Author Archive

Page 1 of 512345

தொல்லை காட்சி- நீயா நானா – லொள்ளு சபா – தெய்வ மகள்

மோகன் குமார் ஐ பி. எல் கார்னர் மும்பை Vs சென்னை மேட்ச் முழுதாய் பார்க்காவிடினும் அவ்வப்போது ஸ்கோர் பார்த்து விட்டு இறுதியில் தோனி இன்னிங்க்ஸ் மட்டும் பார்த்தேன். தோனி இவ்வளவு அற்புதமாக ஆடி, பார்த்து ரொம்ப நாள் ஆகி விட்டது. பேப்பரில் கூட தோனி - வெறும் சிக்ஸ் ஆக அடித்து பயிற்சி எடுத்ததாகவும், ஸ்பின், வேக பந்து வீச்சாளர் என எப்படி வந்து போட்டாலும் ஆறுக்கு அனுப்பி பரிசி எடுத்ததாகவும் சில நாள் முன்பு தான் படித்தேன். ... Full story

தொல்லை காட்சி: சூப்பர் சிங்கர் முதல் நீயா நானா வரை- விஜய் டிவி ஸ்பெஷல்

மோகன் குமார் ஒரு மாறுதலுக்கு இவ்வார தொல்லை காட்சியில் விஜய் டிவி நிகழ்ச்சிகள் மட்டுமே ! ***** விஜய் டிவியின் பெரும் பலம்: அதன் கேம் ஷோக்கள் தான். குறிப்பாக வார இறுதியில் வரும் விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகள் பெரிதும் ரசிக்கப்படுகிறது. ஒவ்வொரு வகையிலும், ஒவ்வொரு ஸ்லாட்டிலும் தான் தான் நம்பர் 1- ஆக இருக்க வேண்டுமென நினைக்கும் சன்னை கூட வார விடுமுறையில் விஜய் டிவி முந்தி விடும் என்றே தோன்றுகிறது. கேம் ஷோக்கள் அதன் பலம் என்றால் - பயணம், சிறுத்தை, வாகை சூடவா, ... Full story

தொல்லை காட்சி – ஆசை- விசு -தகேஷிஸ் கேசில் – ராதிகா சரத்குமார்

மோகன் குமார்   தொல்லை காட்சி - ஆசை- விசு -தகேஷிஸ் கேசில் - ராதிகா சரத்குமார் சீரியல் பக்கம் ஆசை - விஜய் டிவி  தெரியாத்தனமா ஒரே ஒரு நாள் இந்த சீரியலை பாத்து தொலைச்சிட்டேன். வழக்கமா மாமியார், மருமகள் பத்தி தான் பேசுவாங்க. இதில் எதோ ஆபிஸ் பத்தி மட்டுமே வருதேன்னு தான் பார்த்தேன். எந்த ஆபிசில் இப்படி எந்த வேலையும் பார்க்காம பேசுவாங்களோ தெரியலை ! 8  மணி நேரமும் , பெண்களை பார்த்த படி, அல்லது பெண்களுடன் வேலைக்கு சேர்ந்த முதல் நாளே சண்டையிட்டவாறு, நண்பரிடம் அரட்டை அடித்தவாறு  எங்கு சார் ... Full story

தொல்லை காட்சி – பூஜா – சுருளி ராஜன்- வாணி ஜெயராம்

தொல்லை காட்சி - பூஜா - சுருளி ராஜன்- வாணி ஜெயராம்
மோகன் குமார் சீரியல் பக்கம்: கனா காணும் காலங்கள் - கல்லூரியின் கதை எந்த சீரியலும் பார்ப்பதில்லை. ஆனால் சேனல் மாற்றும் போது சில அழகான பெண்மணிகள் கண்ணில் பட்டால், அங்கேயே சற்று இளைப்பாறுவது உண்டு. அப்படி தான் கனா காணும் காலங்கள் - கல்லூரியின் கதையில் அவ்வப்போது லேண்ட் ஆகிறேன். பூஜா என்ற டிவி நடிகை இதில் டீச்சர் ஆக வருகிறார். எந்த பூஜாவா? ஆமாங்க இந்த பூஜாக்கள் தொல்லை தாங்க முடியல.. ஏகப்பட்ட பேரு இருக்காங்க ஜோடி நம்பர் சீசன் ஒன்னில் டைட்டில் ... Full story

