Author Archive

Page 1 of 2512345...1020...Last »

சறுகும் கொடியும்! (குட்டிக்கதை)

சறுகும் கொடியும்! (குட்டிக்கதை)
பவள சங்கரி பச்சைப்பசும் கொடி ஒன்று, சலசலத்து வீழும் சறுகுகளைப்பார்த்து, “வீழும்போதும் நீங்கள் ஏற்படுத்தும் சரசரவெனும் ஓசை எம் கூதிர்காலக் கனவுகள் அனைத்தையும் வீசியெறிந்துவிட்டது” என்றது எகத்தாளமாக. அதற்கு அந்த சறுகு, “எதன் மீதோ படர்ந்தவாறே காலம் கழிக்கும் சுயமற்ற உன்னால் இந்தப் பிரபஞ்சத்தின் இயற்கையை எப்படி இரசிக்க இயலும்” என்றது கோபமாக. குவிந்த சறுகுகள் அனைத்தும் பொடிப்பொடியாகி மண்ணில் கலந்து அதே மரத்தின் உரமாகி மீண்டும் வசந்தத்தில் பசுமையாய் துளிர்விட ... Full story

துப்புரவில் சாதனை!

பவள சங்கரி மைசூர் மாநகரத் துப்புரவுப் பணியாளர்கள் ஒன்று சேர்ந்து சாதனை படைத்து இன்று நாட்டிற்கே வழிகாட்டிகளாக ஆகியுள்ளனர்! இன்று இந்தியாவிலேயே மைசூர் மாநகரம் மிகவும் சுத்தமான நகராக மாறியுள்ளது மட்டுமல்லாமல் இதன் மூலமாக ஒவ்வொரு மாதமும் பல இலட்சங்களை வருமானமாகப் பெற்று வருகின்றனர். நகர் முழுவதையும் பல பிரிவுகளாகப் பிரித்து ஒவ்வொரு பிரிவிற்கும், ஒரு குழுவை அமைத்து, அவரவர்க்குரிய தேவையான இயந்திரங்களைக்கொண்டு சரியானத் திட்டமிடல், மறுசுழற்சி முறை, தொய்வில்லாத செயல்பாடுகள் மூலமாக சாத்தியமாக்கி சாதனைப் படைத்துள்ளார்கள்! தூய்மைப்பணியில் இரட்டை வருமானம் பார்க்கும் சாதுர்யமான நண்பர்களை உளமாரப் ... Full story

தமிழ் இசைக் கல்வெட்டு

தமிழ் இசைக் கல்வெட்டு
பவள சங்கரி கொங்கு நாட்டின் மிகச்சிறப்பான ஒரு விசயம் என்றால் அது உலகின் முதல் தமிழ் இசைக்கல்வெட்டு! ஈரோடு மாவட்டம், ஈரோடு - காங்கேயம் பாதையில் 12 கல் தொலைவில், அரச்சலூரில், அவல்பூந்துருத்திக்கு அருகில் அமைந்துள்ள பாண்டியர் குழி என்ற இடத்தில் உள்ள கற்குகையில் அமைந்துள்ளது அற்புதமான இந்த தமிழ் இசைக் ... Full story

அந்தாதி – தமிழின் இனிமை!

பவள சங்கரி முதல் வரியின் இறுதிச் சொல் அடுத்த வரியின் முதற் சொல்லாக வருவதுதான் அந்தாதி எனப்படும். மனப்பாடம் செய்வதற்கு எளிமையாக இருக்க வேண்டும் என்று கருதியே அந்தாதி இலக்கியம் தோன்றியுள்ளது. தமிழில் தோன்றிய முதல் அந்தாதி காரைக்கால் அம்மையார் பாடிய அற்புதத் திருவந்தாதி ஆகும். குறிப்பிடத்தக்க அந்தாதிகள் இதோ: (1) முதல் திருவந்தாதி - பொய்கை ஆழ்வார் (2) இரண்டாம் திருவந்தாதி - பூதத்தாழ்வார் (3) மூன்றாம் திருவந்தாதி ... Full story

உடுத்தும் உடையில் மட்டுமா உள்ளது நாகரீகம்?

