Author Archive

Page 1 of 3123

சமன் கணக்கு

சமன் கணக்கு
குமரி. எஸ். நீலகண்டன் இதுவும் அதுவும் சமம். அதுவும் இதுவும் சமம். அங்கே இருப்பதும் என்னருகில் இருப்பதும் சமம். இங்கிருப்பதும் எங்கோ இருப்பதும் சமம்.உயரே இருப்பதும் கீழே இருப்பதும் சமம். சமங்கள் நிறைய இருக்கின்றன. ஆனால் சமங்களும் சமங்களும் சமரசமாகவோ சமமாகவோஇல்லை.   படத்திற்கு நன்றி:http://www.impressionmanagement.com/blog/04-25-2011/the-first-step-in-negotiating-is-not-the-first-step Full story

நிலவைச் சீண்டிய காற்று

நிலவைச் சீண்டிய காற்று
குமரி எஸ். நீலகண்டன் காற்று மரத்தின் கிளைகளாய் நீண்ட கம்புகளை வைத்து சதா நிலாவை அடித்துக் கொண்டே இருக்கிறது.   கிளைகளின் அசைவில் தேன் கூட்டிலிருந்து தேன் சொட்டிற்று.   கூரிய இலைகள் நிலாவைக் கீறிய போது மரத்திலிருந்து நட்சத்திரங்களாய் ஒளிப் பூக்கள் சொட்டின. திறந்த வெளியில் நிலாவைப் பார்த்தேன். நிலாவின் முகத்தில் இல்லை எந்தத் தழும்புகளும்.   படத்திற்கு நன்றி Full story

நிலவின் அழைப்பு..

நிலவின் அழைப்பு..
குமரி.எஸ். நீலகண்டன். இருளைக் கிழித்து அடைத்த சன்னலை இடைவிடாது தட்டிக் கொண்டே இருக்கிறது நிலா.. Full story

நிலவின் வெட்கம்

நிலவின் வெட்கம்
குமரி எஸ். நீலகண்டன் கடலலைகளோடு அசைந்து கொண்டும் மிதந்து கொண்டும் இருக்கிறது நிலா.  கோடானுகோடி உயிர்கள் தாவரங்கள் ஒருங்கே குளித்துக் கொண்டிருக்கின்றன நிலாவில்.  கடும் புயலிலும் காற்றிலும் மழையிலும் எதுவுமாகாமல் குளிர்ச்சிப் பார்வையுடன் என்றும் சமன குதூகலமாய் நிலா.  ஆனால் சூரியன் வந்தால் மட்டும் வெட்கத்தில் வானத்தில் தனது விண்மீன் சகாக்களுடன் கரைந்து ஒளிந்து கொள்கிறது நிலா.     Full story

நிலா மொழி

நிலா மொழி
குமரி எஸ். நீலகண்டன்         என் தாயுடன் நான் களித்த எனது அம்புலிப் பருவத்திலிருந்தே உன்னைக் காண்கிறேன்...   இன்றும் நீ அப்படியே இருக்கிறாய் என்றேன் நிலாவைப் பார்த்து வியந்து... அதற்கு நிலா சொன்னது நாற்பது ஆண்டுகளாய் நானும் உன்னைக் காண்கிறேன்.. அப்போது போலில்லை நீ இப்போது. மிகவும் மாறி விட்டாய்.. என்று வருத்தத்துடன் சொன்னது..   இன்னும் சொன்னது...   நீ மாறி விட்டாயென்று நான் சொன்னது உன் உருவத்தில் மட்டுமல்ல... என்றது குறிப்பாய்.   படத்திற்கு நன்றி.   Full story

