Author Archive

வல்லமையாளர் விருது 307 – திவான்ஷு

வல்லமையாளர் விருது 307 - திவான்ஷு
-விவேக்பாரதி அறிவியலின் துணை கொண்டு மனிதன் எத்தனையோ இயலாமைகளைச் சாத்தியமாக்கி இருக்கிறான். மனிதனால் வேகமாக நகர முடிந்தது, இருட்டை விலக்க ஒளி உருவாக்க முடிந்தது, பறக்க முடிந்தது, தண்ணீரின் ஆழம்வரை காண முடிந்தது, விண்வெளியின் விளக்கங்களைப் பார்த்துப் பகிர முடிந்தது. மனிதன், தன்னுடைய எத்தனையோ இயலாமைகளை அறிவியலால் சாத்தியமாக்கி இருக்கிறான். ஆனாலும் இன்னும் சில இடங்களில் மனிதராகிய நாம் பின் தங்கித்தான் இருக்கிறோம். காற்றில்லா வெற்றிடத்தின் (Vacuum) மூலம் மனிதக் கழிவுகளை அகற்றும் அளவுக்கு வளர்ந்திருக்கும் ... Full story

நூல்நோக்கம் 2 – ராஜா வேசம்

நூல்நோக்கம் 2 - ராஜா வேசம்
-விவேக்பாரதி ராஜா வேசம் - சரசுராம் சரசுராம் எழுதியிருக்கும் சிறுகதைத் தொகுப்பு "ராஜா வேசம்". பொதுவாக சிறுகதைகள் என்னைப் பெரிதாய்க் கவர்வதில்லை. கதை என்றாலே தேர்ந்தெடுத்து வாசிப்பவன் நான். இந்தப் புத்தகத்தின் சில கதைகளை வாசிக்கும்போதே, முழுவதுமாய் வாசித்துவிட வேண்டும் என்று தோன்றிவிட்டது. அத்தனை வசீகரம் இவரது கதைகளில் எவ்விடத்தும் குறையாமல் காணப்படுகிறது. சற்றும் எதிர்பாராக் கோணங்களில் அமைந்திருக்கிறது ஒவ்வொரு கதையும். ஆனால் நாம் அந்த நிலைகளைப் பற்றி ஒருமுறையேனும் வாழ்வில் கேள்விப்படாமல் ... Full story

வல்லமையாளர் விருது 306 – பனை சதிஷ்

வல்லமையாளர் விருது 306 - பனை சதிஷ்
-விவேக்பாரதி நம் வாழ்க்கை வேகமயமாக மாறி வருகிறது. மரபு சார்ந்த நம் அடையாளங்கள் ஒவ்வொன்றும் எப்படியோ மறந்து வருகின்றன. இயற்கை விவசாயம் என்ற சொல்லை நாம் போராட மட்டும் தான் காண முடிகிறது. இந்த அவலநிலைக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் அரசியல் கூறுகள் நம்மைச் சிந்திக்க வைப்பதில்லை. மாறாக தன் வளர்ச்சியை நம் வளர்ச்சியாக மாற்றிச் சொல்லிக்கொண்டு இருக்கின்றன. இவற்றிலிருந்து விடுபட, இளைஞர்கள் அறிவார்ந்த புரட்சிகளைக் கைகளில் எடுக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒரு இளைஞர்தான் ... Full story

வானுக்கு மேல்

-விவேக்பாரதி வானம் எனக்கு எப்போதும் அதிசயமானது. வானத்தைப் பார்த்தாலே என் மனத்தில் வார்த்தை மழை பெய்யும். "பாரதி யார்?" நாடகத்திற்காக சிங்கப்பூர் செல்லும் வழியில் விமானத்தில் எழுதிய கவிதை... வானுக்கு மேல்வந்து பாருங்களேன்! இங்கு வண்ணங்கள் இல்லையோர் வேற்றுமை இல்லை நானென்றும் நீயென்றும் போட்டிகள் இல்லை நாடில்லை கோடில்லை நாடகம் இல்லை! காலுக்குக் கீழ்கோடி மேகம் மிதக்கும் காற்றுக்கு நாம்தோழன் லீலை இனிக்கும் மேலுக்கும் கீழுக்கும் சண்டை இல்லாமல் மென்மனம் குழந்தையாய்த் தாவிக் குதிக்கும்! அமைதியாம் வீட்டிற்கு வாசல் திறக்கும் ஆனந்தம் நெஞ்சத்தில் ஊஞ்சல் அமைக்கும் சுமைநீங்கப் பெறும்போது சொர்க்கம் திறக்கும் சுறுசுறுப் பாய்ரத்த நாளம் துடிக்கும்! யாருக்கும் கிட்டாத காட்சி கிடைக்கும் யவ்வணம் நம்மோடு சேர்ந்தே சிரிக்கும் பாருக்குள் ஒருவிந்தை ... Full story

