Author Archive

Page 1 of 512345

குழந்தையின் குரல்

குழந்தையின் குரல்
 பெருவை பார்த்தசாரதி                     கோவிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாமென்பர் குழந்தையில்லா வீட்டில் குதூகல இருக்காதெனலாம்..!   குடும்பமொன்றில் குழந்தையின் குரலொன்று கேட்கநீ கோடி புண்ணியம் செய்திருத்தல் வேண்டுமம்மா..!   பெருஞ்செல்வ மெளிதில் கிடைக்கும் குழந்தையெனும் அருஞ்செல்வம் இறையருளால் மட்டுமே கிட்டும்..!   மண்டியிட்டு மண்சோறு உண்டபல நாட்கள்.. வேண்டியவரம் கேட்டு கும்பிட்டபல கோவில்கள்..   உள்ளம்குளிர நீராடிய புண்ணிய திருக்குளங்கள்.. பிள்ளை வரம்வேண்டி பித்தாக அலைந்த நாட்கள்..   இவை யனைத்தும் வீணாகவில்லை யொருநாள்.. அவை யனைத்துப் பலனுமுடன் பலித்தது..!   கும்பிடவந்த சாமியிடம் குழந்தைவரம் கேட்கும்போது.. குழந்தையின் குரல்கேட்டு திடுக்கிட்டுத் திரும்பினேன்..   வேண்டுவோர்க்கு வானத்தில் எழும் அசரீரிபோல.. வேண்டாமென வீசிச்சென்ற குழந்தையினழு குரலொடு..   அரும்புமலர் சோலைதனில் இறையருட் கொடையால்.. ஆதரவின்றிக் கிடந்தன்று பிறந்த குழந்தையொன்று..!   பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளைபோல்.. பெரிதாக அரியசெல்வமென கிட்டிய தெனக்கும்..!   அன்னையின் பிரசவலிகூட மறக்கும்...குழந்தையின் அழுகுரல் கேட்டவுடன்..பட்டதனைத்தும் மறந்தேன்..!   குறையேதும் வலியேதும் இல்லாமல் குழந்தையொன்று.. இறையருளால் பெற்றதுபெரும் பேறென்றன் பாக்கியமே..!   கூப்பிடும் குரல் கேட்டு கண்ணன் வந்ததுபோலென் குழந்தையின் குரல்கேட்டால் ஓடோடி வருவேன்நான்   குழலினிது யாழினிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர் . . . .எனும்   ஐயன் வள்ளுவன் கூற்றுக் கிணையாக ஐயமுற வலிமை சேர்த்தோர் ஆருமில்லை   இவ்வுலகில்..! ==================================================   தினமணி கவிதைமணி தந்த தலைப்பு:: “குழந்தையின் குரல்”   நன்றி கவிதைமணி வெளியீடு::22-05-17   படஉதவி:: கூகிள் இமேஜ்   Full story

பிஞ்சு மனங்களும் செல்ல மழையும்..!

