Author Archive

‘அவள்’

-தேவா வானத்தில் புள்ளிவைத்து - என் இதயத்தில்  கோலம் போட்டாய், நிலவுப்பொட்டில் உன் முகம்!     Full story

பாவம் ஏன் பரிதாபப்படவில்லை?

​தேவா   பெண்ணே!!   உன் உடம்பு மட்டுமே உல்லாச ஊஞ்சலாகிவிட்டது, ஜாதி பேதமின்றி, வயது வரம்பின்றி, அனைவரும் ஆடிமகிழ்கின்றனர்,   உன் ஆபரணத்தைத்தான் அபகரிக்கிறார்கள் என்றால், உன் அழகு பெட்டகத்தில், கற்பு கூட சூறையாடப்படுகிறது, அமிலத்தில் அபிஷேகம் உனக்கு மட்டுமே செய்யப்படுகிறது, வெறி நாய்களின்  இச்சைக்கு உன் சதைகள் சிதைக்கப்படுகிறது,   பாவம் கூட உனக்காக பரிதாபப்படவில்லையே!   பிரம்மன் உன் படைப்பில் வஞ்சனை செய்து விட்டானடி, அழகைத் தந்தவன் ஆபத்தையும் தந்துவிட்டான், என் செய்வது,   ஆண்களின் பசிக்கு பெண்கள் இ​ரையாவது, என்றோ ஆரம்பமாகிவிட்டது, அடுத்தவன் பெஞ்சாதியை, ஆண் ஜாதிதானே துகில் உரித்தது, அன்று கண்ணன் சேலை தந்தான், இன்று உன் சடலத்திற்கு மட்டுமே போர்த்தப்படுகிறது,   ஆனாலும் ஆச்சரியம்! எத்தனை நடந்தாலும் உன் பொறுமையின் பெருமைதான் ஆச்சரியம், அதிசயம், நீ மட்டுமே அற்புதம், மற்றவை அப்புறம்,   போதுமம்மா போதும், பட்டது போதும், உன்னை ... Full story

கவிஞர்களே

கவிஞர்களே
தேவா கவிஞர்களே உங்கள் ,கவிதை தறியில், கனவுகளையும் ,கற்பனையும் ,பொய்யையும் நெய்ததுபோதும் , அரசனை பாராட்டி பரிசுகள் பெற்றதும் போதும் , உங்கள் முன்னோர்கள் , ஈரடி குறளும் ,நாளடி பாட்டும் பாரதியின் கனவுகளும் ஏதும் மெய்யாகவில்லை , ஆக்கப்பூர்வமாக ,ஆரோக்யமாக மனிதன் வாழ்வதற்கு , வழிதனை உங்கள் வரிகளில் வரைந்திடுக .... படத்துக்கு நன்றி http://lawrencecjordan.com/Films/poets%20dream.html Full story

கடவுளான பாட்டி !

  தேவா   என் பாட்டி சொல்லும் கதைதான் என் இரவு நேர தூக்க மாத்திரைகள் , காலையில் என்னை எழுப்புவது என் பாட்டிதான் - அன்று ஏனோ மாலை வரை அவள் எழவில்லை , மாலை அணிந்து அவள் படுத்துக் கிடந்தாள் - தலை மாட்டில் விளக்கு , எங்கும் மவுனம் அதைக் கலைத்த சில அழுகைகள் , அதையும் தாண்டி தாரை தப்பட்டைகள் , அவளை நாலு பேர் தூக்கிச் சென்றனர் , முன்னால் என் ... Full story

இறைவன் எங்கே..

இறைவன் எங்கே..
தேவா இறைவன் உண்டென்றும் இல்லை என்றும் உரைப்போர் உலகில் கோடியுண்டு கைலாயத்தில் கண்டேன்  ஈசனை என்போர் சிலர் காசிக்கு சென்றாலும் பாவங்கள்  போகவில்லை என்போரும் உண்டு , பயிர் காத்திட மழை ,ஈந்திடும் முகிலும் இறைவனே என்று எழுதிவிட்டார் வள்ளுவன் , தெய்வத்தை பல உருவில் வணங்கினாலும் அழுகின்ற குழந்தைக்கு பசிதீர்க்கும் உள்ளத்துக்கோர் ஆலயம் கட்டி வணங்குவேன் வாடுகின்ற மனிதனுக்கு ஊக்கமூட்டி , பகிர்ந்துண்ணும் இதயமே இறைவன் வாழும் ஆலயம் அன்றோ!   படத்துக்கு நன்றி: http://www.flickr.com/photos/csureshbabu/3350928450/   Full story

புது வருடம்

புது வருடம்
தேவா   புது வருடத்தில் அவன்  வாழ்க்கை சிறக்குமா .. நல்ல நேரம் பிறக்குமா ??? தின நாளிதழில் தேடிகொண்டிருந்தான் வாழ்கையை இளைஞன் , இளைஞனே!! உனக்கு  சொல்வேன், உழைக்கும் தினமுனது ''முகூர்த்தநாள்" உறங்கா நேரம் உன் ''நல்ல நேரம் '' சோம்பி படுத்திடும் நேரம் '''ராகுகாலம் ''' வீணடிக்கும் நேரமே ,..... உன் '''எமகண்டம் ".....   படத்துக்கு நன்றி: ... Full story

