Author Archive

குவைத்தில் புத்தாண்டு கொண்டாட்டம்!

குவைத்தில் புத்தாண்டு கொண்டாட்டம்!
பர்வத வர்தினி அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்! குவைத்தில் என் கணவர் பணிபுரியும் கல்ஃப் ஸ்பிக் ஜெனரல் டிரேடிங் அண்டு காண்டிராக்டிங் கம்பெனி (Gulf Spic General Trading & Contracting Co.) வெகு விமரிசையாக புத்தாண்டுக் கொண்டாட்ட நிகழ்ச்சிகளை நடத்தியது. ஒவ்​வொரு ஆண்டும் டிசம்பர் 31ம் ​தேதி மா​லை முதல் புத்தாண்டு துவங்கும் ​நேரமாகிய இரவு 12 மணி வ​ரை அற்புதமான கலை நிகழ்ச்சிகளை நடத்துவதை அந்நிறுவனம் வழக்கமாகக் கொண்டுள்ளது. அவ்வா​றே இவ்வாண்டும் சிறப்பான நிகழச்சிகள் நடந்​தேறின. புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகளின் ஆரம்பக்கட்டமாக ... Full story

பெற்​றோருக்கு மரியா​தை

பெற்​றோருக்கு மரியா​தை
பர்வத வர்தினி அந்த நாள் அவளுக்கு இன்னமும் ஞாபகம் இருந்தது. சங்கீதாவின் தந்தைக்கு இருப்புக் கொள்ளவில்லை. அவர் மனத்தில் சந்தேகம் எனும்​ பேய் புகுந்துவிட்டிருந்தது. ஒரு​வே​ளை நம் மக​ளே நம்மிடம் பொய் சொல்கிறாளோ? இத்தனை நாளும் சுதந்திரம் கொடுத்து வளர்த்ததே நம் தவறுதானோ! தன் உறவினர்கள், நண்பர்க​ளை​யெல்லாம் விட மகளுக்கு அதிகமாகவே சலு​கைகள் வழங்கியவர். சிறு வயதிலிருந்தே மிகுந்த அக்கறையுடன் அவளுக்கு அ​னைத்​தையும் கற்றுத் தந்தவர். ஒழுக்கமுள்ள​ பெண்ணாக வளர்த்திருக்கி​றோம் என்று தனக்குத்தானே இறுமாந்திருந்தவர். இன்​றோ அவர் மனம் படாதபாடுபட்டுக் ​கொண்டிருந்தது. கோ எட் பள்ளியில் ... Full story

கால இயந்திரம்-(பாகம்-3)

கால இயந்திரம்-(பாகம்-3)
  பர்வத வர்தினி இரண்டு நாட்கள் கழித்து பூங்கொடியின் அரசாங்க ஆணைப் பத்திரத்துடனும் பொன்னுமலையான் போன்று வேடமிட்டிருந்த கிருஷ்ணசாமியுடனும் சாரு கோட்டைக்குள் புகுந்தாள். ஆணைப் பத்திரத்தைக் கண்டவுடன் இவர்கள் உள்ளே செல்ல தடையேதுமின்றி அனுமதிக்கப்பட்டது.  அது மாலைப்பொழுது என்பதை எடுத்துக்காட்டும் விதமாக மல்லிகை வாசம் நாசியைத் துளைத்தது. இருவரும் மிகவும் ஜாக்கிரதையாக சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே சென்றனர். கடம்பூரின் அரண்மனையும் அதன் பின்புறம் தோட்டமும் மாலை சூரியனின் சிவந்த ஒளியில் அழகுற ... Full story

கால இயந்திரம்-(பாகம்-2)

கால இயந்திரம்-(பாகம்-2)
  பர்வத வர்தினி ஒரு சில நிமிடங்களிலேயே கால இயந்திரம் அமைதியடைந்தது போல் தோன்றியது. மெல்ல கண்களைத் திறந்து பார்த்தாள் சாரு. கிருஷ்ணசாமி அவளைக் கண்டு "நாம வந்து சேர்ந்துட்டோம் சாரு" என்றார். பிறகு கதவைத் திறக்க ஒரு பொத்தானை அழுத்தினார். கதவு சத்தமின்றி மெல்லத் திறந்தது. இருவரும் கால இயந்திரத்தை விட்டு இறங்கினார்கள். அவர்கள் இருந்த இடத்தை சுற்று முற்றும் பார்த்தார்கள். அது இரவு நேரம். வானில் வெண்ணிலா பால்மழை பொழிந்து கொண்டிருந்தது. அந்த இடம் நிறைய மரம் செடிகளுடன் ஏதோ காடு போல் தோன்றியது. ... Full story

கால இயந்திரம்-(பாகம்-1)

கால இயந்திரம்-(பாகம்-1)
பர்வத வர்த்தினி   "ஓ மேன்! நிஜமாவா சொல்றே? உங்க மாமா சயின்டிஸ்டா?"  "ஆமாம் சாரு. அவரு ஒரு சயின்டிஸ்டு தான். ஆனா பெரிசா சொல்லும்படி இதுவரைக்கும் ஒண்ணும் கண்டுபிடிச்சதில்லை.ஏகப்பட்ட புக்ஸுக்கும் நிறைய தட்டுமுட்டு சாமானுக்கும் மத்தியிலே உக்காந்து ஏதோ செஞ்சிட்டு இருப்பாரு. ஏதாவது கேட்டா அவர் சொல்ற பதிலும் நமக்கு புரியாது. உருப்படியா வேலை செஞ்சு காசு சம்பாதிக்கற எண்ணமும் இல்லை. நல்லவேளை அவரு பண்ண ஒரே நல்ல காரியம் கல்யாணம் எதுவும் பண்ணிக்கலை. ... Full story

வித்யா

வித்யா
பர்வதவர்தினி  வித்யா அதிர்ச்சியில் ஸ்தம்பித்து நின்றாள். அவரைக் கண்டதும் வயிற்றிலிருந்து குடல் எழும்பி மார்பில் வந்து அடைத்துக் கொண்டது போல் தோன்றியது. இவர் அவரே தானா? திரும்பவும் உற்றுக் கவனித்தாள். சந்தேகமே இல்லை. அவரே தான். தன் அப்பாவேதான். அவளுடைய மனதில் பழைய நினைவுகள் எல்லாம் அப்படியே வலம் வந்தன. மறக்கக் கூடியவையா அவை.. எதிரிக்கும் வரக்கூடாதே அந்த நிலைமை.. வித்யாவிற்கு அப்பொழுது பத்து வயது இருக்கும். வித்யாவின் குடும்பம் ஒரு ... Full story

இவளும் ஒரு தொடர்கதை

இவளும் ஒரு தொடர்கதை
பர்வதவர்தினி “அழாதே கீதா! என்னாச்சுன்னு சொன்னாத்தானே தெரியும்? இந்தா கொஞ்சம் தண்ணி குடி!. குடிச்சுட்டு என்ன நடந்ததுன்னு சொல்லு” என்றாள் கல்யாணி. கீதாவும் கல்யாணியும் கல்லூரித் தோழிகள். இருவரும் மாலைக் கல்லூரியில் படித்து வந்தார்கள். இவர்கள் முதன்முறை சந்தித்ததே தியாகராய நகர் பஸ்நிலையத்தில் தான்; அதுவும் கல்லூரிக்குச் செல்ல பேருந்துக்காகக் காத்திருக்கும் போதுதான். கீதா பி.ஏ வும், கல்யாணி பி.காமும் படித்துக் கொண்டிருந்தனர். இவர்கள் இருவரும் ... Full story
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.