Author Archive

Page 1 of 1612345...10...Last »

படக்கவிதைப் போட்டி 124-இன் முடிவுகள்

படக்கவிதைப் போட்டி 124-இன் முடிவுகள்
-மேகலா இராமமூர்த்தி வாரிதியை நோக்கிநிற்கும் காரிகையைக் காண்கின்றோம் திரு. ராகுல் ரவீந்திரன் எடுத்த இந்தப் படத்தில். புகைப்படக்கருவி தந்த காவியமா, கை புனைந்த ஓவியமா என்று ஐயுறும் வண்ணம் திகழ்கின்றது  இப்படம்! மனங்கவரும் கடலரசி, தன் எண்ணங்களை அலைகளாக்கி மாந்தர்க்கு வரைகிறாளோ மடல்? நீலமும் மஞ்சளும் இணைந்து கோலங் காட்டும் வானின் தோற்றமும் காணக் கவினே!... Full story

படக்கவிதைப் போட்டி 123-இன் முடிவுகள்

படக்கவிதைப் போட்டி 123-இன் முடிவுகள்
-மேகலா இராமமூர்த்தி சாலையின் ஓரத்தில் குவிக்கப்பட்டிருக்கும் கழிவுகளைத் தின்று நம்மைக் கழிவிரக்கம் கொள்ளவைக்கும் பசுவொன்றைப் படம்பிடித்து வந்திருக்கின்றார் திரு. முருகானந்தன். இப்படத்தைப் படக்கவிதைப் போட்டிக்குத் தேர்ந்தெடுத்துத் தந்திருக்கின்றார் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி! பசுவைக் கோமாதாவாய்க் கும்பிடும் நம் சமூகம், அதன் கறவை நின்றதும் அதனுடனான தம் உறவை முறித்துக்கொண்டு அதனை அடிமாடாய் ... Full story

பசிப்பிணி மருத்துவம்!

-மேகலா இராமமூர்த்தி ”பத்தும் பறந்திடும் பசிவந்தால் மறந்திடும் இளமையில் கொடுமை இந்த வறுமை அம்மா” என்று பாட்டெழுதி வறுமையின் கொடுமையை உருக்கமாய் உலகுக்கு உணர்த்தினார் கவியரசு கண்ணதாசன். வறுமை இளமையில் மட்டுமா கொடுமை? இல்லை… முதுமையிலும் அது கொடுமைதான். ஏன் எந்தப் பருவத்தில் வறுமை வந்தாலும் அது கொடுமைதான்…அவ்வாழ்வே வெறுமைதான்! பசிவரப் பத்தும் பறந்திடும் என்கிறாரே கவிஞர்…அவை எவை? "மானங் குலங்கல்வி வண்மை அறிவுடைமை தானந் தவம்உயர்ச்சி தாளாண்மை - தேனின் கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும் பசிவந் திடப்பறந்து போம்” ... Full story

படக்கவிதைப் போட்டி 122-இன் முடிவுகள்

படக்கவிதைப் போட்டி 122-இன் முடிவுகள்
-மேகலா இராமமூர்த்தி பசும்புல்லின் உச்சிமீது ஒய்யாரமாய் வீற்றிருக்கும் சருகை அருகுசென்று அழகாய்ப் படம்பிடித்து வந்துள்ளார் ஒளிஓவியர் திருமிகு. ராமலக்ஷ்மி. இப்படத்தைக் கவிதைப் போட்டிக்குத் தேர்ந்தெடுத்துத் தந்திருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவ்விரு பெண்மணிகளுக்கும் என் கனிவான நன்றி! பச்சிலை பழுத்து மண்ணேகுவதுபோல், உடலென்னும் துச்சிலைச் சார்ந்திருக்கும் உயிரும் காலனின் அழைப்புவரும் வேளையில் உடல்நீத்து விண்ணேகுகின்றது! இலை சொல்லும் நிலையாமைப் ... Full story

படக்கவிதைப் போட்டி 121-இன் முடிவுகள்

படக்கவிதைப் போட்டி 121-இன் முடிவுகள்
  -மேகலா இராமமூர்த்தி உழைப்பின் கறைபடிந்த மனிதரை அக்கறையோடு படம்பிடித்து வந்திருக்கின்றார் திரு. ஜேக்ஸன் ஹெர்பி. படக்கவிதைப் போட்டிக்கு இந்தப் படத்தைத் தேர்வுசெய்திருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். படப்பிடிப்பாளர், தேர்வாளர் இருவரும் என் நன்றிக்குரியோர். உழைப்பில் வரும் கறையில் குறையில்லை. எனினும் இவ்வுழைப்பு போதிய வருவாய் திரட்டி குடும்பத்தின் வறுமையை விரட்ட உதவாதது வருந்தத்தக்கதே! ஓடப்பராயிருக்கும் ஏழையப்பரின் இன்மை அகலவேண்டும்; துயரம் நீங்கி ... Full story

