Author Archive

Page 1 of 1612345...10...Last »

கவிதை

க.பாலசுப்பிரமணியன்   உலகே .... நீயே ஒரு கவிதை...   பகலென்றும் இரவென்றும் வண்ணங்கள் தீட்டி .. மகிழ்வினிலும் துயரத்திலும் கடல் நீரை விழியோரத்தில் வடிகட்டி..   வார்த்தைகளில்லா வானவில்லாய் . நான் மௌனத்தில்.. உலவிவர..   உள்ளத்தில்.. உன் மாயைகள் எனக்கு மட்டும் அரங்கேற்றம் !   மொழிகள் மனதினில் வார்த்தைகளைத்  தேடி .. விதையில்லா மலராய் .. வாசங்கள் பெருக்கிட....   ஒளியில்லா இதயத்தின் மூலைகளில் ஒளிந்திருக்கும் அன்பே.   உனக்கு .... "கவிதை" நல்ல புனைப்பெயர்தான் Full story

திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள்… (1)

திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள்... (1)
க. பாலசுப்பிரமணியன் இறைவன் எப்படிப்பட்டவன்? திருமந்திரத்தைப் படித்து அதன் உட்பொருளை அறிந்து உள்வாங்கி வாழ்தல் என்பது வாழ்க்கையில் ஒருவருக்கு கிடைத்த மிகப்பெரிய வரம்.  வாழ்வின் மிகப் பெரிய தத்துவங்களை அவ்வளவு அழகாக சிறிய பாடல்கள் மூலம் நமக்கு தெள்ளத்தெளிவுற அளித்திருப்பது  நினைத்துக்கூடப் பார்க்கமுடியாத ஒரு அறிய செயல்.!! நமக்கு சில எதிர்பாராத ... Full story

கற்றல் ஒரு ஆற்றல் -70

கற்றல் ஒரு ஆற்றல் -70
க. பாலசுப்பிரமணியன் சுய அடையாளத்தின் நெருக்கடிகளும் கற்றலும் சுய அடையாளத்திற்கு ஏற்படும் நெருக்கடிகள் கற்றலை வெகுவாக பாதிப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இந்த நெருக்கடிகள் ஏற்படுவதற்கு ஒரு குழந்தையின் அல்லது மாணவனின் வீட்டு, குடும்பச் சூழ்நிலைகள், வாழ்க்கைப் பரிமாணங்கள் மற்றும் பள்ளி, சமுதாயத் தாக்கங்கள் காரணமாக அமையலாம். ஆகவே, இந்த மாதிரியான நெருக்கடிகள் எந்த ஒரு குழந்தைக்கும் மாணவனுக்கும் வராத ... Full story

கற்றல் ஒரு ஆற்றல் 69

கற்றல் ஒரு ஆற்றல்  69
க. பாலசுப்பிரமணியன் சுயஅடையாளம் முன்னேற்றத்தின் முதல் படி லெபனோனைச் சேர்ந்த தத்துவ மேதையும் கவிஞருமான கலீல் கிப்ரானின் குழந்தைகளை பற்றிய  கீழ்க்கண்ட வரிகள் உலகம் முழுதும் பேசப்பட்டும் பாராட்டப்பட்டும் வருகின்றன. Your children are not your children. They are the sons and daughters of Life's longing for itself.... Full story

TEACHER AS A PROFESSIONAL

G. Balasubramanian “A Teacher impacts Eternity” is an age old saying. But the truth of the statement can never be debated. The impact a teacher makes on the lives of a learner is so significant that it shapes the learners’ thoughts, perceptions, life styles, thinking and activities. However, from the perception of a teacher as the fountain-head of all knowledge from where ... Full story

கற்றல் ஒரு ஆற்றல் 68

கற்றல் ஒரு ஆற்றல் 68
உணர்வு சார் நுண்ணறிவும் சுய அடையாளமும் தேடலின் பாதையில் கிடைக்கக்கூடிய அறிவு மற்றும் உணர்வுகள் விழிப்புணர்வை வலுப்படுத்துவதற்கு ஆக்கபூர்வமான அடித்தளத்தை உண்டாக்குகின்றன. தன்னைப்பற்றிய விழிப்புணர்வுகள் மற்றும் தன்னைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள், பொருட்கள், மனிதர்கள் ஆகியவற்றைப் பற்றிய விழிப்புணர்வுகள் என்ற இரண்டுக்கும் உள்ள உறவு நிலைகளைப் பற்றிய கற்றலையும் அறிவையும் அளிக்கின்றன. இந்த உறவு நிலையை பயம், விந்தை, அன்பு, ஆச்சரியம் போன்ற உணர்வுகள் மேம்படுத்தவோ ... Full story

