Author Archive

Page 1 of 2212345...1020...Last »

இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . (264)

சக்தி சக்திதாசன்   அன்பினியவர்களே   அன்பான வணக்கங்களுடன் இந்த வார மடலிலே உங்களுடன் உறவாடுவதில் மகிழ்வடைகிறேன். காலம் யாருக்கும் காத்திராமல் அவசரமாக தனது பயணத்தை மேற்கொண்டு கொண்டிருக்கிறது. இக்காலத்தின் ஓட்டம் என்றும் ஒரே வேகத்தில் தான் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் வித்தியாசமான காலக் கண்ணாடிகளுக்குள்ளாகப் பார்க்கும் போது எதோ சமீபகாலத்தில் காலம் மிகவும் விரைவாகக் கடந்து போய்விடுகிறது போலத் தோற்றமளிக்கிறது. இது ஒருவருக்கு மட்டுமல்ல, பலருக்கும் இதே உணர்வுதான் தோன்றுகிறது. எந்தவொருவருடனும் உரையாடும் போதும் "அப்பப்பா, நாட்கள் எத்தனை விரைவாக ஓடுகின்றன" என்பதுவே தவறாமல் இடம்பெறுகின்ற ஒரு உரையாடல். நூற்றாண்டுகள் 16,17,18,19,20,21 என்று நூற்றாண்டுகள் ஒவ்வொன்றாய் கடந்து ... Full story

இங்கிலாந்திலிருந்து ஒரு மடல். . . ( 263 )

அன்பினியவர்களே! அன்பான வணக்கங்கள். இயற்கையன்னை ஒருவாரகாலம் , ஒருமுறை சிலிர்த்து இங்கிலாந்து நாட்டினை தன்னுள் சிறையாக்கி வைத்திருந்து வெளிவந்த வேளையிது. கருமேகங்கள் கூடி வெள்ளைப் பனிமழை பொழிந்து இங்கிலாந்து நகரத்து தெருக்களையெல்லாம் பனிப்பாய் கொண்டு மூடியிருந்தது.சைபீரியாவிலிருந்து அடித்த குளிர்காற்று "கிழக்கிலிருந்து வந்த பூதம் (Beast from the east)” எனும் பெயருடன் இங்கிலாந்து நாட்டினைத் தன் கைப்பிடிக்குள் அமுக்கிப் பிடித்திருந்தது. - 5 டிகிரி செல்சியஸ் எனும் சூழல் வெப்பநிலையை வெப்பமானிகள் காட்டினாலும் இங்கிலாந்தைக் கவ்விப்பிடித்திருந்த குளிர்காற்றின் வேகம் - 12 டிகிரி செல்சியஸ் எனும் வகையிலான தாக்கத்தைக் கொடுத்திருந்தது. இப்போதுதான் ஒருவாறு அப்பிடிக்குள் இருந்து தன்னை மீட்டெடுத்துக் கொண்டுள்ளது. நாமும் மீண்டுள்ளோம். இந்நிலையில் ... Full story

இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . ( 262 )

அன்பினியவர்களே! அன்பின் இனிய வணக்கங்கள். இதோ அடுத்த மடலுடன் உங்களுடன் உறவாட முனைகிறேன். நாம் விரும்பியோ விரும்பாமலோ எமது வாழ்க்கை ஓடிக் கொண்டேயிருக்கிறது. ஓடும் வேகத்தை எமது வசதிக்கு ஏற்ப குறைக்கவோ அன்றி கூட்டவோ எம்மால் முடிகிறதா? தானே தன்வழிக்கு ஓடிக் கொண்டிருக்கும் வாழ்வினை எமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது போன்ற ஒரு பிரமையில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஓடிக்கொண்டிருக்கும் ஆற்றுக்கு எதிர்த்திசையில் நடந்து அடுத்த கரைக்குப் போவது மிகவும் சிரமமானது அதேபோல ஆறு ஓடும் திசையிலே அதன் போக்கிலே போய் அடுத்தகரைக்குப் போவது இலகுவானதும் எம்மால் அனுபவித்து பயணிக்கக் கூடியதுமாகும். அதுபோல ஓடிக் கொண்டிருக்கும் வாழ்க்கையின் ... Full story

இங்கிலாந்திலிருந்து ஒரு மடல். . . (261)

