Author Archive

உலகத்தின் மிகப்பெரும் சக்தியாக இந்தியா உருவெடுக்கும்’ – விஞ்ஞானி ஆ.சிவதாணுப்பிள்ளை

உலகத்தின் மிகப்பெரும் சக்தியாக இந்தியா உருவெடுக்கும்’ - விஞ்ஞானி ஆ.சிவதாணுப்பிள்ளை
      சிறப்பு நேர்காணல் சந்திப்பு: விஞ்ஞானி வி.டில்லிபாபு நண்பரை சந்திக்கும் போது 'வணக்கம்' சொல்கிறீர்கள். 'வணக்கம்' என்ற சொல் உங்கள் உதடுகளிலிருந்து நண்பரின் காதுகளுக்கு எவ்வளவு வேகமாக சென்றடைகிறதோ அதை விட ஐந்து மடங்கு வேகமாக பறக்கக்கூடியது பிரமோஸ் ஏவுகணை. பிரம்மபுத்திரா, மாஸ்கோவா நதிகளின் பெயர்களின் முற்பகுதிகளை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட பிரமோஸ் விண்வெளி என்ற இந்திய-இரஷ்ய கூட்டு நிறுவனத்தின் தயாரிப்பே இந்த ஏவுகணை. கப்பலிலிருந்தோ, விமானத்திலிருந்தோ, தரைவழி வாகனத்திலிருந்தோ இதை ஏவி, விரையும் கப்பல்களையும் ... Full story

தமிழும் தொழில்நுட்பமும்

  வி.டில்லிபாபு (08.01.2012 அன்று பெங்களூரூ தமிழ்ச்சங்க அரங்கில் நிகழ்ந்த கருத்தரங்கில் ஆற்றிய உரை) தமிழுக்கும் தொழிற்நுட்பத்திற்குமான உறவு நீண்ட நெடியது. ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே; சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே; வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே; நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே, ஒளிறு வாள் அருஞ் சமம் முருக்கி, களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே. பெண்பாற் புலவராக அறியப்படுகிற பொன்முடியார் எழுதிய பாடல் இது. பிள்ளையைப் பெற்றெடுத்தல் என் கடன், சான்றோனாக்குதல் தந்தையின் கடன் என ஒவ்வொருவரின் கடமையையும் பட்டியலிடுகிறாள் பண்டைய தமிழ்த்தாய். வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே; என்கிற வரியில் ... Full story

நிற்பதுவே..பறப்பதுவே!(பகுதி-1)

நிற்பதுவே..பறப்பதுவே!(பகுதி-1)
வி. டில்லிபாபு உலகின் முதல் விமானி பறக்கவேயில்லை. ஏனெனில் வானில் பறந்த முதல் மனிதப் படைப்பு, காற்றாடி.  பெரும்பாலான அறிவியல் கண்டுபிடிப்புகளின் அடிநாதம் இயற்கை தான் என்றாலும் சில கண்டுபிடிப்புகள் இயற்கையை மிஞ்சுவதும் உண்டு. பறவைகளின் இயங்கு நுட்பங்களை ஆராய்ந்து விமானங்கள் வடிவமைக்கப்பட்டாலும், முதுகு கீழாக விமானங்களால் மட்டுமே பறக்க இயலும். ஓடு பாதைகளுக்கு அருகில் இறைச்சிக் கடைகளுக்கும், உணவகங்களுக்கும் அனுமதியில்லை, ஏனெனில் இவைகளின் கழிவுகள், பறவைகளைக் கவர்ந்திழுக்கும். விமானம் ... Full story

இயக்கு உயிர்கள்

இயக்கு உயிர்கள்
வி.டில்லிபாபு கடைத் தெருவில் கை தவறும் நாணயங்களை குனிந்தெடுக்கக் கூச்சம் பந்தியில் பசியிருந்தும் மறுசோறின்றி கெளரவக் கையலம்பல் ஆடையகத்தில் வெட்கம் பிடுங்க அவசரத் தெரிவு தானியங்கி பண அறையில் அவசரத்தில் இயங்கி வரிசை நோக்கா வெளியேற்றம் கணந்தோறும் ... Full story

கூடங்குளம் போராட்டம்: அவிந்த கதிரியக்கம்

கூடங்குளம் போராட்டம்: அவிந்த கதிரியக்கம்
வி.டில்லிபாபு கூடங்குளம் அணு உலைக்கெதிராக இடிந்தகரையில் நிகழ்ந்த பொதுமக்களின் தொடர் போராட்டம் அனைவரின் கவனத்தையும் கவர்ந்திருக்கிறது. அணு உலைத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முன் வைக்கப்படும் கருத்துகளாக ஊடகங்களின் வாயிலாக அறியப் படுபவைகளை எட்டு வகைகளாகப் பிரிக்கலாம். முதல் வாதம், உள்ளூர் மக்களை கலந்தாலோசிக்கவில்லை மற்றும் திட்டம் தொடர்புடைய பாதுகாப்பு ஆய்வு, சுற்றுச்சூழல் தாக்கம் உள்ளிட்ட அறிக்கைகள் பகிரப் படவில்லை. இதை அரசுக்கும் பொதுமக்களுக்கும் ... Full story

உரிமை மீறல்

உரிமை மீறல்
வி.டில்லிபாபு மழை மாதம்   காலை வழக்கம் போல நடைப் பயிற்சிக்கு வருகிறார்கள் நாய்களோடு   முன்னெச்சரிக்கையாக ஒவ்வொருவர் கையிலும் குடை   யாருக்கும் கவலையில்லை நாய்கள் நனைவதைப் பற்றி.   Full story

நடுநிசி

நடுநிசி
விஜயகுமார் டில்லிபாபு அறையிருட்டில் கடிகாரம் தொலைய திரைச்சீலை ஒளிர்வுக்கு காத்திருக்கிறேன் படுக்கையில் புரண்டு புரண்டு   தொலைக்காட்சி, பேசி துணைவி, மக்கள் எல்லோரும் தூக்கத்தில்   தெருவடங்கி யாருமில்லாச்  சாலைகளில் வெளிச்சம் வீசி பகலுக்கு பார்த்திருக்கும் தெருவிளக்காய் நான்   வெளிச்சமும் சத்தமும் சாத்தியமில்லா  இரவுப்பொழுதில் கைகொடுப்பதில்லை பிடித்த பொழுதுபோக்குகள்   உறக்கம் சிக்காத இரவுகளில் அனாதையாகிறேன் சொந்த குடும்பத்தில்.   படத்திற்கு நன்றி. Full story
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.