பாண்டியன்.ஜீ

நான் பிறந்ததென்னவோ நாகை மாவட்டம் கச்சனம் ( கைச்சின்னம் கச்சனம் என்றாயிற்று.) என்றாலும் சிறு பிராயத்தில் ஓடி விளையாடியதெல்லாம் ஆலத்தம்பாடியை அடுத்த அய்யூர் கிராமமே. பள்ளிப்படிப்பின் பெரும்பகுதி திருத்தருப்பூண்டியிலேயே கழிந்தது. இடையிலே இரண்டு வருடம் சென்னையில் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இயல்பாகவே எழுத்திலும் ஓவியத்திலும் தீரா ஆர்வம் கொண்ட நான் மின்னியல் டிப்ளமோ பயில நாகை சென்ற போது நாகையே எங்களுக்கு வாழும் ஊராயிற்று. பகுத்தறிவுச் சிந்தனையும் மொழி மீது தீரா பற்றும் கொண்டவன் நான். பதினாறு வயதிலேயே தமிழக பத்திரிக்கைகளில் புலிகேசி, வில்லவன் கோதை என்ற புனைபெயர்களில் சிறுகதைகள் எழுதியவன். பின்நாளில் தமிழ்நாடு மின் வாரியத்தில் தகவல் தொழில்நுட்ப பிரிவில் ( carrier communication )பணியில் இணைந்த போது பணியில் எனக்கேற்பட்ட ஈடுபாடு எழுத்துத் துறையை விட்டு முற்றிலும் விலகி இருக்க நேரிட்டது. என் பணிக்காலங்களில் தமிழகத்தின் பெருநகரங்கள் பலவற்றிலும் வசிக்க நேரிட்டது. இந்த மண்ணின் பல்வேறு நிறங்களை என்னுடைய பணிக்காலங்களில் தரிசிக்க முடிந்தது எனக்குக் கிடைத்த பேராகவே கருதுகிறேன். பணியில இருந்து விடுபட்டு தனியாக நின்றபோது எங்கோ தொலைத்துவிட்டு வந்த என் நிறைவேறாத கனவுகளை தேடத்துவங்கினேன். அதன் வேர்கள் பிறந்தது. (verhal.blogspot.in )