Author Archive

Ajith Arya New movie

Ajith Arya New movie
  The shooting of Ajith – Arya starring film starts….   The shooting of the most expected project of 2012, the untitled mega film starring Ajith and Arya commenced in Chennai on Thursday, 31st at the Vishwaroopa Sri Shridi Sai Baba Mandir. It is a coincidence that the film had to start on a Thursday, the auspicious ... Full story

புகையில்லா போகியை வலியுறுத்தி பள்ளி மாணவர்களின் எழுச்சி நடைபயணம் – செய்திகள்

புகையில்லா போகியை வலியுறுத்தி பள்ளி மாணவர்களின் எழுச்சி நடைபயணம் - செய்திகள்
திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் அருகே உள்ள கசுவா கிராமத்தில் செயல்பட்டு வரும் சேவாலயா சேவை மையத்தில் இன்று(11.01.2012) புகையில்லா போகியை கொண்டாட வலியுறுத்தி பள்ளி மாணவர்களின் எழுச்சி நடைபயணம் நடைபெற்றது. சேவாலயா அறக்கட்டளை மூலமாக ஒவ்வொரு ஆண்டும் புகையில்லா போகியை வலியுறுத்தி பள்ளி மாணவர்களின் எழுச்சி நடைபயணம் நடைபெறுவது வழக்கம். அதே போல இந்த ஆண்டும் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திருமதி.V.திருமஞ்சு அருள்தாஸ்( ஊராட்சி மன்றத் தலைவர், பாக்கம் ஊராட்சி), திருமதி.K.தாட்சாயணி(ஊராட்சி மன்றத் தலைவர், புலியூர் ஊராட்சி), வார்டு உறுப்பினர்கள், சிங்கப்பூரைச் சார்ந்த ஜிங், இங்கிலாந்து நாட்டைச் ... Full story

500 கோடி நிவாரணம் போதுமானதல்ல – சீமான் அறிக்கை – செய்திகள்

500 கோடி நிவாரணம் போதுமானதல்ல - சீமான் அறிக்கை - செய்திகள்
தானே புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட மத்திய அரசு அறிவித்துள்ள ரூ.500 கோடி இடைக்கால நிவாரணம் போதுமானதல்ல என்று கூறி நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் விடுத்துள்ள அறிக்கை: ”தானே புயலால் கடும் பாதிப்பிற்குள்ளான பகுதிகளில் வாழும் மக்களுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட மத்திய அரசு அறிவித்துள்ள ரூ.500 கோடி இடைக்கால நிவாரணம் மிகவும் குறைவானதாகும். தானே புயல் ஏற்படுத்திய பாதிப்பினால் ... Full story

பாதாள உலகம் – 4

பாதாள உலகம் - 4
சாம்ராஜயத்தின் எழுச்சி in 3D ஹாலிவுட் படங்களில் இரண்டு வகை த்ரில்லர்களுக்கு எப்போதும் மவுசு உண்டு. அறிவியல் பின்னணியிலான கதைகள் ஒரு பக்கம் வெற்றி பெறுகின்றன. நவீன ஆயுதங்கள், வேற்று கிரக வாசிகள் என்று இப்படிப்பட்ட கதைகள் களை கட்டும். இன்னொரு பக்கம் மந்திர வாதிகள், ரத்தக் காட்டேரிகள் என்பவை சம்மந்தப்பட்ட கற்பனைகளும் வரவேற்பு பெறும். பழமையை கதையில் சொன்னாலும் அந்த கால கட்டத்தில் தங்களை பொருத்திக் கொண்டு ரசிகர்கள் ரசிக்கத்தான் செய்கிறார்கள். இந்த வகை பழமையும் நம்பிக்கையும் மர்மமும் மனத்தின் ரகசிய ... Full story

சாரல் விருது விழா – செய்திகள்

சாரல் விருது விழா - செய்திகள்
ஜனவரி – 7, சென்னை அண்ணாசாலையில் உள்ள தேவ நேயப்பாவணர் அரங்கத்தில் விளம்பரப்பட உலகின் முன்னனி இயக்குநர்களான ஜேடி-ஜெர்ரியின் தந்தையரின் நினைவாக ராபர்ட்-ஆரோக்கியம் அறக்கட்டளை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் வழங்கும் சாரல் விருது இவ்வருடம் எழுத்துலகின் முன்னனி எழுத்தாளர்களான திரு. வண்ணநிலவன் மற்றும் திரு. வண்ணதாசனுக்குவழங்கப்பட்டது. இவ்விருது சிற்பி வித்யாசங்கர் ஸ்தபதி அவர்களால் உருவாக்கப்பட்ட கலைநயமிக்க விருது சிற்பமும் ஐம்பதாயிரம் ரூபாய் பரிசுத்தொகையும் அடங்கியது. எழுத்தாளர் திரு. வண்ணநிலவனின் “எதையேனும் சார்ந்திரு” பாடலோடு விழாவை திரு. ரவிசுப்ரமணியன் அவர்கள் தொடங்கினார். இயக்குநர் திரு. ... Full story

