Author Archive

Page 1 of 1312345...10...Last »

வளவன் கனவு (27)

வளவன் கனவு  (27)
சு. கோதண்டராமன்  நல்லூர்ப் பெருமணம்   காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கி ஓது வார்தமை நன்னெறிக் குய்ப்பது வேதம் நான்கினும் மெய்ப்பொரு ளாவது நாதன் நாமம் நமச்சி வாயவே -சம்பந்தர். வயது பதினாறு ஆயிற்று. சம்பந்தருக்குத் திருமணம் செய்துவைக்க விரும்பினார் தந்தை. எல்லோரையும் போல இல்லறத்தில் ஈடுபட்டு இன்பம் அனுபவிக்கவா அவர் அவதரித்தார்? இறைவன் தன்னை எதற்காக இந்த உலகிற்கு அனுப்பினான் ... Full story

வளவன் கனவு (26)

வளவன் கனவு  (26)
சு. கோதண்டராமன் வாத சபை சந்துசேனனும் இந்துசேனனுந் தருமசேனனுங் கருமைசேர் கந்துசேனனுங் கனகசேனனும் முதலதாகிய பெயர்கொளா மந்திபோல்திரிந் தாரியத்தொடு செந்தமிழ்ப்பயன் அறிகிலா அந்தகர்க்கெளி யேனலேன்திரு ஆலவாயரன் நிற்கவே -சம்பந்தர் ஊர் மக்கள் பெரும் திரளாகக் கூடி இருந்தனர். சம்பந்தரின் புகழ் ஏற்கெனவே பரவி இருந்ததால் அவரைக் காண விரும்பினர். அவரைக் கொல்லச் சமணர்கள் முயன்றார்கள் என்ற செய்தி அவர் பால் ஒரு அனுதாப அலையை ஏற்படுத்தியிருந்தது.... Full story

வளவன் கனவு (25)

வளவன் கனவு (25)
சு. கோதண்டராமன் வெப்பு நோய் ஆற்ற லடல்விடை யேறு மால வாயான்றிரு நீற்றைப் போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம் பந்தன் தேற்றித் தென்ன னுடலுற்ற தீப்பிணி யாயின தீரச் சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே -சம்பந்தர். குலச்சிறையார் ஒற்றர் படையைச் சேர்ந்த நான்கு வீரர்களைத் தனியாகக் கூப்பிட்டு, சம்பந்தரின் இருப்பிடம் அறிந்து போகச் சொன்னார். அவர்கள் தன்னை வெளிப்படுத்திக் ... Full story

வளவன் கனவு – 24

வளவன் கனவு  - 24
சு. கோதண்டராமன்  மங்கையர்க்கரசி மங்கையர்க் கரசி வளவர்கோன் பாவை வரிவளைக் கைம்மட மானி பங்கயச் செல்வி பாண்டிமா தேவி பணிசெய்து நாடொறும் பரவப் பொங்கழ லுருவன் பூதநா யகன்நால் வேதமும் பொருள்களும் அருளி அங்கயற் கண்ணி தன்னொடு மமர்ந்த ஆலவா யாவது மிதுவே -சம்பந்தர்.   அமைச்சரின் வரவை எதிர்நோக்கிக் காத்திருந்த பாண்டிய அரசி மங்கையர்க்கரசி நிலை கொள்ளாமல் அந்தப்புரத்தின் முன் முகப்பில் இங்கும் அங்கும் உலவிக் ... Full story

வளவன் கனவு (23)

வளவன் கனவு  (23)
சு.கோதண்டராமன் அப்பரும் ஆளுடைய பிள்ளையும் வளவன் கனவு - பகுதி 22 அப்பர்தாம் எங்குற்றார் இப்பொழுதென் றருள்செய்யச் செப்பரிய புகழ்த்திருநாவுக்கரசர் செப்புவார் ஒப்பரிய தவஞ்செய்தேன் ஆதலினால் உம்மடிகள் இப்பொழுது தாங்கிவரப் பெற்றுய்ந்தேன் யான்என்றார்.                               -சேக்கிழார்   இவர் பால் மணம் மாறாப் பச்சிளம் பாலகர். அவர் பழுத்து ... Full story

