Author Archive

Page 1 of 1012345...10...Last »

இந்திரனும் சந்திரனும்

இந்திரனும் சந்திரனும்
  திவாகர்   என்னன்புக் கண்மணியே பதில்சொல்வாயே இன்னமும்ஏன் தயக்கமும் தாமதமும் உனக்கொரு மணாளனென ஒருவனை உனக்களித்த உரிமையில் தேர்ந்தெடுப்பாய் இந்திரனென ஒருவன் வந்தானேகண்டாயோ சந்திரனென இன்னொருவனும் வந்தான்... Full story

தித்திக்குதே திருக்குறள் – 9 – சொல்லவல்லாயோ கிளியே!

தித்திக்குதே திருக்குறள் – 9 - சொல்லவல்லாயோ கிளியே!
திவாகர் அமுதகீதம்போல என்பெயரை எப்படியோ குமுதா குமுதாவென இனிமையாய்நீ பேசினாலும் என்னுள்பொங்கும் இன்பத்துக்கு ஊசியளவும் உன்பேச்சு இணையாகுமோடி நேற்றுவந்த கிள்ளைமொழிக் கிளியே சற்றே குமுதாகுமுதா எனக்கூவாமல்... Full story

தித்திக்குதே திருக்குறள் – 8

தித்திக்குதே திருக்குறள் - 8
  அன்பே தெய்வம்   திவாகர்   உயிர்களிடத்தே அன்புசெய்ய வேணுமாய் ஆயிரம் முறைசொன்னாலும் கேளாமல் உந்தன் நலமொன்றையே கருத்தில்கொண்டு எந்தநாளும் உன்காரியம் செய்கின்றாய் பயன்பிறர்க்கும் அதன்பலனில் உண்டெனில்; சுயநலம் பேணுவதால் குறையில்லைதான் அறியவேணும் தம்பி நன்றாய்புரியவேணும் குறுகியயெண்ணங்கள் என்றும் துணைவாரா; உன்மீதே உனக்கன்பு என்றல்லாமல் அனைவர்மீதும் செலுத்துமன்பே உத்தமாம் உள்ளம்சிறிது உயிர்பெரிது என்றிருப்போர்... Full story

தித்திக்குதே திருக்குறள் – 7

தித்திக்குதே திருக்குறள் - 7
    மூன்று கேள்விகள் திவாகர் நன்றி: ஹிண்டு.காம் சோறுடைத்த சோழநாட்டில் பஞ்சமோபஞ்சம் அறிவுக்குப் பஞ்சம்வந்தததாம் சொல்கின்றான் ஆக்கியாழ்வான்; அவனடி பணியவேண்டுமாம் போக்கற்ற பண்டிதனாய் பிதற்றுகிறானென அவன்போக்கில் அவனை விட்டுவிட்டால் அவனேயனைத்தும் அறிந்தவனாய் ஊர்சொல்வர் பண்டிதன்கேள்விக்கோ பதில்சொல்வார் இல்லை பண்டையகாலத்து வேதமெல்லாம் அறிந்தவனாம் சாத்திரங்கள் ஓதியோதி நாத்தழும்பானவனாம் தோத்திரங்களெல்லாம் அவனுக்கே சொந்தமாம் கற்றோருக்கு ஒப்பாரும் மிக்காருமில்லைதான்... Full story

தித்திக்குதே திருக்குறள் – 6

தித்திக்குதே திருக்குறள் – 6
கூறாமல் சந்நியாஸம் கொள் திவாகர். ஒருமுறை இருமுறையல்ல அண்ணே ஓராயிரம்முறை எடுத்துச்சொல்லியாச்சு மனையாள் மனதால் இணையவேணுமென மனசாட்சியாம்நான் மனதார சொல்லியாச்சு     மணநாளன்று மெட்டிக்காகக் குனிந்தவன் மனையாள் கால்விரலைப்பிடிக்காது அவள் காலைப்பிடித்தாய் இன்றுவரை நிமிரவில்லை தலையணை மந்திரமென்று தந்தவளுக்குத் தலையசைத்து மந்திரத்தில் மயங்கிவிட்டாய் நாளெல்லாம் அவள்பேச்சு அவள்மூச்சு அவள்போக்கில் வாழப் பழகினாயே இருவரும் ... Full story

தித்திக்குதே திருக்குறள் – 5

தித்திக்குதே திருக்குறள் - 5
  இல்லாளைக் காப்பதற்கே அவன் வருவான்   திவாகர் நம்பமுடியவில்லை தமயந்தி  நீசொல்வதை நம்பமுடியவில்லை என்மகளா சொல்வது மறுகல்யாணத்துக்கு சம்மதமென! விதியால் ஒருகல்யாணம் செய்து வாழ்விழந்தாய் தந்தைநான் மகளுக்கோர் மறுவாழ்வு வந்தால் மறுப்பவன் தந்தையல்லன் காட்டிலே கட்டியமனைவியை விட்டநளன் நாட்டுக்கினி திரும்புவது நிச்சயமில்லையே வருடங்கள் ஏழாயிற்றே எங்கேதான் இருப்பான் என்பதும் தெரியவில்லையே உயிருக்குயிராக ... Full story