புத்தக வெளியீட்டு விழா அழைப்பிதழ்

புத்தக வெளியீட்டு விழா அழைப்பிதழ்
  Full story

அகதிகளாக வந்த ஈழத் தமிழர்களை சிறையில் அடைத்தது தவறு: நாம் தமிழர் கட்சி கண்டனம் – சீமான் அறிக்கை – செய்திகள்

அகதிகளாக வந்த ஈழத் தமிழர்களை சிறையில் அடைத்தது தவறு: நாம் தமிழர் கட்சி கண்டனம் - சீமான் அறிக்கை - செய்திகள்
ஈழத் தமிழர்களை சிறையில் அடைத்தது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை பின் வருமாறு: "இலங்கையின் வட பகுதியிலுள்ள புங்குடு தீவில் பிழைப்பிற்கு வழியின்றி, பட்டிணி கிடந்து, பெரும் அச்சுறுத்தலுக்கும், அல்லலுக்கும் ஆளாகி, தங்கள் உயிருக்குப் பாதுகாப்புத் தேடி புதுக்கோட்டை மாவட்டம், ஜகதாபட்டிணம் கடற்கரையில் அகதிகளாக வந்திறங்கிய ஈழத் தமிழ்ச் சொந்தங்களை நீதிமன்றத்தில் நிறுத்தி சிறையில் அடைத்திருப்பது மனிதாபிமானமற்ற, கொடூரமான நடவடிக்கையாகும். சிறு பிள்ளைகளுடன் உயிர் பிழைக்க தமிழ்நாட்டிற்கு வந்தவர்களை ... Full story

முல்லை பெரியாறு : இயக்குநர்கள் சங்க உண்ணாவிரத போராட்டம் ரத்து – செய்திகள்

முல்லை பெரியாறு பிரச்சினையை முன்வைத்து ஒரு மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தை தேனி மாவட்டம் வீரபாண்டியில் வரும் 08 ஜனவரி 2012 அன்று நடத்துவதென தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் அறிவித்திருந்தது. ஆனால் இந்தப் போராட்டத்தை ரத்து செய்து தற்போது இயக்குநர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அறிக்கை பின்வருமாறு: “இந்தப் போராட்டத்திற்கு அனைத்து திரைப்பட சங்களின் ஆதரவையும் இயக்குநர்கள் சங்கம் கோரியிருந்தது. இந்தச் சூழ்நிலையில் ‘முல்லைபெரியாறு அணையின் நீர் மட்டத்தை 120 அடியாகக் குறைக்க முடியாது’ என்றும் 1979ம் ஆண்டு முதல் 136 அடிவரை தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு ... Full story

தானே புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை மதிப்பீடு செய்ய மத்திய அரசுக் குழு வரவேண்டும்: நாம் தமிழர் கட்சி கோரிக்கை – செய்திகள்

தானே புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை மதிப்பீடு செய்ய மத்திய அரசுக் குழு வரவேண்டும்: நாம் தமிழர் கட்சி கோரிக்கை - செய்திகள்
‘தானே’ புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களை நேரடியாக பார்வையிட்டு இழப்பை மதிப்பீடு செய்ய மத்திய அரசுக் குழு வர வேண்டும். இயற்கையின் கோரத் தாண்டவத்தால் ஏற்பட்டுள்ள இந்த இழப்பபை மதிப்பீடு செய்து அதன் அடிப்படையில் முழுமையான நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்று கோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் விடுத்துள்ள அறிக்கை: ”வங்கக் கடற்பகுதியில் உருவான ‘தானே’ புயல் கடந்த வியாழக்கிழமை கரையைக் கடந்தபோது தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் ... Full story

காலச்சுவடு பதிப்பக நூல் வெளியீட்டு விழா – அழைப்பிதழ்

காலச்சுவடு பதிப்பக நூல் வெளியீட்டு விழா - அழைப்பிதழ்
  Full story

உயிர் தியாகம் வேண்டாம் – சீமான் அறிக்கை – செய்திகள்

உயிர் தியாகம் வேண்டாம் - சீமான் அறிக்கை - செய்திகள்
முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட வலியுறுத்தி விஷம் குடித்து உயிர் நீத்த தேனி மாவட்டம், சின்னமனூரைச் சேர்ந்த இராமமூர்த்திக்கு வீரவணக்கம் செலுத்தி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் விடுத்துள்ள அறிக்கை: ”முல்லைப் பெரியாறு அணையை நிச்சயம் காப்போம், உயிர் துறக்க வேண்டாம்: நாம் தமிழர் கட்சி வேண்டுகோள் முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையில் கேரள அரசின் அடாவடித்தனமான அரசியலால் தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரம் ... Full story

