Author Archive

வினாடிகளில் வாழ்க்கை

வினாடிகளில் வாழ்க்கை
பிரகாஷ் சுகுமாரன் "என்ன சார் சாப்பிடறீங்க ? ” எனக் கேட்ட சர்வரிடம், "எண்ணெய்  அதிகமில்லாம ரெண்டு சப்பாத்தி,  அப்புறமா ஒரு   பிளாக் டீ” எதிரில் அமர்ந்து  சாப்பிட்டுக் கொண்டிருந்த வயதான தம்பதியினர் மீதிருந்து கண்களை எடுக்காமல் அவன் பதிலளித்தான். நெத்தி  நிறையப் பொட்டும்,  வாய் நிறையச் சிரிப்புமாக  இருந்த அந்தப் பெண்மணியும்,  நரைத்த கேசத்துடன், குர்தாவை மீறி வெளியே தெரிந்த வயிறுடன் இருந்த பெரியவரும்  சுற்றி நடப்பவற்றை பற்றிக் கண்டு கொள்ளாமல் தங்களுக்குள் மும்முரமாக பேசிக்  கொண்டிருந்தனர்.இந்த வயதிலும் அவர்கள் ஒருவருடன் ஒருவர் அப்படி  அன்னியோன்னியமாகப் பேசிக் கொண்டிருந்தது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.திருமணமாகி முழுதாக ஒரு ஆண்டு கூட முடியாத நிலையில்  தானும் தன் மனைவியும் இப்படி ஒரு முறை  கூடப் ... Full story

எதுவும் இல்லாமல்

எதுவும் இல்லாமல்
பிரகாஷ் சுகுமாரன் "உனக்கென்ன பைத்தியமா ??" கேள்வி கேட்டவர்களை நோக்கி அவன் சிரித்தான். கடந்த சில ஆண்டுகளாக அவனைப் பார்த்து வழக்கமாகப் பலர் கேட்கும் அதே கேள்விதான். எப்போதும் அந்தக் கேள்விக்கு அவனுடைய பதில் மௌனமும் சிரிப்பும்தான். அவனைச் சுற்றி வளைத்திருந்த கூட்டத்தில் அத்தனை பேரின் முகத்திலும் கோபம் கொப்பளித்தது. ஓரளவு அவனைப் பற்றி தெரிந்திருந்தாலும் முழுமையாகத் தெரியாததால் என்ன செய்வதென்று புரியாமல் அவர்கள் விழித்தனர். ஊரில் இதுவரை யாரும் செய்யாத விசித்திரச் செயலில் அவன் ஈடுபட்டிருந்தான். ... Full story

மழலை மொழி

மழலை மொழி
பிரகாஷ் சுகுமாரன் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு சிறுவர்கள் போட்ட கூச்சல் மிகவும் பிடித்தது. சண்டையிடுவதும் மீண்டும் விளையாடுவதுமாக இருந்த பிள்ளைகளை வீட்டின் வாசற்படியில் அமர்ந்திருந்த அம்மாக்கள் தங்களுக்குள் பேசியபடியே  கண்காணித்தனர். பெரும் சப்தங்களை எழுப்பியபடி விரைந்து கொண்டிருந்த வாகனங்களின் குறுக்கே ஓடி வந்த சிறுவர்களை வாகன ஓட்டிகள் திட்டுவது கூட பிள்ளைகளுக்கு மகிழ்ச்சியை அளித்ததால் சப்தம் அதிகரித்தபடியே இருந்தது. விளையாடிய சிறுவர்களுடன் சேராமல் தனியாக அமர்ந்திருந்த அவன் தெருமுனையை அடிக்கடி ... Full story

வார்த்தைகள் பொறுப்பல்ல

வார்த்தைகள் பொறுப்பல்ல
பிரகாஷ் சுகுமாரன் பயணத்தின் ஒரு பகுதியாக அந்த ஊரில் தங்கி வழக்கம் போல் வீடு வீடாகச் சென்று பிச்சை பெற்றுக் கொண்டிருந்த அவருக்கு சிலர் உணவளித்தும் சிலர் இல்லை எனச் சொல்லித் திருப்பியும் அனுப்பினர். ஒரு வீட்டில் இருந்த பெண்மணி மட்டும் அவரை நோக்கி ”மாடு போல் வளர்ந்து இருக்கிறாய்,  ஆனால் உழைத்துச் சாப்பிடாமல் பிச்சையெடுக்கிறாயே, கை, கால்கள் நன்றாகத்தானே உள்ளது,  அறிவு கெட்ட சோம்பேறி நாயே, மறுபடி வராதே ” எனக் கடுமையான வார்த்தைகளால் திட்டி அனுப்பினாள். அந்த ஊரில் அவர் தங்கியிருந்த நாட்களில் ... Full story

கொல் அவனை

கொல் அவனை
எஸ்.பிரகாஷ் “சார்  ஒரு தம் அடிச்சுக்கட்டுமா?“ கேட்டதும் எதிரில்  அமர்ந்திருந்தவன் பாக்கெட்டிலிருந்த சிகெரெட்டை எடுத்துக் கொடுத்தான். ஆழமாக புகையை இழுத்தவன் சப்தமாகச் சிரித்ததன் காரணம் புரியாமல் அவன் விழித்தான்.  “அப்போ 13 வயசு இருக்கும் சார் எனக்கு, என்னோட ஸ்கூல்ல படிச்ச பொண்ண ஒரு வாத்தியாரு கை வெச்சுட்டாரு. பாவம் அவருக்கு என்ன பிரச்சினையோ தெரியல. ஆனா அந்தப் பொண்ணு அழுதுனே வந்தப்ப எனக்கு தாங்கல. தெரிஞ்ச பொண்ணு வேற. என்ன பன்றது கோவத்த ... Full story
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.