Author Archive

Page 1 of 612345...Last »

விடலைப் பாட்டு

-அண்ணாகண்ணன் விடலை அவன் விட்டு விடலை - விளையாடலை விடலை அவன் விட்டு விடலை கடலை போடுவான் ஒரு கடலை போட்டபடி மனக் கடலைத் தேடுவான் பாற் கடலை படலை ஏதும் அகப் படலை - இன்னும் புறப்  படலை உள்ளம் சுகப் படலை சுடலை துன்பம் அது சுடலை - தோல்வி அது சுடலை வாழ்வில் இலை சுடலை திடலை ஓய்ந்து விழுந் திடலை - எங்கும் ஒளிந்... Full story

மலேசியத் தமிழ் எழுத்துலகம்: நூற்று முப்பது ஆண்டுகளின் வரலாறு

மலேசியத் தமிழ் எழுத்துலகம்:  நூற்று முப்பது ஆண்டுகளின் வரலாறு
ரெ.கார்த்திகேசு (2006இல் தமிழ் சிஃபி சார்பில் தமிழ்ப் புத்தாண்டுச் சிறப்பிதழ் ஒன்று தயாரித்தேன். அதில் நாடுகள்தோறும் தமிழ் என்ற கருப்பொருளில் கட்டுரைகள் பெற்று வெளியிட்டேன். அதற்கு மலேசியாவில் தமிழ் என்ற கருப்பொருளில் கட்டுரை வேண்டி, ரெ.கா.வை அணுகினேன். மலேசியத் தமிழ் எழுத்துலகம்: நூற்று முப்பது ஆண்டுகளின் வரலாறு என்ற தலைப்பில் அருமையான கட்டுரையினை வழங்கினார். அவரது மறைவுக்கு வல்லமை தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறது. அவரது நினைவைப் போற்றும் ... Full story

யோகாரம்

சிங்காரம் உண்டு சிருங்காரம் உண்டு சிறுகாரம் ஏதுக்கடி! ஓங்காரம் உண்டு ரீங்காரம் உண்டு ஆங்காரம் ஏதுக்கடி! அழகாரம் உண்டு அலங்காரம் உண்டு அதிகாரம் ஏதுக்கடி! உபகாரம் உண்டு பரிகாரம் உண்டு கடிகாரம் ஏதுக்கடி! ஓகாரம் என்ன! ஏகாரம் என்ன! ஆகாரம் நீதானடி! ஊகாரம் ஆகி, ஒளகாரம் ஆன அஃகாரம் நீதானடி! மீகாரம் வெல்லும் மோகாரம் கொண்ட நாகாரம் நீதானடி! தேகாரம் வென்று ராகாரம் கொண்ட யோகாரம் நீதானடி! Full story

ஏழாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்

ஏழாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்
சிந்தனை, செயல், முன்னேற்றம் என்ற நோக்குடன் துடிப்புடன் நடைபோடும் வல்லமை மின்னிதழ், ஆறு ஆண்டுகளை நிறைவு செய்து, 2016 மே 16 அன்று, ஏழாம் ஆண்டில் நுழைந்துள்ளது. வல்லமையில் கடந்த ஓராண்டில் சுமார் 2500 இடுகைகளும் (மொத்தம் 10,459) 1500 பின்னூட்டங்களும் (மொத்தம் 11,161) வெளியாகியுள்ளன. இவை அனைத்தையும் குறிப்பிடுவது இயலாது எனினும் சிலவற்றைக் குறிக்கலாம். ஜெயபாரதனின் அறிவியல் கட்டுரைகள், எகிப்திய பிரமிடுகள் உள்ளிட்ட உலக அதிசயங்கள் பற்றிய கட்டுரைகள், நாகேஸ்வரி அண்ணாமலையின் சமூகவியல் கட்டுரைகள், இராம. இராமமூர்த்தியின் ... Full story

ஔவை நடராசன் – 81

ஔவை நடராசன் - 81
புகழ் பூத்த தமிழறிஞர் ஔவை நடராசன் அவர்கள், அண்மையில் முத்து விழா கண்டுள்ளார். 80 வயது நிறைந்து, 81ஆம் ஆண்டில் நுழைந்துள்ளார். கனிந்த வயதில், நிறைந்த வாழ்வில்,  செறிந்த அனுபவங்கள் கொண்ட அவருடன் அண்ணாகண்ணன், 2016 மே 2ஆம் நாள் நிகழ்த்திய தொலைபேசி உரையாடல் இங்கே. https://soundcloud.com/annakannan/81a-1   Full story

மொழியைப் பெயராகக் கொண்டோர், வேறு யாரும் உண்டா?

