Author Archive

Page 1 of 41234

எழுவகைப் பெண்கள்: 12

ரேணுகா ராஜசேகரன் உடல்நலம் காக்கும் புடவையும் இரவிக்கையும் மூலாதாரத்தின் மூண்டெழுகனலைக் காலால் எழுப்பும் கருத்து எம் பெண்களின் நடையிலும் உடையிலும், தினசரிப் பழக்க வழக்கங்களிலும் பிணைக்கப்பட்டது என்றேன் அல்லவா?. விரிந்து சுருங்கும் துருத்தியாம் பெரினியத்தை இரு கால்களால் இயக்குவதும், அவ்வியக்கத்தால் மூலாதாரத்தில் மூண்டெழும் கனலை உடல் பூராவும் பரப்புவதுமான வித்தை என்பது தமிழ்ப்பெண்கள் வாழ்வில் நித்தியக்கட்டளையாக்கப்பட்டது என்றால் அதற்கு பெண்களுக்காகத் தெரிவு செய்யப்பட ஆடை முதற் காரணமாகும் என்று அந்த அமெரிக்க இராணுவ அதிகாரியிடம் என் ... Full story

இறையியல் சிந்தனைகள்: ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும்: 9

இறையியல் சிந்தனைகள்: ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும்: 9
அவ்வை மகள் வேட்கை இருந்தால் மட்டுமே உலகை மாற்ற முடியும் 'People with Passion can change the world for the better’ என்பது ஸ்டீவ் ஜாப்ஸின் பொன்மொழி. உலகை இன்னும் சிறப்புறடைத்ததாய் மாற்ற வேண்டும் என்கிற வேட்கை ஸ்டீவ் ஜாப்ஸிற்கும் வள்ளலாருக்கு ஒன்று போல் இருந்தது. இவ்வகையில் இவர்களிருவரையும் ஒப்பிட்டு நோக்கவேண்டுமெனில், உலகை மாற்றவேண்டும் என இருவரும் ஏன் வேட்கை கொண்டனர் ... Full story

எழுவகைப் பெண்கள்- 11

அவ்வை மகள் பெண்ணார்ந்த சூட்சமங்கள் யாவற்றையும் விநாயகர் அகவலில் பொதித்து மூலாதாரத்தின் மூண்டெழு கனலைக் காலால் எழுப்பும் அவ்வையின்  கருத்து என்ன என்று சொல்வதாகச்  சொன்னீர்களே என்று அந்த இராணுவ அதிகாரி தொடர்ந்து வினவினார்  -  என் உரையாடல் தொடர்ந்தது. பெண்ணின் மூலாதாரத்தில் வெப்பம் உருவாகிறது என்றும் அந்தக் கனலின் உஷ்ணத்தை, பெண்ணின் பலவேறு உறுப்புக்களில் காணமுடிகிறது என்றும் பார்த்தோம் அல்லவா?.  பெண்ணின் பல்வேறு  உறுப்புக்களில் உஷ்ணம் எதிரொளித்ததாலும், மூலாதாரத்தில் உஷ்ணம்  தேங்கி - ... Full story

இறையியல் சிந்தனைகள்: ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும்: 8

இறையியல் சிந்தனைகள்: ஸ்டீவ் ஜாப்ஸும்  வள்ளலாரும்: 8
அவ்வை மகள் மனித நேயமும் - மனிதச் சேவையும் தொழிநுட்பத்தின் இரு கண்கள் உலகிற்கு என்ன தேவை என்பதனை மிகச்சரியாக உணர்ந்து, அதனை மிகச்சரியான தருணத்தில், மிகச்சரியான அளவிலே தருகிறவர்கள் உலகில் வாழும் கடவுள்களாகிறாகள். துறை எதுவாகினும் எந்தத்துறைக்கும் இது பொருந்தும். மதமா? அரசியலா? மருத்துவமா? உளவியலா? தொழில்நுட்பமா? எந்தத்துறையும் இதற்கு விதிவிலக்கில்லை. அரண்மனை வாயிலில் மணி கட்டி - மக்கள் ... Full story

எழுவகைப் பெண்கள்: 10

அவ்வைமகள் துவாரபாலகர்களும் துளைநிலை ஒழுக்கமும் அமுத நிலையம் ஆதித்தன் இயக்கமும் என்ற உங்கள் அவ்வையைப் இவ்வுலகின் தலைசிறந்த பெண்மைப் பாதுகாவலர் என்றே சொல்லத் தோன்றுகிறது என்றார் அந்த இராணுவ அதிகாரி. “நான்கு மனைவிகள் - எத்தனையையோ பெண் தோழிகள் என்று என் காலம் இதுகால் ஓடியிருக்கிறது. பெண்ணின் உடம்பை - புணர்ந்திருக்கிறேனே தவிர உணர்ந்தவன் இல்லை. நான் சொல்கிறேன் எனத் தப்பாக நினைக்காதீர்கள - ஆண்மை மிதர்ப்புக்குக் கண்ணும் தெரியாது - காதும் கேட்காது - மூளையும் விளங்காது ... Full story