பவள சங்கரி சுவாமி விவேகானந்தர் அமெரிக்க நாட்டின் நியூயார்க் நகர வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது மிக எளிமையான உடையில் இருந்தாராம். கையிலே ஒரு தடியும், மேனியில் ஒரு சால்வையை மட்டும் போர்த்தியபடி சென்றாராம். சுவாமியின் எதிரில் வந்த ஒரு ஆங்கிலேயப் பெண்மணி அவருடைய தோற்றத்தைக் கண்டு எள்ளி நகையாடியிள்ளார். சிறிதும் கோபம் கொள்ளாத சுவாமி விவேகானந்தர் புன்முறுவல் தவழும் முகத்துடன், “அம்மா எங்கள் இந்திய நாட்டில் ஒருவர் அணியும் உடைகளை வைத்து அவரை மதிப்பிடும் வழக்கம் இல்லை. நாகரீகம் என்பது மனிதனுடைய நன்னடத்தையில் ... Full story

சிட்டுவின் வலசை வரலாறு!

சிட்டுவின் வலசை வரலாறு!
பவள சங்கரி உல்லாசமாய் உலகளந்திருந்த சிட்டுக்குருவி வெள்ளோட்டமாய் மனுசனூரில் மதியிறக்கி தள்ளாட்டமாய் தத்தளிக்கும் கூட்டத்தினூடே பரவசமாய் கூர்ந்துநோக்கி வண்ணமயமான வஞ்சகமெனும் புதிதாயொரு வரைவிலக்கணமும் நெஞ்சகத்தை ஆட்கொள்ள அள்ளியெடுத்ததை பத்திரமாய் பையகப்படுத்திப் பறந்தது வகைவகையாய் பிறன்பொருள் களவாடலும் காழ்ப்பும், ... Full story

நவகண்டம் – அரிகண்டம்

நவகண்டம் - அரிகண்டம்
பவள சங்கரி ‘நவகண்டம்’ என்பதன் பொருள் நவம் - ஒன்பது, கண்டம் -துண்டங்கள். ஒரு வீரர் தம் உடலை 9 துண்டங்களாகத் தாமே வெட்டிக்கொண்டு உயிர் துறப்பது. ‘அரிகண்டம்’ என்றால் ஒரு வீரன் தம்மைத்தாமே வாளால் கழுத்தை அறுத்துக்கொண்டு உயிர் தியாகம் செய்வது. தலையை ஒரு கையால் பிடித்துக் கொண்டோ, தலையை ஓரிடத்தில் இழுத்துக் கட்டியோ மறுகையால் வாள் கொண்டு கழுத்தினை அறுத்து பலி கொடுப்பது. ... Full story

நீலிக்கண்ணீர் என்றால் என்ன?

பவள சங்கரி வணிகக் குலத்தைச் சேர்ந்த நீலி என்கிற பெண் தீய எண்ணம்கொண்ட தன் கணவனால் கொல்லப்படுகிறாள். பின் அவன் வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்ட பின்னர் அவள் பேயாகி, மனைவி போன்ற தோற்றத்துடனே வருகிறாள். கையில் ஒரு கரிக்கட்டையைக் குழந்தையாகக் கொண்டு மாய லீலைகள் செய்கிறாள். அப்பா என்று குழந்தையும் அன்பாக விளிக்கிறது. அவனோ அச்சத்தில் உடன் செல்ல மறுக்கிறான். நீலி கண்ணீர் மல்க நிற்கிறாள். ஊர் மக்கள் அவள் பேய் என்பதை அறியாமல் அவனை நீலியோடு சென்று குடும்பம் நடத்தவேண்டும் என்று ... Full story

இன்றைய பொருளாதார நிலையில் மாற்றம் வருமா?

பவள சங்கரி தலையங்கம் இந்திய பொருளாதார வளர்ச்சியில் தற்போது ஏற்பட்டுள்ள தேக்க நிலை தற்காலிகமானதுதான் என்று உலக வங்கித் தலைவர் ஜிம் யாங் கிம் கூறியுள்ளது சமாதானம் ஏற்படுத்துவதாக இருந்தாலும் சமீப காலாண்டுகளில் இந்திய பொருளாதாரத்தில் மந்த நிலை உருவாகியுள்ளது வருத்தத்திற்குரிய விசயமாகவே உள்ளது. இந்த தேக்க நிலைக்குக் காரணமாக உலக வங்கியின் தலைவர் ஜிம் யாங் கிம் கூறுவதும் தேசிய அளவில் புதிய வரி விதிப்பினால் ஏற்பட்ட குழப்பம்தான். ஜிஎஸ்டி இந்திய பொருளாதாரத்தில் சாதகமான விளைவுகளை உருவாக்கும் ... Full story