அன்பினியவர்களே! அன்பான வணக்கங்கள். இதோ அடுத்தொரு வாரம். அடுத்தொரு மடல். அன்புடை வல்லமை வாசகர் மத்தியில் வலம் வரும் வாய்ப்பு. சில வாரங்கள் காணாமல் போயிருந்த என் மடல் மீண்டும் உங்கள் முன்னே துளிர்த்து விழுகிறது. எனது வருடாந்த சென்னை விஜயத்தை முடித்துக் கொண்டு கடந்த சனிக்கிழமையே திரும்பவும் லண்டனை வந்தடைந்ததுவே தாமதத்துக்குக் காரணம். மாசிப்பனியோடு கலந்த ஒரு மெல்லிய சூட்டினை அனுபவித்து விட்டு உறைநிலையைத் தாண்டுவதற்கு போராடும் லண்டன் குளிருக்குள் மீண்டும் வந்து சிக்கிக்கொண்ட வேளை.... Full story

குடியரசு கொண்டாடும் பாரத மாதாவுக்கு வாழ்த்துக்கள்

  பறக்கின்றது ! தேசிய சுதந்திரக் கொடி பறக்கின்றது ! சுதந்திரமான தென்றலதன் சுந்தரமான தாலாட்டில் தன்னை மறந்தின்று சோதரரின் மேன்மை பரப்பிடும் இந்தியத் தேசியக்கொடி பறக்கின்றது. அந்நிய ஆதிக்கத்திலிருந்து அன்னை பாரதமாதா முற்றாக தன்னை விடுவித்த பெருமை சாற்றுமிந்த குடியரசுத் தினத்தில் கொடி பறக்கின்றது. முன்னை எம் பாட்டன் முத்தமிழ்க் கவிஞன் முப்பெரும் புலவன் பாரதியின் முழுமுதற் கனவு மெய்ப்படவே பாரத ... Full story

இங்கிலாந்திலிருந்து ஒரு மடல். . .(260)

இங்கிலாந்திலிருந்து ஒரு மடல். . .(260)
அன்பினியவர்களே! அன்பான வணக்கங்கள். சுமார் இரண்டு வாரங்களின் பின்னால் மடல் மூலம் உங்களுடன் மனம் திறக்கிறேன். இரண்டு வாரங்கள் இரண்டே நாட்கள்போல ஓடிவிட்டன. ஆனால் இந்த இரண்டு வாரங்கள் தனக்குள் அடக்கிக் கொண்ட விடயங்களோ பற்பல. சில இனிமையானவை, சில கனமானவை, சில கசப்பானவை, சில மறக்கப்பட வேண்டியவை என எத்தனையோ ரகமான விடயங்களைத் தனக்குள் தாங்கிக் கொண்டே காலம் நடைபோடுகிறது. இந்த இரண்டு வாரங்களில் என் நிகழ்வுகளை நான் எடுத்துப் பார்க்கிறேன். இதிலே விந்தை என்னவென்றால் "இங்கிலாந்திருந்து ஒரு மடல் " எனும் இந்தப் பத்தி இவ்வாரம் முத்தமிழின் பிறப்பிடமாம், தமிழகத்தின் தலைநகரான சென்னையிலிருந்து வரையப்படுவதுதான். ஆம் நான் ... Full story

இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…(259)

அன்பினியவர்களே! அன்பான வணக்கங்கள். புத்தம்புது ஆண்டில் கிடைத்த வெற்றுத்தாளில் உங்களுடன் எனது மனக்கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளும் மடலை வரையும் சந்தர்ப்பம் கிட்டியது ஓர் ஆனந்த அனுபவமே! எதைப் பேசுவது? எதை கிரகித்துக் கொள்வது? எதைப் பகிர்ந்துகொள்வது என்பது இன்றைய சமூக ஊடகவியலின் முன்னேற்றமா? இன்றி ஒரு தடைக்கல்லா? என்பது நிச்சயம் தர்க்கிக்கப்பட வேண்டிய ஒரு விடயமே! அரசியல், வியாபாரம் இவையிரண்டுமே சமூகத்தின் இருவேறு தூண்கள் எனும் நிலை பல சகாப்தங்களாக இருந்து வந்துள்ளது. அரசியலும், அரசியல்வாதிகளும் வகுக்கும் கொள்கைகள் ஒவ்வொரு நாட்டினதும் வியாபாரக் கூற்றைப் பாதிக்காமல் அதை வளர்ப்பதன் மூலம் சமூகத்தின் வாழ்வாதாரத்தைக் கூட்டும் வகையில் செயற்பட வேண்டும் என்பது ... Full story

2017 ஒரு பார்வை!