வல்லமையாளர் 305 – கோமதி மாரிமுத்து

வல்லமையாளர் 305 - கோமதி மாரிமுத்து
-விவேக்பாரதி வாழ்க்கை என்னும் ஓட்டப் பந்தயத்தில் எத்தனையோ தடைகளைத் தாண்டி, சுமைகளை ஏந்தி நாம் ஒவ்வொரு நாளும் ஓடிக் கொண்டிருக்கிறோம். வெற்றி தோல்வி என்பதெல்லாம் இல்லாமல் பாதியிலே நாம் பந்தயத்திலிருந்து விலகியும் விடுகிறோம். ஆனால் உள்ளம் முழுவதிலும் சாதிக்கும் திண்ணத்துடன் ஓடும் வீரர்கள் பந்தயங்கள் எத்தனை வந்தாலும் வென்றுவிடுகிறார்கள். அப்படிப்பட்டவொரு வீரரே வீராங்கனை கோமதி மாரிமுத்து. போதிய அளவு மைதான வசதியோ, பேருந்து வசதியோ கூட இல்லாத முடிகண்டம் என்னும் ஊரிலிருந்து ... Full story

“என்னில் சாயி, எல்லாம் சாயி” – இசைத்தகடு மற்றும் புத்தக வெளியீடு

-விவேக்பாரதி சென்ற வாரம் சனிக்கிழமை மாலை 4.00 மணி அளவில், சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள சாய்பாபா ஆலயத்தில் "எல்லாமே சாயி" என்னும் இசைக் குறுந்தகடு வெளியானது. கவிமாமணிகள் க.ரவி மற்றும் சு.ரவி, கவிஞர்கள் சாய்ரேணு, நதிநேசன் ஆகியோர் எழுதி, க.ரவி அவர்கள் இசையமைத்து, திருமதி கிருபா ரமணி அவர்கள் பாடியிருந்த அந்தக் குறுந்தகட்டையும் அதனையொட்டி திருமதி சாய்ரேணு எழுதிய "என்னில் சாயி, எல்லாம் சாயி" என்ற சாய் சரித்திர நூலையும் சொல்லின் செல்வர் சுகி.சிவம் அவர்கள் வெளியிட்டு சாய்நாதன் மகிமைகளைக் குறித்து ஓர் சிற்றுரை ஆற்றினார். ... Full story

இந்த வார வல்லமையாளர் – 304

இந்த வார வல்லமையாளர் - 304
-விவேக்பாரதி மாறிக்கொண்டே வரும் இந்த துரித உணவுக் கலாச்சாராத்தில் உணவு என்பதும் நம் வாழ்க்கையில் ஆடம்பரப் பொருள்களுள் ஒன்று என்று ஆகிவிட்டது. பெருநகரங்களில் மட்டுமே கிடைக்கும் என நம்பப் படுகின்ற துரித உணவுகள், சமைக்கும் முறைகளில் நவீனமான கருவிகள் தேவைப்படும் எனப் பலர் கருதும் உணவுகளை ஒரு கிராமத்துச் சூழலில் சமைத்து வருகிறார் ஒருவர். அனைத்து வகையான உணவுகளையும் சிறிதளவு என்றில்லாமல் குறைந்தபட்சன் 50 நபர்கள் சாப்பிடும் அளவு சமைத்து குழந்தைகளுக்கான விடுதிகளிலும், கோவில்களிலும் ஆதரவற்றோருக்கு அளித்து வருகிறார். இதிலே வியக்கத்தக்க செய்தி என்னவென்றால் அவர் சமைக்கும் முறைகளைக் ... Full story

உலகம் அளந்து பார்க்காத ஆழம், பெண்மை!

-விவேக்பாரதி பெண்மை என்பதோர் ஆயுதம் - நம் பெருமை அளந்திடும் சீதனம் பெண்மை என்பதோர் பூவனம் - அது பேண வேண்டிய தோர்வளம்! பெண்மை காப்பதே நம்கடன் - அப் பேறு வாய்ப்பதே தெய்வதம் பெண்மை வாழ்கெனப் பாடுவோம் - எந்தப் பெண்ணைக் கண்டாலும் போற்றுவோம்! ஆணின் பலமெலாம் ஊனிடம் - பெரும் ஆன்ம பலமெலாம் பெண்ணிடம் காண வேண்டிய கீர்த்திகள் - நம் காரி கைவசம் பூர்த்திகள் பேணும் நல்லறம் பெண்ணிடம் - பல போரும் அமைதியும் பெண்ணிடம் தூணைப் போலதைக் காத்துதான் - எதிர் தோன்றும் போதெலாம் வாழ்த்துவோம்! வானின் மாமழை தாய்க்குணம் - அலை வண்ணக் கடலும் காதல்மனம் சேனை ஆயிரம் ரௌத்திரம் - பல செழுமை பெண்கொளும் பூரணம்! ஞானம் அவர்சொலும் ... Full story