தேடலின் எல்லைகள்

தேடலின் எல்லைகள்
  குமரி எஸ். நீலகண்டன் வலை வீசி தேடிக் கொண்டே இருக்கிறோம் தேடுவதைத் தவிர்த்து வேறெதுவெல்லாமோ அகப்படுகின்றன அகப்படுபவையின் அசுரக்கரங்களில் அகப்படும் நாம் அங்கிருந்து புதிதாய் இன்னொன்றைத் தேடிக் கொண்டே இருக்கிறோம் புதிய சுரங்கங்களின் புதையல்களில் முகம் புதைத்து புதை முகங்களின் புதிய நகல்களைத் தேடிக் கொண்டிருக்கிறோம் தேடலின் பாதையில் தெரியாத இடங்களை அடைகிறோம் வழியில் திடீரென பாயும் வெள்ளத்தின் வீச்சில் எட்ட முடியாத எல்லைகளில் சிக்கிய பின் அதிலிருந்து மீள தேடலின் ஆரம்பத்தையும் தேடிக் கொண்டிருக்கிறோம்.. இறுதியில் எதைத் தேடினோம் எதற்காகத் தேடினோமென எல்லாவற்றையும் மறந்து தேடித் தேடி தேடித் தன்னையே தேடிக் கொண்டிருக்கிறோம்.   படத்திற்கு நன்றி Full story

வருடச் சங்கடம்

குமரி எஸ். நீலகண்டன் அப்பா அம்மாவோடுதான் அவனது ஒவ்வொரு பிறந்த நாளும். கேக் வெட்டி மெழுகுத் திரிகள் ஒளிர வருடம் தவறாமல் கொண்டாடி வருகிறான். வருடந்தோறும் மெழுகுத் திரிகளோடு அவன் வயதும் பெருகப் பெருக அவனது அப்பாவும் அம்மாவும் அதே இளமையில் புகைப்படத்தில்... Full story

இலையின் முனங்கல்

குமரி எஸ். நீலகண்டன் ஒவ்வொருவரும் செடியின் இலையைக் கிள்ளி எறிகிற போது, இலை சொல்லுகிறதாம் 'உங்களுக்குக் குழந்தைகள் என்று இருந்தால் பாவம் அதைப் பார்த்துக் கிள்ளுங்கள்' என்று... ==================================== படத்திற்கு நன்றி: http://bonsaijournal.com Full story

மெய்யும் பொய்யும்

குமரி எஸ். நீலகண்டன் பொய்யே நெய்யாய் எரிய, உடலெங்கும் பொய்யின் வியர்வையில் புதைந்தவன் அவன். எப்போதும் பொய்யே பேசும் அவன் எப்போதாவது உண்மை பேசுகையில் பொய்யாய்ப் போகும் அவன் உருவமெனும் மெய். Full story

பவளமல்லியின் பகட்டுச் சிரிப்பு

குமரி எஸ். நீலகண்டன் நான் ஒவ்வொரு முறை செல்கிற போதும் அந்தப் பவளமல்லி மரம் பழுப்பு வண்ணச் சேலையுடன் குலுங்கி குலுங்கிச் சிரிக்கிறது. அதன் சிரிப்பலைகள் மரத்திலிருந்து சிந்திச் சிதற அதன் முகமும் வெள்ளைச் சிரிப்பும் பவளமணிகளாய் பரந்து தரை முழுக்க....... விரிந்த தரையில் விழுந்த சிரிப்பில் பெருமிதமாய் முகம் பார்க்கிறது அந்தச் செந்தரை. ======================================= படத்திற்கு நன்றி: http://balavasakan.blogspot.com Full story

கடவுளும் சில சந்தேகங்களும்

குமரி எஸ். நீலகண்டன் 'கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா?' கேட்டேன் நண்பனிடம். 'இல்லவே இல்லை' என்றான் அழுத்தமாக... அடுத்து நான் தொடர்ந்தேன் சில கேள்விகளோடு... உலகில் எறும்புகளின் வாயில் தேள் கொடுக்கு இருந்தால்.. 'வானில் பறவைகளாக முதலைகள் பறந்தால்.. கொசுக்கள் மூலமாக எய்ட்ஸ் பரவும் என்றால்... காற்றின் வழியாக மின்சாரம் கடந்து செல்லுமானால்... பல்லிகளின் வாயில் பாம்பின் விஷமிருந்தால்... நாம் நினைப்பதெல்லாம் மற்றவர்களின் காதில் கேட்குமென்றால்... நிலத்தினடியில் நீருக்குப் பதில் பெட்ரோலே இருந்தால்.. இப்படி நான் கேள்விகளைத் தொடரத் தொடர அவர், 'விடுங்க சாமி... கடவுள் இருக்கிறார் இருக்கிறார்' என்று கூறிவிட்டு ஓடிவிட்டார். எனது கேள்வி 'அவரது பதிலினுள் கடவுள் இருக்கிறாரா?' என்பதுதான். Full story