-சக்தி சக்திதாசன் வருடமொன்று கடந்து செல்லுது. வாழ்க்கை தானே விரைந்து போகுது. வருவது வருவதும் செல்வது செல்வதும் யாரின் அனுமதி கேட்காமலும் தானே இயங்கிக் கொண்டு போகிறது. ஒவ்வொரு வருடமும் ஒவ்வொருவருக்கும் வாழ்வில் பல நிகழ்வுகளுக்குக் காரணமாகின்றன. அது சிலரின் வாழ்வில் மகிழ்ச்சிகரமானதாகவும், சிலரின் வாழ்வில் துயரமிக்கதாகவும் அமைந்து விடுகிறது. அவ்வகையில் கடந்து செல்லும் இந்த 2017 எதை எதை விட்டுச் செல்கிறது என்பதை இந்தச் சாமான்யனின் பார்வையில் மீட்டுப் பார்க்கிறேன்.எனது மீள்பார்வை கொஞ்சம் சத்தமாக உங்கள் முன்றிலிலும் விழுகிறது. முதலாவதாகச் சர்வதேச அரங்கை எடுத்துப் பார்க்கிறேன். 2017ஆம் ஆண்டின் ஆரம்பம் அனைத்து உள்ளங்களையும் வித்தியாசமான ... Full story

இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…(258)

அன்பினியவர்களே! அன்பினிய வணக்கங்கள். 2017ஆம் ஆண்டின் இறுதி மடலில் உங்களிடையே வந்து விழுகின்றேன். ஆம், அடுத்த எனது மடல் வரும்போது நீங்களனைவரும் 2018ஆம் ஆண்டின் மடியில் தவழ்ந்து கொண்டிருப்பீர்கள். நாட்கள் வாரங்களாகி, வாரங்கள் மாதங்களாகி இதோ இவ்வருடத்தின் முடிவில் வந்து நிற்கிறோம். தைவ்வருடத்தின் முன்றிலில் நாம் ஒவ்வொருவரும் எத்தனையோ விதமான வித்தியாசமான அனுபவங்களினூடாக ஊர்ந்து வந்திருக்கிறோம். அடுத்த ஆண்டினுள் நாம் நுழையும்போது எமது அகவையில் மட்டுமல்ல எமது அனுபவத்திலும் நாம் முதிர்வடைந்தவர்களாகின்றோம். கடந்து கொண்டு முடிவில் வந்துநிற்கும் இந்த ஆண்டில் நாம் பெற்றவை பல. இழந்தவை பல. பொருளையிழந்திருக்கிறோம், உறவுகளை இழந்திருக்கிறோம், நட்புகளை இழந்திருக்கிறோம் அதேபோல உறவுகளைப் பெற்றிருக்கிறோம், பொருளீட்டி இருக்கிறோம். ஆம் வரவும், செலவும் ... Full story

இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…(257)

அன்பினியவர்களே! அன்பான வணக்கங்கள். போனவார மடலில் தொடங்கிய எனது பயணத் தொடர்ச்சியோடு இவ்வார மடலில் உங்களுடன் இணைவதில் மகிழ்கிறேன். ஆமாம் சென்ற வார மடலில் நாம் எமது "கப்பல் சுற்றுலாவில்" பங்கேற்பதற்காக "மயாமி" கப்பற் தளத்தை வந்தடைந்தோம் என்று குறிப்பிட்டிருந்தேன். இந்தக் கப்பல் பயணம் இருக்கிறதே அதுவும் ஒரு விமானப் பயணம் போன்றதே! நாம் எமது பிரயாணத்தை இங்கிலாந்தில் இருந்து ஆரம்பிப்பதன் முன்னரே இணையவழியாக அக்கப்பற் பயணத்துக்கான "போர்டிங் பாஸ்"இனைப் பெற்றுக்கொண்டதோடு மட்டுமில்லாமல் எமது பயணப் பொதிகளில் இடுவதற்கான பெயர் ஆகிய விபரங்களடங்கிய பட்டியலையும் பெற்றுக் கொண்டோம். அங்கு வண்டியில் ... Full story

இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . ( 256 )

சக்தி சக்திதாசன் அன்பினியவர்களே ! அன்பான வணக்கங்கள். சிலவார இடைவெளிக்குப் பின்னால் இம்மடலுடன் உங்கள் முன்னால் வருவதில் பெருமகிழ்வடைகிறேன். வருடம் முழுவதும் வாழ்க்கை எனும் சிக்கல் மிகுந்த புதிருக்கான விடைதேடி ஓடிக்களைத்ததினால் சிறிது இடைவெளி வேண்டி கொஞ்சம் ஓய்வெடுக்க எண்ணியதின் விளைவே எனது சிறிய மறைவுக்குக் காரணம். மிகவும் மகிழ்வான , ஆனந்தமான, அலாதியான ஒரு விடுமுறை என்றுகூடச் சொல்லலாம். நாங்கள் குடும்ப வாழ்வில் இணைந்து இப்போது சுமார் 36 வருடங்கள் ஓடி விட்டன. ஆரம்பகாலத்தில் வாழ்வினைத் தூக்கி நிறுத்துவதற்கான முயற்சிகளைத் தவிர ... Full story

என் இனிய பாரதியே !

