Author Archive

கவிழ்ந்திருக்கும்….

  -உமாமோகன்   பார்த்த கணத்திலிருந்து என் அடிவயிற்றைப் பிசைகிறது அந்தப்படம் அழுது வடியும் விளக்குக் கம்பம் ஒன்றின்கீழ் தலைகவிழ்ந்து அமர்ந்திருக்கிறாள் அச்சிறுமி பசியில் குறுகியோ சீண்டலில் சாம்பியோ தனிமையில் வெம்பியோ அங்கே அமர்ந்திருப்பதாக விளக்கம் தராதீர்கள் தயவு செய்து உங்கள் படத்தை சற்றே திருத்துங்கள் அந்த விளக்குக் கம்பத்திற்கு ... Full story

சார்த்திய கதவு

சார்த்திய கதவு
-உமா மோகன் இருகரமும் விரித்து நடந்தேன் எல்லோரையும் தழுவிக் கொள்ளவும் ஆதுரமாய்த் தலைகோதவும் பாராட்டி வழித்துத் திருஷ்டி கழிக்கவும்  ஆறுதலாய்க் கன்னம் தட்டவும் முதுகு தடவிப் பாரம் இறக்கவும் தோதாக இருக்கட்டுமென இருகரமும் விரித்துதான் நடந்தேன்... என் கையில் தராசு வந்தது எப்போது ? சல்லிசாய்க் கிடைக்கும் வம்புகளும் ... Full story

உறைந்த காலம்

உறைந்த காலம்
உமா மோகன் உதிர்த்த சொற்களில் நீ நின்றாய் .. உரைக்காத சொல்லில் நான்... என் உச்சரிப்பு குறித்து கிளர்ச்சியோடு பகிர்கிறாய்... மௌனத்தில் நடமிட்ட பொழிவை கோர்க்க இயலவில்லை என்னால் ... வண்ணத்துப் பூச்சியின் சிறகு படிந்த மகரந்தமென ரசிக்கிறாய் கூட்டுப் புழுவின் வரிகள் என்னாயின .. ஒருமுறை கேட்டிருக்கலாமோ   Full story

எங்கே நீயோ

எங்கே நீயோ
உமா மோகன்  --பிரியம் சொல்லில் தளும்பல் உன் ப்ரியம் கருணை கண்ணில் வழிவது பார்வைக்கு அழகு பார்ப்பவர்க்கு அழகா ..? என் ஆன்மாவை துடைத்துத் தூபம் காட்டி இறுகப் பூட்டிவிட்டேன் புற அழுக்கு குறித்த அச்சமென்றாய் ..   அழுக்கு தின்று மூச்சு விடும் மீன் அது என்பதை அறியாயோ அகவிழி திறந்து ஆன்மாவை உலவவிடு... தடாகம் முழுக்க துள்ளிப் புரண்டு நீந்தும்போதில் நீயும் கற்பாய் பிரியமும் கருணையும் விரல் வழியும் வழியும் என்பதை...   Full story

பெரிதினும் பெரிது கேள்

பெரிதினும் பெரிது கேள்
   உமா மோகன் வாழ்க்கை துரத்துகிறதா?வாழ்க்கையை நாம் துரத்துகிறோமா? கல்லுக்கு ஓடும் நாயா?நாய்க்கு ஓடும் மனிதனா? எது நம் வாழ்க்கை?-இதில் என்ன வித்தியாசம் ? கல் விழக்கூட வேண்டாம் ...எடுப்பதான பாவனைக்கே ,நுரைதள்ள  ஓடும் ஓட்டம்... கெண்டைக்காலின் ஆடுசதையைக் காக்கும் அவசரத்தில் ஓடும் ஓட்டம்... இதுதான் வித்தியாசம்...! இப்படி ஒரு ஓட்டத்தின் முன்னேயோ...பின்னேயோ..நம் வெளிப்பாடெல்லாம் சில பெருமூச்சுக்களாகவோ,கோபக்-குமுறல்களாகவோ,எரிச்சலின் எச்சங்களாகவோதான் அமைகிறது.ஆனால்.... வறுமையும் வாழ்க்கையும் துரத்தும்போது திரும்பிப் பார்த்து  தீர்க்கமாய்ச் சிரித்தான் ஒருவன்...அவனால்,கஞ்சிக்கு இருந்த தானியத்தை வாரிப்போட்டு ... Full story

