Author Archive

Page 1 of 212

திருவாடானை அரசு கலைக்கல்லூரியில் நடத்தப்படும் பயிலரங்க அழைப்பு

திருவாடானை அரசு கலைக்கல்லூரியில் நடத்தப்படும் பயிலரங்க அழைப்பு
அன்புடையீர் வணக்கம் திருவாடானை அரசு கலைக் கல்லூரியல் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் நிதி நல்கை வழி செம்மொழி இலக்கியங்களில் பல்துறை அறிவியல் சிந்தனைகள் என்ற தலைப்பில் பயிலரங்கம் ஒன்றை ... Full story

இணையமும் நவீன இலக்கியப் போக்குகளும்

-முனைவர் மு.பழனியப்பன்      தமிழ் இணைய உலகு பரந்துபட்டது. அதன் விரிவு என்பது ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஆசியா, ஐரோப்பா ஆகிய கண்டங்களை உள்ளடக்கி வளர்ந்துவருகிறது.       சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற பகுதிகளின் தமிழ்வளர்ச்சியை வெளிப்படுத்தும் ஒன்றிணைக்கும் ஊடகம் இணையம் மட்டும்தான். இவ்வகையில் அயல்நாடுகளின் இணையத் தமிழ் வளர்ச்சி ஒரு புறமும், தாயகமான தமிழ்நாட்டின் இணைய வளர்ச்சி ஒருபுறமும்  வளர்ந்து வந்தாலும் இவையிரண்டும் ஒன்றுக்கொன்று சார்ந்தும், இணைந்தும் இயங்கும் நெருக்கத்தை இணையம்சார் போட்டிகள், இணைய இதழ்கள் அமைத்துத் தந்துவிடுகின்றன. இதன் ... Full story

கலியன் குரல் காட்டும் வைணவ முப்பொருள்களுள் ஒன்றான இதம்

முனைவர் மு.பழனியப்பன், தமிழ்த்துறைத் தலைவர், அரசு கலை , அறிவியல் கல்லூரி, திருவாடானை.      வைணவத் தத்துவங்களில் ஆழங்கால்பட்டு, அதனில் கரைந்து, அதனில் தோய்ந்து அத்தத்துவங்களை எளிமையான முறையில் எடுத்துரைத்த தமிழறிஞர்களுள் குறிக்கத்தக்கவர் பேராசிரியர் ந. சுப்புரெட்டியார் ஆவார். காரைக்குடிக்குக் கம்பன் அடிப்பொடி ச. கணேசன் அவர்களால் வரவழைக்கப் பெற்றவர். காரைக்குடி கல்வியியல் கல்லூரியில் ஏற்பட்ட தமிழ்ப்பேராசிரியர் பணியிடத்திற்கு உரியவராக பேராசிரியர் ந. சுப்புரெட்டியார் அமைந்தார். சிலகாலம் இங்குப் பணிபுரிந்த பேராசிரியர் இதன்பின்னர் திருப்பதி திருவேங்கடவன் ... Full story

ஆண்டாளும் வடநாட்டு வைணவத்தலங்களும்

ஆண்டாளும் வடநாட்டு வைணவத்தலங்களும்
முனைவர் மு.பழனியப்பன் தமிழ்த்துறைத்தலைவர் அரசு கலைமற்றும் அறிவியல் கல்லூரி திருவாடானை  பக்தி இலக்கியகாலத் தமிழகத்தில் சைவசமயம், வைணவ சமயம் ஆகிய இரண்டும் இலக்கிய இயக்கமாகவும் சமுதாய நல இயக்கமாகவும் செயல்பட்டுவந்தன என்பது எல்லாரும் அறிந்தது. இதே காலத்தில் வடநாட்டில் வைணவ சைவ சமய வளர்ச்சிகள் எப்படி இருந்தன என்ற கேள்விக்குத் தமிழ் இலக்கியங்களில் பதில் ... Full story