நூல்நோக்கம்

நூல்நோக்கம்
-விவேக்பாரதி சித்தார்த்தனாகும் புத்தன்கள் - கவிஞர் சிபு போதிமரம், சித்தார்த்தன், புத்தன், ஞானம் இவற்றை அடித்துத் துவைத்துப் பிழிந்து சாயம் உலர்த்திப் போட்டிருக்கும் புத்தகம் “சித்தார்த்தனாகும் புத்தன்கள்”. ஏழெட்டு மாதங்கள் தவமாய்த் தவம் கிடந்து இந்தப் புத்தகம் வெளிவந்திருக்கிறது என்றால் எத்தனை வெட்டல் ஒட்டல்களைக் கடந்து வந்திருக்கும் என்று நம்மால் யூகிக்க முடிகிறது. ஆனால் மற்ற புத்தகங்களைப் போல ஓரிரவில் கடந்து சென்றுவிட முடியாத அடர்த்தி ... Full story

உள்ளம் என்பதோர் பூனை

-விவேக்பாரதி உள்ள மென்பதோர் பூனையடா - அது உரசித் திரிவதே வேலையடா உள்ளி ருக்குதோ வெளியி ருக்குதோ உணருவார் அதிகம் இல்லையடா! நாம் வளர்க்கிறோம் என்பதையே - பல நாள் மறந்திடும் பிறவியடா! ஆம் நமக்குளே அதுதன் ஆட்சியை அமைத்து வாழ்கின்ற பிராணியடா! (உள்ளம்) சொகுசுக் காகவே வாழுமடா! - அது சுவையி லாததைச் சாடுமடா! நகத்தில் கீறலும் கடிகள் நூறுமாய் நம்மைக் காயமே செய்யுமடா! (உள்ளம்) அந்தப் பூனையைக் கொஞ்சுவதும் - நீ ஆவ தில்லையெனத் தள்ளுவதும் நந்தம் கைகளில் இல்லை! யாவையும் நாயகன் செயும் ஆட்டமடா! (உள்ளம்) காலி டுக்கிலே சுற்றுவதும் - ஒரு கதையி லாமலே கத்துவதும் வாலை ஆட்டியே பற்றுவ தும்நம் வாழ்க்கை நாடகத் ... Full story

காலை நடை

-விவேக்பாரதி நடக்க நடக்க நீண்டிடும் சாலை நடுவில் எத்தனை நிறுத்தங்கள்! நாடிய சிலவும் வேண்டிய சிலவும் நகர்ந்து போகும் வழக்கங்கள்! வெடித்த சாலை வெண்ணீர்ப் பாலை வேகக் காற்றும் இடையிடையே மெலிந்த தென்றல் சோலைக் காட்சி மெதுவாய்ப் படரும் வழிவழியே! பூவின் வாசம் ஓரிடத் தில்நான் புயல்வ சத்தில் ஓரிடத்தில் புன்னகை மட்டும் மாறா மல்நான் புரியும் நடைதான் யாரிடத்தில்? தாவும் குரங்காய் மனமும் செல்லத் தண்ணீர் தேடும் நிமிடங்கள் தடித்துப் புடைக்க உண்டக ளைப்பில் தடுமா றுகிற பயணங்கள்! முதுகு வளைய மூட்டை தூக்கி முறுவ லிப்பதும் நானேதான் முடியா தெனவென் மனத்துச் சுமையால் முனகி நிற்பதும் நானேதான் அதுவாய் வந்தோர் தனிவே தாளம் அழுத்திக் கட்டிப் பிடிக்கிறது ஆயிரம் கதைகள் கேட்டுக் கேட்டே அழுகைக் கவிதை கொடுக்கிறது!! 11.02.2019 Full story

