Author Archive

மழலையின் பாட்டு

மழலையின் பாட்டு
  ராமலஷ்மி விண்மீன்களையும் வெள்ளிநிலவையும் காட்டிமடியில் கிடத்தித் தொட்டில் போல் ஆட்டிகுழந்தையை உறங்க வைக்கிறவளின் வானம்முகிலாடையால் மூடிக் கிடந்தது எங்கோ நடுங்கிய பூமியின் அதிர்வால்பொங்கிடலாம் கடல் என்றார்கள் வயிற்றுக்காக வலைவீசப் போயிருந்தசொந்தங்களின் நினைப்பால்கலங்கிய மனதைக் காட்டிக் கொள்ளாமல் வீசும் காற்று பிடில் வாசிக்கபாசத்துடன் பாடுகிறாள் கண்ணே கண்ணுறங்கென. கேட்ட கடலோரக் கூழாங்கற்களும் சிப்பிகளும் நாளெல்லாம் உருண்ட களைப்பில் சொகுசாய் மணலுள் புதைந்து கண் அசர சமுத்திரத் தாயின் அதட்டலுக்குப் பயந்துசமர்த்தாக அலைகள் ... Full story

சாதனை அரசிகள்!

சாதனை அரசிகள்!
ராமலஷ்மி தேனம்மை லெக்ஷ்மணனின் கட்டுரைத் தொகுப்பு - ஒரு பார்வை தன் வலிமை, அறிவு, திறமை, ஆற்றல் இவற்றை வெளிப்படையாக உலகறிய நீரூபிக்கும் பெண்கள் சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டு மதிக்கப்படுகிறார்கள். உழைப்பும் முயற்சியும் சேராமல் வெற்றி எளிதாக வாய்த்திடுவதில்லை. போற்றப்படும் எல்லாப் பெண்களின் வெற்றிக்கும் காரணிகளாக அவை இருப்பதை மறுக்கவே முடியாது. சிலருக்குச் சாதகமான சூழல்கள், குடும்பம் மற்றும் நட்புகளின் ஆதரவு, தட்டத் தட்டத் திறக்கும் வாய்ப்புகள் இவற்றால் ஓடும் களம் அதிக மேடு பள்ளங்களற்று அமைகின்றன. சிலருக்கோ முட்களும், ... Full story

உழைக்கப் பிறந்தவர்களா குழந்தைகள்?

உழைக்கப் பிறந்தவர்களா குழந்தைகள்?
ராமலக்ஷ்மி இந்த உலகத்தில் உண்மையான அமைதி நிலவ வேண்டுமானால் அதைக் குழந்தைகளிடமிருந்து தொடங்க வேண்டும்’ என்றார் தேசப் பிதா. அவர் சொல்லிச் சென்ற எதைக் கருத்தில் எடுத்துக் கொண்டிருக்கிறோம் இதை மட்டும் விட்டு விட்டதாக வருத்தப்பட? எந்த சிசுவும் தன் பிள்ளைப் பிராயத்தில் உழைப்பதற்காக இப்பூமியில் ஜனிக்கவில்லை. விடைதெரியாத காலக் கணக்குகளால் துளிர்விடும் மொட்டுகளில் பல, மலர வகையின்றிக் குடும்பமாகிய தாய்ச் செடிகளின், சமூகமாகிய மரங்களின் பாதுகாப்பை இழந்து உதிர்ந்து ... Full story

அன்புதான் அனைத்திற்கும் ஆதாரம்

அன்புதான் அனைத்திற்கும் ஆதாரம்
ராமலக்ஷ்மி கோமதி நடராஜனின் கட்டுரைத் தொகுப்பு - ஒரு பார்வை சிந்திக்க ஒன்றும் சிரிக்க ஒன்றுமாக இரண்டு வலைப்பூக்களை நிர்வகித்து, இணையத்தில் ‘கோமா’ என அறியப்பட்டும், அழைக்கப்பட்டும் வரும் கோமதி நடராஜனின் முதல் புத்தகம். கடந்த முப்பது ஆண்டு கால எழுத்துப் பயணத்தில், வாழ்க்கை அனுபவத்தைக் கூர்ந்த அவதானிப்புடன் அந்தந்த காலக்கட்டத்திலேயே பதிந்து வைத்தவற்றின் முழுத் தொகுப்பு. இதில் சில கட்டுரைகள் பத்திரிகைகளில் வெளியானவை. சில அவரது வலைதளங்களில் பகிர்ந்தவை. எனது ... Full story

விழியனின் இரு நாவல்கள் – ஒரு பார்வை

ராமலக்ஷ்மி இன்றைய குழந்தைகளுக்குக் கணினி விளையாட்டுகள், கார்ட்டூன் படங்கள் இவையே பிடித்தமான பொழுது போக்குகளாகி வருகின்றன. அதே கணினியும் தொலைக்காட்சிப் பெட்டிகளுமே பெரியவர்களின் நேரத்தையும் ஆக்கிரமித்துக்கொண்டு வருகையில் வாசிப்பை எப்படிக் குழந்தைகளிடம் வளர்ப்பது? தாமும் மாறி, குழந்தைகளுக்கும் வாசிப்பை ஒரு விருப்பமான பொழுதுபோக்காக மாற்ற வேண்டியது பெற்றோரின் அத்தியாவசியக் கடமைகளில் ஒன்றாகிறது. பாடப் புத்தகங்கள் அறிவை வளர்க்குமெனில் நல்ல குழந்தை இலக்கியங்கள் நாளைய உலகை எதிர்கொள்ளத் தேவையான நேர்மையை, மன வலிமையை, நற்பண்புகளை, நல்ல பழக்க வழக்கங்களை ... Full story

செல்வக் களஞ்சியங்கள்

-ராமலக்ஷ்மி ஆண் என்றால் வரவு. பெண் என்றால் செலவு. பெற்ற பிள்ளைகளில் ஆணே வயதுக் காலத்தில் துணையிருப்பான். பெண் பிள்ளை என்றைக்கும் வேறு வீட்டுக்குச் செல்ல வேண்டியவள். காலாகாலமாய்த் தொடரும் பாடாவதிக் கருத்துகள்தான். பெண்கள் எத்தனை சாதித்துக் காட்டி என்ன போயிற்று? இன்றைக்கும் கருவறைக்கே வேண்டாத விருந்தாளியாகத்தான் இருக்கிறாள் என்பதுதான் வேதனை தோய்ந்த உண்மை. எல்லோருக்கும் தெரிந்த, எத்தனயோ பேரால் வேறு வேறு வார்த்தைகளால் அடிக்கடி சொல்லப்பட்டவைதானே எனத் தோன்றலாம். கள்ளிப்பால் கதைகளும், கருவிலேயே பெண்சிசுக்களின் உயிர்த் ... Full story
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.