பிஞ்சு மனங்களும் செல்ல மழையும்..!
பெருவை பார்த்தசாரதி                     நஞ்சுக்கொடி மூலம்தான் பிள்ளையும் தாயுமோர்.. ..........நல்லுறவுக்கு மேன்மையாய் உலகுக் குதாரணமாம்.! அஞ்சு விரலாலவள் தானீன்றமகவை அனுதினமும்.. ..........ஆரத்தழுவி முத்தம் கொடுக்கும் அன்புத்தாயாம்.! விஞ்சி நிற்குமன்பைதன் பிஞ்சுமனங்களில் தேக்கி.. ..........வெள்ளை மனதுடன் வெளிப்படுத்துவாள் அன்னை.! பிஞ்சுக்குழவிக்கு கொஞ்சி அமுதூட்ட!...அழைப்பாள்.. ..........ஓடும்பிறை நிலவையும்! தூவும்செல்ல மழையையும்.!   துஞ்சும் குழவியழகைத் தன்கருப்பையுள் உணர்ந்து.. ..........தாலாட்டுப் பாடுபவள்தான் தாயெனும் தெய்வமாம்.! மிஞ்சுகின்ற துன்பமும் கவலையுமவள் மனதில்.. ..........மறைந்தோடும்...நொடியில் தன்மகவை ஈன்றவுடன்.! அஞ்சும் குழந்தையை அரவணைக்க அவளழைத்தால்.. ..........ஆவலோடு ஆவின் கன்றுபோலத் தவழ்ந்தோடிவரும்.! பிஞ்சுமனங்கள் பெரிதே மகிழ்ச்சியுற!..வான்முகிலும்.. ..........பிறைநிலவும் மழைத்துளியும் அழையாமலே வருமாம்.!   அழுமுன்னே குழந்தையின் தேவையெது வெனவறிந்து ..........அமுதூட்டும் செய்கையால் அவனியிலோங்கி நிற்பாள்.! தழுதழுக்கு மன்பைதன் தொண்டையுள் அடக்கும்.. ..........தாய்காட்டும் அன்பைவிட மேலாகும் அன்பிலையாம்.! முழுநிலவை ... Full story

சேர்த்து வைத்த கனவு..!

சேர்த்து வைத்த கனவு..!
பெருவை பார்த்தசாரதி பார்த்தமுதல் நாளிரவுமுதல் கனவில்வந்த நீதானெனக்கு ..........பத்தினியாய் ஆவாயென தினமும்நான் கனவுகண்டேன்.! ஊர்கூடி தேரிழுக்கும் வழக்கம்போல் உன்னைநானும்.. ..........உற்றாறுறவினரொடு ஊரறியமணப்பது போல் கனவுவரும்.! கோர்க்கின்ற பூக்களெல்லாம் நாருடன் இணைவதுபோல் ..........கொண்டாடி மகிழத்தான் தினமும்நான் கனவுகண்டேன்.! சேர்த்துவைத்த கனவெலாம் சிலநாளில் நனவாகுமெனச்.. ..........சென்றயிரவுகள்.....உறங்காததாக ஓராயிர மானதம்மா.!   உருவத்தில் பெண்ணாய் உலகழகியாய்நீ வலம்வரவேணும்.. ..........உனைப்படைத்திட்ட பிரம்மனே பெருமூச்சு விடவேணும்.! பருவநிலா புருவமுடன் படைத்திவளைப் படைத்தவனும்.. ..........பாவலன்நானும்..கண்ட கனவுக்காட்சி நனவாகவேணும்.! ஒரு எண்ணிக்கையில் கண்டகனவுகள் கோடியானாலும்.. ..........ஓரிரவுசேர்த்து வைத்தகனவுமொரு நொடியில் மறையும்..! வருத்தமுடன் குமுறுகிறேன்.!..வருவாயாநீ நிஜத்துடன்.. ..........வாஞ்சையொடு வேண்டுகிறேன் இறைவாநீ அருள்வாயா.!   எண்ணத்தில் தோன்றுவதில் ... Full story

நிலைக்கும் என்றே..!