அதிரடித் தீர்ப்பு

குமரி எஸ். நீலகண்டன் விவாகரத்து கேட்டு வந்தனர் இருவரும்.. இயல்பினில் இருவரும் இரண்டு திசைளென்றனர். நீ இந்தப் பக்கமாகவும் நீ அந்த பக்கமாகவும் சென்று விடுங்களென்றார் கடுமையாய் வழக்கறிஞர். சிறிது வளைந்தும் செல்லுங்கள் உங்கள் பாதையில் என்றார். உங்கள் வளைவுகள் ஒரு வட்டமானால் வாருங்கள் இங்கே விருந்து வைக்கிறேன் என்றார் வழக்கறிஞர். Full story

நியூட்டனின் மூன்றாம் விதி

குமரி எஸ். நீலகண்டன் *ஒரு சர்ச்சையின் பின் நெடுநாள்கள் கழித்து நண்பர்கள் இருவரும் வழியில் சந்தித்தனர். *தயக்கத்துடன் அவன் சிரித்தான். கண்கள் சிரித்தன. உதடுகள் சிரிக்கவில்லை. எதிர் வினை - இரண்டாமவரின் கண்கள் மட்டும் சிரிக்கலாம். கண்களோடு உதடுகளும் சிரிக்கலாம். *வெப்பம் படர்ந்த அவனது கண்கள் சிரிக்கவில்லை. உதடுகள் மட்டும் சிரித்தன. எதிர் வினை - இரண்டாமவரின் உதடுகள்  மட்டும் சிரிக்கலாம் அல்லது உதடுகள் தட்டி உணர்வுகளை எழுப்பலாம் *கனிவுடன் கண்களோடு உதடுகளும் சிரித்தன. எதிர் வினை - பௌர்ணமி நிலவில் பரந்த வானமாய் உடல் முழுக்க பரவசிக்கலாம். *மௌனமாய் இருந்தான் எதிர் வினை - அங்கொரு குறைந்த காற்றழுத்த மண்டலம் உருவாகி அதுவே பெருத்த புயலின் மையமாகலாம் மழையும் பெய்யலாம். பிழையான மழையால் மௌனம் ஒரு மயானத்தையும் உருவாக்கலாம். Full story

கடவுளின் பெருமிதம்

குமரி எஸ். நீலகண்டன் தொடர்ச்சியான அநியாயங்களின் சாட்சியான அவன், கடவுளைத் திட்டிக்கொண்டிருந்தான். உலகில் கடவுளே இல்லை. அப்படிக் கடவுள் இருந்தால் அவன் திருடன் கொள்ளைக்காரன் அயோக்கியன்.. பித்தலாட்டக்காரன்.. ஏமாற்றுப் பேர்வழி... நிறைய பேர் கடவுளின் நாமம் சொல்லி பூஜை செய்துகொண்டிருக்க சோர்ந்திருந்த கடவுள், நம்பிக்கை இழந்து திட்டிய அவனை மட்டும் பார்த்து, நம்பிக்கையும் பெருமிதமும் கொண்டார். Full story

சுயநலத்தின் சுற்றுப் பாதை

குமரி எஸ். நீலகண்டன் ஓடும் பேருந்தில் தொங்கியும் சாய்ந்தும் சரிந்தும் வியர்த்தும் காற்றைப் பிழிந்து வியர்வை மிதந்த கனத்த கூட்டத்தில் இருக்கையை விட்டு எழுவதுபோல் எத்தனிக்கும் அவனைச் சுற்றி மந்தையாய்க் குவியும் சுயநலம். அந்த இடத்தைப் பிடிக்க கைகள், கம்பிகளைப் பற்ற வாள்களாகச் சண்டையிடும். அவனின் பாவனை அசைவில் நிற்பவர்களின் ரத்தம் ஒடுங்கிய ஓடைகளில் உயர் அழுத்தத்தில் பாயும். அவன் எழாத போது பெய்யா மழையால் பொய்யாய்க் கலையும் கரு மேகமாய் அலைபாயும் அடுத்த இடத்திற்காய், சுயநலம். Full story
Page 1 of 3123
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.