Archive for the ‘கவியரசு கண்ணதாசன்’ Category

சத்தியத்தை நீங்கள் காத்திருந்தால், சத்தியம் உங்களைக் காத்திருக்கும்: கவிஞர் வைரமுத்து

சத்தியத்தை நீங்கள் காத்திருந்தால், சத்தியம் உங்களைக் காத்திருக்கும்: கவிஞர் வைரமுத்து
--நீலமேகம் ராமலிங்கம் சஹஸ்ரநாமன்.   கவிஞர் வைரமுத்து அவர்கள் 1985 ஆம் ஆண்டு , ‘படிக்காதவன்’ திரைப்படத்திற்காக ‘ ஒரு கூட்டுக் கிளியாக, ஒரு தோப்புக் குயிலாக பாடு, பண் பாடு’ என்ற பாடலை எழுதினார். அன்று மகாகவி பாரதியார் ‘குயில்’ பாட்டை எழுதினார். இன்று, கவிஞர் வைரமுத்து ‘ ஒரு கூட்டுக் கிளியாக, ஒரு தோப்புக் குயிலாக பாடு, பண் பாடு’ என்று கூறியுள்ளார்கள். ... Full story

“ஒருவன் ஒருவன் முதலாளி”

--நீலமேகம் ராமலிங்கம் சஹஸ்ரநாமன். கவிஞர் வைரமுத்து ”ஒருவன் ஒருவன் முதலாளி,” என்ற பாடலை 1995 ஆம் ஆண்டு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்த ‘முத்து’ திரைப்படத்திற்காக எழுதினார். ஆஸ்கர் விருது, பத்ம பூஷண் விருது பெற்ற ஏ. ஆர். ரகுமான் இசை அமைத்திருந்தார். எஸ். பி. பாலசுப்பிரமணியன் பாடிய பாடலிது. விதியை மதியால் வெல்லலாம் என்பது எல்லோரும் அறிந்ததே. நமது கவிஞர் வைரமுத்து அவர்கள் ‘விதியை நினைப்பவன் ... Full story

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே …

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே ...
-- நீலமேகம் ராமலிங்கம் சஹஸ்ரநாமன். கவியரசர் கண்ணதாசன் எழுதிய “என்னதான் நடக்கும் நடக்கட்டுமே“ என்றும் அழியாத புகழ்பெற்ற திரைப்படப் பாடல். புரட்சித் தலைவர் எம்ஜிஆர் நடித்த 'பணத்தோட்டம்' திரைப்படத்திற்காக எழுதினார். மெல்லிசை மன்னர்கள் எம்எஸ் விஸ்வநாதன், டிகே ராமமூர்த்தி இசை அமைத்தார்கள். கவியரசர் கண்ணதாசன் வார்த்தைகளின் ஒரே ஒரு எழுத்தை மாற்றி, எதுகை மோனைகள் துணையுடன்,  வார்த்தை ஜாலங்கள் செய்து விளையாடுவதில் வல்லவர். கீழ்கண்ட வார்த்தைகளில் என்னமாய் விளையாடியிருக்கிறார். தயங்காதே, மயங்காதே, அடிச்சுவடு, ... Full story

இதயவீணை தூங்கும்போது பாட முடியுமா?

இதயவீணை தூங்கும்போது பாட முடியுமா?
-- கவிஞர் காவிரிமைந்தன். இதயவீணை தூங்கும்போது பாட முடியுமா? இருவர் உள்ளம் திரைப்படத்திற்காக கவிஞர் கண்ணதாசன் வரைந்த பாடல்! திரையிசைத் திலகம் கே.வி. மகாதேவன் தந்த இசையமைப்பில் முகிழ்த்ததும், பி. சுசீலாவின் குரலில் பிறந்துவந்ததும் மறக்க முடியுமா? இதய வீணைதூங்கும்போது பாடமுடியுமா? இணைந்து வாழ வேண்டிய இதயங்கள் இடையே இடைவெளி! இதை எப்படி இதைவிட எளிமையாக இனிமையாகக் கூறிவிடமுடியும்? அன்பின் சுவாசம் தவழ வேண்டிய இல்லற வாழ்வில் அகண்ட பிரிவு மனரீதியாக அமைந்துவிடும்போது, முதல்வரிக்கு ஏற்றாற்போல் இரண்டாம் வரி, இரண்டு கண்கள் இரண்டு காட்சி ... Full story

