Author Archive

பழையன புகுதலும்

பழையன புகுதலும்
புமா   மண் விளக்குகள் மகுடமேறுகின்றனஎண்ணெய்களின் கொண்டாட்டத்திற்குஎல்லைகளே இல்லை.பனை ஓலைகள் விசிறிகளில்சிரிக்கின்றன.மெழுகுவர்த்திகள் உருகி நிற்கின்றனஆனந்தக் கண்ணீரில். மத்தியதரக் குடும்பத்தலைவனிடம்கட்டணச் செலவுகுறைந்து போன மகிழ்ச்சி.படிப்புத் தொல்லையிலிருந்துவிடுபட்ட களிப்பில்குழந்தைகள் கூட்டம். துன்பத்தில் புதைந்திருக்கும்இன்பத்தைக் கொண்டாடினாலும்கற்கால மனிதர்களாகாமல்காப்பாற்றப்பட வேண்டுமென்றுதவிக்கத்தான் செய்கிறது மனசு   படத்திற்கு நன்றி:http://www.campfirecapers.com/caper_4.html Full story

மதிப்பெண்கள்

மதிப்பெண்கள்
புமா ஐந்துவிழுக்காடுதவறுக்குஅவசரநிலை பிரகடனம்வன்கொடுமை வார்த்தைச்சூட்டில்வாடும் குழந்தை. பொருளாதார அழுத்தத்தில்புதையும் வீடு.சதமே நிதர்சனமெனக்கருதும் கல்விமுறைப்பிழைகள். மானுடத்தின் யதார்த்தங்கள்பிள்ளைகள் அறிவதில்லை.அறிந்திருந்தால் கேள்விவரும்“ஏற்கும் பணிகளில்ஐந்துசதவிகிதம் கூடதவறிழைக்காதவர் உங்களில் யாரென்று?”  படத்திற்கு நன்றி : http://sundaytimes.lk/070909/Plus/plus0001.html Full story

நீதியின் மன்றத்தில்…..

நீதியின் மன்றத்தில்.....
புமா ஈழத்தீவை சூழ்ந்திருப்பதுதண்ணிரல்ல...கண்ணீர். எம் இரத்த சொந்தங்களின்உயிரடங்கும் ஓசைசெவிகளில் இரைச்சலாய்.. சீதையை மீட்கபோர் அன்றுசீதைகளை சிதைக்கஉதவி இன்று. என்ன தேசம்?யார் ராஜ்ஜியம்? பிள்ளையைக் கொல்லகள்ளிப்பால் கொடுக்கும்அன்னைபிள்ளைகளை கொல்லஆயுதம் கொடுக்கும்அன்னை தேசம். நீதியின் மன்றம்சொல்லட்டும்ஒரே தீர்ப்பு!   படத்திற்கு நன்றி : http://members.virtualtourist.com/m/3f7b2/788/ Full story

காக்கையும், குருவியும்

செல்பேசி கோபுரங்கள் உயர்ந்தன.சிட்டுக்குருவிகளின் ஓசைகைபேசிகளின்அழைப்புமணிகளில் மட்டும்! கோபுர தரிசனம்குருவிகளுக்கு சொர்க்கம்மலிந்து போகிறதுமனித வர்க்கம். அறிவியல் சார்ந்துவாழும் சமூகத்தில்காக்கையும் குருவியும்யாரின் சாதி?   படத்திற்கு நன்றி : https://www.google.com/search?aq=f&gcx=w&sourceid=chrome&ie=UTF-8&q=sparrow+phot Full story

நீரின்றி அமையாது உலகு …

நீரின்றி அமையாது உலகு ...
புமா   முல்லைப் பெரியாறு ...எங்கள் நிலத்திற்கானநீராதாரம் மட்டுமல்லஉழைக்கும் தமிழனின்வாழ்வாதாரம் இடிந்துவிடுமென நீங்கள்பரப்பும் வதந்திஇடிக்கிறதுஇந்தியாவின் இறையாண்மையை. உங்கள்நீர்உங்களுக்கு உணவாவதைநீங்கள் உணரவில்லைஅதனால்உணர்த்தப்படுகிறீர்கள். கெஞ்சிப்பெற நாங்கள்கேட்கவில்லை யாசகம்உரிமையைச் சொல்கிறதுஒப்பந்த சாசனம். முல்லைப் பெரியாரைதடுக்க முடியாதுதமிழினத்தை எவராலும்ஒடுக்க முடியாது!!   படத்திற்கு நன்றி : http://www.naturemagics.com/kerala-articles/mullaperiyar-dam.shtm Full story

தேசத்தந்தைக்கு ஒரு நேசக்கடிதம்!

தேசத்தந்தைக்கு ஒரு நேசக்கடிதம்!
புமா அன்பு மகாத்மா!நலமாயிருப்பாய் நம்புகிறேன்.இங்கில்லாமல் போனாய்அதனால்நலமாயிருப்பாய் நம்புகிறேன்.   நீஇராட்டை சுற்றினாய்நாடு சுதந்திரமானது.உன்பேர் சொல்வோர்நோட்டை சுருட்டுகிறார்வீடு சுகபோகமாகிறது.   அன்றுஉன் சபைவெள்ளைக் கூட்டத்தைவிரட்டியது.இன்றுகொள்ளைக் கூட்டத்தைத்திரட்டியது.   கூட்டு சேர்ந்துகொள்ளையடித்தாலும்யாரும் மாட்டுவதில்லை.   சுருட்டுவதில்சுனாமி வேகம்பினாமிகள் வாழ்க்கைராஜ போகம்.   இங்கில்லாமல் போனாய்அதனால்நலமாயிருப்பாய் நம்புகிறேன்நீ மகாத்மா!   உனக்குத் தெரிந்ததெல்லாம்வினோபாஜி நேதாஜி... Full story
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.