கொடிக்கம்பம்

கொடிக்கம்பம்
தேவா மந்திரிக்கு காத்திருக்கும் ''கொடிக்கம்பம்''' வாடிப்போன பூக்கள் சோர்ந்துபோன மாணவர்கள் வியர்த்து ஒழுகும் ஆசிரியர்கள் சுதந்திரதினத்தில் சுதந்திரம் இல்லா மனிதர்கள், சரித்திரம் படித்தவர்களும் சரித்திரம் படைத்தவர்களை மறந்துபோனார்கள் புலம்பும் தியாகியின் கிழிந்த சட்டையில் காந்தியின் புகைப்படம் .... மறுநாள்  செய்தித்தாளில் கொடியெற்றிய மந்திரி கொடிக்கம்பம் நட்டதில் ஊழலால் கைது ,... என்ன!!, ஆங்கிலேயன் நம்மிடம் சுரண்டிச்சென்றானா??.. இவர்களும்,அவர்களும் , சுரண்டினார்கள்! சுரண்டுகிறார்கள்!! சுரண்டிக்கொண்டிருப்பர்கள்!!!   படத்துக்கு நன்றி: http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=8250     Full story

முன்னேற்றம்

முன்னேற்றம்
தேவா   முன்னோர்கள் கண்ட கனவு  பின்னோர்கள் வந்தும் கனவாகவே நின்றது  முன்னேறும் நாடு என்று மூன்று தலைமுறை முடிந்துவிட்டது , எங்கள் தலை முடிகள் தான் உதிர்ந்துபோனது வசதிகள் பல வந்துவிட்டதாம் மாற்றங்கள் பல நடந்துவிட்டதாம் - அட உலகம் இன்று சுண்டு விரலில் வந்து ... Full story

தேடிக்கொண்டிருக்கிறோம் …கிடைக்கவில்லை ,..!

தேடிக்கொண்டிருக்கிறோம் ...கிடைக்கவில்லை ,..!
தேவா மகாத்மாவே ! உன் போராட்டத்திற்கு உன் இதயத்தில் தோட்டாவினால், முற்றுப்புள்ளி வைத்து விட்டதாக நினைத்து நீ துயில் கொண்டாய்,உன் நினைப்புதான் பிழைப்பைக் கெடுத்தது,நீ வெள்ளையரிடம் பறித்துத் தந்த சுதந்திரம் பறி போய்த் தவிக்கின்றோம்,அரசன் ஆண்ட காலம் காலாவதி ஆன பின்னும்,மந்திரிகள் நாட்டை ஆளும் காலம் இது,ராக்கட்டு விட்டு என்ன பயன் பாக்கட்டில் பணம் இல்லையே ,நீ மக்களுக்காக வாழ்ந்தாய்-இவர்கள் தம் மக்களுக்காக ... Full story

எங்கே அவன்?

எங்கே அவன்?
தேவா ஊரைச்சுற்றித் திரிகின்றேன், உண்மையைத் தேடி அலைகின்றேன், தூய மனிதனைக் காண விழைகின்றேன் ,கோவிலுக்கு நித்தம் சென்றிடுவர், சாமியை வணங்கி வேண்டிடுவர்,பூஜைகள் பல செய்திடுவர்,பூமியை ஏய்த்தே வாழ்ந்திடுவர்,கங்கையில் முங்கி மூழ்கிடுவர் அடுத்தவர் பொருளைத் திருடிடுவர் ,பெண்களின் பெருமையைப் பேசிடுவர்,பெண் கொடுமைக்கு வித்திடுவர்,கல்விக்கு நிதி என்று வசூலிப்பர். பலசதிக்கு வழியைக் காட்டிடுவர்.வார்த்தையில் தேனைக் குழைத்திடுவர் வஞ்சனையில் தேளாய்க் கொட்டிடுவர் பாலில் கலப்படம், ... Full story

ஓவியப்பறவை

ஓவியப்பறவை
தேவா சிறகுகள் இரண்டுண்டு, கால்களும் இரண்டுண்டு, கவர்ச்சியான வண்ணப்பறவைதான், ஆனால் பறக்க முடியாத, ஓவியப்பறவை நான்..   படத்திற்கு நன்றி: http://free-beautiful-desktop-wallpapers.blogspot.in/2012/02/beautiful-colors-bird-painting-art.html   Full story

மூட நம்பிக்கை

மூட நம்பிக்கை
தேவா காளிக்குக் கிடா வெட்டுதல், கழுத்தில் தாயத்துக் கட்டுதல், மூட நம்பிக்கையாம், சொன்னது தந்தை.. வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யச் சொன்னதும் அவரே; தந்தைக்குத் தெரியாது, இதுவும் ஒரு மூட நம்பிக்கை என்று.   படத்திற்கு நன்றி:http://www.dailymail.co.uk/news/article-508547/Numbers-claiming-unemployment-benefit-drops-32-year-low.html Full story

அக்காள் மகள்

அக்காள் மகள்
  தேவா     என் அக்காள் குழந்தைமேல் எனக்கு கோபம் வரும் என் அத்தை மகளின் முத்தங்களைப் பெறுவது அவள் தானே !!                  படத்திற்கு நன்றி :  http://media.photobucket.com/image/mother%20and%20baby/reginalake/mother_and_baby.jpg?o=16      Full story
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.