Author Archive

Page 1 of 3123

என்று வருவாயென…

                    கவிநயா காவல் இருக்கின்றேன், காத்துக் கிடக்கின்றேன், வேண்டாத விருந்துகள் வந்து விடக் கூடாதென… வேண்டி விரும்பும் நீ என்று வருவாயென! நீண்டு கிடக்கும் காலமெனும் பாதையில் விழிகள் பதித்து – முரண்டு பிடிக்கும் புத்திக்குள் வித்தாக உன்னை விதைத்து - துவண்டு கிடக்கும் மனக் குடிலின் வாயிலில் ... Full story

பாஞ்சாலியின் சபதம்!

பாஞ்சாலியின் சபதம்!
-கவிநயா வெகு நாட்களுக்குப் பின் ஒரு படைப்பு...தொலைக்காட்சியில் மகாபாரதம் பார்க்க நேர்ந்ததன் பாதிப்பு... பாராளும் சக்கரவர்த்தியின் மனைவியான திரௌபதியின் நிலையைப் பார்க்கையில் எழுந்த தவிப்பு! துரியோதனாதியரின் அட்டூழியத்தை இப்போது பார்க்கும்போதுகூட, நாமே எழுந்து சென்று நாலு போடு போடலாமா என்று நமக்கே அத்தனை ஆத்திரம் வருகையில், பீஷ்மரும் விதுரரும் துரோணரும் எப்படி இந்த அதருமத்தை இத்தனைதூரம் வளர விட்டார்கள் என்ற ஆச்சர்யமும் ஆதங்கமும் ஏற்படுகிறது. அதருமத்தை வளர விடுவதுதான் தருமமா?! பாரதி ... Full story

பக்தர்களின் ஏ.டி.எம்!

  கவிநயா அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம் பூரியார் கண்ணும் உள. என்பது திருக்குறள். அருட்செல்வமே செல்வத்துள் எல்லாம் சிறந்ததாம். பொருட்செல்வமானது, கீழோரிடத்து உட்பட எவரிடத்தும் இருக்குமாம் என்பதே பொருள். அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த அருட் செல்வத்தை அள்ளி வழங்குபவள், அன்னை பராசக்தி. அவளே பக்தர்களின் அள்ளக் குறையாத நிதியாக இருப்பவளும், பக்தர்களுக்கு அள்ளக் குறையாத நிதியைத் தருபவளும், என்கிறது லலிதா சகஸ்ரநாமம். “பக்த நிதிர்” என்பது அன்னையின் ஆயிரம் நாமங்களில் ஒன்று. பக்தர்கள் ... Full story

கோகுலத்தில் கோலாகலம்!

  -கவிநயா கோகுலமே ஒரே நிசப்தமாக இருந்தது. கொலுசுச் சப்தம் கூட பூதாகரமாகக் கேட்பது போல் இருந்ததால், நிசப்தமான இடத்தில் குரலெழுப்பாமல் இரகசியக் குரலில் பேசிக் கொள்வது போல், சப்தம் எழுப்பாமல் கொலுசணிந்த பாதங்களை மெதுவாக எடுத்து வைத்து நடந்தாள், ராகினி. ராகினி அவள் அம்மாவுடன் கோகுலத்தில் வசிக்கும் அத்தை மகள் லலிதை வீட்டுக்கு வந்து கொண்டிருந்தாள். கிருஷ்ணன் பிறந்தது முதல் கோகுலத்தை விட்டு எங்கேயும் வருவதில்லை, லலிதை. அதனால் அவளை (கிருஷ்ணனையும்) பார்க்கும் ஆவலில், அம்மாவையும் இழுத்துக் கொண்டு இங்கேயே வந்து ... Full story

திருப்பாவை தந்த திருப்பாவை

  -கவிநயா கோபிகளுடன் கண்ணன் விளையாடிக் கொண்டிருக்கிறான். இந்தப் பக்கம் ஒருத்தியின் கண்களை ஒரு கையால் மூடிக் கொண்டே, அந்தப் பக்கம் இன்னொருத்தியின் பின்னலைப் பிடித்திழுக்கிறான். கூடவே ஒருத்தியின் காதுகளில் இரகசியம் வேறு பேசுகிறான்! பொல்லாத கண்ணன் என்பது சரியாகத்தான் இருக்கிறது! இந்தக் கோபியர்களின் பாவனையில்தான் எத்தனை மகிழ்ச்சி! எத்தனை துள்ளல்! உலகமே இவர்கள் காலடியில் கிடப்பது போல் அப்படி ஒரு பெருமிதம், இவர்கள் முகத்தில்! பூமியில் கால் பாவாமல், எங்கோ ஆகாயத்தில், கவலைகளே அற்ற ஒரு உலகத்தில் இருப்பது போன்ற எண்ணம் ... Full story

தண்ணீர்… தண்ணீர்…!