கிருஷ்ணா முகுந்தா முராரி …

கிருஷ்ணா முகுந்தா முராரி ...
-- கவிஞர் காவிரிமைந்தன். கிருஷ்ணா முகுந்தா முராரி ... திரைத்துறையில் நடிப்புலகில் பிரபலமாய் இருந்தவர்கள் அன்றைய காலகட்டத்தில் பாடல் பாடத் தெரிந்தவர்களாகவும் இருக்க வேண்டும் என்கிற எழுதப்படாத விதி இருந்தது. அப்படிப்பட்டவர்கள் கர்நாடக இசையில் விற்பன்னர்களாகவும் இருந்தது தவிர்க்க இயலாத தகுதியாகவும் இருந்தது. குறைந்தது பாடலாசிரியர் எனப்படுபவர் மெத்த இசையறிவு உடையவராக இருந்தார்கள். அவ்வரிசையில் 1944ல் வெளியான ஹரிதாஸ் திரைப்படத்தின் இப்பாடலை இயற்றிய பாபநாசம் சிவன் ... Full story

நான் நிரந்தரமானவன் அழிவதில்லை

நான் நிரந்தரமானவன் அழிவதில்லை
-- சக்தி சக்திதாசன். அன்பினியவர்களே ! இனிய வணக்கங்களுடன் உங்களின் முன்னே ! 1981ம் ஆண்டு என் வாழ்வினிலே மறக்க முடியாத ஆண்டு. ஏனென்று கேட்கிறீர்களா? என்னோடு பாதியாக என் வாழ்வின் சுகங்களை விடத் துக்கங்களை அதிகமாகப் பகிர்ந்து கொண்ட என் அன்பு மனைவி, இனிய தோழியை நான் மணந்து கொண்ட வருடமது. ஆனால் அதே வருடம் தன்னோடு மற்றுமொரு மிகப்பெரிய நிகழ்வைத் தாங்கிக் கொண்டது. ஆம் செப்டெம்பர் மாதம் 14ம் திகதி எனது மனம் கவர்ந்தவளை என் மனைவியாக்கிய பின்பு காலதேவன் சரி உனக்கொரு இன்பத்தை அளித்தேனே ஏன் ... Full story

கடவுள் தந்த இரு மலர்கள் …

கடவுள் தந்த இரு மலர்கள் ...
-- கவிஞர் காவிரிமைந்தன். கடவுள் தந்த இருமலர்கள் ... கவிஞர் வாலி அவர்களின் கைவண்ணத்தில் பிறந்த பாட்டு! கதையின் கருவை உள்வாங்கி கவிதையாக மொழிவதில் கைதேர்ந்த கவிஞர்கள் சிலரே! இதோ இருமலர்கள் ... ஒன்று பாவை கூந்தலிலே... ஒன்று பாதை ஓரத்திலே... நாயகனின் கைப்பிடித்த நாயகியையும் கைவிடப்பட்ட நாயகியையும் குறிக்கும் சொற்களாக! பத்மினி, கே.ஆர்.விஜயா, சிவாஜி கணேசன் மூவரின் இடையே முகிழ்த்த பாடலை, கடவுள் ... Full story