உள்ளத்தில் ஊறவைத்த ஊனங்கள்

உள்ளத்தில் ஊறவைத்த ஊனங்கள்
  திவாகர்   என்னபேச்சு பேசிவிட்டாய் பேச உன்னால் எப்படித்தான் முடிந்ததோ என்மேல் காதலென்று சொன்னதெல்லாம் புனைகதையோ பொய்யோ முறையோ நான்மாயம் செய்யும் மர்மமங்கையோ நானுனக்கு செய்ததெல்லாம் துரோகமா நாணத்தோடு மாமனேயென நேர்மையாய் நான்மையல் கொள்வதெல்லாம் வேடமா நல்லமனத்தால் நான்செய்யும் சேவையை கள்ளத்தனமென கலங்காமல் தீர்ப்பளித்தாயே உள்ளத்தால் உண்மையாய் உறவாடாமல் உள்ளுக்குள்ளே ஊனத்தை ஊறவிட்டாயே... Full story

சிற்பத்தின்பிழை சிற்பியின் பிழையன்று

சிற்பத்தின்பிழை சிற்பியின் பிழையன்று
    திவாகர் மீன்விழியாள் அருள்நல்கும் நல் மாநகர்மதுரையே விழாக்கோலத்தில் மன்னனுக்கு திருமணமாம் கோயிலிலே பொன்னனைய புதுமனையாள் கைபிடித்தான் கன்னல்மொழிபேசும் காரிகையோ கண்பார்த்தாள் கணவனவள் கண்மொழியை அறிந்தான்போலும் என்னவளே என்னவேண்டும் கேளென்றான் புன்னகையாய் ஒருவரத்தைக் கேட்டாள்   ஐயனே என் மன்னவனே மீனாளின் கோயிலிலே என்னைக் கரம்கொண்டவரே ஆலயத்தில் சிலைகளெல்லாம் கண்டீரோ காலத்தால் சிதையாத கற்சிலைகளாம்... Full story

உயிர் பிரிந்து போகும் காண்!

உயிர் பிரிந்து போகும் காண்!
  திவாகர் மழையே மழையே மனமகிழ் மழையே மிதமாய் மிதமாய் பெய்யும் மழையே சுகமாய் சுகமாய் பொழியும் மழையே பையப் பையப் பெய்கின்றாய் வையம் வாழ்த்தப் பொழிகின்றாய் பார்க்கப் பார்க்க பரவசம் பாரெல்லாம் நனைகின்றதே சிறகு நனைக்கும் பறவைகளோடு பறந்து திரிந்து மழையுனூடே பரந்துகிடக்கும் வான்வெளியில் வரும்நீர் பருகத் தோன்றுதே   பச்சை மரங்கள் அசைந்தாட... Full story

ஹேமலேகையின் ஐயன் வழி

ஹேமலேகையின் ஐயன் வழி
  திவாகர் புராணக்கதைதான் இருந்தாலும் புனிதவதியின் கதையாம் கேளீர் ஹேமலேகை அவள் பெயர் வாய்த்தவன் பெயரோ ஹேமரூபன் பெயர்ப்பொருத்தம் மட்டுமா பிரேமப்பொருத்தம் கூட அன்புக்கு உண்டோ அடைக்கும்தாழ்? அவளன்பிலே கரைந்து போனான் மானேயென்றான் தேனேயென்றான் மடியில் புரண்டான் மதுவுண்ட வண்டுபோல சுற்றிச்சுற்றி வந்தான் வான்வழிமறந்து கீழே விழுந்த மங்கையே நானுனடிமை என்றான் பிரிவில்லை நமக்கென்றான் ... Full story

வாசம் வீசும் ரோஜாவும் தமிழ் எழுத்தாளர்களின் புண்ணிய பூமியும்

வாசம் வீசும் ரோஜாவும் தமிழ் எழுத்தாளர்களின் புண்ணிய பூமியும்
திவாகர் ரோஜாவின் வாசம் பற்றி எழுதினால்தான் தெரியுமா என்ன.. ஆனாலும் எழுதத்தான் வேண்டும்.. விஷயம் இருக்கிறது ஏராளமாக. ஆனால் அதற்கு முன்னர் யாழ் நூலகத்தைப் பற்றி கொஞ்சம் சொல்லவேண்டும். தெற்காசியாவிலேயே இரண்டாவது பெரிய நூலகத்தை, சுமார் ஒரு லட்சம் கிடைத்தற்கரிய பழைய புத்தகங்கள் கொண்ட நூலகத்தை 1981 ஆம் வருடம் மே மாதத்தில் தீக்கிரையாக்கி அழித்தனர் சில கயவர்கள். தீக்கிரையானது அந்த நூலகக் கட்டடம் மட்டுமல்ல.. அறிவும் ஞானமும் உள்ளடக்கிய காமதேனுவை சுரக்கும் நூல்களும் கூட. அறிவே தெய்வம் என்பார்கள்;. கல்வியே செல்வம் என்பார்கள்; ... Full story

