Author Archive

Page 1 of 212

சடசபை

சடசபை
தி.ந.இளங்கோவன்   இங்கே மனிதர்கள் மட்டுமே விவாதிக்கப் படுகிறார்கள். கருத்துப் பரிமாறல்களுக்கும் கருத்து மோதல்களுக்கும் இடமில்லை இங்கே ! நாக்குக்கத்திகள் உரசும் ஓசைகள் ! கொட்டும் வார்த்தை உதிரத்தின் குரூரம் ! தோற்று அலறும் குரல்களின் வேதனை ! வெற்றுச் சவால்களின், ஆணவத்தின் எக்காள ஒலிகள் ! இங்கே இன்றைய காவுகள், நாளைய பட்டாக்கத்திகள் ! துதி பாடும் நாக்குகள் நொடிப் பிறழ்வில் கக்குமிங்கே தீக்கங்குகள் ! கருத்துக் குடமேந்தி வருவோரும் கருத்துக்காய் குடமேந்தி வருவோரும் பத்திரமாய் ஒதுங்கிச் செல்லுங்கள், கண், காது, வாய் பொத்தி காந்திமகான் சொன்னது போல் ! இங்கே மனிதர்கள் மட்டுமே விவாதிக்கப் படுகிறார்கள். கருத்துப் பரிமாறல்களுக்கும் கருத்து மோதல்களுக்கும் இடமில்லை இங்கே !   சித்திரத்துக்கு நன்றி:  http://amandaomiatek17.files.wordpress.com/2010/09/argument-amy-vangsgard-digital-image1.jpg Full story

எனை வளர்த்த தீ!

எனை வளர்த்த தீ!
தி.ந.இளங்கோவன்   காத்திருந்த காற்றென்ற கவிதை வந்த காலத்தில் தென்றலாய் வந்த நண்பன் நீ!   இலக்கியம் விளையாட்டு திரைப்படம் எனவுலகின் பலகதவுகளை யெனக்கு பரிச்சயம் செய்தவன் நீ.   காதலில் அலையும் மனம் போல் உன்னுடன் எங்கும் திரிந்தேன் நான்.   பிறிதொரு நாள் எனக்கென்று ஒரு பார்வை, ரசனை. வேறுபட்டதாய், உன்னில் முற்றிலும் மாறுபட்டதாய்...   உன்னில் ஒரு அங்கமாய் நானிருந்த நாட்கள் போய் நான் என்னைப் பெற்ற வலி மிகுந்த காலமது...   அதற்குமுன் நான் உன் வழி உலகு பார்த்தேன். அதன் பின்னோ நீ என் வழி உளவு பார்த்தாய்...   புது உலகு காட்டிய நீயே உன் மறு புறமும் காட்டியெனை வதைத்த வெந்தணற் பொழுதுகள்.   காலக் கணக்கன் காட்டிவிட்ட பாதைகளில் நானொரு பக்கம், இன்றோ நீயொரு பக்கம்.   தொலைவில் இருந்தாலும் என்னுள் இருக்கிறாய் அன்றுபோல் இன்றும் ... Full story

குயில் சத்தம்

தி.ந.இளங்கோவன்   மயில்வாகனன் சாரின் வீட்டு வாசலில், அழைப்பு மணியை அமுக்கி விட்டு கதவின் திறப்பிற்காக செல்வராஜ் காத்திருந்தார். கதவு திறக்கப்படுவதற்குள் ஒரு சிறிய அறிமுகம். செல்வராஜ் இருபத்தி நான்கு வீடுகள் கொண்ட இந்த “வீட்டு வசதி வாரியக் குடியிருப்பின்” செயலாளர். ஐம்பதை நெருங்கும் வயது. மயில்வாகனன் இதில் உள்ள ஒரு வீட்டின் சொந்தக்காரர். எழுபதைத் தாண்டிய வயது. வாழ்நாளில் பெரும்பகுதியை வடகிழக்கு மாநிலமொன்றில் ஒரு தனியார் நிறுவனத்தில் உழைத்து செலவிட்டவர். மனைவியை இழந்து இந்த வீட்டில் தனியாய் ... Full story