நிலைக்கும் என்றே..!
 பெருவை பார்த்தசாரதி                     நிலையில்லா உலகினிலே நீடித்து வாழ்வதற்கே.. ..........நில்லாமல் பெரும்பொருளீட்ட ஓயாமல் ஓடுவார்.! நிலையில்லாத உடல்தனையே நித்தம் ஓம்புவார்.. ..........நாறுகின்ற மெய்யுடலை நாளும்பேணிக் காப்பார்.! நிலத்தில் புதையும் பிணத்தை மெய்யெனநினைத்து.. ..........நெடுநாட்கள் வாழும்கனவில் தலைகீழாய் நிற்பார்.! நிலைக்கும் என்றே நினைப்பார்.!எதுவுமிவ்வுலகில்.. ..........நிலையிலை! என்பதைறியார் தம்வாழ்வு முடிவுவரை.!     மாறுகின்ற உலகினில் மாற்றமொன்றே நிரந்தரமாம்.. ..........மனதினிலிக் கருத்தை இறுத்தியே பழகவேணுமப்பா.! வீறுகொண்ட இளமைகூட சட்டெனக் கழிந்துவிடுமது.. ..........வீணாகமல் வாழ்க்கையில் கடமை யாற்றவேண்டும்.! வேறுலக்கு வெற்றுடனே போவோமென அறிந்தும்.. ..........ஊரையே விலைக்குவாங்க நினைப்பார்கள் மூடர்.! நீறாகு இவ்வுடலைநம்பி நிலையில்லாது மனம்தாவ.. ..........நினையாதீர்..! எதுவுமிவ்வுலகில் நிலைக்கும் என்றே.!     இனத்திலொற்றுமை ஓங்கவே இப்பிறவி எடுத்தோம்.. ..........எனுமுணர்வு நிலைக்கவே..இறைவனருள் வேண்டும்.! மனதிலிவ்வுறுதி ... Full story

திருவோணமெனும் பெருவிழா..!

திருவோணமெனும் பெருவிழா..!
ஆவணியஸ்தம் தொடங்கிய திருவோணத் திருவிழவில்.. ............அரியுருவாகி அரியைழிந்தவனுக்கோர் அற்புத விழாவாம்.! தாவணியில் பெண்கள்தனை பட்டாடையால் அலங்கரித்து.. ............மண்ணுக்குள் மாய்ந்த மாவலியையழைக்கும் விழாவாம்.! தாரணியெங்கும் தசநாட்கள் கொண்டாடும்...மாவலியாமவன்.. ............மூன்றாவதடிக்கு முன்னந்தலையைக் காட்டிய விழாவாம்..! பேரணியாய் மகிழ்வுடனே திரளுவாரங்கே மாவலிராஜாவின்.. ...........பெருவரவென்று..!பெருவிருந்தான “ஓணசத்யா” உணவுடன்.! காம்பொடுகூடிய கடிமலர்கள் எல்லாம் பெருங்கூட்டமாய்.. ............காரணத்தோடு...தோவாளை யெனுமிடத்திற்கு கடுகிவருமாம்.! கூம்பின்வடிவாய் ஆங்காங்கே வந்தமலர்க் கூட்டமெலாம்..... Full story

கண்ணால் காண்பதும..!

கண்ணால் காண்பதும..!
பெருவை பார்த்தசாரதி                   அண்டஞ் சூழேழுலகை அற்புதமாய்ப் படைத்தாங்கே.. ..........அரியயுயிர் வகையனைத்தையு முயிர்ப்பித்தாய்...அதை உண்டாயுன் வாயினால் பிரளயமெனும் செயலால்.! ..........உருவாக்கும் அழிக்கும்காக்கு மனைத்துமுன் செயலே அண்டமுழுதும் அற்புதங்கள் நிகழ்த்தி ஆச்சரியமிகு.. ..........அரியதிரு விளையாடலால் வியனுலகை இயக்குகிறாய்.! கண்ணுக்குத் தெரியாத கருப்பொருளே.! அற்புதமே.! ..........கடவுளுனைக் கண்ணால் காண்பதும் முடியுமா..?     கண்ணில் தெரியும் காட்சிகளுலவும் புவியில்யாவும்.. ..........கடவுள் படைத்ததனைத்தும் மெய்யெனும் அதிசயமே.! கண்ணையும் மனதையும் கவருகின்ற மலையருவி.. ..........கடந்துவரும் நடையழகில் கடல்சேர்வதும் அற்புதமே.! வண்ண வண்ணக் கோலம்கொண்ட மயில்தன்தோகை.. ..........விரித்து கருமேகம் கண்டவுடனாடுவதும் ஆச்சரியமே.! எண்ண எண்ண இனிக்கும் இறைவனின் ஆலயமென.. ..........எதுவும்கண்ணால் காண்பதும் கவிதையாகும் கவிநெஞ்சில்.!     பாக்கும்கமுகும் தேக்கும் தென்னையும் நிறைந்த.. ..........பசுமைமிகு தோட்டமதின் மேல்வளைந்த ... Full story

என்ன தவம் செய்தேன்..!