எழுவகைப் பெண்கள்: 9

அவ்வை மகள்  பெண்ணின் மூலாதாரக்கனலில் அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் பெண்ணின் பெரினியத்தை அக்கினிப் பாண்டம் என்கிறோம் - படைப்பாற்றலின் குண்டமாக - பாத்திரமாக - செயல்படுவதால் அங்கே உஷ்ணம் உற்பத்தியாகிறது என்றோம். இந்த அக்கினி என்பது - எத்தகையது என்று பார்த்தால் அது ஒரு எண்ணெய் விளக்கைப் போன்றது. திரிபோட்டு, எண்ணெய் விட்டு ஏற்றப்பட்ட விளக்கு எவ்வாறு எரிந்து வெப்பம் தருகிறதோ அதுபோன்றே பெரினியத்தின் உள்ளே விளக்கின் அழல் போல் கனல் தோன்றி அங்கே வெப்ப சக்தி உண்டாகிறது. ... Full story

இறையியல் சிந்தனைகள்: ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும்: 7

இறையியல் சிந்தனைகள்: ஸ்டீவ் ஜாப்ஸும்  வள்ளலாரும்: 7
அவ்வை மகள் திரிகரணத்தைப் பறைசாற்றும் மும்முகச் சிம்மம் திரிகரண சுத்தியும் அத்வைதமும் வள்ளலாரின் இறைமார்க்கத்தில் இரண்டறக் கலந்திருப்பதை நம்மால் உணரமுடிகிறது என்றோம். திரிகரண சுத்தியை சைவ சித்தாந்தம் வெகுமிக முக்கியமாக வலியுறுத்தும் பாங்கு வெகு நேர்த்தியான விஷயம். பதஞ்சலி எனும் ஆத்ரேயரிடம் திரிகரணசுத்தியின் வாக்கு வடிவத்தின் ஆரம்பப்புள்ளியைக் காணலாம் என்பர். திருமூலரும் திரிகரண சுத்தியைப் பற்றிப் பகர்வதாகவும் காண்கிறோம். உடல், சொல், ... Full story

எழுவகைப் பெண்கள்: 8. பெண் உடலியல் வேதத்தைத் துறந்தோம் – மறந்தோம்

அவ்வை மகள் மூலாதாரம் என்கிறீர்களே அது பற்றி மேலும் விளக்கமுடியுமா என்றவரிடம், “மூலாதாரத்தை விளக்கவேண்டுமெனில், அதற்கு நான் அவ்வையைத் துணைக்கழைக்க வேண்டும். அவ்வை எங்கள் ஊரில் ஒரு சிறப்பு மிக்க பெண் புலவர் - விவேகி” என்றேன். “விவேகி என்று நீங்கள் சொன்னதும் எனக்குப் பெண்களின் விவேகம் பற்றிய எண்ணம் எழுந்தது அதுபற்றி பேசிவிட்டு மூலாதாரம் பற்றிப் பேசலாமா அல்லது மூலாதாரம் பற்றிப் பெண்களின் விவேகம் பற்றிப் பேசலாமா?” என்றார். “ஏறக்குறைய நானும் அதே மனோநிலையில் தான் இருந்தேன். ... Full story

இறையியல் சிந்தனைகள்: 6 ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும்

இறையியல் சிந்தனைகள்: 6 ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும்
அவ்வை மகள் 6. துஞ்சலும் துஞ்சல் இல்லாத போழ்திலும் ஓங்கார நாதம் முனைப்பாடியார் தனது அறநெறிச் சாரத்தில் கூறுவார்: நோற்பவ ரில்லவர்க்குச் சார்வாகி இல்லவரும் நோற்பவருக்குச் சார்வா யறம்பெருக்கி--யாப்புடைக் காழுங் கிடுகும்போல் நிற்குங் கயக்கின்றி ஆழிசூழ் வையத் தறம். என்று. இல்லறமும், துறவறமும் ஒன்றுடன் சார்ந்து இயங்குதலே இவ்வையத்தின் அறம் ... Full story

எழுவகைப் பெண்கள்: 7

அவ்வை மகள்  பெண்ணின் “பெரினியம்” எனப்படும் மூலாதார யோகமுத்திரை பெண்ணியம் என்பதை விடப் பெண்ணியலும் பெண்ணறமும் தான் மிகவும் முக்கியம் என்ற அந்த இராணுவ அதிகாரியைப் பார்த்துக்கொண்டே அப்படியே எழுந்து ஒரு சல்யூட் அடித்துவிட்டு உட்கார்ந்தேன். “என்ன சொல்லிவிட்டேன் என்று இப்படிப் பரவசப்படுகிறீர்கள்!” என்றார். “ஐயா! நான் நெகிழ்ந்ததன் காரணம் சொல்கிறேன் கேளுங்கள்” என்று சொன்னேன்: ‘“வங்கக் கடல்கடைந்த மாதவனைக் கேசவனைத் திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி” என்ற எங்கள் மொழியில் உள்ள ... Full story