  -கவிநயா ஒரு ஞாயிற்றுக் கிழமை காலை. அந்த அடுக்கு மாடிக் குடியிருப்பில் ஒரு வீட்டின் கதவு தட்டப்படுகிறது. வீட்டுக்காரர் கதவைத் திறந்து பார்க்கிறார். முன் பின் தெரியாத இரண்டு பேர் நின்று கொண்டிருக்கிறார்கள். “யாரைப் பார்க்க வேண்டும்?” “உங்கள் வீட்டில் தண்ணீர்க் குழாய் ஏதாவது ஒழுகுகிறதா? அப்படியானால் சொல்லுங்கள். நாங்கள் இலவசமாக சரி பார்த்துத் தருகிறோம்” வீட்டுக்காரர் நம்ப முடியாமல் பார்க்கிறார். இலவசமாகவா?! இப்படித்தான் ஆரம்பித்தது Drop Dead Foundation-னின் பணி. “Save every drop or drop dead” என்பது இவர்களின் முழக்கம். இந்தச் சிறப்பு மிக்க பணியை ஒற்றை ஆளாகத் தொடங்கியவர், திரு. ஆபிட் சுர்தி ... Full story

சம்ஸார பங்க நிர்மக்ன சமுத்தரண பண்டிதா

-கவிநயா   உலகத்தில் பிறந்தமைக்காக மகிழ்ச்சி கொண்டு, உலக வாழ்வைத் திருப்திகரமாக அனுபவித்து வாழ்பவர்கள் மிகச் சிலரே. அதற்குக் காரணங்கள் பலவாக இருக்கலாம். அவர்கள் பற்றை விட்டு முற்றும் துறந்தவர்களாக இருக்கலாம். அல்லது உலகம் மாயை என்று இயல்பாகவே புரிந்து கொண்டவர்களாக இருக்கலாம். அல்லது இன்பமும் துன்பமும் பாதிக்காமல் தாமரை இலைத் தண்ணீரைப் போல வாழக் கற்றவர்களாக இருக்கலாம். அல்லது ஆழமான மனக் காயங்களால் பாதிக்கப்படாதவர்களாக, பூர்வ ஜென்ம புண்ணியத்தால் இன்பங்களே ... Full story

அந்தர் முக ஸமாராத்யா. பஹிர் முக ஸுதுர்லபா.

  -கவிநயா   லலிதா சகஸ்ரநாமத்தில் வருகின்ற அன்னையின் நாமங்கள். அந்தர் முகம் என்றால் உள் முகமாக. உள் நோக்கி. பஹிர் முகம் என்றால் வெளி முகமாக. வெளி நோக்கி. உள் நோக்கிய, ஒருமுகப் பட்ட மனதால் மட்டுமே அறியப்படுபவளாம், லலிதாம்பிகை. வெளிப்புறத்தில் எங்கு, எப்படி நோக்கினாலும் நமக்குச் சிக்க மாட்டாளாம். அவளை நினைக்கும் போதும், பூஜிக்கும் போதும், ஒரு முகமாக அவளை நினைக்க வேண்டும்.  மனம் நிறைந்த அன்பு இருக்க வேண்டும். பக்தி இருக்க வேண்டும். அதல்லாமல், வெளி நோக்கிற்காக மட்டுமே, வெளிப் பகட்டிற்காக மட்டுமே அவளை பக்தி ... Full story

“அங்கயற்கண்ணி ஆனந்தம் கொண்டாளே”