என்ன தவம் செய்தேன்..!
  பெருவை பார்த்தசாரதி                 ஒருமித்த கருத்துடனே யொருசேரயிருவரும் கைகோர்த்து.. ..........ஒப்பற்ற மணவாழ்க்கை.....மகிழ்ச்சிதான் ஆயினும்.. கருசுமந்து வரும்நாளைக் கருத்துடனே எதிர்பார்த்து.. ..........கடமை களெதிலுமே மனமிசைய வில்லையம்மா.! கருப்பையில் உருவாகுமன் நன்னாளை ஆவலுடன்.. ..........கன்னத்தில் கைவைத்துக் காத்திருப்பேன் எந்நாளும்.! உருவாகும் கருவுக்கேநான் எருவானாலும் பரவாயில்லை.. ..........கருத்தரிக்க இப்பிறப்பில் என்னதவம் செய்யவேணும்.!     வீடுவாசலுடன் தோட்ட மதிலிருந்தால் போதுமா.. ..........விளையாடிமகிழ அங்கேயோர் மழலை வேண்டாமா.? கூடுகட்டி வாழும் உயிரினமுமதன் குடும்பத்துடன்.. ..........கொண்டாடி மகிழ்வதை ஏக்கத்தோடு பார்க்கிறேன்.! துடுப்பில்லா ஓடம்போலே தடமின்றி அலைகிறேன்.. ..........துணையுடன் கோவில் கோவிலாக குழந்தைவேண்டி.! ஆடும் தொட்டிலிலெம் குழந்தையைக் காண்பதற்கே.. ..........ஆரென்ன தவம்செய்ய வேணுமென்பதை யறியோம்.!     இல்லை யிவளுக்குப் ... Full story

மழை நீர் போல..!

பெருவை பார்த்தசாரதி   ஞாலத்தே பெறும்ஞானமும் சிந்திக்கும் திறனும்.. ..........தானாகவந்து உன்னிடத்தில் சேர்ந்திடாது தம்பி.! காலத்தே பெய்யும் மழைநீர் போல..யெக் ..........கலையுமெதுவும் இயல்பாய் நம்மிடத்தே வாராது.! காலமாற்ற மென்பதெல்லாமே நம்கையில் தான்.. ..........கனவுகள் நனவாவதும் நம்செய்கை யினால்தான்.! பலமான சிந்தனையும் எழுத்தும் பாருலகிலுன்.. ..........பிறந்தஊர் பெருமை பாடவும் கைகொடுக்கும்.!   கொஞ்சம் மழைநீர் பூமியில் விழுந்தாலேபோதும்.. ..........நஞ்சைபுஞ்சை நிலமெலாம் வளம் கொழிக்கும்.! பஞ்சம் பட்டினியால் பரிதவிப்போர் ஆருமிலை.. ..........நான்கு திங்கள் மழைநீரின் கொடையருளாலே.! அஞ்சிட வேண்டா ஆருமிங்கே..எங்களூர்.. ..........அயலாருக் கடைக்கலம் கொடுப்பதற் கஞ்சாது.! பஞ்சுக்கிடங்கும் பருத்தி அரிசி ஆலையோடு.. ..........பஞ்ச அருவியின் பெருமைபுகழை நீரறிவீர்.!   குயிலாடும் மரம்செடி கொடியினை வருடியே.. ..........குழலோசை போலவே ஒலியெழுப்பி வரும்.! மயிலாடும் உயர்மலைப் பாறைதனில் எழுந்தே.. ..........மணம்பரப்பி வயல்வெளியில் துள்ளியோடும்.! ஒயிலாக மழைநீர்போலத் தவழ்ந்து வந்துமனம்.. ..........ஒன்றிச் செயல்படவும் வைக்குமது.!அதிகாலைத் துயிலெழ வைக்குமந்த மலையருவியின் சாரலது.. ..........தழுவிடும் பாறைக்கு மட்டுமேயது ... Full story

கடல் பயணம்..!

