Author Archive

Page 1 of 212

கையாலாகாதவனாகிப்போனேன்! – 2

எனக்கோ இருதலைக்கொள்ளி எறும்பின் நிலை ஏற்பட்டது. பாவம், முனுசாமி, நான் என் கண்ணாடியைத் தராவிட்டால் பார்வை இல்லாமலல்லவா கஷ்டப்படுவான்? காலாகாலத்தில் கண்ணாடி போடாவிட்டால் பார்வை மோசமாகும் என்றல்லவா டாக்டர்வேறு சொல்லியிருந்தார். அதனால்தானே எனக்கு உடனே கண்ணாடி போட்டார்கள்! நானாவது வேறு கண்ணாடி வாங்கிக்கொள்ளலாம். சீட்டு இருக்கிறது. ஆனால், முனுசாமி…? Full story

கையாலாகாதவனாகிப் போனேன்! – 1

என் கையாலாகாத்தனத்தையும், அந்த வாயில்லா ஜீவனையும், இரத்தம்சொட்டும் மென்மையான அதன் பின்பாகத்தையும், அதன் கண்ணிலிருந்து வழிந்து தரையில் சிந்திய கரிய நீரையும், அதன் கண்களில் உமிழப்பட்ட புகையிலைச் சாறையும், அது வழியும்போது அந்த வாயில்லா ஜீவன் தன்னை நொந்துகொண்டு இரத்தக்கண்ணீர் வடிப்பதுபோன்ற தோற்றமும், மெல்ல எழுந்திருந்து தள்ளாடித் தள்ளாடி வண்டியை இழுத்துச்சென்றதையும் நினைவுக்குக் கொண்டுவந்து என்னுள் ஒரு குற்ற உணர்வை ஏற்படுத்துகிறது. Full story

அரிசோனா ஆனைமுகன் ஆலயப் பிள்ளையார்சதுர்த்தி பிரம்மோத்சவம்

அரிசோனா ஆனைமுகன் ஆலயப் பிள்ளையார்சதுர்த்தி பிரம்மோத்சவம்
ஒரு அரிசோனன்  பிள்ளையார் சதுர்த்தி ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி தினத்தன்று கொண்டாடப்படுகிறது.  இந்நன்நாளைக் கணேச சதுர்த்தி, விநாயக சதுர்த்தி என்றும் அழைக்கிறார்கள்.  இந்தியாவில் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படும் இப்பண்டிகை அமெரிக்காவிலும் இந்துக்களால் கொண்டாடப்படுகிறது. அப்படியிருக்கையில் முழுமுதற் கடவுளாக ஆனைமுகன் வீற்றிருக்கும் ஆலயத்தில் அது கொண்டாடப்படாமலிருக்குமா என்ன!  ஒவ்வொரு ஆண்டும் இத்திருவிழா பிரம்மோத்சவ மாகப் பதினோரு நாள்கள் அரிசோனா ஆனைமுகன் ஆலயத்தில் கொண்டாடப்படுவதுபோல இவ்வாண்டும் கொண்டாடப்பட்டது.   . இவ்வாண்டும் இத்திருநாளைக் கொண்டாட ஒருமாதம் ... Full story

தேவிதரிசனம்

ஒரு அரிசோனன் என் கண்ணைப் பறித்தன அந்த பளபளக்கும் வான்நீலத் தாவணியும், கருநீலப் பட்டுப்பாவாடையும்.  அவற்றை அணிந்துவந்த அழகுதேவதை என் கண்களையும், கருத்தையும் தன்பால் கட்டிக் கவர்ந்திழுத்தாள்.  உடனே, என் கால்கள் தாமாகவே நின்றுபோயின. “டேய், கண்ணா, ஏண்டா சடன் பிரேக் போடறே?  இப்பவே பந்தி ஃபுல் ஆகறமாதிரி இருக்கு.  நீபாட்டு பராக்குப் பார்த்துக்கிட்டு நின்னா, சாப்பாட்டுக்கு ரெண்டாம் பந்திக்குக் காத்திருக்கவேண்டியதுதான்!” என்று என்னை இழுத்தான் என் வயதொத்த என் சின்னமாமன் ராஜு. “நீ போய் உக்கார்ந்து, எனக்கும் ... Full story