“அங்கயற்கண்ணி ஆனந்தம் கொண்டாளே”
  --கவிநயா ஒரு அனுபவம் திருமதி. காயத்ரி பாலகுருநாதன். பரத நாட்டிய உலகில் இவரை அறியாதவர்கள் அரிதாகத்தான் இருப்பார்கள். கலாக்ஷேத்ராவின் தலைவியாக இருந்த, காலம் சென்ற திருமதி.கிருஷ்ணவேணி லக்ஷ்மணன் அவர்களின் புதல்வி. தாயையே குருவாகக் கொண்டு பரதக் கலையைக் கற்றுத் தேர்ந்தவர். இவருடைய அன்புக் கணவர் திரு.பாலகுருநாதனும் சிறந்த பரதக் கலைஞராக அமைந்திருப்பது இன்னும் சிறப்பு.  இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பலவித நடன நிகழ்ச்சிகள், நாட்டிய நாடகங்கள், நடனப் பயிற்சி முகாம்கள் என்று நடத்தி ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறார்கள். திருமதி.காயத்ரி, சென்னையில் ‘கிருஷ்ணாஞ்சலி’ என்ற நடனப் பள்ளியை நடத்தி வருகிறார். உலகெங்கும் இவருக்கு மாணவியர் இருக்கிறார்கள். ... Full story

குட்டிச் சுட்டீஸ்

  -கவிநயா   ஞாயிற்றுக் கிழமைகளில் சன் டி.வி.யில் வருகிற குட்டிப் பிள்ளைகள் நிகழ்ச்சி. அந்த நேரம் வீட்டில் இருந்தால், பார்ப்பதுண்டு. குட்டிப் பிள்ளைகள், அதுவும் மழலை மாறாமல் இருக்கையில் அவர்கள் பேசுவதைக் கேட்டு விட்டால், "குழலும் யாழும் இனிதென்று சொன்னவருக்கு அப்படிச் சொல்ல எப்படித்தான் மனம் வந்ததோ?” என்று கேட்கத் தோன்றுமல்லவா? நிகழ்ச்சி, ரசிக்கும்படியே இருந்தது, போன வாரம் பார்க்கும் வரையில்… போன வாரம் வந்த குழந்தைகளில் ஒரு குழந்தை... மிஞ்சி மிஞ்சிப் போனால் 4 வயது இருக்கும். அந்தக் குட்டிப் பிள்ளை சொல்கிறது, “அப்பா ‘சரக்கு’ ... Full story

கலையாத கனவொன்று …

-கவிநயா   கலையாத கனவொன்று தந்தாய் – நீயே நிலையாக வந்தென்றன் நெஞ்சிலே நின்றாய்! மலைபோல நம்பிக்கை தந்தாய் – வான் மழைபோல அன்பினைப் பொழிந்தென்னை வென்றாய்!   வனமான என்வாழ்வில் வந்தாய் – வந்து வளம்தந்து வசந்தமாய் எனையேந்திக் கொண்டாய்! மனமெங்கும் உனைநிரப்பி வைத்தேன் – பூ மணம்வீசும் உன்பெயரில் உயிரெழுதி வைத்தேன்!   சுனைபோலப் பெருகு மென்னன்பு – என் வினையெல்லாம் நில்லாமல் ஓடுமுன் முன்பு! உனைமிஞ்சும் அன்பெங்கும் இல்லை – உன்னை நினையாது ஒருகணமும் கழிவதே இல்லை!   படத்துக்கு நன்றி: http://armanoluk.blogspot.com/2010/06/radha-krishna-by-mahima-3.html Full story

கண்ணன் என் காதலன் – ‘கண்டால் சொல்லு!’

கண்ணன் என் காதலன் - 'கண்டால் சொல்லு!'
  -கவிநயா-   காதோரம் கிசுகிசுக்கும் காற்றேநீ கண்டாயோ? ஆற்றோரம் அசைந்திருக்கும் நாற்றேநீ கண்டாயோ? வானெங்கும் வட்டமிடும் வெண்ணிலவே கண்டாயோ? தேனெடுக்க சுற்றிவரும் சின்னவண்டே கண்டாயோ? மூடியுள்ள கண்ணுக்குள்ளே மோகனமாய் சிரித்திடுவான்! நாடியென்றன் நெஞ்சுக்குள்ளே நர்த்தனங்கள் புரிந்திடுவான்! கண்திறந்து பார்த்துவிட்டால் கணத்தினில் மறைந்திடுவான்! மண்மயங்கும் வண்ணக்கண்ணன் மாயம்பல புரிந்திடுவான்! ஆடும்மயில் கண்டாலோ அவன்நினைவே வருகுதடி; பாடுங்குயில் குரலினிலே வேய்ங்குழலே ஒலிக்குதடி; கார்மேகம் கண்டாலோ கண்ணமுகம் தெரியுதடி; பார்புகழும் அவன்நினைவே மார்த்துடிப்பாய் ஆச்சுதடி; கால்கடுக்க சுற்றிவரும் காற்றேநீ கண்டால் சொல்லு... கடலேறி விளையாடும் அலையேநீ கண்டால் சொல்லு... ஊருக்கெல்லாம் ஒளிகொடுக்கும் சூரியனே கண்டால் சொல்லு... பாருக்குள்ளே மணியாம்என் மன்னவனைக் கண்டால் ... Full story