தமிழர்களுள் பலர் தமிழ், தமிழரசு, தமிழரசன், தமிழரசி, தமிழ்ச்செல்வன், தமிழ்ச்செல்வி, தமிழண்ணல், தமிழமுதன், தமிழினி, தமிழினியன், தமிழவன், முத்தமிழ், மறத்தமிழ் வேந்தன், செந்தமிழ், இளந்தமிழ், செந்தமிழ்ச் செல்வி, செந்தமிழ்ச் செல்வன்... எனப் பலவாறாகப் பெயர் சூட்டிக்கொண்டுள்ளனர். மொழியைப் பெயராகக் கொள்ளும் இத்தகைய வழக்கம், வேறு எந்த மொழியினரிடமாவது உண்டா? Full story

தெலுகு (Telugu) > தெலுங்கு?

கேள்வி: தெலுகு (Telugu) என்பதைத் தமிழில் தெலுங்கு எனப் பலுக்குவது ஏன்? Full story

குப்பைகள் – பேரிடர்க் காலத்தின் சாதக அம்சம்

குப்பைகள் - பேரிடர்க் காலத்தின் சாதக அம்சம்
அண்ணாகண்ணன் தமிழகத்தில் வெள்ளம் வடிந்த பின்னும் குப்பைகளை அகற்றுவது, ஒரு பிரமாண்டமான பணி. அதிலும் இந்தக் குப்பைகளை எங்கே கொண்டு கொட்டுவது என்பதும் கேள்விக்குறி. ஏற்கெனவே உள்ள குப்பை மலைகள், சாதாரண காலத்திலே சேரும் அன்றாடக் குப்பைகளுக்கே திணறுபவை. ஒவ்வொரு வீட்டிலிருந்தும் வண்டி வண்டியாக வெளியேறும் குப்பைகளை இங்கேயே கொட்டினால், குப்பை மலையின் சுற்றுவட்டம் தான் விரியும். அல்லது ஆங்காங்கே புதிய புதிய குப்பை மலைகளை உருவாக்குவதும் சரியான தீர்வு இல்லை. ... Full story

‘கலாம் ஆகலாம்’

'கலாம் ஆகலாம்'
அண்ணாகண்ணன்   2002இல் நான் எழுதி, கங்காராணி பதிப்பகம் வெளியிட்ட, 'கலாம் ஆகலாம்' சிறுவர் பாடல் நூலின் தலைப்புப் பாடல்       Full story

ஆறாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்

ஆறாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்
அண்ணாகண்ணன் வல்லமை மின்னிதழ், 6ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள இந்தத் தருணத்தில், நாம் கடந்து வந்த பாதையைச் சற்றே திரும்பிப் பார்ப்போம். இன்று வரை சுமார் 8 ஆயிரம் இடுகைகள், 9.7 ஆயிரம் பின்னூட்டங்கள், 2.2 லட்சம் வாசகர்கள், 8.1 லட்சம் பக்க நோக்குகள் ஆகியவற்றுடன் வல்லமை தொடர்ந்து வளர்ந்து வருகிறது. 161 நாடுகளிலிருந்து வாசகர்கள்,வல்லமைக்கு வந்திருந்தாலும், 70 நாடுகளுக்கும் மேலிருந்து குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் வந்துள்ளார்கள். இந்தியா, அமெரிக்கா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், இங்கிலாந்து, கனடா, அமீரகம், ஆஸ்திரேலியா, ஜெர்மனி நாடுகள், இதே வரிசையில் முதல் ... Full story

