மற்றும் துரித வகை உணவுப்பொருட்களின் விற்பனை, இந்த ஜூன் முதலாம் தேதியிலிருந்து தடை செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் சமோசா, சாண்ட்விச், வடாபாவ் போன்றவற்றைப் ப்ளாஸ்டிக்கைத் தவிர்த்துப் பேப்பரில் சுற்றி வைத்து விற்றுக்கொள்வதானால் அனுமதி உண்டு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், உணவுப்பொருட்களை வாங்கிச் சாப்பிட்டு விட்டு உறைகளை ப்ளாட்பார்மிலோ அல்லது ரயில் தண்டவாளங்களிலோ வீசி விடுவதால் ரயில் நிலையங்கள் குப்பைக்கூடைகளாகக் ... Full story

அந்த இரவில்

அந்த இரவில்
சாந்தி மாரியப்பன் மணிக்கொருதரம் உற்று நோக்குகிறேன்ஆழ்ந்துறங்கும் அந்த முகத்தை.‘மூச்சு சீராக வருகிறது’.. எனக்கும்.கதகதப்பானகை தேடிப்பற்றிக்கொள்கிறேன்நடை பழகச்சொல்லித்தந்தஅந்தச் சுட்டு விரலை.உடல் புரளும் சிறு சலனத்திற்கும்குடல் புரண்டுப் பதறியெழுமெனக்குப்பரிசாய்த்தருகிறார்வாஞ்சையுடன் ஒரு தலை கோதலைஎன் தகப்பன்,நண்பனின் தந்தைக்கு இறுதியாய் விடை கொடுத்துநான் வீடேகிய அந்த இரவில்.. படத்திற்கு நன்றி:http://amog.com/health/myths-sleeping-insomnia Full story

‘வல்லமை’யின் ஃப்ளிக்கர் குழுமம்

'வல்லமை'யின் ஃப்ளிக்கர் குழுமம்
அன்பு நண்பர்களே, ஆயிரம் வார்த்தைகளால் சொல்லிப் புரிய வைக்க வேண்டிய ஒரு விஷயத்தை ஒரு புகைப்படம் எளிதில் சொல்லி விடும். புகைப்படம் எடுத்தலென்பது ஓர் கலை மட்டுமல்ல, இனியதொரு பொழுதுபோக்குமாகும். நம்மைக் கவர்ந்த காட்சிகளைப் பதிவு செய்யவும், ஆவணப்படுத்தவும் இக்கலையை விட மிகச் சிறந்தது ஏதுமில்லை. புகைப்படக்கலையில் ஆர்வமிக்க நண்பர்கள் ஒன்று கூடி, தத்தமது புகைப்படங்களைப் பார்வைக்கு வைத்து நிறை குறைகளை அலசிக்கொள்ளும் புகைப்படக்குழுமங்கள் இணையத்தில் நிறையவே உண்டு. இவற்றில் பங்கேற்பதன் மூலம் நம் ... Full story
Tags:
Page 1 of 41234
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.