Author Archive

சான் ஃபிரான்சிஸ்கோ பயணக்கட்டுரை – பாகம் 2

சான் ஃபிரான்சிஸ்கோ பயணக்கட்டுரை – பாகம் 2
--செம்பூர் நீலு. 10,000 புத்தர் உருவச்சிலைகள் உள்ள நகரம் நாப்பா வாலியை சுற்றிப்பார்த்துவிட்டு இரவில் ஒரு நல்ல லாட்ஜில்  தங்கிவிட்டு மறு நாள் காலையில் உக்கியா நகரிலிருந்து 2 மைல் தொலைவிலுள்ள 10,000 உருவச் சிலைகள் கொண்ட புகழ் வாய்ந்த புத்தர் கோவிலுக்குச்  சென்றோம். நுழை வாயில் வளைவு மண்டபம் நகரின் நுழை வாசலில் உள்ள மண்டபம் அழகாக சைனா ஜென் கோவில் கட்டிடக் கலையை பிரதிபலிக்கிறது. இருமருங்கிலும் பச்சைப்  பசேலென்று ... Full story

சான் ஃபிரான்சிஸ்கோ பயணக்கட்டுரை – பாகம் 1

சான் ஃபிரான்சிஸ்கோ பயணக்கட்டுரை – பாகம் 1
--செம்புர் நீலு. நாப்பா வாலி அமெரிக்க சுதந்திர தின விடுமுறை – ஜூலை 4ம் நாள். மனைவி, மகன் மருமகளுடன் சான் ஃபிரான்சிஸ்கோவின் 80 மைல் தொலைவிலூள்ள “நாப்பா வாலி” என்று அழைக்கப்படும் சுற்றுலா மையத்திற்கு சென்றோம். இந்த “நாப்பா வாலி” தரமானதும் விலை உயர்ந்த “வைன்” தயாரிப்புக்கு உலக அளவில் பேர் பெற்றது. 1858ம் வருடம் “ஜான் பச்செட்” என்பவர் ஒரு சிறிய வைன் தயாரிப்பை தொடங்கி ... Full story

கிராண்ட் கேனியன் பயணக்கட்டுரை

கிராண்ட் கேனியன் பயணக்கட்டுரை
-- செம்புர் நீலு. நான் என்னுடைய மனைவியுடன் 2014 மே மாதம் சான்ஃப்ரான்சிஸ்கோவிற்கு வந்து சேர்ந்தேன். இது என்னுடைய மூன்றாவது அமெரிக்க விஜயம். வழக்கம் போல் என்னுடைய மகன் நான் வந்து இறங்கிய உடன் எனக்கு அளித்த முதல் புத்திமதி "டாலரை இந்திய ரூபாய் கணக்கில் மாற்றி எண்ணக்கூடாது." ஜெட் லாக் முடிந்த ஒரு வரத்திற்குப் பிறகு ஒரு மூன்று நாள் விடுமுறையில் அமெரிக்காவின் சூதாட்ட நகரமான லாஸ் விகாஸிற்கு விமான பயணம். விமான நிலையத்திலே சூதாட்ட கம்ப்யூட்டர்கள். அடுத்த நாள் காலையில் அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்திலிருக்கும் ... Full story

குதிரையா??? பந்தயமா???

குதிரையா??? பந்தயமா???
  நீலகண்டன் (செம்பூர் நீலு) நான் செம்பூரிலிருக்கும் அஹோபில மடத்திற்கு வழக்கம் போல் மாலையில் சென்றிருந்தேன். அன்று சனிக்கிழமை நல்ல கூட்டம். தீபாராதனை முடிந்த பிற்பாடு தீர்த்தம் சடாரி ப்ரசாதம் வாங்கிக்கொண்டு கோவிலை விட்டு வெளியில் வரும்போது தான் வித்யாவை கவனித்தேன். வித்யாவும் அவளின் கணவர் சுந்தரும் அப்போது தான் கோவிலுக்குள் அடியெடுத்து வைத்தார்கள். அவர்கள் என்னை கவனித்த்தாக தெரியவில்லை. நான் வலுவில் அவளிடம் சென்று “ எப்படி இருக்காய் வித்யா. வீட்டில் எல்லாரும் சௌக்கியமா நாம பார்த்து ... Full story

தத்து – பாசத்திற்காகவா/பணத்திற்காகவா

தத்து - பாசத்திற்காகவா/பணத்திற்காகவா
நீலகண்டன் (மும்பை) செம்பகம் கணவரின் ஃபோட்டோவின் முன்னால் நின்று கொண்டிருந்தாள். கன்னத்தின் வழியாக வழிந்த கண்ணீர் தரையில் சொட்டியது. "இப்படி என்னை விட்டுட்டு ஒரு கவலையும் இல்லாமல் நீங்க போயிட்டீகளே. இது உங்களுக்கே பொறுக்குதா. அன்னிக்கு அடிச்சு அடிச்சுச் சொன்னீகளே, அன்னிக்கு இந்த மரமண்டையிலே ஒன்னும் ஏறலியே. கூடப் பிறந்த பாசமும் குளந்தை ஆசையும் என் கண்ணை மறைச்சிடிச்சே. இப்பொ நான் இந்த கூறு கெட்ட புள்ளையை வைச்சிட்டு என்ன பண்ணுவேன். என் ... Full story

அகங்காரத்தின் உச்சக் கட்டம் விவேகம்

அகங்காரத்தின் உச்சக் கட்டம் விவேகம்
நீலகண்டன் (மும்பை)  "ரகு, சித்திரை பொறந்தால் ரமேஷுக்கு 27 முடிந்து 28 வயசு ஆரம்பிக்கிறது அவனுக்குக் கலியாணம் பண்ண வேண்டும் என்ற நினைப்பே இல்லையா? ஏண்டி ராஜி, நீயாவது உன் அருமைப் பிள்ளை கிட்டே கேட்கப்டாது? இரண்டு பேரும் பேசாமல் இருக்கேள்" என்று ஆரம்பித்தாள் அம்மா (பகவதி மாமி) . பேசுகிற தொனியில் ஒரு அதிகாரம் வெளிப்பட்டது. அம்மாவுக்கு என்றைக்குமே தான் சொன்னது நடக்கணும், இல்லையென்றால் கோபம் மூக்கிற்கு மேல் வந்து விடும். ... Full story
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.