கற்றல் ஒரு ஆற்றல் (67)

கற்றல் ஒரு ஆற்றல்  (67)
க. பாலசுப்பிரமணியன் கற்றலும் உணர்வுசார் நுண்ணறிவும் (Learning and Emotional intelligence )   கற்றல் ஒரு மனிதனை தொழிலுக்காக மட்டுமின்றி நல்வாழ்க்கைக்காகவும் தயார்  செய்கின்றது. பல நூறாண்டு காலங்களாக இந்திய துணைக்கண்டத்தின் கற்றல் சார்ந்த கொள்கைகள் இந்த நோக்கையே அடிப்படியாகக் கொண்டிருந்தன. வள்ளுவமும் மிகத் தெளிவாக கற்றலின் நோக்கை விளக்கும் வகையில் கற்க கசடறக்  ... Full story

கற்றல் ஒரு ஆற்றல் 66

கற்றல் ஒரு ஆற்றல் 66
க. பாலசுப்பிரமணியன் வளரும் பருவத்தில் கற்றல் சூழ்நிலைகள் பொதுவாக மழலைகளின் கற்றல் சூழ்நிலைகள் இயற்கையோடு இணைந்ததாக இருக்கவேண்டும். அவர்கள் கற்கும் இடம், கற்கும் பாடங்கள், கற்கும் முறைகள் அனைத்தும் இயற்கைக்கு உகந்ததாகவும் அதோடு ஒருங்கிணைந்ததாகவும் இருத்தல் அவசியம். இந்த வயதினிலே மூளையின் வளர்ச்சியைப் பற்றிய ஆரய்ச்சிகள் இந்தக்கருத்தை வலுப்படுத்துகின்றன. இதனைக் கருத்தில் கொண்டு அவர்களுக்காக பள்ளியில் ஒதுக்கப்படும் பள்ளி அறைகள்- மரங்கள், செடிகொடிகள், ... Full story

கற்றல் ஒரு ஆற்றல் 65

கற்றல் ஒரு ஆற்றல் 65
க. பாலசுப்பிரமணியன் மழலையர்களின் கற்றல் நிலைகள் மழலைப் பருவத்தில் கற்றல் என்பது ஒரு தொடரான செயல்; ஆனால் அது நேரடியாக மட்டும் நடக்கும் செயலல்ல. கற்றலின் 95 விழுக்காடுகள் மறைமுகமாகவோ அல்லது கோர்வையின்றியோ நடக்கக் கூடிய செயல். ஐம்புலன்களாலும் கற்றலுக்கான உள்ளீடுகள் கிடைக்கின்றன. அவைகளைத் தனித்தனியாகவோ அல்லது ஒருங்கிணைத்தோ மூளை ஒரு கருத்தாக உருவாக்குகின்றது. பொதுவாக கற்றலின் உள்ளீட்டுப் பரிமாணங்களை கீழ்கண்டவாறு பிரிக்கின்றனர்.... Full story

கற்றல் ஒரு ஆற்றல் -64

கற்றல் ஒரு ஆற்றல் -64
க. பாலசுப்பிரமணியன் மழலையர்களும் கற்றலும் மழலையர்கள் எவ்வாறு கற்றுக்கொள்கிறார்கள் என்பது பற்றிய விரிவான ஆராய்ச்சிகள் உலகின் பல நாடுகளில் செய்யப்பட்டுள்ளன. இதைப் பற்றிய ஆராய்ச்சிகளின் ஒட்டுமொத்தமான கருத்து என்னவெனில் - 1.மழலையர்களின் கற்றல் ஒருமுகமானதாகவோ அல்லது ஒருமுனைப்பட்டதாகவோ இருப்பதில்லை. மழலையர்களின் கவனயீர்ப்புக்களின் நேரம் மிகக்குறைவு. மழலையர்களின் அறிவுத்தேடல் அபரிமிதமானது. சுற்றுச்சூழலின் பல்முனை ... Full story

கற்றல் ஒரு ஆற்றல் -63

கற்றல் ஒரு ஆற்றல் -63
க. பாலசுப்பிரமணியன் கற்றலும் மழலையர் பள்ளிகளும் மழலைப் பருவம் என்பது நேரடியான புத்தகம் அல்லது குறிக்கோள்கள்,  நோக்கங்கள் சார்ந்த கற்றலுக்கு ஏதுவான பருவம் அல்ல. மழலையர் பருவ, உடல், மன, அறிவு வளர்ச்சியைப் பற்றிய உலகளாவிய ஆராய்ச்சிகள் இந்தக் கருத்தை நிலைநிறுத்துகின்றன. இந்தப் பருவத்தில் மூளையின் வளர்ச்சி அபரிமிதமாக ஏற்படுவதாகவும் கற்றலுக்கான அதிகப்படியான தாகத்தை ஏற்படுத்துவதாகவும் கண்டறியப்பட்டுள்ளன. ஆனால் இந்தக் கற்றலின் போக்கு ஒருமுகமாக ... Full story