கம்பன் கழகம், காரைக்குடி மே மாதக் கூடடம் 2016

கம்பன் கழகம், காரைக்குடி மே மாதக் கூடடம் 2016
கம்பன் கழகம், காரைக்குடி மே மாதக் கூடடம் 2016 கம்பன் கழகம், காரைக்குடி 67 ஆம் கூட்டம் அன்புடையீர் வணக்கம் கம்பன் புகழ் பாடிக் கன்னித்தமிழ் வளர்க்கும் மே மாதக் கூடடம் 7.5.2016 ஆம் தேதி சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு கல்லுக்கட்டி மேற்கு கிருஷ்ணா திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. நிகழ்நிரல் இறைவணக்கம் - செல்வி எம். கவிதா வரவேற்புரை- திரு. கம்பன் அடிசூடி கம்பராமாயணத்தில் இயற்கை- பொழிவு. திரு. தி.கி. வேதராஜா அந்தமானில் நடைபெற்ற கம்பராமாயண ... Full story

கம்பன் கழகம் அந்தமானில் நடத்தும் கருத்தரங்க அழைப்பு

கம்பன் கழகம் அந்தமானில் நடத்தும் கருத்தரங்க அழைப்பு
அந்தமானில் நடைபெற உள்ள கம்பனில் இயற்கை கருத்தரங்க அழைப்பு கம்பன் புகழ் பாடி கன்னித்தமிழ் வளர்க்கும் காரைக்குடி கம்பன் கழகத்தின் சார்பில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி அந்தமான் நிக்கோபார் தீவுகளின் பெருநகரமான போர்ட்பிளேயரில் கம்பராமாயணமூன்றாம் உலகத்தமிழ்க் கருத்தரங்க நிகழ உள்ளது. தமிழறிஞர்கள் பலரும் கலந்து கொள்கின்றனர். எண்பதிற்கும் மேற்பட்ட கருத்தரங்கக் கட்டுரைகள் அக்கருத்தரங்கில் வாசிக்கப்பெற உள்ளன. அவற்றின் அச்சுவடிவ ஆய்வுக்கோவையும் அன்றே வெளியிடப்பெறுகிறது. கம்பன் கண்ட இயற்கை நலத்தை வெளிப்படுத்துவதை மையமாகக் கொண்டு இக்கருத்தரங்கம் நிகழ்கிறது. ஒருநாள் முழுநிகழ்வாக நடக்க உள்ள ... Full story

அடியார் பெருமை

அடியார் பெருமை
-- முனைவர் மு.பழனியப்பன்.       அடியார் பெருமை அளவிடற்கரியது. சிவனடியார்களின் கழுத்தினில் உருத்திராட்சமும், உடலில் திருநீறும், உள்ளத்தில் சிவமந்திரமும் நீங்காது நிறைந்திருக்கும். இதன் காரணமாக உடலாலும், உள்ளத்தாலும் புண்ணியர்களாகச் சிவனடியார்கள் விளங்குகின்றனர். கூடும் அன்பினில் கும்பிடுதலே சிவனடியார்களின் இயல்பு. அவர்கள் செய்வதனைத்தும் சிவத்தொண்டுகள். அவர்கள் நடப்பதெல்லாம் சிவபூமி. அவர்கள் ஊர்தோறும் சென்றுச் சிவனை வணங்கும் கடப்பாடு உடையவர்கள். அவர்கள் தங்க சிற்சில ஊர்களில் மடங்கள் இருக்கலாம். பல ஊர்களில் இவ்வசதி இருப்பதில்லை. இச்சூழலில் ஊர்வலம் வரும் சிவனடியார்களைப் பாதுகாக்க ... Full story

இரா. தமிழரசி கவிதைகளில் மரபழுத்தங்களும், படைப்புச் சிறுவெளியும்

இரா. தமிழரசி கவிதைகளில் மரபழுத்தங்களும், படைப்புச் சிறுவெளியும்
-- முனைர் மு.பழனியப்பன். பழைய நடைமுறைகள் மரபுகள் ஆகின்றன. அந்நடைமுறைகளை அப்படியே சில நேரங்களில் ஏற்க முடிகிறது. பல நேரங்களில் அவற்றில் இருந்து விலக எண்ணம் தோன்றுகிறது. விலகிச் செயல்படவும் வேண்டியிருக்கிறது. பழைய நடைமுறைகளை மீள் பார்வை செய்து ஏற்கவும் மறுக்கவும் ஆன காலம் இப்போது அரங்கேறிவருகிறது. இந்நிலை மக்கள் சமுதாயத்தில் இலக்கியத்தில் ஊடகங்களில் தற்போது வேகமாக பரவிவருகின்றது. காலத்தின் கட்டாயமும், நாகரீகத்தின் வளர்ச்சியும், செயல்களில் அவசரமும், பழைய மரபுகளில் பற்றின்மையும் இத்தகைய நிலைக்குக் காரணங்களாகின்றன. குறிப்பாக பெண்கள் மரபு நிலையில் பெரிதும் ... Full story