பிரியே சகியே அன்பே ஆருயிரே

பிரியே சகியே அன்பே ஆருயிரே
திவாகர் அன்புள்ள ராகி’, பிரியே சகியே அன்பே ஆருயிரே என்றெல்லாம் இந்தக் கடிதத்தைத் தொடங்கலாமே என்று யோசித்துப் பார்த்தேன். ஆனால் ஒருவேளை அது உனக்கு எரிச்சலை ஏற்படுத்தலாம் என்ற ஒரு சந்தேகமும் கூடவே ஒட்டிக்கொண்டு வந்ததால் இப்படிப்பட்ட ஃபார்மாலிடிக்குள் நுழையாமல் நேரடியாகவே சப்ஜெக்ட்’டுக்கு வரப் பார்க்கிறேன். மூன்று மணி நேரமாக மண்டையைப் போட்டுக் குழப்பிக்கொள்கிறேன். நீ கடைசியாக ராத்திரி மொபைலில் பேசும்போது உன்னிடம் ஏதோ சொல்லவேண்டும் என்று சொன்னேன் ... Full story

குழந்தையும் குட்டி தேவதையும்

குழந்தையும் குட்டி தேவதையும்
திவாகர் (இது ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட கதை. இந்த அடிப்படையைச் சொன்ன என் நண்பன் வாசுவுக்கு இந்தக் கதையை சமர்ப்பணம் செய்கிறேன் - திவாகர்) ஒரு போலீஸ்காரனுக்கு இப்படிப்பட்ட சோதனைகளெல்லாம் சகஜம்தான் என்றாலும் இது வித்தியாஸமாக இருக்கிறதே என்று கவலைப்பட ஆரம்பித்தேன் நான். அதுவும் அந்தப் பெண் இடம் தெரியாமல் ராத்திரி வேளையில் அழுது ஆர்ப்பாட்டம் செய்யும்போது வெளியாட்கள் பார்த்தால் என்ன நினைப்பார்கள்.. நல்ல காலம் மீடியாக்காரர்கள் யாரும் அன்று பார்த்துத் தென்படவில்லை..... Full story

ஆவக்காய்

ஆவக்காய்
திவாகர் ஹெல்லோ.. யெஸ்.. சொல்லும்மா.. மண்ணாங்கட்டி.. ஒரே ஒரு ரிங்க்’கே இப்படி போனை எடுத்துடுவீங்களா.. உங்களால எனக்கு ஒரு கால் வேஸ்ட்.. வெச்சுட்டு மறுபடி கூப்புடுங்க.. ஓ யெஸ்.. ஓயெஸ்.. சரி, நீ வெச்சுடு.. நான் உடனே இப்பவே கூப்புடறேன்.. ........................................... ஹல்லோ.. சொல்லும்மா.. சரி, அந்த ஆவக்காய் பார்சல் வந்துடுத்தா.. உங்களுக்குன்னு ஸ்பெஷலா பண்ணினேன்.. பாவம் தனியா ஏதுமில்லாம பச்சையா சாப்பிடறீங்களேன்னு.. அந்த பார்சல் வந்துடுச்சா.. ... Full story

சரிகமபத நீ..கல்யாணி

திவாகர் ஸார்.. எதுக்கு இந்த விஷப்பரீட்சை.. சொன்னாக் கேளுங்க.. எனக்கு ஒரு ஞானமும் இல்லே.. கர்நாடக சங்கீதத்துக்கும் எனக்கும் காத தூரம்..இல்லே இல்லே டெல்லி தூரம்.. அத்தோட ஏழு மணிக்கு ரிலையன்ஸ் க்ரூப் பார்ட்டி இருக்கு.. போகணும்..வுட்டுடுங்க ஸார்..” ”என்னப்பா.. என்ன சொல்லிட்டேனு இப்படிப் பெரீசா கத்தறே.. ரொம்ப முக்கியமான கச்சேரிய்யா.. இந்தம்மா ஏறத்தாழ ஒரு வருஷமா எந்தக் கச்சேரியும் பண்ணலே.ரொம்ப ஃபேமஸ்.. ஆர்கனைஸர்ஸ் எப்படியோ கஷ்டப்பட்டு இந்த அம்மாவின் அனுமதி வாங்கியிருக்காங்களாம்.. நானே போகணும்.. ஆனா ... Full story
Page 1 of 1012345...10...Last »
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.