கடல் பயணம்..!
பெருவை பார்த்தசாரதி                    தெம்பிருந் தாலுடலில்..தேர்கூடத் தனியேயிழுக்கலாம்.. .......தெம்புடனுறுதியும் வேணும்..செல்லவே கடல்பயணம்.! கொம்புபோல சீவிய கட்டுமரமதைக் கடலில் செலுத்த.. .......கையிரண்டில் கம்புகொண்டு கடல்நீரைத் தள்ளினால்.. அம்புபோலச் சீறிப்பாயும்...ஆங்கே கடல்வெளியில்.! .......அப்போதே வீசிச் செல்வோம் மீன்பிடிவலையை.! வெம்பிய மனதுடன்தான் மீன்பிடிக்கச் செல்கிறோம்.. .......எம்முயிர் உடைமைக்கே உத்திரவாத மில்லையப்பா.!   ஓடும் மரக்கலம்தான் அதொருவழியேது மில்லாத.. .......கடல்பயணம்..வழிதவறிச் சென்றால் கரைசேராது.! ஆடுகின்ற பாய்மரத்தில் சிலசமயமெம் வாழ்க்கை.. .......ஆட்டம்கூட பாதியிலே முடிந்துவிடு மவலமுண்டு.! ஓடும் ராட்சதலை நடுவேகடும் கடல்பயணமதில்.. .......ஓயாது உழைத்தால்தான் ஒருவேளை பசியடங்கும்.! தேடுகின்ற மீன்களெலாம் ஓரிடத்தில் கிடைத்தாலும்.. .......தீராதெம் வாழ்வாதாரப் பிரச்சனை கடலுளவரை.!   கப்பலிலே சீறிவரும் ஸ்ரீலங்கா கடற்படையது.. .......கபடமில்லா மீனவனை அடித்துக் கைதுசெய்யும்.! தப்பேதும் செய்யாதெங்கள் ... Full story

ஆடிப் பெருக்கு..!

ஆடிப் பெருக்கு..!
  பெருவை பார்த்தசாரதி                         ஆற்றுப் பெருக்கினால் குளம் வாய்க்கால்.. ......அனைத்தும் நீர்நிரப்பி வளமாக்கும் வேணியே.! சேற்றுடன் கதிரும் தலைசாய்க்கு முனைக்கண்டு.! ......செங்கதிரோன் முகம்பார்க்கவுன் நீர்நாடி வருவான்.! காற்றோடு வந்தசெய்தி காதிற்படா கலைந்ததுபோல்.. ......காலத்தே வருமழையும் வாராது பொய்த்ததின்று,! ஊற்றாக எழுமுன் கருணையை எதிர்பார்த்து.. ......ஊருணியும் வயலும் வாய்பிளந்து எதிர்நோக்கும்  .! ஆற்றுமணல் திருட்டால் அழிந்தது வயல்வளமே.! ......ஆறறிவால் வந்ததெலாம் நமக்கென்றும் வினையே.!   ஆடித்திங்கள் ஈராறில் பொங்குமுன் புனலில்.. ......அமிழ்ந்து நீராடிக்களித்த ஆனந்தம் எங்கே.? ஓடிவயல் நிறைக்குமுன் வள்ளல் நீரெல்லாம்.. ......ஒளிந்து கொண்ட இடத்தைத்தான் யாரறிவர்.? வாடிய முகத்துடன் வறண்ட காவிரிதனை.. ......வாட்டமுடன் காண கல்நெஞ்சம் வேணுமம்மா.! நாடியுனை ஆராதித்து நாங்களிட்ட ... Full story

ஒரு புள்ளியில் தொடங்கிய பயணம்..!