நூல் அறிமுகம்- நினைவோடை-சுந்தர ராமசாமி

நூல் அறிமுகம்- நினைவோடை-சுந்தர ராமசாமி
  தி.ந.இளங்கோவன்   சுந்தர ராமசாமி-நினைவோடை- சி.சு.செல்லப்பா காலச்சுவடு பதிப்பகம் திருத்திய மறு பதிப்பு – 2005 தொகுப்பு: அரவிந்தன். விலை: ரூ 40   ஒரு 60 வருடத்துக்கு முன்பு தொடங்கி, இந்த நூற்றாண்டு வரை தனக்கும், சி.சு.செல்லப்பாவுக்கும் இடையில் இருந்த நட்பு பற்றியும், செல்லப்பா என்ற படைப்பாளியைப் பற்றிய, செல்லப்பா என்ற தனி மனிதனைப் பற்றிய தன்னுடைய கண்ணோட்டங்களையும் சொல்ல முற்பட்டிருக்கிறார் சுந்தர ராமசாமி.... Full story

தீபாவளி நினைவுகள்

தீபாவளி நினைவுகள்
தி.ந.இளங்கோவன்   தீபாவளி நினைவுகள் என்றாலே நம் எல்லோருக்கும் மகிழ்வைத் தரக் கூடியவை. அதுவும் இளமைக் கால தீபாவளிக் கொண்டாட்டங்கள் மிக இனிமையானவை அல்லவா? இருந்த போதும், எனக்கு கடந்த சில வருடங்களாக தீபாவளி என்றாலே சற்றே சோகமான ஒரு உணர்வு தோன்றுகிறது. சரி, இருக்கட்டும். சந்தோஷமான நினைவுகளை முதலில் பகிர்ந்து கொண்டு அப்புறம் சோகக் கதைக்கு வருகிறேன். சரியா? இப்போதைக்கு ... Full story

பேசு!

பேசு!
தி.ந.இளங்கோவன்   பேசு, ஏதாவது பேசு. பேசாமலேயே ஒரு மனது கொல்கிறது என்னை! ஊதாமலேயே ஒரு நெருப்பு கனல்கிறது இங்கே!   பேசு, ஏதாவது பேசு. இம்மௌனம் நீ என் மேலியற்றும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் ! மோசமான ஒரு வசைபாடலைவிட மோசமானது உன் மௌனம் !   பேசு, ஏதாவது பேசு. உன் மௌனம் தொடரத் தொடர என் பேச்சும் நீள்கிறது, அஸ்தமனத்தில் நீளும் கட்டிட நிழல் போல ! தொடர்ந்து நம்மை காரிருள் வந்து கவியுமோவென கலங்கி நிற்கிறேன் நான்.   பேசு, ஏதாவது பேசு. உன் மௌனம் சம்மதத்துக்கான சமிக்ஞை அல்ல, மிகப்பெரிய எதிர்ப்புக் குரலின் தொடர் ரீங்காரம். சப்தம் இல்லாமலேயே எனை சாய்க்கும் குரூரம்.   பேசு, ஏதாவது பேசு. நாளை ஒன்றே இல்லையென்பது போல் நான் பேசிக் கொண்டேயிருக்கிறேன். நான் என்ற ... Full story

வாழ்ந்து காட்டுதல்

வாழ்ந்து காட்டுதல்
  தி.ந.இளங்கோவன் வேலை கொடுப்பதொன்றே உம் வேலையென் றெண்ணி யெனக்கு சுமையேற்றியே யதில் சுகம் கண்டாய், சொல்லித்தர மறந்தாய், சில நேரம் மறுத்தாய்.   சுயம்புவாய்க் கற்றேன், சூட்சுமங்களனைத்தையும்... கொடுத்த பணியில் நிலுவை வைத்தது நினைவிலேயே யில்லை...   பாராட்டென்ற வார்த்தையே யுமக்கு பழக்கமில்லா தொன் றென்பதை அனுபவத்தில் அனுதினமும் எதிர்பார்த்து கண்டுணர்ந்தேன்.   ஆனாலும் அரிதிலும் அரிதாய் இழைத்துவிட்ட சின்னஞ்சிறு தவறொன்றை ஊதிப் பெரிதாக்கினாய்.. பிறர்முன் என்னை சிறிதாக்கினாய்.   இருந்த போதும் உமக்குப் பாதம் பணிகிறேன்... ஒரு அதிகாரியாய் எப்படி இருக்கக் கூடாதென உதாரண புருஷனாய் நித்தனித்தம் வாழ்ந்தெனக்கு காட்டுவதால்...   படத்திற்கு நன்றி : http://womaneer.wordpress.com/2010/12/22/best-boss-awards-pledge-to-find-the-uks-inspirational-leaders/     Full story