படக் கவிதைப் போட்டி – 5இன் முடிவுகள்

அண்ணாகண்ணன் தமிழக - கேரள எல்லையில், ராமக்கல்மேடு என்ற கிராமத்தில் உள்ள குறவன் - குறத்தி சிலையை அமுதா ஹரிஹரன் படம் எடுத்தார். அதை நமது படக் கவிதைப் போட்டிக்குச் சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்தார். இந்தப் பொருள் பொதிந்த படத்துக்கு வல்லமை அன்பர்கள், நயமான கவிதைகளைப் படைத்துள்ளனர். சிலையாய் அமர்ந்துள்ள இணையர், எதிரே பசுமை போர்த்திய மலைத் தொடர், மேலே வெண் மேகம் தவழும் நீல வானம் என ஒரு ... Full story

நித்திலமே நித்திலம்

நித்திலமே நித்திலம்
அண்ணாகண்ணன் நித்திலமே நித்திலம் நின்றொளிரும் ரத்தினம் புத்தம்புது புத்தகம் புத்துணர்வுப் பெட்டகம் கொத்துமலர் கோகிலம் குதித்துவரும் சாகசம் தத்திவரும் பூரதம் சிரித்துவரும் சித்திரம் ஆடிவரும் அற்புதம் ஓடிவரும் உற்சவம் தேடிவரும் காவியம் தீட்டாத ஓவியம் பாடிவரும் பாசுரம் நாடிவரும் நாட்டியம் கூடிவரும் மங்கலம் கோடியின்பம் நித்திலம். ஆருயிரின் ஆரமுதம் ஆசைதரும் பேரமுதம் ஓருலக வேரின்பம் - ஈர் ஏழுலகப் பேரின்பம் ஊருலகம் பாராட்டும் உச்சி தனில் சீராட்டும் ஆரமடி முத்தாரம் - நீ அகிலத்தின் ஆபரணம். Full story

படக் கவிதைப் போட்டி – 4இன் முடிவுகள்

படக் கவிதைப் போட்டி - 4இன் முடிவுகள்
கிரிக்கெட்டின் ஆடுகளத்தில் பந்து எங்கே தொட்டு , எங்கே செல்கிறது என்று பார்ப்பதைப் போல், கவிதையிலும் சொல் எங்கே 'பிட்ச்' ஆகிறது என்று பார்க்க முடியும். இந்தப் படத்துக்கு அன்பர்கள் எழுதிய கவிதைகள் ஒவ்வொன்றிலும் அன்பின் நறுமணம் கமழ்கிறது. கவிதையின் கூர்மை, நேர்த்தி, செம்மை ஆகியவற்றில் சற்றே முன்பின் இருந்தாலும் காதலின் தனித்த சுடர், இந்த வரிகளை மேலும் ஒளிரச் செய்கின்றது. காட்சியில் உள்ளதை அப்படியே எழுத்தில் வடிக்கச் சிலர் முயன்றுள்ளார்கள். காட்சியை மையமாக வைத்து, அதன் வேர்களிலும் கிளைகளிலும் பலர் பயணித்துள்ளார்கள். Full story

இனிதினிது

இனிதினிது
இனிதினிதினிதினிதினிதினிதினிது எமதெமதெமதெமதெமதெமதெமது அமுதமுதமுதமுதமுதமுதமுது எமதெமதெமதெமதெமதெமதெமது Full story

படக் கவிதைப் போட்டி – 3இன் முடிவுகள்

படக் கவிதைப் போட்டி - 3இன் முடிவுகள்
அண்ணாகண்ணன் சிலை வணக்கம் புரியும் சிறுவனின் மனத்தில் புகுந்து, கலை மணக்கும் கவிதை வடித்த அன்பர்களுக்கு வாழ்த்துகள். புதுவை சரவணன் எடுத்த நிழற்படத்தின் சாரத்தை நிஜப் படமாய் எழுத முயன்றீர்கள். தெய்வத்தை வணங்கும் தெய்வம் என்று முகநூலில் ராமன் ஜனனியும் ஒரு தெய்வம் கடவுளை வணங்குகிறது…! என்று வேலுச்சாமியும் வர்ணித்தது, இந்தப் படத்திற்கான அழகிய தலைப்பு. வீட்டுச் சிக்கல்களையும் நாட்டுச் சிக்கல்களையும் சொந்தச் சிக்கல்களையும் தீர்க்க, இந்தச் ... Full story
Page 1 of 612345...Last »
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.