யாரடி நீ மோகினி

யாரடி நீ மோகினி
அணிந்துரை பவள சங்கரி சிறுகதைத் தொகுப்புகளை வாசித்து உள்வாங்கி உணர்வதும் ஓர் கலை என்றே சொல்லலாம். ஆம், ஒவ்வொரு கதையின் சூழலையும் அது எழுதப்பட்ட பின்னணியையும் அதன் காலகட்டங்களை உணரவும் தெளிவான புரிதலும், சிந்தனையும் தேவை. ஆழ்ந்த கருத்துகளை உடைய கதைகளாயின் அவை அதற்குத் தகுந்த அமைதியான மன நிலையில் வாசிக்கவேண்டிய ஒன்றாகும். அப்போதுதான் அதன் சாரத்தை உள்வாங்கவியலும். “நீ ... Full story

கொடுமணல் அகழாய்வில் சூதுபவளம்!

கொடுமணல் அகழாய்வில் சூதுபவளம்!
பவள சங்கரி ... Full story

சூரசங்காரம்!

சூரசங்காரம்!
பவள சங்கரி நேற்று பழனி மலை முருகன் தங்க மயில்வாகனனாக அற்புதக்காட்சி! முருகப்பெருமான் தாரகாசுரனை வதம் செய்ய 18 ஆண்டுகள் தேவைப்பட்டதா? அவ்வளவு பலம் வாய்ந்தவனா அவன்? இல்லை அவன் திருந்தி நல்வழிப்பட பொறுமையாகக் காத்திருந்து அவன் திருந்தி வாழ வாய்ப்பும் அருளுகிறார் . பொறுமை கடலினும் பெரிது என்பதையும் விளங்கச்செய்கிறார். ... Full story

Korea – Tamil cultural relationship

Korea - Tamil cultural relationship
Pavala Sankari We find it is timely to focus on India-Korea relationship from an economical, historical, cultural and linguistic point of views. By doing so we can bring these two economical powers of Asia closer for mutual prosperity and healthy relationships. The most dynamic and fastest growing economic region ... Full story

நாவாய்

நாவாய்
பவள சங்கரி உயிர் எல்லை நோக்கிய பயணம் சக பயணியர் வரலாம் போகலாம் புரிந்த மொழியில் புரியாத கதைபல பேசி பரந்த உலகில் இறக்கை கட்டிப் பறக்கும் பாவலர்கள் பண்பாளர், பாசப்பட்சிகள், நேசக்கனல்கள் என்றெவரும் பட்டுக்கம்பளத்தில் பாதம்பதிக்கலாம் பகடைகள், பச்சோந்திகள், பலிகெடாக்கள் என்றெவரும் முகநட்பொடு பயணிக்கலாம் படகில் சென்றுசேரும் இலக்கு எவர்க்கும் ஒன்றுதான் நிதானமும் பொறுமையும் நிறைவாய் இருந்தால் எதிர்நீச்சல் ... Full story

மரபணுச்சொந்தம் என்று நம்பப்படும் இந்திய – கொரிய உறவு வெறும் தொன்மப்புனைவா? (2)

மரபணுச்சொந்தம் என்று நம்பப்படும் இந்திய - கொரிய உறவு வெறும் தொன்மப்புனைவா? (2)
பவள சங்கரி மேற்கத்திய உலகின் பெரும்பாலான மொழிகளுக்கு இலத்தீன் மொழியே வேராக இருந்திருக்கின்றன. ஆசியர்களின் பெயர்களை ஆங்கில மொழியாக்கம் செய்வது எளிதான காரியமல்ல. தெற்காசிய மொழிகள், குறிப்பாக சப்பான் மற்றும் கொரிய மொழிகள் பெரும்பாலும் சீனாவின் விளக்கப்பட மற்றும் வரைகலை அமைப்பிலான வார்த்தைகளிலிருந்தே எடுத்தாளப்பட்டுள்ளது. சீன மொழியின் வடிவங்கள் வடகிழக்கு நாடுகளின் மொழிகளோடு (சீனா, ஜப்பான், கொரியா), அந்தந்த தேசிய மொழிகளின் வட்டார வழக்குகளின் அடிப்படையில் பேச்சு மொழியில் ஏற்படும் சில மாற்றங்கள் தவிர பெருமளவில் சீன மொழியுடன் ஒத்துப்போகிறது என்கிறார் வோன் மோ. ஒரு சீன ... Full story
Page 1 of 2512345...1020...Last »
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.