பாடும்போது நான் தென்றல்காற்று …

பாடும்போது நான் தென்றல்காற்று ...
--கவிஞர் காவிரிமைந்தன். பாடும்போது நான் தென்றல்காற்று ... 'நேற்று இன்று நாளை' திரைப்படத்தில் மக்கள் திலகம் பாடுகின்ற முதல் பாடலாக, மென்மையை மேன்மையாக்கிக்காட்டும் பிரத்தியேக முயற்சியில் புலவர் புலமைப்பித்தனும் மெல்லிசை மன்னரும் ஒருசேர வெற்றி பெற்றிருக்கிறார்கள். பாடும் நிலா பாலு பாடிய இசை அமுதமிது! எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது! மஞ்சள் நிறத்தில் தன் மன்னவன் தோன்ற, கதையின் நாயகி அவனது அன்பில் மலர்ந்த பூவாய் அவன் கரங்களில் தவழ, எண்ணங்களில் எல்லாம் எழுதிவைத்த வரிகள்போல் இதமான வார்த்தைகளால் இங்கே தவழும் தென்றல் காற்று இது!... Full story

சரவணப் பொய்கையில் நீராடி …

சரவணப் பொய்கையில் நீராடி ...
-- கவிஞர் காவிரிமைந்தன். சரவணப் பொய்கையில் நீராடி ... இயற்கையெழில் கொஞ்சம் இதமான காலை வேளை! இதயத்தில் வந்துமோதும் இனிமையான பாடல்! சரவணப் பொய்கையில் நீராடி... பி.சுசீலாவின் குரலில் விளைந்த அற்புத நாதம்! விஸ்வநாதன் - ராமமூர்த்தி இணைந்து தந்த இன்னிசை வேதம்! ஆம், இது சத்தியம்!! திருமால் மருகன் - செந்தில் குமரன் - கந்தன் - முருகன் என்னும் கடவுளை எண்ணி வணங்கி எழுகின்ற பாடலிது! ... Full story

ஆச்சி மனோரமாவுக்கு அஞ்சலி…

ஆச்சி மனோரமாவுக்கு அஞ்சலி...
--கவிஞர் காவிரிமைந்தன். வா... வாத்தியாரே... வூட்டாண்டே ... நீ வாராங்காட்டி நான் வுட மாட்டேன்... ஜாம்பஜார் ஜக்கு... நான் சைதாபேட்டை கொக்கு... மாலையிட்ட மங்கை திரைப்படத்தில் கவியரசு கண்ணதாசன் அவர்களால் நகைச்சுவை நடிகையாகத் தொடக்கம் தந்த ஆச்சி மனோரமா உலக வரலாற்றில் எவரும் எட்ட முடியாத உயரத்தை எட்டியுள்ளார். கதாநாயகியாக ஜொலித்திருந்தாலும் கூட அவரால் இந்த சரித்திரத்தைப் படைத்திருக்க முடியாது. தமிழ்த் திரையுலகில் பெண் சிவாஜி என்கிற அளவு நடிப்பில் தனது பரிமாணங்களைத் தந்து மக்கள் மனதில் ... Full story

பூவண்ணம் போல நெஞ்சம் …

பூவண்ணம் போல நெஞ்சம் ...
-- கவிஞர் காவிரிமைந்தன். பூவண்ணம் போல நெஞ்சம் ... அழியாத கோலங்கள் திரைப்படத்தில் இடம்பெற்ற பாட்டு! இந்திப்பட இசை அமைப்பாளர் சலீல் செளத்ரி இசையில் பிரதாப்போத்தன் – ஷோபா நடிப்பில், ஜெயச்சந்திரன் பி.சுசீலா பாடிய பாடலாய், பூவண்ணம் போல நெஞ்சம்... இளம்காதலர்களின் இனிய உரையாடல்கள் தொடர்ந்தவண்ணமிருக்க, சின்னஞ்சிறு சிரிப்பும் சந்தோஷப்பூக்களும் சிதற, உதடுகளின் அசைவுகள் இன்றி பின்னணியில் மட்டும் குரல்சேர்ப்பு நடக்கிறது. மெளனங்களால் வரையப்பட்ட காதல் கவிதைக்குச் சுகமான மெட்டமைத்து, ... Full story