தொல்லைகாட்சி- கிச்சன் சூப்பர் ஸ்டார்-சரவணன் மீனாட்சி – போக்கிரி

தொல்லைகாட்சி- கிச்சன் சூப்பர் ஸ்டார்-சரவணன் மீனாட்சி - போக்கிரி
மோகன் குமார் நிலம் வாங்கலியோ நிலம் சனிக்கிழமை காலை டிவி பொட்டியை போட்டால் போதும் ஜெயா டிவி, விஜய் டிவி, ஜீ டிவி என எல்லா சானலிலும் நிலம் வாங்கலியோ நிலம் என சின்னத் திரை நடிகர்கள் வந்து கெஞ்சி கெஞ்சி கேட்கிறாங்க. ஒவ்வொன்னும் அரை மணி நேர விளம்பரதாரர் நிகழ்ச்சி. 5 நிமிஷம் பாத்தா போதும், போனை எடுத்து மத்த விபரங்களை கேட்க வச்சிடுவாங்க. அவ்ளோ தூரம் பில்ட் அப் செய்றாங்க போனை எடுத்து அந்த நம்பருக்கு முயற்சித்தால் கிடைப்பதே இல்லை. டிவியில் அவர்கள் விளம்பரம் ... Full story

தொல்லை காட்சி: ரபி பெர்னாட் பேட்டி – தோனி -சூப்பர் சிங்கர் – மொக்க பார்ட்டி

தொல்லை காட்சி: ரபி பெர்னாட் பேட்டி - தோனி -சூப்பர் சிங்கர் - மொக்க பார்ட்டி
மோகன் குமார் பிளாஷ்பேக்: ரபி பெர்னாட் நேர்காணல்கள் ரபி பெர்னாட் சன் டிவியில் நேர்காணல் துவங்கிய போது பெரும் வரவேற்பை பெற்றது. பரந்த அரசியல் அறிவும், பிரபலங்களை அழைத்து வந்து சர்ச்சைக்குரிய கேள்வியை அவர் பொறுமையாய் கேட்கும் விதமும் அற்புதமாக இருக்கும். பல அரசியல் வாதிகளுக்கு கோபம் வருமளவு விவாதம் வலுத்ததும் உண்டு அதே ரபி பெர்னாட் - அதே நேர்காணலை இன்றும் ஜெயா டிவியில் செய்கிறார் ஆனால் பெரும்பாலானோர் பார்க்கிற மாதிரி ... Full story

தொல்லை காட்சி- ஆடலாம் பாய்ஸ் – தேவயானி – ஒரு தாயின் சபதம்

மோகன்குமார்  ஆடலாம் பாயிஸ்  சின்னதா டான்ஸ் - இது ஒரு படத்தோட பெயர். சுருக்கமா முதல் எழுத்துக்களை வைத்து ABCD  !. பிரபு தேவா ஹீரோவாக நடிக்கும் இப்படம் முழுக்க முழுக்க டான்ஸ் படமாம். டான்ஸ் - 3 D - யில் பார்க்கலாம்.  புதுமுக இயக்குனர் இயக்க பிரபல தயாரிப்பு நிறுவனமான UTV தயாரிக்கிறது. இதன் பாடல் வெளியீட்டு விழா ஜெயா டிவி யில் காட்டினர். படம் ஓட வைக்க டான்ஸ்  3- D  யில்   பாருங்க என்றெல்லாம் வித்யாசம் காட்ட முயல்கிறார்கள் .   கதை ஒழுங்கா இருந்தாலே படம் ஓடிடும் என்பதை சில நேரம் மறந்து ... Full story

தொல்லை காட்சி – குஷ்பூ – ஜோடி பொருத்தம் – டாடி ஒரு சந்தேகம்

மோகன் குமார் டாடி ஒரு சந்தேகம்அ ஆதித்யாவில் வரும் புதிய நிகழ்ச்சி " டாடி ஒரு சந்தேகம்" ; ஒரு அப்பா - மகன் இருவரும் பேசிக் கொள்வதாக சில டயலாக் வரும். அப்புறம் காமெடி சீன் போடுவாங்க. மகனாக - சற்று வளர்ந்த ஒரு மனிதரே தான் வருகிறார். பேச்சு வாக்கில் " டாடி ஒரு சந்தேகம்" என எடக்கு மடக்காய்    எதோ ஒரு கேள்வி கேட்கிறார் உதாரணத்துக்கு  ஒன்று " டாடி  சண்டே சினிமா போகலாம் டாடி ... Full story