சொல்லின் செல்வன்

சொல்லின் செல்வன்
கவிநயா   இராமயணத்தில் ஸ்ரீ ராமனை நாராயணானாக உணர்ந்தவர்கள், அவனை ஆண்டவனாக அறிந்தவர்கள், ஒரு சிலரே. அவர்களில் ஒருவன் அனுமன்.  ஆஞ்சநேய ஜெயந்தியை முன்னிட்டு, அனுமன் ஸ்ரீராமனைச் சந்திக்கும் படலத்தைப் பற்றி இங்கே பேசலாம். எத்தனையோ பெரியவர்கள் மிகவும் விசேஷமாக அனுபவித்துச் சொல்லும் கதை இது. என்றாலும், இந்தச் சிறிய அணிற்பிள்ளைக்கும் இப்படிப்பட்டதொரு ஆசை வந்து விட்டது. ஸ்ரீ ராமனும், அனுமனும் பொறுத்தருள வேண்டும். ஸ்ரீ ராமஜெயம்.   சுக்ரீவன், தன் அண்ணன் வாலிக்குப் பயந்து, அவன் வரமுடியாத இடமான ரிச்யமுக பர்வதத்தில் ஒளிந்து ... Full story

நெற்றிக் கண்

நெற்றிக் கண்
கவிநயா   எப்படி அடக்கினாலும் அடங்காமல் விட்டேனா பார் என்று எகிறுகிறது மனசு.   பொறு, பொறு, இன்னும் கொஞ்சமே கொஞ்சம் பொறு என்கிறது அறிவு.   அடக்கி மடக்கி முடக்கி வைத்தவை யெல்லாம் அடிவயிற்றில் சென்று அமர்ந்து கொண்டு அனலாக எரித்துத் தகிக்கிறது.   விழிகளினின்றும் வழிகின்ற உவர் புனல், வெந்நீர் ஊற்றாய் முகிழ்த்து, பேரருவியாய்க் கொதித்துப் பெருகுகிறது.   நெஞ்சுக் குழிக்குள்ளிருந்து நெருப்புக் கங்குகளாய்ப் பிரசவிக்கத் தயாரான வார்த்தைகள், நாவின் நுனியில் நின்று கொண்டு நர்த்தனம் ஆடுகின்றன.   தெறிக்கும் கனலின் வெம்மை விதையில் ஊறித் திளைத்து முளைக்கத் தொடங்கி யிருக்கிறது, நெற்றிக் கண்ணொன்று.   படத்துக்கு நன்றி: http://theholyarunachala.wordpress.com/category/rajarishi-sathguru-sri-rajalinga-swamigal-merges-with-lord-sri-arunachaleshwara-2/   Full story

வருக புத்தாண்டே!

வருக புத்தாண்டே!
கவிநயா   புத்தாண்டை வரவேற்போம்! புதுவாழ்க்கை அமைத்திடுவோம்! புத்துணர்வு பெற்றிடுவோம்! புதுமைபல செய்திடுவோம்!   கவலைகளைக் கழற்றி வைப்போம்! தன்னம்பிக்கை தக்க வைப்போம்! முயற்சிகளை முடுக்கிடுவோம்! அயர்ச்சிகளைத் தள்ளி வைப்போம்!   அன்பாலே கோவில் செய்வோம்! அறிவொளியால் விளக்கிடுவோம்! அவனியெல்லாம் ஒளியேற்றி ஆனந்தமய மாக்கிடுவோம்!  ... Full story
Page 1 of 3123
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.