படக்கவிதைப் போட்டி 120-இன் முடிவுகள்

படக்கவிதைப் போட்டி 120-இன் முடிவுகள்
-மேகலா இராமமூர்த்தி புள்ளிகளால் பாலங்கட்டி எழிற்கோலந் தீட்டும் சிறுமியைப் புகைப்படம் எடுத்துவந்துள்ளார் திருமிகு. ஷாமினி. படக்கவிதைப் போட்டிக்கு உகந்த படமிது  என்று இதனைப் போட்டிக்குத் தெரிவுசெய்து தந்திருக்கின்றார் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் என் நன்றி! சிறுவயதிலேயே பயின்று தேரவேண்டிய அற்புதக் கலை கோலக் கலை! விரல்களுக்கு நல்ல பயிற்சியாகவும், கற்பனைக்கு உரமூட்டும் வாய்ப்பாகவும் அமையக்கூடியது இக்கலை எனில் மிகையில்லை. ... Full story

படக்கவிதைப் போட்டி 119-இன் முடிவுகள்

படக்கவிதைப் போட்டி 119-இன் முடிவுகள்
-மேகலா இராமமூர்த்தி சிரத்திலும் கரத்திலும் சுமையோடு பயணம் புறப்பட்டுவிட்ட இந்தத் தாயையும் உடன்வரும் சேயரையும் தன் படப்பெட்டிக்குள் நேயத்தோடு சுமந்துவந்திருப்பவர் திருமிகு. அனிதா சத்யம். இப்படத்தைப் போட்டிக்குத் தேர்வுசெய்திருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். பெண்மணிகள் இருவருக்கும் என் பணிவான நன்றி! வாழ்வெனும் நெடும்பயணத்தில் மனிதர்களுக்குத்தான் எத்தனை எத்தனை சுமைகள்! அவற்றில் சில சுகமானவை; ... Full story

படக்கவிதைப் போட்டி 118-இன் முடிவுகள்

படக்கவிதைப் போட்டி 118-இன் முடிவுகள்
-மேகலா இராமமூர்த்தி திரு. சிவராஜன் தண்டபாணியின் கைவண்ணத்தில் இயற்கை அழகின் சிரிப்பைப் புகைப்படத்தில் காண்கின்றோம். படக்கவிதைப் போட்டிக்கு இப்படத்தைத் தேர்வு செய்திருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் என் நன்றி உரித்தாகின்றது. ”விரிந்த வானே வெளியே - எங்கும்     -விளைந்த பொருளின் முதலே திரிந்த காற்றும் புனலும் - மண்ணும்   ... Full story

படக்கவிதைப் போட்டி 117-இன் முடிவுகள்

படக்கவிதைப் போட்டி 117-இன் முடிவுகள்
-மேகலா இராமமூர்த்தி கூண்டுக்குள் சிறைப்பட்டிருக்கும் அழகுப் புறாக்களைத் தன் புகைப்படக் கருவிக்குள் சிறைப்படுத்தி வந்திருக்கிறார்   வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்கு இப்படத்தைத் தேர்வுசெய்து தந்திருப்பவரும் அவரே. அவருக்கு என் நன்றி! தகவல் பரிமாற்றத்திற்கு உதவும் தூதுவர்களாக முற்காலத்தில் திகழ்ந்தவை புறாக்கள். ’புறாவிடு தூது’ காதலுக்கும் பயன்பட்டது. மனிதக் காதலுக்குத் ... Full story

படக்கவிதைப் போட்டி 116-இன் முடிவுகள்

படக்கவிதைப் போட்டி 116-இன் முடிவுகள்
  -மேகலா இராமமூர்த்தி மண்ணுக்கு வெளியே முகங்காட்டிச் சிரிக்கும் இளஞ்செடியைப் புகைப்படம் எடுத்து வந்திருப்பவர் திரு. பிரேம்நாத் திருமலைசாமி. இப்படத்தைப் படக்கவிதைப் போட்டிக்குத் தேர்வுசெய்திருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். ஒளிப்பதிவாளருக்கும், தேர்வாளருக்கும் என் நன்றி உரியது. சிறிய விதையிலிருந்து தோன்றும் செடிகள் பலவும் சீரிய பயனைத் தந்து மண்ணுலக மாந்தரைக் காக்கின்றன. சின்னஞ்சிறு செடியிடம்கூட ... Full story