தொல்லை காட்சி- அரவிந்த் சாமி- மிஸ்டர் பீன்- மௌன ராகம்

தொல்லை காட்சி- அரவிந்த் சாமி- மிஸ்டர் பீன்- மௌன ராகம்
மோகன் குமார் டிவி யில் பார்த்த படம் - மௌன ராகம் தமிழின் மிக சிறந்த பட வரிசையில் வரக்கூடிய மௌன ராகம் மீண்டும் ஒரு முறை காண முடிந்தது. மணி ரத்னம் மனதளவில் Fresh -ஆக இருந்த போது எடுத்த படம். மனம் ஒவ்வாத கணவன் - மனைவி, மனைவிக்கு ஒரு பழைய காதல் என  இன்றைக்கும் பொருந்துகிற மாதிரி இருப்பது ஆச்சரியம். கார்த்திக்கின் கேமியோ, ராஜாவின் அதி அற்புத பாடல்கள், PC  ஸ்ரீராமின்  ஒளி ஓவியம் (அந்த வார்த்தைக்கு தங்கர் ... Full story

தொல்லை காட்சி: சிவகார்த்திகேயன்- சூப்பர் சிங்கர் T -20-பைனல்

மோகன் குமார் சிவகார்த்திகேயன் பேட்டி சன்  டிவியில் திடீர்னு ஒரு வார நாள் காலையில் பார்த்தா - சூரிய வணக்கத்தில்  சிவ கார்த்திகேயன் பேசிட்டு இருக்கார். என்னடா இது லீவு நாள் கூட இல்லை; இன்னிக்கு இவரை மாதிரி ஒரு பிரபலத்தை கூட்டி வந்திருக்காங்களே என வியப்போடே பார்த்தேன் சிவகார்த்திகேயன் நிச்சயமா ஒரு செம என்ட்டர்டேயினர். தொகுத்து வழங்கினாலும் சரி, பேட்டி தந்தாலும் சரி சிரிக்க வச்சிடுறார் (நடிக்கும் போது தான் அந்தளவு  Flow  வர மாட்டேங்குது ) பள்ளியில் படிக்கும் போது ... Full story

தொல்லை காட்சி :சூப்பர் சிங்கரில் உலக நாயகன்-இளமை-புதுமை !

தொல்லை காட்சி :சூப்பர் சிங்கரில் உலக நாயகன்-இளமை-புதுமை !
மோகன் குமார் சூப்பர் சிங்கரில் கமல் கமல் மற்றும் விஸ்வரூபம் ஹீரோயின் பூஜா சூப்பர் சிங்கருக்கு வந்திருந்தனர் (ஆண்ட்ரியா வருவார் என அய்யாசாமி தினம் காத்திருந்து, காத்திருந்து ஏமாந்து போனார்) கமல் பல நேரம் எளிமையாய் பேசியது ஆச்சரியமாய் இருந்தது. "இப்படி நல்லா பாடுபவர்களை முன்பே தெரிந்திருந்தால், நான் அதிகம் பாடியிருக்க மாட்டேன்" என்றார் கமல் சிரித்தபடி. DTH பற்றியும் மனம் விட்டுப் பேசினார். திவ்யதர்ஷினி மற்றும் மா. கா. ... Full story

தொல்லை காட்சி- ரஜினி – சொல்வதெல்லாம் உண்மை – ஒரு வார்த்தை ஒரு லட்சம் சொல்வதெல்லாம் உண்மை