ஒரு புள்ளியில் தொடங்கிய பயணம்..!
பெருவை பார்த்தசாரதி                           இலக்கில்லாமல் யாவரும் வாழ்வில் பயணித்தாலந்த ......இல்வாழ்க்கை யென்பதொரு போதும் பயன்தாரா.! இலகுவாகப் வாழ்வின் உச்சம்தொட நினைத்து ......இதுதான் வழியென வகுத்துக் கூறவுமுடியாது.! பலபிறவி எடுத்தாலும் மாந்தர்பிணி யென்றும்தீராதாம்.! ......சிந்தனைசெய்து சீரும்சிறப்புமாக வாழ்வதற்கு மனித குலத்திற்கே மகத்தான வரமாகுமந்தச் சிந்தனையே.. ......ஒரு புள்ளியில் தொடங்கும் புனிதப்பயணமாகும்.!   கருப்பையில் தோன்று மதற்குள்ளொரு புள்ளியாகத் ......தொடங்குகிற வாழ்க்கை பயணமதன் முடிவுவரை.. கருத்தோடு வாழக் கற்கவேண்டு மொருபாடம்.! ......கருவறைமுதல் கல்லறைவரை கற்றலே வாழ்க்கை.! பொருள் பொதிந்த வாழ்வதனை வாழ்வதற்கேநாம்.. ......பெற்றிடுவோம் அனுபவங்கள் புதிதா யனுதினமும்.! ஒருநிறுத்தமிலா பயணம்தான் வாழ்க்கை என்றாலது.. ......புள்ளியிலா வாக்கியமாயது இனிதே தொடரவேணும்.!   உமையாளின் துணையின்றி ஈசனுலகாள முடியாது.! ......வாழ்க்கைத் துணையின்றி ... Full story

தூரத்தில் கேட்குது..!

தூரத்தில் கேட்குது..!
பெருவை பார்த்தசாரதி                       மண்ணில் உதித்த மாமணியேயென் ரத்தினமே.. .....மணமுடித்த கையுடனே நீயுந்தான் வந்துபிறந்தாய்.! கண்ணில் உருளும் கண்மணியாயுனை காத்தாலும்.. .....காலதேவன் அழைப்பால் நீள்வாழ்வு கிட்டவில்லை.! மின்னிடுமுன் முகத்தைத்தான் சட்டென மறப்பேனா.. .....மனதைப் பின்னிடுமுன் நினைவலைகள் நீங்கிடுமா.! புண்ணிய உலகுக்கு பிறந்தவுடனே சென்றுவிட்டாய்.. .....புரண்டழுமென் பேய்ச்சத்தம்...தூரத்தில் கேட்குதா.?   பட்டால்தான் துயரமென்பது தெரியுமென்பார் நான்... .....பட்டகடன் எத்துணையோயுனை மகவாய்ப் பெறுதற்கே.! சுட்டால் வரும்தழும்பு வாழ்நாளிலழியா தென்பாருனை .....சுருட்டிக் கொண்டுசென்ற யமனுக்கே இதுதர்மமா.? கட்டழகு குலையாத கண்ணே நீயென் கண்ணைவிட்டு .....காததூரம் போய்விட்டாய் காலனுனை அழைத்ததால்.! மொட்டவிழ்ந்து மலராகுமுன் யமனுனுலகுக்குச் சென்றாலும் .....எட்டாத தூரத்தில்கூட கேட்குமென் அலறல்சத்தம்.!   எரிகின்ற எரிதழலில் ... Full story

இன்றைய தாலாட்டு..!