தமிழ்[தாய்]மொழிக் கல்வி

தமிழ்[தாய்]மொழிக் கல்வி
ஒரு குழந்தை தன் தாயின் கருப்பையிலிருக்கும்போதே தன் தாயிடமிருந்து மொழியைக் கற்கத் துவங்குகிறது என்று வாஷிங்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சி கூறுகிறது தமிழ்நாட்டில் விரும்பி வாங்கப்படும் ஹ்யன்டே கார்களைத் தயாரிக்கும் தென்கொரியநாட்டில் அனைவரும் கொரியமொழியிலேயேதான் உயர்கல்வி கற்கிறார்கள். ஐம்பது ஆண்டுகளுக்குள் அவர்கள் எப்படி இப்படிப்பட்ட முன்னேற்றத்தை அடைந்தார்கள்? தாய்மொழிக்கல்வியினால்தான்! பிரஞ்சுக்காரர்களைப்போல மொழிப்பற்று மிகுந்த கொரியர்கள், பழம்பெருமைமட்டுமே பேசாமல், மொழியையும், தங்களையும், தங்கள் நாட்டையும் முன்னேற்றுவதில் வெற்றிபெற்றிருக்கிறார்கள். பன்னாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டுக்கு வருவதுபோல அங்கு வந்தாலும், அந்நிறுவனங்களில் பணியாற்றவேண்டி, அடிமை உணர்ச்சியை வளர்த்துத் தங்கள் கொரியமொழியைப் புறக்கணிக்கவில்லை. Full story

இயற்கை அன்னையே! போதுமம்மா உன் கண்ணீர்!!

ஒரு அரிசோனன் இயற்கையன்னையே!  போதுமம்மா உன் கண்ணீர்! தாங்கமுடியவில்லை சென்னையால்! நாங்கள் செய்தோம் பலதவறுகள்! அடைத்தோம் உன் ஊற்றுக்கண்களை! கட்டினோம் அதில் எங்கள் மண்கோட்டைகளை! கட்டினோம் மனக்கோட்டைகள் கோடிகோடி! உன் கண்ணீர்தான் பெருக்கெடுத்ததே எங்கள் நிலைகண்டு!... Full story

செவ்வாயில் நீரோட்டம்!

செவ்வாயில் நீரோட்டம்!
ஒரு அரிசோனன் செவ்வாய்-ஆய்வு விண்கலம் அனுப்பி, நாசா, ஜே.பி.எல், யுனிவர்சிட்டி ஆஃப் அரிசோனா இணைந்து அசோசியேடட் பிரஸ் மூலமாக வெளியிடப்பட்ட, தேதி குறிப்பிடப்படாத புகைப்படத்தில் காணப்பட்ட கருமையான கோடுகள் உவர்நீர் ஓட்டத்தினால் ஏற்பட்ட தடங்களே என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். பதினான்கு கோடிமைல்கள் தொலைவிலுள்ள செவ்வாய்க்கோளின் கடுங்குளிரால் உறைந்துபோன தரையில் இப்பொழுது தண்ணீர் நிறைகிறது.  அந்த கிரகத்தில் உவர்நீர் ஓடுவதற்கான வலுவான சான்று இருக்கிறது என்று விஞ்ஞானிகள் அறிவித்திருக்கிறார்கள். செவ்வாயில் உயிரினங்கள் ... Full story

வினோதமான விமானம், ‘பெலுகா’!