வளவன் கனவு (22)

வளவன் கனவு  (22)
சு. கோதண்டராமன்  வெற்றி யாத்திரை ஆதியன் ஆதிரையன் அயன் மாலறி தற்கரிய சோதியன் சொற்பொருளாய்ச் சுருங் காமறை நான்கினையும் ஓதியன் உம்பர்தங்கோன் உல கத்தினுள் எவ்வுயிர்க்கும் நாதியன் நம்பெருமான் நண்ணும் ஊர்நனி பள்ளியதே -சம்பந்தர் செய்தி வாய்மொழியாகவே அக்கம் பக்கத்து ஊர்களுக்குப் பரவியது. அரைக் காத தூரத்தில் பகவதி அம்மையாரின் பிறந்த ஊரான நனிபள்ளியில்* அச்செய்தி கேட்டதும், அவரது பெற்றோர்கள் ... Full story

வளவன் கனவு (21)

வளவன் கனவு  (21)
சு. கோதண்டராமன் காழிப்பிரான் வேதநெறி தழைத் தோங்க மிகுசைவத் துறைவிளங்கப் பூதபரம்ப ரைபொலியப் புனிதவாய் மலர்ந்தழுத சீதவள வயற்புகலித் திருஞான சம்பந்தர் பாதமலர் தலைக்கொண்டு திருத்தொண்டு பரவுவாம் -சேக்கிழார் தென்னைமர உச்சியில் லிங்கத் திருமேனியைத் தாங்கி நின்ற விச்வேசரின் பேரன் சிவபாத இருதயர். அவர் ஒரு நாள் வழக்கம்போல் தன் குழந்தையை அழைத்துக் கொண்டு குளத்துக்குப் போனார். சூரிய உதயத்துக்கு முன் நீரில் மூழ்கிக் குளித்து அனுஷ்டானங்களைச் செய்வது ... Full story

வளவன் கனவு (20)

வளவன் கனவு  (20)
சு. கோதண்டராமன் 20 வீரரும் சிற்பியும் இதுவன்றே ஈசன் திருவுருவம் ஆமா றிதுவன்றே என்றனக் கோர் சேமம்- இதுவன்றே மின்னுஞ் சுடருருவாய் மீண்டொயென் சிந்தனைக்கே இன்னுஞ் சுழல்கின்ற திங்கு. -அம்மையார் மயிலாடுதுறையில் காவிரிக்கரையில் ஒரு சத்திரம். விடியற்காலை. அங்கு தூங்கிக்கொண்டிருந்த ஒரு இளைஞன் எழுந்து வெளியே வந்தான். சுக்கிரன் ... Full story

வளவன் கனவு (19)

வளவன் கனவு  (19)
சு. கோதண்டராமன் 19 நியாயசபை அங்கண் முழுமதியஞ் செக்கர் அகல்வானத் தெங்கும் இனிதெழுந்தால் ஒவ்வாதே- செங்கண் திருமாலைப் பங்குடையான் செஞ்சடைமேல் வைத்த சிரமாலை தோன்றுவதோர் சீர். -அம்மையார்   வைணவர்களும் தீக்ஷிதர்களும் தங்கள் தங்கள் கொள்கையில் விடாப்பிடியாக நின்றனர். விண்ணகர வளாகத்திலும் தெருவிலும் தோப்புகளிலும் அடிக்கடி கலவரங்கள் ... Full story

வளவன் கனவு – 18

வளவன் கனவு  - 18
சு. கோதண்டராமன் 18 தில்லை விடங்கன் பொன்னொத்த மேனிமேல் வெண்ணீ றணிந்து புரிசடைகண் மின்னொத் திலங்கப் பலிதேர்ந் துழலும் விடங்கர்வேடச் சின்னத்தி னான்மலி தில்லையுட் சிற்றம் பலத்துநட்டம் என்னத்த னாடல்கண் டின்புற்ற தாலிவ் விருநிலமே. -அப்பர் மகேசனும் ஆதனும் வேறு நான்கு இளைஞர்களும் சிலை வடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மற்றவர்கள் இவர்களுக்குப் பாதுகாப்பாகச் சூழ்ந்து நின்றனர். மகேசன் ஆடலரசன் சிலை ஒன்றை மெழுகில் செய்தான். ஒரு ... Full story