அன்பு வந்தது என்னை ஆள வந்தது

அன்பு வந்தது என்னை ஆள வந்தது
-- கவிஞர் காவிரிமைந்தன். சுடரும் சூறாவளியும் (1971) திரைப்படத்திற்காக எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய பாடலிது. கவியரசு கண்ணதாசன் வரிகளுக்குச் செந்தூர இசையமைத்திருப்பவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்! தாயினை இழந்த சேய்களைத் தழுவி நாயகன் பாடும் பாடலிது. நம்பிக்கை ஒளிதனை நாளைய தலைமுறைக்கு நயமாய் எடுத்துரைக்கும் வார்த்தைகள்! இனியதோர் இசையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் குரலில் எத்தனை முறை கேட்டிருந்தபோதும் இந்தப் பாடல் இன்றும் என்றும் மயக்கம் தரும்! மெல்லிசை என்பது இதயத்தைத் தாலாட்ட வைக்க வல்லது என்பதற்கு இந்தப் பாடலும் சாட்சியாகும்! ... Full story

பல்லவன் பல்லவி பாடட்டுமே …

பல்லவன் பல்லவி பாடட்டுமே ...
-- கவிஞர் காவிரிமைந்தன். கலங்கரை விளக்கம் திரைப்படத்திற்காக கவிஞர் வாலி இயற்றிய பாடல், ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்திற்காக இசைஅமைத்த விஸ்வநாதன் ராமமூர்த்தி இணை பிரிந்த பின் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்தமுதல் திரைப்படம் இது! கருப்பு வெள்ளைத் திரைப்படம் எனிலும் அனைத்துப் பாடல்களும் அற்புத ராகமாய் அமைந்தன.இறையருள் இயக்குநர் கே.சங்கர் இயக்கத்தில் முற்றிலும் வித்தியாசமான கதை அமைப்பில், எம்.ஜி.ஆர். - சரோஜா தேவிநடிப்பில் ... Full story

இதய வானின் உதய நிலவே …

இதய வானின் உதய நிலவே ...
-- கவிஞர் காவிரிமைந்தன். இதய வானின் உதய நிலவே ... கவிஞர் விந்தனின் வரிகளுக்கு இசையமைத்திருக்கிறார் வேதா, 1950ல் வெளியான பார்த்திபன் கனவு திரைப்படத்திற்காக ஏ.எம்.ராஜா, பி.சுசீலாவுடன் இணைந்து பாடிடும் இப்பாடல் அமைதியாக ஆனந்தமாகக் கேட்கப்பட வேண்டிய ஜீவராகம்! மனதில் தோன்றியதெல்லாம் பாடலில் சொல்லப்பட்ட விஷயங்களாய் ஆரம்போல் கோர்த்துநிற்கும் அழகிய பாடல்!                           ... Full story

பாட்டு… ஒரு பாட்டு …

பாட்டு... ஒரு பாட்டு ...
-- கவிஞர் காவிரிமைந்தன். பாட்டு.. ஒரு பாட்டு... புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களைக் கதாநாயகனாக வைத்து 16 திரைப்படங்களைத் தயாரித்த பெருமை தயாரிப்பாளர் சாண்டோ எம்.எம்.ஏ. சின்னப்பா தேவர் அவர்கள் ஒருவருக்கே உண்டு. கருப்பு வெள்ளையில் - தாய்க்குப் பின் தாரம் என்னும் திரைப்படத்தில் ஆரம்பித்து, வண்ணத்தில் - நல்ல நேரம் திரைப்படத்தில் நிறைவுற்ற அத்தனைப் படங்களிலும் ஒரு அழகிய எம்.ஜி.ஆர். ஃபார்முலா காணலாம். ஆம்... ... Full story
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.