வினோதமான விமானம், ‘பெலுகா’!
பென் முஸ்தபா, யுஎஸ்ஏ டுடே, ஜூலை17, 2015 தமிழாக்கம்:  ஒரு அரிசோனன் பிலாக்னக், பிரான்ஸ் --  அந்த விமானம் அனைவரின் தலையையும் திரும்ப வைக்கிறது.  அதைப்பார்த்தால் பெலுகா என்ற வகையான திமிங்கிலததைப்போல உள்ள அதைப் பார்த்தவுடனேயே, விமான ஆர்வலர்கள் ‘அதன் பட்டப்பெயரான ‘பெலுகா’ என்று தெரிந்துகொள்கிறார்கள்.  எது எப்படியிருந்தாலும் உலகத்திலேயே மிகவும் வினோதமான விமானம் அது என்பதை ஒப்புக்கொள்கிறார்கள்.... Full story

மாண்டூக்கிய உபநிஷத்து — எளிய விளக்கம் — 4

ஒரு அரிசோனன் நமது விருப்பத்தை அடைய, அதற்கான வழிகளை என்னவேண்டும்;  எண்ணத்தை வெளியிட, அதை மற்றவர்கள் மூலமோ, இணைந்தோ செயல்படுத்த மொழி வேண்டும்.  மொழிதான் ஒரு குமுகத்தின் இணைப்புப் பாலம்.  குமுகம் மட்டுமல்ல, செயல்படும் அனைத்தின் இணைப்புப் பாலமும் கூட.  மொழி ஒளியாகத்தானே வெளிவருகிறது! அந்த ஒலியின் முதல் ‘அ’தானே! அந்த ‘அ’காரமே மிகச் சுருக்கமாக ‘அ’காரத்தை அறிந்தவன், விஸ்வாநரன் என்று சொல்லப்படும், விழித்திருக்கும் நிலையில் உள்ள ஆத்மனின் முதல் பகுதியை அறிந்தவன், ... Full story

ஆயுதமேந்திய ‘தம்பிகள்’: ‘மெட்ராஸ் ஸாப்பர்’கள்

ஆயுதமேந்திய ‘தம்பிகள்’:  ‘மெட்ராஸ் ஸாப்பர்’கள்
ஆங்கில மூலம்:  கே.ஆர்.ஏ. நரசய்யா, டைம்ஸ் ஆஃப் இந்தியா, ஜூன் 8, 2015 தமிழாக்கம்:  ஒரு அரிசோனன் நன்றி:  தாரகை இணையதளம்  http://wp.me/P4Uvka-s4   மெட்ராஸ் ஸாப்பர்ஸ் - தம்பிகள் அவர்கள் ஒத்துழைப்புக்கான கூட்டம்தானே -- போரிடாதவர்க்கு ஆயுதங்கள் ஒரு கேடா என்று பிரிட்டிஷார் முதலில் எண்ணியிருக்கலாம். ஆனால், காலம் செல்லச் செல்ல மெட்ராஸ் ஸாப்பர்கள் என்ற – இந்திய ராணுவத்தின் முந்தைய பொறியியல் குழு --  ... Full story

மாண்டூக்ய உபநிஷத்து – எளிய விளக்கம் – 3

மாண்டூக்ய உபநிஷத்து – எளிய விளக்கம் – 3
ஒரு அரிசோனன்  ... ஆழ்உறக்கநிலையில் அப்பரம்பொருளுடன் ஒன்றிவிடுகிறோம். அப்பொழுது நமக்கு எதுவும் தேவைப்படுவது இல்லை.  அளவிட இயலாத ஆனந்த நிலையில் இருக்கிறோம். அந்த ஆழ்ந்த உறக்க நிலையில் கிடைக்கும் ஆனந்தத்தை ஆயிரம்கோடி பொற்காசுகளாலும் அடைய இயலாது.  உறக்கம் வராமல் விழித்திருக்க நம்மால் இயலுமா?  ஆயிரம் கோடி பொற்காசுகள் தருகிறேன், ஒரு ஆண்டு உறங்காமல் இரு என்றால் இருக்க இயலுமா?  அந்த ஆழ் உறக்க நிலையில் நாம் இறைவனுடன் ஒன்றுகிறோம்.  இறைவனாகவே ஆகிவிடுகிறோம்...  ... Full story