இணையப் பயன்பாடு – கட்டுரைப் போட்டி

அன்பு நண்பர்களே, இணையம், நல்லதைவிட அல்லதை நிறைய தருவதாக ஒரு புகார் நம்மிடையே அவ்வப்போது கூறப்படுகிறது. ஆனால், உண்மை அங்ஙனமில்லை. இணையம் எவ்வளவோ நல்ல விஷயங்களை நமக்குத் தருகிறது. குறிப்பாக, இளைய தலைமுறையினர் இந்தத் தொழில் நுட்ப வசதியை எப்படி உபயோகிக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே, நன்மையோ, தீமையோ பெறுகிறார்கள். நம் வல்லமை மின்னிதழின் மூன்றாம் ஆண்டுத் தொடக்கத்தை முன்னிட்டு, 16-05-2012 அன்று கட்டுரைப் போட்டி ஒன்றை அறிவித்திருந்தோம். அது தொடர்பான விவரங்கள் இங்கே: http://www.vallamai.com/literature/articles/20546/ சமுதாயத்தில் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ... Full story

பராமரிப்பு

பராமரிப்பு
தி.ந.இளங்கோவன் நொச்சு நொச்சென்று எதையாவது பேசிக்கிட்டிருக்கும் கிழவியைப் போல நச நசவெனத் தொடர்ந்து பெய்து கொண்டு இருக்குது மழை. அடித்தும் பேயவில்லை. அசரவும் விடவில்லை இந்த நாலு நாளாய். மணிமேகலை ஆச்சிக்கு மழை மேல் அவ்வளவு கோவம். கொல்லையில் கட்டியிருக்கும் ரெண்டு எருமையும் பசியில் கத்துற சத்தம் வேறு, அவளை எரிச்சல் கொள்ள வைத்தது. முடியாத உடம்புடன், கொல்லைப் பக்கம் எழுந்து போனாள். “ஈர வைக்கலை திங்க முடியலையா? பருத்திக் கொட்டையும் ... Full story

முனைவர் மயில்சாமி அண்ணாதுரையின் கையருகே நிலா நூல் வெளியீட்டு விழா

 முனைவர் மயில்சாமி அண்ணாதுரையின் கையருகே நிலா நூல் வெளியீட்டு விழா
அழைப்பிதழ் அறிவியல் அறிஞர் சந்திரயான் புகழ் மயில்சாமி அண்ணாதுரை அவர்களின் கையருகே நிலா என்னும் வாழ்க்கை வரலாற்று நூல் சென்னையில் வெளியீடு காண உள்ளது. கலாம் பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்த நூல் வெளியீட்டுக்கு அனைவரையும் அழைத்து மகிழ்கின்றனர். இடம்: இரசியக் கலாச்சார மையம்(ஓட்டல் சோழா பின்புறம்), சென்னை-18 நாள்: 09.03.2012 வெள்ளிக்கிழமை,நேரம்: மாலை 6 மணி தலைமை: முனைவர் சிற்பி பாலசுப்பிரமணியன் நூல் வெளியீடு: முனைவர் மன்னர் ஜவகர்(துணைவேந்தர்) முதற்படி பெறுதல்: “தாமரைத்திரு” கவிப்பேரரசு வைரமுத்து ஏற்புரை: அறிஞர் மயில்சாமி அண்ணாதுரை Full story

உண்மை

உண்மை
தி.ந.இளங்கோவன்    கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளி திறக்கும் முதல் நாள். காலையில் ப்ரேயர் முடிந்தவுடன், தலைமை ஆசிரியர் உரையாற்றும் போது, எல்லா மாணவர்களையும், கடந்த வருடம் ஆண்டுத் தேர்வின் போது அமர்ந்து இருந்த அறையில், அதே இருக்கையில் அமருமாறு பணித்தார். எதற்காக இந்த உத்தரவு என்று புரியாமல் எல்லா மாணவர்களும், குழப்பத்தோடு அவரவர் இடத்தை தேடி சென்றனர். ”தட்டுத் தடுமாறி போன வருசம் பாஸ் பண்ணிட்டோம். மறுபடியும் ... Full story