இறையியல் சிந்தனைகள்: ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும்: 5

இறையியல் சிந்தனைகள்: ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும்:  5
அவ்வை மகள் நெஞ்சகம் நைந்து தொலைந்தழுத நோன்பு உறவுதான் உயிரிகளின் அடையாளம் என்றோம். உறவில் உதிப்பதே உயிரி. உறவுகொண்டொழுகலே உயிரியின் இயக்கம். முட்டையிலிருந்து கோழியா கோழியிலிருந்து முட்டையா என்பார்களே அதைப்போன்றது உயிரி - உறவின் தன்மை. சந்யாசிகள் கூட உறவு கொண்டு ஒழுகுபவர்களே. சன்யாசம் பூணும் முன் இருந்த உறவுகள் எத்தனையோ என்றாலும் சன்யாசம் பூண்ட பின், மதம், ஆச்சாரம் ... Full story

6. பெண்ணியலும் பெண்ணறமும்

அவ்வைமகள் உடலுக்கும் உள்ளத்துக்கும் ஒவ்வாத பணியில் பெண்கள் படும் அவதி என்கிற வகையில், பென்னி ஹாரிங்டனின் கதை வெளி உலகிற்குத் தெரிந்திருக்கிற ஒன்று. தெரியாத சரிதங்கள் எத்தனையோ! இன்றைய கால கட்டத்தில், பொதுவாக, அமெரிக்காவில், காவல் துறையில் அதிமேல் பதவிகளுக்குப் பெண்கள் முயற்சி செய்யும் எண்ணமும் கூட இல்லாதவர்களாக இருப்பதாக, நான் சந்தித்த பல பெண் காவல் அதிகாரிகள் கூறினார்கள். இந்நிலையில், ஒரு ஆண் காவல் தலைமை அதிகாரியிடம் பேசினேன். அவர் சொன்ன விவரங்களைப் பற்றி பேசும் முன் அமெரிக்க இராணுவத்தில் பெண்கள் நிலைமை பற்றி ... Full story

இறையியல் சிந்தனைகள்: ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும்: 4.

இறையியல் சிந்தனைகள்: ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும்: 4.
அவ்வை மகள்  மனோமயமும் அம்மையப்ப உறவும் நான் யார்? என்பது மிகப்பிரசித்தமான கேள்வி. ஊடகங்கள் பரவின பிறகு இந்த கேள்வி வெகுமிகவே பிரசித்தமாகி விட்டது. எவரைப் பார்த்தாலும், இந்த நான் யார் கேள்வியை தம் பேச்சு வழக்கில் வெகு அதிகமாகவே பயன் படுத்துகிறார்கள். விவாதிக்கிறார்கள் - விளக்கம் தருகிறார்கள். இத்தனை ஊக்கத்திற்கும் ஏதேனும் விளைவு இருக்கிறதா, உண்மையில் நிறைய பேர் “நான் யார்?” ... Full story

எழுவகைப் பெண்கள்: 5

 உடம்பெனும் தராசில் இது ஒரு அக்கினிப் பரிட்சை அவ்வை மகள் "நீங்களே சொல்லுங்கள் இந்தக் காவலர் வேலை, பெண்ணுக்கு எத்தனை நாள் தாங்கும்?" என்று எதிர் கேள்வி கேட்ட அந்தப் பெண் காவல் அதிகாரியைப் பார்த்து, நான் சொன்னேன்: "வேறு மாதிரியல்லவா கேள்விப் பட்டிருக்கிறோம் - "காவல் துறையில் ஆணாதிக்கம் - பாலியல் பலாத்காரம் - பெண்ணுக்கு அங்கீகாரம் இல்லை --" நான் சொல்லி முடிக்கும் முன் குறுக்கிட்டார். "இவையெல்லாம் இல்லை என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவை ... Full story

இறையியல் சிந்தனைகள்: ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும்: 3

அவ்வை மகள் சமூகப் பிரக்ஞையும் சுயப் பிரக்ஞையும் அவதாரப் புருஷர்களிடம் சமூகப் பிரக்ஞை நிறைந்த இறைவழி மார்க்க நோக்கு இருந்தது என்றோம். இதை நாம் அறியும் இத்தருணம், சமூகம் என்றால் என்ன என்ற கேள்வி நம்முள் முதலில் எழுகின்றது. சமூகம் என்பதை ஒழுங்கமைப்புடைய மக்கள் தொகுதி என்பர். கூட்டுப் பண்பும், ஒருமித்த குணாதிசயங்களும், பொதுப்படையான பழக்கவழக்கங்களும், ஒன்றேயான அடையாளங்களும், ஒத்ததான பரஸ்பர ... Full story
Page 1 of 41234
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.