இன்றைய தாலாட்டு..!
  பெருவை பார்த்தசாரதி                           தந்தை உயிர்கொடுத்து தாயென் உருவமெடுத்தென் சிந்தைமகிழ விந்தைமிகப் பிறந்தவனே தாலேலோ.!   சஷ்டியில் விரதமிருந்து கருப்பையில் உருவாகி திருஷ்டி கழிக்கவந்தவனே ஆராரோ...ஆரிரரோ.!   அரசனும் வேம்பையும் பரவசமாய்ச் சுத்திவந்து அரிதாயுதித்த அற்புதமே ஆராரோ ஆரிரரோ.!   சிரவண ஏகாதசி சித்ரா பெளர்ணமியில சீராகபல விரதமிருந் தென்வயித்தில் உதித்தவனே தாலேலோ.!   மணமாகி பலவருஷம் மாவிளக்கு இட்டதாலே வந்தென் வயிற்றிலுதித்த மின்னலேநீ கண்ணுறங்கு.!   நாவால்வேண்டி நவமுறைசுற்றி நவகிரக அருளால நவரத்தினமெனப் பிறந்தயென் நித்திலமே நீயுறங்கு.!   மலைபோல வந்ததுன்பம் நொடியில மறையுவண்ணம் அலைபோல தூளியிலே ஆடிநீயும் உறங்குதியோ.!   முண்டக்கண்ணி கோவிலிலே முழங்கால் முட்டிதேய மண்டியிட்டு மடிப்பிச்ச கேட்டுப் பிறந்தபெரும்பேறே.!   கன்னக் கதுப்பினுள் ... Full story

நிழலாடும் நினைவு..!

பெருவை பார்த்தசாரதி     வாழ்க்கையெது இன்னதென்று வகுத்துச் சொல்ல வாழ்வோடு நிழலாகவரும் நினைவுகள் வழியாகும்.!   நிலையிலா வாழ்வினில் நிழலாடும் நினைவலைகள் நிம்மதிதரும்.! நினைவுப் பாதையில் ஒவ்வொன்றாக.!   முன்னிட்ட விதைகள் பன்னெடுங்காலம் கழிந்து பின்னெடிய மரங்களாகி சுவாசம்தரு மிக்காலம்.!   பனங் காயிரண்டில் சிறிதாய்ச்சகடை கட்டியதை பாங் காயுருட்டிப் பலமைல்கடந்த பாலபருவம்..!   கழுதைவாலில் பனைமட்டை கட்டி யோடவிட்டு பொழுதைப் பகலில் வீணேகழித்த வாலிபக்குறும்பு.!   எதுகிடைக்கினும் காலாலே காததூர முதைத்தே எத்திச்சென்று எங்கோ விட்டுவந்த இளமைக்காலம்.!   தட்டான் தும்பியைப் பக்குவமாய்ப் பிடித்துவந்து பட்டத்தை யதன்வாலில் கட்டிப்பறக்க விட்டநேரம்.!   இன்பம் காணுவோமொரு துன்பத்திலே போலும் துன்புறுத்தி மகிழவொரு ஓணான் கிடைத்தகாலம்.!   வெடிக்காத பட்டாசை வெகுவாய்ச் சேர்த்துவந்து படித்த பேப்பரிலே புஸ்வானம்செய்த இளமைக்காலம்.!   பருவத்தில் துளிர்விடும் துடித்த இளஞ்சிலிர்ப்பால் பருவமங்கை மேனியை பயத்தால்தொட்ட ஸ்பரிசம்.!   காலம் மறையுமானால் ... Full story

“மறு ஜென்மம்”

“மறு ஜென்மம்”
  பிறப்பென்பதே பிரமன் வகுத்த விதியாகும் பிறப்புஇறப் பென்பதை முழுது மறியுமுன்னே மறுஜென்மறிய மானிடர்கள் கண்டவழி எதுவோ? இறுக இறைவனைப்பணின் மறுஜென்ம மிராதப்பா.! நாலூர் மயானத்து நம்பான்ற னடிநினைந்து.. மாலூருஞ் சிந்தையர்பால் வந்தூரா மறுபிறப்பென திருஞானசம்பந்தரின் தேவார ஞானஒளி பெற்று பெரும்ஞானமுடன் ஏற்றாலினி மறுஜென்ம மிராது.! ஜென்மலக்னத்தின் ஈறாரில் ராகுகேதிருந்தால் மறு ஜென்மமினி இல்லை யென்பதும் ஜோதிடமாம்.! மீண்டும் ... Full story
Page 1 of 512345
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.