விடையிலாக் காட்சி

விடையிலாக் காட்சி
  உமாமோகன் விடையிலாக் காட்சி சிலநாட்களாகத்தோன்றிக் கொண்டே இருக்கிறது சுழித்தும் ,வளைத்தும்,இழுத்தும் "ஆ "எழுதும் காட்சி!எழுதுவது நான்தானாஎனத் தெரியாவிடினும் நான்போலவே....எங்காவது "ஆ"கண்டுவிட்டால்,கண்ணுக்கும் ,எழுத்துக்கும் இடையே உலவும் புகையாக "ஆ"உருவாகும் காட்சி,....சிரத்தையோடும்,சிரமத்தோடும்,உதடு மடித்தும்,"ஆ"எழுதப்பட்டுக்கொண்டே இருக்கிறது.."அ"எப்படிக் கற்றாய் ,"இ "சிரமமில்லையா என்றெல்லாம் கேட்டுவிடாதீர்கள்.அது குறித்த காட்சி ஏதுமிலாததால் ,என்னிடம் விடையில்லை. படத்திற்கு ... Full story

குறுஞ்சிரிப்பு

குறுஞ்சிரிப்பு
உமாமோகன் விரைந்து கொண்டிருந்த வாகனத்தைஓரம் நிறுத்தி அவசரமாக அலைபேசி எடுத்தான்....உதடுவிரிந்த புன்னகையொன்றைச் சிந்தினான் எதையோ வாசித்து .....தனித்த புன்னகையின் கூச்சம் உணர்ந்து வேகமெடுத்துப் போய்விட்ட அவனை மகிழ்வித்த குறுஞ்செய்தி நண்பனின் கிண்டல்?காதலியின் பகிர்வு?ஏதேனும் வெற்றி ?என் கேள்விக்கு விடை சொல்லத் தெரியவில்லை பாதையோரம் சிந்திக் கிடந்த அவன் புன்னகைக்கு.... படத்திற்கு நன்றி ... Full story

கறை படிந்த பாய்

கறை படிந்த பாய்
  உமா மோகன் இடுப்பு தரிக்கா காற்சட்டைக்கு அரைஞாண் கயிறுக்காப்பு..முறுக்குவாளியில்மட்டுமன்றி கடுகுடப்பி சில்லறையிலும் வைத்திருப்பாய் என் தீனி...பால் காசு,பயிரெடுப்பு...உன் எல்லா வரவிலும் என் செலவு...அழுக்குப் படிந்த உன் மஞ்சள் கயிறு நினைவிலாடுகிறது இந்த அடையாள அட்டையை தொங்கவிடும்தோறும்.....வெடிப்புகளுக்கு இட்ட மஞ்சள் விளக்கெண்ணையால் கறை படிந்து போன உன் பாயைப் பார்ப்பதுண்டு அம்மா ... Full story

பூட்டாத பூட்டுக்கள்

பூட்டாத பூட்டுக்கள்
 பூட்ட ஏதும் பொருளிலாத போதும்பூட்டிச் செல்வது வழக்கத்தின் காரணமாய் நிகழ்கிறது.கதவைத் திறக்கும்போது ஞாபகமாய் மனசைப் பூட்டிக் கொள்ள வேண்டியிருக்கிறது .....உள் சுவர்களெங்கும் பிறர் அறியாப் பூட்டுகள் தொங்கிக்கொண்டே இருக்கின்றன .....தேவைக்கேற்ப அவரவர் எடுத்துக் கொள்வதுண்டு சிலசமயம் தனக்கு....சிலசமயம் பிறர் வாய்க்கு....பலசமயம் விஷயங்களுக்கு ....எப்போதும் கனவுகளுக்கு...                                          படத்திற்கு ... Full story

அது இதுவல்ல

அது இதுவல்ல
    உமாமோகன்  அது இதுவல்லகடிகாரம் எனச் சொல்லலாம்தான் !ஆனால்...உன்-இடது கையிலிருந்து அவிழ்த்தோ ,என்ன செய்வதெனத் தெரியாமல் அடுக்கியுள்ள எண்ணற்ற அன்பளிப்பு சுவர்க்கடிகாரம்உறைகளைப் பிரித்தோதந்து விடலாம் என நிம்மதி அடையாதே !என் பதட்டம் வேறானது. அதில்தான் வைத்திருந்தேன் புதிய சமையல் குறிப்பு முயன்று பார்க்க,மகனுக்கான வரைபடம் வரைந்து முடிக்க,நாங்கள் நட்ட தென்னம்பிள்ளை பற்றி ... Full story

உடை மாற்றும் கனா

உடை மாற்றும் கனா
உமா மோகன் உப்புக் கரிந்தஉதடுகளோடுவியர்வையின்வீச்சம் தாளாதுவேண்டுகிறார்கள்வெள்ளுடைத் தேவதைகள்.....சிலுவைகளை விடக் கனமானசிறகுகளையும்நடமாடத் தோதிலாதுதடுக்கும் ஆடைகளையும்புறக்கணித்துஎளிதான புதியஅவதாரம் எடுக்க வேண்டுமாம்.யாராவதுகனவு காணுங்கள்...ஓவியம் கற்றவராயிருந்தால்கூடுதல் மகிழ்ச்சி   படத்திற்கு நன்றி:http://womenfashioncostumes.com/?p=190 Full story
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.