மாண்டூக்கிய உபநிஷத்து — எளிய விளக்கம் – 2

மாண்டூக்கிய உபநிஷத்து -- எளிய விளக்கம் - 2
ஒரு அரிசோனன் ஆத்மன் எல்லாவற்றிலும் நிறைந்திருக்கிறான், எல்லாமே ஆத்மா ஆத்மன்தான் என்பது --  வேதங்களில் குறிப்படப்படும் “அஹம் ஏவ ப்ரஹ்மன் ” என்பதை அடிப்படையாகக் கொள்கிறது. அனைத்தையும் தன்னிலிருந்து நீக்கிப் பார்க்கும் உணர்வு விழித்திருக்கும் நிலைக்கே உரித்தானது என்று நிறுவுகிறது. இனி அது எவ்வாறு கூறப்படுகிறது என்பதைக்கண்ணுறுவோம்... ஸ்வப்னஸ்தா4னோ அந்தப்ப்ரக்ஞ: ஸப்தாங்க ... Full story

மாண்டூக்ய உபநிஷத்து – எளிய விளக்கம் – 1

மாண்டூக்ய உபநிஷத்து - எளிய விளக்கம் - 1
ஒரு அரிசோனன்  எனது சில சொற்கள்:  வல்லமையில் வெளியான “கம்பனும், வால்மீகியும்” ஒப்பீட்டுக் கட்டுரைகள் இன்னும் சில கதைகளுடன் புத்தகமாக வெளியானவுடன், பல தடவைகள் ஜெயபாரதன் உள்பட எனது நண்பர்கள்  தமிழில் கீதை, மற்றும் உபநிஷத்துகளைப் பற்றி  புதியபார்வையில் என்னை எழுதச் சொல்லிவருகிறார்கள். ஆதி சங்கரர் விரிவுரை எழுதிய உபநிஷத்துகளுக்கு எந்தவொரு விளக்கம் நான் எழுதப்புகுந்தாலும் அது அளவுகடந்த, வடிகட்டிய முட்டாள்தனமேயன்றி வேறொன்றுமில்லை.  எனவே நான் அவர்களின் அன்புக்கட்டளையைத் தட்டிகழித்துக்கொண்டே வந்தேன். பிறகு என் மனதும் அதையே சொல்லத் துவங்கியபோது ஒரு நப்பாசை எனக்குள்ளேயே தலைதூக்கியது. உடனே, “அட முட்டாளே!  என்ன செயல் செய்யத் ... Full story

வீடு பெற நில்!

வீடு பெற நில்!
வீடு பெற நில்! ஒரு அரிசோனன்     ஸ்ரீநிவாசின் உரிமையாளர் உள்ளே நுழைந்தார்.  அங்கு பல வீட்டு உரிமையாளர்கள் குழுமி இருந்தார்கள்.    “வாங்க ஸ்ரீநிவாஸ்,  எப்படி இருக்கீங்க!” என்று வரவேற்றாள் காமாட்சி. அவர்களின் பெயர் தெரியாததால், இனிமேல் அனைவரையும் அவர்களின் வீட்டுப் பெயராலேயே குறிப்பிடுவோமே!    “என்னத்தைங்க சொல்லறது?  பொழுதுபோய் போழுதுவந்தால் இங்கே வந்து நாம பேசறோம்.  அலுத்துக்கறோம்.  வேற என்னாங்க சொல்றது!” அலுத்துக்கொண்டார் ஸ்ரீநிவாஸ்.... Full story

தகுதி யாருக்கு?

தகுதி யாருக்கு?
தகுதி யாருக்கு? ஒரு அரிசோனன்  அந்த பாலசன்னியாசி மிகவும் சக்தி மிக்கவர், அவர் முகத்தைப் பார்த்தாலே எல்லாக் கஷ்டங்களும் பறந்துபோகும், அப்படி ஒரு சாந்தமான முகம், அவர் முன்னால் இருந்தாலே போதும், உலக நினைப்பே மறந்து போகிறது, அவர் பேசவே வேண்டாம், அவர் பார்வையிலேயே துயரங்கள் கதிரவன் முன் மறையும் பனிபோல மறைந்துபோகும் என்று பேசிக்கொண்டார்கள். அது காளிமுத்து காதிலும் விழுந்தது. என் துயரத்திற்கும், எனது மனச்சுமைக்கும், ஆற்றாமைக்கும் இந்தப் பாலசன்னியாசியால் ஒரு முடிவு வருமா என்று ... Full story
Page 1 of 212
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.