சைவத்தின் தொன்மை

சைவத்தின் தொன்மை
-- முனைவர் மு.பழனியப்பன். சமயம் என்பது ஓர் அமைப்பு, நிறுவனம். இது அமைப்பாகவும் நிறுவனமாகவும் வளர்வதற்கு முன்னால் தனிமனிதனின் விழைவாக இருந்திருக்க வேண்டும். தனிமனித விழைவு விருப்பம் அவன் குழுவால் ஏற்கப்படும்போது அது சற்று விரிகிறது. குழுவிலிருந்து மற்ற குழுக்களுக்கு அது விரிய இன்னும் பரவலாகிறது. நாடுகளுக்கு விரிய உலக அளவில் விரிகிறது. தனிமனித விழைவில் தொடங்கிய இந்தப் பயணம் உலகை அடைய எத்தனை நூற்றாண்டுகள் கடந்திருக்க வேண்டும். இந்நூற்றாண்டுகளில் ஏற்ற இறக்கங்கள், அழிவுகள், பேரழிவுகள் போன்ற பலவற்றைச் சந்தித்திருக்க வேண்டும். இன்றைக்குப் பல நாடுகளில் ... Full story

முன்பு பின்பு இன்றி: கம்பரின் எதிர்காலவியல் சிந்தனைகள்

முன்பு பின்பு இன்றி: கம்பரின் எதிர்காலவியல் சிந்தனைகள்
– முனைவர் மு.பழனியப்பன். முன்பு பின்பு இன்றி (கம்பரின் எதிர்காலவியல் சிந்தனைகள்) முக்காலங்களில் சிறப்படையது எதிர்காலம். இன்றைய காலத்தில் நின்றுகொண்டு, நேற்றைய காலங்களில் நடந்த தவறுகளைத் திருத்திக்கொண்டு நாளைய காலத்தை வளமாக அமைத்துக்கொள்ள வாய்ப்பிருப்பதால் எதிர்காலம் நம்பிக்கைக்குரிய காலமாக விளங்குகின்றது. எதிர்காலத்தில் நிகழ உள்ள, நிகழவேண்டிய நடப்புகளை இன்றைக்கு அல்லது நேற்றைக்குச் சொல்லுவது என்பது எதிர்காலவியல் ஆகின்றது. வரலாறு (... Full story

கவிஞர் கே. ரவியின் கவிதைக் கோட்பாடு

கவிஞர் கே. ரவியின் கவிதைக் கோட்பாடு
-- முனைவர் மு.பழனியப்பன். கவிஞர் கே. ரவியின் கவிதைக் கோட்பாடு கவிஞன், திறனாய்வாளன் ஆகிய இருவரும் இரு துருவ எல்லைகள் என்றாலும் இந்த எல்லைகளின் இணைப்பு படைப்பாகின்றது. கவிதை மற்ற வடிவங்கைளை விட எளிமையானது. எதையும் கவிதையில் சொல்லவே எந்தப் படைப்பாளனும் முதலில் விழைகிறான். பிரபல கதை எழுத்தாளனுக்கும் கவிதை என்பதே முதலில் அறிமுகமாகிறது. ஏனென்றால் தமிழுக்கும் கவிதைக்கு நீண்ட நாள் உறவு, பழக்கம், கொடுக்கல் வாங்கல் இருந்துவருகிறது, இன்னும் அதன் தொடர்பு வளர்ந்து வருகிறது என்பதுதான் கவிதை வாழ்ந்துவருவதற்கான காரணம். கவிஞன் ... Full story

