Author Archive

விஷுக்கனி

விஷுக்கனி
  ராஜி வெங்கட் நாட்கள் சேர்ந்து மாதம் பிறக்கின்றதுமாதங்கள் சேர்ந்து வருடம் பிறக்கின்றது. நிமிடங்களில் நொடிகளும்மணிகளில் நிமிடங்களும் நாட்களில் மணிகளும் மறைகின்றது என்றால், எது பிறக்கையில் மனித பகை மறையும்? எது பிறக்கையில் மனித வளம் பெருகும்? எது பிறக்கையில் நம் பொறாமைகள் அழியும் அன்பு!!!!!!ஆம்! பிறக்கும் வருடங்களில், நாட்களில்,மணிகளில், நிமிடங்களில். நொடிகளில்பூக்கும் அன்பைக் கொண்டாடுவோம்பண்டிகை போல!!!! பூவையும் கனியையும் மட்டும் காணாமல் பூத்த அன்பை கனிய விட்டு சமமாகக் காண்போம் அனைவரையுமே -விஷுக்கனியாக. விஷு(சமம்) கனி ... Full story

மௌனத்தின் விடியல்

மௌனத்தின் விடியல்
ராஜி வெங்கட் கும்மிருட்டில் முள் நகர்த்தி குரல் தரும் கடிகாரம், மேலே ஓடும் மின்விசிறியின் மெல்லிய ஓசை, எங்கோ எதற்கோ குரல் எழுப்பி அழும் குழந்தை, எந்த சத்தமானால் என்ன? எதுதான் உன்னுடைய மௌனத்தை மொழி பெயர்க்கும்? நீண்ட இரவுக்குப் பின் நீளும் சூரியக் கதிருக்காய் நிதமும் காத்திருப்பது போல், நீயும் உன் வார்த்தைக்கதிர் நீட்டி ஒளி தருவாய் என நானும் காத்திருப்பேன். படத்திற்கு நன்றி Full story

தாயகத் தவிப்பு

தாயகத் தவிப்பு
ராஜி வெங்கட் தாயக நினைவில் தவிக்கும் நெஞ்சங்கள் தவமாய் உழைத்து தவற விட்ட நொடிகள் எதுவோ? அன்னை கைச்சோறும் அவளது ஆதரவுமோ? அப்பாவின் அறிவுரையும் அவரது கருத்துக்களுமோ? மனையாளின் மகிழ்வும் மனம் பெருகும் அரவணைப்புமோ? உடன்பிறந்தோனின்  உடன்பிறந்த சீண்டல்களோ? தங்கையவளின் தர்க்கமும்  தடையற்ற பாசமுமோ? மழலையின் மொழிகளும் மயக்கும் சிரிப்புமோ? என்னென்ன விலைகள் எல்லாம் நீ தந்தாய்? இவையெல்லாம் இழந்து இன்னொரு நாட்டில் இயந்திர வாழ்விலே நீ !   படத்திற்கு நன்றி.   Full story
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.