தொல்லை காட்சி-  ரஜினி - சொல்வதெல்லாம் உண்மை - ஒரு வார்த்தை ஒரு லட்சம்     சொல்வதெல்லாம் உண்மை
மோகன் குமார் ஜீ - (தமிழ்) டிவி யில் மற்றவர்களுக்கு தெரிந்த ஒரே பிரபல நிகழ்ச்சி சொல்வதெல்லாம் உண்மை ! இதில் பலர் வந்து பேசும் கண்ணீர் கதைகள் சற்று செட் அப் என்று ஒரு சாரார் சொன்னாலும் கூட, இதே நிகழ்ச்சியில் ஒரு பெண் தன் தந்தை கொலை செய்து புதைத்ததை சொல்ல, அவர் கைதானதும் நடந்தது நீங்கள் அறிந்திருக்கலாம், நிற்க. வணக்க்க்க்க்கம் புகழ் நிர்மலா பெரியசாமி இந்நிகழ்ச்சி தொகுத்து வழங்கியது நிறைவுக்கு வந்து ஆரோகணம் பட இயக்குனர் " லட்சுமி ராமகிருஷ்ணா ... Full story

தொல்லை காட்சி- சூப்பர் குடும்பம்-கல்யாண மாலை-பாலுமஹேந்திரா கதை நேரம்

தொல்லை காட்சி- சூப்பர் குடும்பம்-கல்யாண மாலை-பாலுமஹேந்திரா கதை நேரம்
மோகன் குமார் சூப்பர் குடும்பம் கங்கை அமரன்- மீனா-சுகன்யா நடுவர்களாக பங்கு பெரும் சூப்பர் குடும்பம் என்கிற நிகழ்ச்சி ஒரு சில நாள் தப்பித் தவறி பார்த்து தொலைச்சுட்டேன். சீரியலில் வரும் நடிகர்களை வெவ்வேறு டீமில் போட்டு சூப்பர் சிங்கர் 20-20 மாதிரி எதோ கேம் ஷோ நடத்துறாங்க. இப்படி டீம் பிரிச்சவங்க- ஒண்ணு பாடுறாங்க; அல்லது டான்ஸ் / மிமிக்ரி செய்றாங்க. மிக சுமாரான தரத்தில் உள்ள இந்த நிகழ்ச்சியை சன் டிவி எப்படி தொடர்ந்து அனுமதிக்கிறாங்கன்னு தெரியலை. நான் பார்த்த நிகழ்ச்சியில் ... Full story

தொல்லைக்காட்சி: தர்மயுத்தம்-நீர்ப்பறவை-மர்ம தேசம்

மோகன் குமார் சீரியல் பக்கம்: தர்மயுத்தம் விஜய் டிவியில் தர்மயுத்தம்  சீரியல் தினம் பத்தரை மணிக்கு வருகிறது. கிட்டி, அப்பாஸ், கார்த்திக் குமார் என ஒரே சினிமா நட்சத்திரங்கள் தான். எப்போதேனும் சில நிமிடங்கள் மட்டும் பார்க்க காரணம் சினிமா காரர்கள் நடிக்கிறார்கள் என்பதால் அல்ல.. முழுக்க முழுக்க வழக்கு, கோர்ட் என வக்கீல்கள் பற்றி சுழுலுவதால். இதில் பாடகி ஸ்ரீலேகா பார்த்தசாரதி முதல் முறையாய் நடிக்கிறார். கூடவே அவர் கணவர் ஸ்ரீராமுக்கும் ஒரு ... Full story

தொல்லை காட்சி- லிட்டில் மாஸ்டர்ஸ்- சூப்பர் சிங்கர்- பள்ளிக்கூடம்

தொல்லை  காட்சி- லிட்டில் மாஸ்டர்ஸ்- சூப்பர் சிங்கர்- பள்ளிக்கூடம்
  மோகன் குமார் சூப்பர் சிங்கர் அடுத்த சீசன் ஒரு நிகழ்ச்சியை எப்படி பிரபலப்படுத்துவது என்று  விஜய் டிவியிடம் தான் கத்துக்கணும். சூப்பர் சிங்கர் ஜூனியர்  முடிந்து சிறு இடைவெளிக்கு  பின் சூப்பர் சிங்கர் சீனியர் துவங்க உள்ளது. இதற்கான ப்ரோமோ மிகவும் கவரும் வண்ணம் செய்துள்ளனர். சென்ற முறை பைனல் வரை சென்ற சந்தோஷ் சாய்சரண் உள்ளிட்டோர் இன்று திரை துறையில் பிரபலமாகி விட்டனர் என்பதை காட்டும் வண்ணம் அவர்கள் ... Full story
Page 1 of 512345
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.