கடிதங்கள்

கடிதங்கள்
தி.ந.இளங்கோவன்   சோர்ந்த மனத்தின் சொல்லம்புப் பாதைகள் ..   சோக நீர் வயலின் வடிகால் வாய்க்கால்கள்..   பறந்து களைத்த பருந்தின் இறக்கைப் படபடப்புகள்..   உயவிழந்த வண்டியின் உரசல் முனகல்கள் ..   புத்தாற்று வெள்ளத்தின் புன்சிரிப்புச் சிதறல்கள்..   உரசும் மூங்கில்களின் உணர்ச்சிப் பொறிகள்..   அக்காக் குருவியின் அன்புக் கதறல்கள்.. நெருப்பில் வெடிக்கும் கொட்டாங்கச்சிச் சிதறல்கள்..   பதுங்கு நரியின் பகல் வேஷங்கள்..   காதல் நிலவின் கவின்மிகு ஒளிப் பொழிவுகள்..   எண்ணிலடங்கா அர்த்தம் சுமக்கும் கடிதங்கள் முன்பெல்லாம் அஞ்சலட்டைகளாய்.. இப்போதோ மின்னஞ்சல்களாய்..   படத்திற்கு நன்றி: http://www.postalstationery.org/html/india_post_card_of_1902.html  Full story

குப்பைகளைக் குப்பைத் தொட்டியில் போடவும்..

குப்பைகளைக் குப்பைத் தொட்டியில் போடவும்..
தி.ந.இளங்கோவன் இணையத்தில் வருவதெல்லாம் உண்மையெனும் எண்ணம் இளைய தலைமுறையினரிடம் பரவலாக இருக்கிறது. அறிவைப் பெருக்க உதவும் இணையம், அதே நேரத்தில் பல பொய்யான தகவல்களையும் பரப்பும் தளமாகவும் அமைந்து விடுகிறது. Facebook-ல் எனக்கு வந்த ஒரு தகவல், ஒரு புகைப்படத்தை உள்ளடக்கியதாக இருந்தது. அந்தப் புகைப்படம் உலகத்தின் மிக உயர்ந்த “புர்ஜ் துபாய்” கட்டடத்தின் மேலிருந்து எடுக்கப்பட்டதாகவும், அந்தப் புகைப்படத்தின் ஒரு மூலையில் பார்த்தால் உலகம் சுழல்வதைப் பார்க்கலாம் என்றும் சிறு குறிப்பும் ... Full story

இந்த நிமிடம் நிலையானதல்ல !

இந்த நிமிடம் நிலையானதல்ல !
தி.ந.இளங்கோவன்  மிகப் பெரிய பொதுத்துறை நிறுவனத்தில் வேலைக்கு விண்ணப்பித்து, எழுத்துத் தேர்வில் வெற்றிகரமாகத் தேர்வாகி, நேர்முகத் தேர்வுக்காகக் காத்திருக்கும் சேகருக்கு ஒரே படபடப்பு ! வேலைக்கு விண்ணப்பிக்கும் போது மதிப்பெண்களை குறிப்பிடும் இடத்தில், ஒரு செமஸ்டரில் 78% க்கு பதிலாக 87% என்று தான் தவறாகக் குறிப்பிட்டிருந்ததை, நேற்று இரவு தான் கண்டு பிடித்தான், எதேச்சையாக விண்ணப்பத்தின் பிரதியைப் பார்த்த போது. இன்று ஒரிஜினல் மார்க் ஷீட் காட்ட வேண்டும். எப்படியும் ... Full story

உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை உண்டா?

உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை உண்டா?
தி.ந. இளங்கோவன் "என்ன செய்யப் போறேனோ தெரியல.. இந்த வருஷம் என் பையன் +2 முடிக்கப் போறான்.. அவன் படிக்கறதப் பாத்தா பணம் கொடுத்துத்தான் எஞ்சினியரிங் சீட் வாங்கனும் போல இருக்கு. இருக்கிற சேமிப்பு இதிலியே போயிடுச்சுன்னா,அடுத்த வருஷம் என் மூத்தப் பொண்ணுக்கு எப்படிக் கல்யாணம் செய்யப் போறேன்.. ஒன்னும் புரியல.. ஒரே கவலையா இருக்கு.." "என்னமோ பிஸினஸ் சரியாவே போகலை. கம்பெனியை இழுத்து மூட வேண்டிய நிலைமை வந்துடுமோ? பயமா ... Full story
Page 1 of 212
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.