வளவன் கனவு (17)

வளவன் கனவு  (17)
சு. கோதண்டராமன் 17 சமயப் பிளவு வந்து எதிர்ந்த தாடகைதன் உரத்தைக் கீறி வரு குருதி பொழிதர வன்கணை ஒன்று ஏவி  மந்திரம் கொள் மறை முனிவன் வேள்வி காத்து வல்லரக்கர் உயிர் உண்ட மைந்தன் காண்மின்  செந்தளிர்வாய் மலர் நகை சேர் செழுந்தண் சோலைத் தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்  அந்தணர்கள் ஒரு மூவாயிரவர் ஏத்த அணிமணி - ஆசனத்து இருந்த அம்மான் தானே -குலசேகர ஆழ்வார் ஆதன் உலோகக் ... Full story

வளவன் கனவு-16

வளவன் கனவு-16
சு.கோதண்டராமன் சப்த விடங்கர்கள் நீரானே நீள்சடை மேலொர் நிரைகொன்றைத் தாரானே தாமரை மேலயன் தான்றொழுஞ் சீரானே சீர்திக ழுந்திருக் காறாயில் ஊரானே யென்பவர் ஊனமி லாதாரே -சம்பந்தர் உலகிலேயே முதல் முறையாகத் தெய்வத்தை ஆடும் கோலத்தில் கற்பனை செய்த பெருமைக்கு உரியவர் காரைக்கால் ... Full story

வளவன் கனவு-15

வளவன் கனவு-15
சு. கோதண்டராமன் தலைநகர் மாற்றம் புள்ளி னம்புகழ் போற்றிய பூந்தராய் வெள்ளந் தாங்கு விகிர்தன் அடிதொழ ஞாலத் தில்லுயர் வாருள்கு நன்னெறி மூல மாய முதல்வன்தானே -சம்பந்தர் ஆழிப் பேரலை காழி நகருக்குள் நுழையவில்லை. அது மட்டுமல்ல, கடல் தன் பழைய எல்லையிலிருந்து அரைக் காத தூரம் பின் வாங்கியும் போய் விட்டது. சற்றுத் ... Full story

வளவன் கனவு – 14

வளவன் கனவு – 14
--சு.கோதண்டராமன்.   காழியில் ஆழிப் பேரலை**   ஒருமைபெண்மையுடை யன்சடையன்விடை யூருமிவ னென்ன அருமையாகவுரை செய்யவமர்ந்தென துள்ளங்கவர் கள்வன் கருமைபெற்றகடல் கொள்ளமிதந்ததோர் காலமிது வென்னப் பெருமைபெற்றபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே. -சம்பந்தர்   வருடங்கள் உருண்டோடின. செந்தீ வளவன் சிவபதவி அடைந்தார். அவரது மகன் செம்மேனிச் சோழன் பதவிக்கு வந்து தன் தந்தையின் லட்சியங்களைப் பின்பற்றினார். அவர் காலத்தில் காழி, கடையூர், வீழிமிழலை ஆகிய மூன்று மயானக் கோயில்களின் ... Full story

வளவன் கனவு-13

வளவன் கனவு-13
சு.கோதண்டராமன் குடந்தைக் காரோணம்   பூவார்பொய்கை அலர்தாமரைசெங் கழுநீர்புறவெல்லாந் தேவார்சிந்தை அந்தணாளர் சீராலடிபோற்றக் கூவார்குயில்கள் ஆலும்மயில்கள் இன்சொற்கிளிப்பிள்ளை காவார்பொழில்சூழ்ந் தழகார்குடந்தைக் காரோணத்தாரே                                                 -சம்பந்தர் ஆங்கிரஸ பிரமராயர் தூக்கம் வராமல் கோவிலின் முன் முகப்பில் இங்கும் அங்கும் உலவிக் கொண்டிருந்தார். இன்று பிற்பகல் வந்த செய்தி அவரது உள்ளத்தை மிகவும் கலக்கியிருந்தது. ஒரு வருடமாகவே அவர் கவலைப்படும் வகையிலான ... Full story
Page 1 of 1312345...10...Last »
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.