கற்றல் ஒரு ஆற்றல் 62

கற்றல் ஒரு ஆற்றல் 62
க. பாலசுப்பிரமணியன் கற்றலும் பள்ளிச்சூழ்நிலைகளும் (2) பொதுவாக பள்ளிக்கூடங்கள் மாணவர்களுடைய வீடுகளுக்கு அருகாமையில் இருத்தல் அவசியம். வீட்டிலிருந்து அதிகமான தூரத்தில் பள்ளிக்கூடங்களைத் தேர்ந்தெடுத்தால் மாணவர்களுடைய கற்றலுக்கு அது பலவிதத் தடைகளை ஏற்படுத்தக் காரணமாகின்றது. அவைகளில் சில: அதிக தூரம் செல்லவேண்டியதால் இருக்கின்ற பாதுகாப்பின்மை தூரத்தைக் கடக்க தேவையான வாகன வசதிகள் தூரங்கள் செல்லுபோழுதும் ஏற்படும் உடல் ... Full story

திருதராஷ்டிரனின் சுயசரிதை!

-க. பாலசுப்ரமணியன்  எப்படி சுயசரிதையை ஆரம்பிப்பது? திருதராஷ்டிரனின் சிந்தனை அலைபாய்ந்து கொண்டிருந்தது... அட என்னங்க.. திருதராஷ்டிரன் என்ற பெயரைப்பார்த்து ஆச்சரியப்படுகிறீங்களா? அது அவரோட புனைபெயருங்க...அவருடைய உண்மையான பெயர் சந்தானகோபாலன். அவர் கதை கவிதையெல்லாம் எழுத ஆரம்பித்தபோது ஒரு புனைப்பெயருக்காக ஏங்கிக்கொண்டிருந்தார். அப்போதாங்க.. அவருடைய மனைவி ஒரு டம்ளர் காப்பியை எடுத்துக்கொண்டு வந்து அவருடைய மேஜைமீது வைத்தார். அப்போது பத்திரிகை படித்துக்கொண்டிருந்த சந்தானகோபாலன் கவனிக்காமல் அந்தப் பத்திரிகையை மடிக்க.. அந்தக் காப்பி டம்பளர் கீழே விழ .. அவருடைய மனைவி "சரியான திருதராஷ்டிரன்...முன்னாலே வைத்த காப்பி ... Full story

கற்றல் ஒரு ஆற்றல் 61

கற்றல் ஒரு ஆற்றல் 61
க. பாலசுப்பிரமணியன் கற்றலும் பள்ளிச்சூழ்நிலைகளும் (1) வீட்டுச் சூழ்நிலைகள் எவ்வாறு கற்றலின் அளவையும் திறனையும் பாதிக்கின்றதோ, அதேபோல் பள்ளிச்சூழ்நிலைகளும் ஒரு தனிப்பட்ட மற்றும் ஒரு மாணவ சமூகத்தின் காற்றலையும் சிந்தனைகளையும் திறன்களையும் பாதிக்கின்றன. ஆகவே கற்றலுக்கான சூழ்நிலைகளுக்கேற்ப கல்விநிலையங்கள் அமைத்தல் அவசியமாகின்றது. முன்காலத்தில் கற்றல் பொதுவாக இயறக்கையைச் சார்ந்த சூழ்நிலைகளிலும் வெளிப்புறங்களில் வாழ்க்கையோடு இணைந்து காணப்பட்டது. இதனால்தான் சான்றோர்கள் "ஒரு பள்ளி செங்கல் சுண்ணாம்புச் ... Full story

மார்கழி மணாளன் -29

மார்கழி மணாளன் -29
    திருவிடந்தை - அருள்மிகு நித்தியகல்யாணப் பெருமாள் திருக்கோயில் வாடிடும் மாந்தரின் வேதனை தீர்த்திட வேங்கடன் வருவான் வேண்டிய நேரத்தில் வேடங்கள் புனைந்தே விண்ணவர் வியந்திட வராகனாய் வந்ததும் வேதனை களைந்திட !   அருவோ உருவோ பெரிதோ சிறிதோ கருவில் விளைவது கண்ணுக்கு அழகே நிறைவாய் மனமே நினைத்தே நின்றால்  வந்திடும் நித்தம் வராகன் அருளே !   அறிவும் ... Full story
Page 1 of 1612345...10...Last »
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.