நெல்லைக் கண்ணன் கவிதைகளில் சூழலியல் பதிவுகள்

நெல்லைக் கண்ணன் கவிதைகளில் சூழலியல் பதிவுகள்
-- முனைவர் மு.பழனியப்பன். தற்காலத்தில் படைக்கப்படும் இலக்கியங்களில் அறச் சிந்தனைகளுக்கு முக்கிய இடம் இருக்கிறதோ இல்லையோ சுற்றுப் புறச் சூழ் நிலைகளை, அதன் அவசியத்தை, அதன் தூய்மையை வலியுறுத்தும் செய்திகள் பல காணப்பெறுகின்றன. காரணம் படைப்பாளர்களுக்குச் சுற்றுச் சூழல் பற்றிய கவலை, விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது என்பதே ஆகும். சுற்றுச் சூழல் என்பது ஓர் உயிரியைச் சுற்றியுள்ள் ஒட்டுமொத்த அமைப்பு என்றும் அது காற்று, ஒளி, மண், வெப்பம், நீர் மற்றும் அவற்றோடு தொடர்புடைய மற்ற உயிரினங்களையும், ... Full story

கோட்பாடுகளின் அடிப்படையில் செவ்விலக்கியங்களை ஆராயத் துணை செய்யும் இணையத் தரவுகள்

கோட்பாடுகளின் அடிப்படையில் செவ்விலக்கியங்களை ஆராயத் துணை செய்யும் இணையத் தரவுகள்
-- முனைவர் மு.பழனியப்பன்.   செவ்வியல் இலக்கியங்களில் இலக்கிய நயம் காணுதல், உவமை, உருவக அழகு காணுதல் என்ற மரபு சார்ந்த இலக்கியத் திறனாய்வில் இருந்து வேறுபட்டு, மேலை நாட்டுச் சார்பால் கோட்பாட்டு அடிப்படையிலான திறனாய்வுகள் தற்காலத்தில் பெருகி வளரத் தொடங்கியுள்ளன. பல்வேறு வகையானத் திறனாய்வு முறைகளின் வழியாகச் சங்க இலக்கியங்களில் புதைந்து கிடக்கும் அரிய கருத்துகள் இத்திறனாய்வாளர்களால் வெளிவரச்செய்யப்பெற்றுள்ளன. இதன் காரணமாக தமிழ்த் திறனாய்வுலகில் புத்தொளி வீசத் தொடங்கியுள்ளது. இவ்வாய்வுகளுக்கும், ஆய்வு அணுகுமுறைகளுக்கும் உதவும் இணைய தளங்கள் பல உள்ளன. அவற்றினைப் பற்றிய அறிமுகத்தையும் அவ்விணைய தளங்களின் தரம் பற்றியும் ... Full story

மலையமான் திருமுடிக்காரியும் முள்ளூர் நாட்டு வளமும்

மலையமான் திருமுடிக்காரியும் முள்ளூர் நாட்டு வளமும்
--முனைவர் மு.  பழனியப்பன்.   கடையெழு வள்ளல்களுள் ஒருவனாகக் கொள்ளப்பெறுபவன் மலையமான் திருமுடிக்காரி ஆவான். சிறுபாணாற்றுப்படை இவனின் கொடைச்சிறப்பினை ...                                        கறங்குமணி வாலுளைப் புரவியொடு வையகம் மருள ஈர நன்மொழி இரவலர்க்கு ஈந்த அழல்திகழ்ந்து இமைக்கும் அஞ்சுவரு நெடுவேல் கழல்தொடித் தடக்கை காரி (சிறுபாணாற்றுப்படை 91-95) என்று எடுத்துக்காட்டுகின்றது ... Full story

பயிலரங்கஅழைப்பிதழ்

பயிலரங்கஅழைப்பிதழ்
மு.பழனியப்பன் தமிழ்த்துறைத்தலைவர் அரசு கலை மற்றும்அறிவியல் கல்லூரி திருவாடானை அன்புடையீர் வணக்கம் இதனுடன் செம்மொழித்தமிழாய்வு நிறுவனத்தின் நிதி நல்கையுடன் திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நடத்தும் பத்துநாள் பயிலரங்க அழைப்பினை இணைத்துள்ளேன். தலைப்பு மணிமேகலை கால சமயங்களும் அவற்றின் முற்கால நிலையும் பிற்கால நிலையும் நடைபெறும் நாள்கள் 16-3-2015 முதல் 25-3-2015 வரை     நன்றி அன்புடன் மு.பழனியப்பன் Full story
Page 1 of 212
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.