  என் இனிய பாரதியே ! தமிழ்த் தாயின் தங்கப் புதல்வனே ! தமிழ்த் தரணி போற்றும் பாவலனே ! தமிழர்தம் மனமுறைந்த தமிழ்க் காவலனே ! நிந்தன்     பிறப்பால் எம் ... Full story

இங்கிலாந்திலிருந்து ஒரு மடல். . . (255)

இங்கிலாந்திலிருந்து ஒரு மடல். . . (255)
அன்பினியவர்களே! அன்பான வணக்கங்கள். மற்றொரு வாரம் அதிவிரைவாக முன்னே வந்து கண்சிமிட்டிக் கொண்டிருக்கிறது. மனத்தில் ஓடும் எண்ணங்கள் மடல் வாயிலாக உங்கள் முன்னே விரல் வழி வடிந்து உதிக்கிறது. ஒரு நாட்டிலிருந்து வேறோர் நாட்டிற்குப் புலம்பெயர்வது என்பது ஏதோ இலகுவான காரியமன்று. இத்தகைய புலம்பெயர்வுகளின் காரணங்கள் பலவகைப்படுவதுண்டு. நாட்டின் போர்ச்சூழல்களில் இருந்து உயிர் தப்பிச் செல்வோர்கள் ஒரு வகையினர். கல்விக்காகப் புலம் பெயர்வோர்கள் ஒரு வகையினர். வேலைவாய்ப்புத் தேடி புலம்பெயர்வோர்கள் மற்றொரு ரகம் என ப்லவகையான் காரணங்களைக் காணலாம்.ஆனால் புலம் பெயர்ந்தபின் தாம் புகுந்த நாட்டில் தமது வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்வதில் உள்ள சிரமங்களின் உண்மையான் ... Full story

இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் (254)

சக்தி சக்திதாசன் அன்பினியவர்களே ! அன்பான வணக்கங்களுடன் இந்தவார மடலுடன் உங்கள் மத்தியில் மீண்டும் மனம் திறக்கிறேன். எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்பது ஜனநாயகத்தின் அடிப்படைக் கோட்பாடு. அதற்காக நாட்டிலிருக்கும் ஒவ்வொரு குடிமகனும் நாந்தானே இந்நாட்டு மன்னன் என்று கூறி தன் மனம் போன போக்கிலே தனக்குப் பிடித்தமான விதிகளை இயற்றி வாழ்ந்து விட்டுப் போக முடிகிறதா ? ஒவ்வொரு குடிமகனின் கைகளிலும் இருக்கும் வாக்குச்சீட்டு ஒன்றே அவனுக்கு அந்நாட்டு மன்னன் எனும் அந்தஸ்தை வழங்குகிறது என்பதே ... Full story

இங்கிலாந்திலிருந்து ஒரு மடல். . . ( 253 )

அன்பினியவர்களே! அன்பான வணக்கங்கள். காலம் எனும் படகு யாருக்கும் காத்திராமல் தன்னுடைய திசையிலே மிகவும் அவசர கதியுடன் பயணித்துக் கொண்டிருக்கிறது. இக்கால ஓட்டத்தினைத் தமக்குச் சாதகமாக்கிக் கொண்டு வாழ்வினில் வெற்றியடைந்தோர் பலர், கால ஓட்டத்தின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் திக்குமுக்காடிச் சிக்கித் தவிப்போர் பலர் எனப் பலவிதமான வாழ்க்கைச் சிக்கல்களைத் தோற்றுவிப்பதும், அவிழ்ப்பதுமாக இக்கால ஓட்டப் பயணத்தின் விளைவுகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. ஆண், பெண் என்று வித்தியாசம் காட்டாது அவர்களுக்கான பாதைகள் வகுக்கப் படுகிறது. பெண்ணின்மேல் ஆண் அதிகாரம் செய்வதென்பது அனைத்துக் கலாசாரங்களிலும் நிகழ்ந்து கொண்டுதானிருக்கிறது. ஆணுக்குப் பெண் சளைத்தவளல்ல என்பதைக் ... Full story
Page 1 of 2212345...1020...Last »
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.