படக்கவிதைப் போட்டி 115-இன் முடிவுகள்

படக்கவிதைப் போட்டி 115-இன் முடிவுகள்
-மேகலா இராமமூர்த்தி   அழகிய அலங்காரத்தோடு பூம்பூம் மாடும் அதனருகே மாட்டுக்காரரும் நிற்கும் இக் காட்சியைப் படம்பிடித்தவர் திருமதி. பவளசங்கரி. இப்படத்தைப் படக்கவிதைப்போட்டிக்குத் தேர்ந்தெடுத்துத் தந்தவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். வல்லமைமிகு பெண்மணிகள் இவ்விருவருக்கும் என் மனமார்ந்த நன்றி! தன் வயிற்றுப்பாட்டுக்காக மாட்டோடு அலைந்து திரியும் மனிதனைக் காண்கையில் மனம் வேதனையில் கனக்கின்றது. மாடே செல்வமாய் இருந்த அன்றைய நிலைமாறி, மாட்டை அலங்காரப்பொருளாக்கி ... Full story

படக்கவிதைப் போட்டி 114-இன் முடிவுகள்

படக்கவிதைப் போட்டி 114-இன் முடிவுகள்
  -மேகலா இராமமூர்த்தி ஈருருளியில் பறக்கும் ஒரு குடும்பத்தைத் தன் புகைப்படப் பெட்டிக்குள் அடைத்து வந்திருப்பவர் திரு. முத்துக்குமார். இப்படத்தை இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்குத் தேர்வுசெய்து தந்திருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் என் நன்றி. மழலையொன்று இடையினில் நசுங்க, அன்னையோ இடமின்றிக் கசங்க, குடும்பத்தலைவன் அதிவேகத்தில் ஊர்தியைச் செலுத்துவது அச்சத்தைத் தருகிறது. வேகத்தினும் விவேகமே சிறந்தது ... Full story

கைம்மைத் துயர் களையப்பட வேண்டும்!

-மேகலா இராமமூர்த்தி  பெண்களுக்குச் சமூகம் இழைத்த, இழைத்துவரும் தீங்குகளிலேயே மிகக் கொடுமையானது ’கைம்மை’ எனும் துயரநிலை. திருமணமான பெண் யாது காரணத்தினாலோ தன் கணவனைப் பறிகொடுத்தால் அவள் அதன்பின்னர்த் தன் வாழ்நாள் முழுவதும் கைம்பெண்ணாகவே வாழவேண்டிய கொடூரநிலை சங்ககாலம் தொட்டே நமக்குக் காணக் கிடைக்கின்றது. அவர்களை அன்போ அருளோ சிறிதுமின்றி இச்சமூகம் மிகவும் கீழ்த்தரமாகவும் வருந்தத்தக்க வகையிலும் நடத்தியிருக்கிறது. கணவனை இழந்த பெண்ணின் கைம்மைநிலையைத் ’தாபத நிலை’ என்ற பெயரால் தொல்காப்பியம் சுட்டுகின்றது. தாபதம் என்றால் தவநிலை என்று பொருள். ... Full story

படக்கவிதைப் போட்டி 113-இன் முடிவுகள்

படக்கவிதைப் போட்டி 113-இன் முடிவுகள்
-மேகலா இராமமூர்த்தி   புதுவை திரு. சரவணன் எடுத்திருக்கும் இந்தப் புகைப்படத்தை இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்குத் தெரிவு செய்து தந்திருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவ்விருவருக்கும் என் நன்றியைத் தெரிவிக்கும் கடப்பாடுடையேன். பாளம் பாளமாக வெடித்திருக்கும் இந்த வறள்நிலம் நம் இரத்த நாளங்களையெல்லாம் வேதனையில் உறையச் செய்கின்றது. சோர்ந்து அமர்ந்திருக்கும் இவ்விளைஞரின் தோற்றம் நம் வேதனையை மிகுவிக்கின்றது.... Full story

படக்கவிதைப் போட்டி 112-இன் முடிவுகள்

படக்கவிதைப் போட்டி 112-இன் முடிவுகள்
-மேகலா இராமமூர்த்தி   புன்னகை சிந்தும் வனிதையர் குழாத்தை ஆசையாய்ப் புகைப்படம் எடுத்து வந்திருப்பவர் திருமிகு. அனிதா சத்யம். இப்படத்தைப் படக்கவிதைப் போட்டிக்குத் தேர்ந்தெடுத்துத் தந்திருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் என் நன்றி! மங்கையரின் பங்கயக் கைகள் இப் பாரில் செய்யாத பணியில்லை. ஒரு பெண், தனக்கென வாழ்வதைக் காட்டிலும் தன்னைச் சார்ந்தோர்க்காக  வாழ்வதே அதிகம். பிஞ்சுக் குழந்தையை ... Full story
Page 1 of 1612345...10...Last »
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.