உன்னதமானவன் திரைப்படம் – செய்திகள்

உன்னதமானவன் திரைப்படம் - செய்திகள்
ஸ்ரீ சுவாதி கிரியேஷன்ஸ் என்னும் புதிய நிறுவனம் உன்னதமானவன் என்ற திரைப்படத்தை தயாரிப்பாளர் ஜி. சுரேஷ்குமார் பிரம்மாண்ட முறையில் இப்படத்தை தயாரித்துள்ளார். கதாநாயகன் பிரபா, வர்ஷினி, புதுமுகம் ஐஸ்வர்யா, ஜெயப்பிரகாஷ், கஞ்சாகருப்பு, சிங்கம் புலி, மனோபாலா, ‘பருத்திவீரன்’ வெங்கடேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். மதுரையை மையமாக வைத்து எடுத்த வெற்றிப்படங்களின் வரிசையில் இதுவும் வெற்றியடையும். காதலின் வேறு ஒரு பரிமாணத்தை சொல்லும் இது ஒரு புது கதைக்களம் மதுரை, திண்டுக்கல் சுற்றியுள்ள அழகான இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. காமெடிக்கு கஞ்சா கருப்பும், சிங்கம்புலியும், போட்டி போட்டு ... Full story

சேவாலயா பள்ளியில் கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தின விழாக் கொண்டாட்டம் – செய்திகள்

சேவாலயா பள்ளியில் கிருஸ்துமஸ்  மற்றும் புத்தாண்டு தின விழாக் கொண்டாட்டம் - செய்திகள்
திருநின்றவூர் அருகே உள்ள கசுவா கிராமத்தில் அமைந்துள்ள சேவாலயா சேவை மையத்தில் 27.12.2011 அன்று காலை 11.00 மணியளவில் கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தின விழாக் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு சிறப்பு விருந்தினராக டாக்டர்.ஜெகன் மூர்த்தி, (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், அரக்கோணம்) அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார். மனிதனின் வேண்டுதல்கள் பலவாயினும் வேறுபாடுகள் இறைவனிடம் இல்லை. இந்த எண்ணம் இறைவனிடம் இருப்பதால் தான் இந்த சிறிய கிராமத்தில் சேவாலயாவை திரு.முரளிதரன் மூலமாக இறைவன் நிறைவேற்றியிருக்கிறார். மேலும் இந்த குழந்தைகளின் சிரிப்பினிலே நான் இறைவனைக் காண்கிறேன். ஏழைகளாய் பிறப்பது தவறல்ல. அவ்வாறு ... Full story

நார்வே தமிழ் திரைப்பட விழா – அறிவிப்பு

நார்வே தமிழ் திரைப்பட விழா - அறிவிப்பு
கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறப்பாக நடைபெற்று வந்த நார்வே தமிழ் திரைப்பட விழா மூன்றாவது முறையாக வரும் ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நார்வே நாட்டின் தலைநகர் ‘ஆஸ்லோ’ (Oslo) மற்றும் ’லாரண்ஸ் கூ’ (Lawrence Co) ஆகிய நகரங்களில் நடைபெற இருக்கிறது. ஐந்து நாட்கள் நடைபெற இருக்கும் இத்திரைப்பட விழா, கடந்த இரண்டு ஆண்டுகளை விட, முற்றிலும் வேறுபட்ட பல புதிய நிகழ்ச்சிகளுடன் நடைபெற ... Full story

முல்லைப் பெரியாறு போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெறுக – சீமான் கோரிக்கை – செய்திகள்

முல்லைப் பெரியாறு போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெறுக - சீமான் கோரிக்கை - செய்திகள்
முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையில் கேரள அரசின் தமிழர் விரோத போக்கைக்கண்டித்து போராடியவர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளை இரத்து செய்ய வேண்டும் என்று கோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கை: ”முல்லைப் பெரியாறு அணையின் உறுதித் தன்மையை முழுமையாக ஆய்வு செய்ய நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் தலைமையில் இந்திய உச்ச நீதிமன்றம் அமைத்த அதிகாரமிக்க நிபுணர்கள் குழு அணைப் பகுதியில் ஆய்வு நடத்திவரும் நிலையில், ... Full story
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.