தமிழ்த் தொழுகை

-விவேக்பாரதி தொழுதால்நான் தமிழ்த்தாயைத் தொழவேண்டும்! - புதுத் தோரணமாய் அவள்புகழை நடவேண்டும் - இனி அழுதாலும் தமிழில்தான் அழவேண்டும் - அந்த ஆனந்தம் போல்மண்ணில் எதுவேண்டும்? - வந்து முழுதாக எனைவார்த்த செந்தமிழே - நாவை முத்துரத மாக்கிவைத்த முத்தமிழே - உன்னை மொழியாகக் கொண்டதலால் இச்சிறுவன் - எந்த முக்தியையும் பெற்றதில்லை வான்தமிழே! பாரதியின் பாட்டுவழி உள்வந்தாய் - அந்தப் பாட்டமுதம் வழியென்னுள் கள்தந்தாய் - ஒரு காரணமில் லாமலுயர் பொன்தந்தாய் - ஆ ககனத்தைக் கைசேர்க்கும் கவிதந்தாய் - உனைச் சாரதியாய் நான்கொண்ட தேதிமுதல் - உமை சன்னிதிக்கு மட்டுந்தான் கால்பயணம் - மீதி நேரமெல்லாம் நீயோட்டும் வெள்ளிரதம் - இது நேர்ந்துவிட நான்செய்த தென்னதவம்? தொட்டாலே பொன்னாக்கும் வித்தையினை ... Full story

இந்த வார வல்லமையாளர் (297) – ப்ராஞ்சல் கச்சோலியா

இந்த வார வல்லமையாளர் (297) - ப்ராஞ்சல் கச்சோலியா
-விவேக்பாரதி இல்லங்கள் என்பன அன்பின் ஆதாரங்கள். நமக்கு நாமே சேர்த்துக் கொள்ளும் வரங்கள். “எலிவளை ஆனாலும் தனிவலை வேண்டும்” என்று பழமொழி சொல்கிறது அல்லவா! அத்தகைய சிறப்பினை நமது சமூகத்தில் எப்போதும் இடம்பிடித்து இருப்பன வீடுகள் தாம். சின்னச் சின்ன வீடுகளில் தொடங்கி பெரிய பங்களாக்களும், அரண்மனைகளும், அடுக்கடுக்காய் பல மாடிகளைக் கொண்ட அடுக்ககங்களும் சூழ்ந்த நாடு நம் நாடு. இத்தகைய நவீன இல்லங்களை சமூகத்தினர் தற்போது அலங்காரப் படுத்துவதில் காட்டும் ... Full story

பம்பரச் சாட்டை

-விவேக்பாரதி ஆடு கின்றதோர் பம்பரம் நாமெலாம் ஆட்டு விப்பவன் யாரெனக் கூறடா பாடு பட்டவர் பாட்டினில் வாழ்ந்தவன், பாரின் சுற்றினில் பற்றிடா துள்ளவன், நாடு மத்தனை ஆசையும் எண்ணமும் நண்ணி டாத்தொலை வெட்டியி ருப்பவன், காடு மேடுகள் சுற்றுமெய்ஞ் ஞானியர் காணும் சக்தியாங் கைதொழ வேண்டிடும், கோவில் எங்கிலும் உள்ளுறை தெய்வதம், கொள்கை கொண்டுவாழ் போகியர் நெஞ்சினில் ஆவ லாகவும் வாழ்ந்திடும் உத்தமன், ஆண்டி யாயொரு கானிடை தங்குவார் நாவில் ஞானமாய் நின்றிடும் உள்ளொளி, நாட்டில் அற்புதம் தோன்றிடப் பாடிடும் பாவ லர்க்கெலாம் பாதரும் சற்குரு, பார்க்கும் வையமி யக்கிடும் ஆற்றலான், கிள்ளை நாரைகி ளர்ந்திடுங் கான்குயில் கீழ்வி ழும்மழைக் காடிடும் மஞ்ஞைகள் புள்ளி னந்தரும் ஓசையில் பச்சையாய்ப் புன்செய் தந்திடும் நாற்றினில் ஆற்றினில் கள்ள ருந்திடும் ... Full story

இந்த வார வல்லமையாளர் (296) – டி குகேஷ்

இந்த வார வல்லமையாளர் (296) - டி குகேஷ்
-விவேக்பாரதி முன்னரே நிறுவி வைத்திருக்கும் இலக்கினைக் காலம் ஒவ்வொரு திறனாளிகளைக் கொடுத்து உடைத்துப் பார்க்கின்றது. எளிமையாக நமது எண்ணங்களை மற்றொரு எண்ணம் வெல்வது என்பதில் தொடங்கி சர்வதேச அளவில் இந்த இலக்கை முறியடித்து சாதனை படைப்பதும் வெற்றி வாகை தரிப்பதும் ஒரு உலகியல் நியதி. நாம் பேசிக்கொண்டிருக்கும் இந்த வினை விளையாட்டு சம்பந்தமான துறையில் நிறையவே காணப்படுகிறது. ஏற்கனவே சாதனையாளராக ஒரு விளையாட்டு வீரர் தன் திறத்தால் தாம் சேர்ந்த துறையில் பதித்து ... Full story
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.