Archive for the ‘கவிஞர் வாலி’ Category

கடவுள் தந்த இரு மலர்கள் …

கடவுள் தந்த இரு மலர்கள் ...
-- கவிஞர் காவிரிமைந்தன். கடவுள் தந்த இருமலர்கள் ... கவிஞர் வாலி அவர்களின் கைவண்ணத்தில் பிறந்த பாட்டு! கதையின் கருவை உள்வாங்கி கவிதையாக மொழிவதில் கைதேர்ந்த கவிஞர்கள் சிலரே! இதோ இருமலர்கள் ... ஒன்று பாவை கூந்தலிலே... ஒன்று பாதை ஓரத்திலே... நாயகனின் கைப்பிடித்த நாயகியையும் கைவிடப்பட்ட நாயகியையும் குறிக்கும் சொற்களாக! பத்மினி, கே.ஆர்.விஜயா, சிவாஜி கணேசன் மூவரின் இடையே முகிழ்த்த பாடலை, கடவுள் ... Full story

ஆச்சி மனோரமாவுக்கு அஞ்சலி…

ஆச்சி மனோரமாவுக்கு அஞ்சலி...
--கவிஞர் காவிரிமைந்தன். வா... வாத்தியாரே... வூட்டாண்டே ... நீ வாராங்காட்டி நான் வுட மாட்டேன்... ஜாம்பஜார் ஜக்கு... நான் சைதாபேட்டை கொக்கு... மாலையிட்ட மங்கை திரைப்படத்தில் கவியரசு கண்ணதாசன் அவர்களால் நகைச்சுவை நடிகையாகத் தொடக்கம் தந்த ஆச்சி மனோரமா உலக வரலாற்றில் எவரும் எட்ட முடியாத உயரத்தை எட்டியுள்ளார். கதாநாயகியாக ஜொலித்திருந்தாலும் கூட அவரால் இந்த சரித்திரத்தைப் படைத்திருக்க முடியாது. தமிழ்த் திரையுலகில் பெண் சிவாஜி என்கிற அளவு நடிப்பில் தனது பரிமாணங்களைத் தந்து மக்கள் மனதில் ... Full story

பல்லவன் பல்லவி பாடட்டுமே …

பல்லவன் பல்லவி பாடட்டுமே ...
-- கவிஞர் காவிரிமைந்தன். கலங்கரை விளக்கம் திரைப்படத்திற்காக கவிஞர் வாலி இயற்றிய பாடல், ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்திற்காக இசைஅமைத்த விஸ்வநாதன் ராமமூர்த்தி இணை பிரிந்த பின் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்தமுதல் திரைப்படம் இது! கருப்பு வெள்ளைத் திரைப்படம் எனிலும் அனைத்துப் பாடல்களும் அற்புத ராகமாய் அமைந்தன.இறையருள் இயக்குநர் கே.சங்கர் இயக்கத்தில் முற்றிலும் வித்தியாசமான கதை அமைப்பில், எம்.ஜி.ஆர். - சரோஜா தேவிநடிப்பில் ... Full story

தொட்டால் பூ மலரும் …

தொட்டால் பூ மலரும் ...
-- கவிஞர் காவிரிமைந்தன். கவிதைபோல் தமிழ் மணம் கனிந்துருக வைத்துவிடும் இளமைபோல் இனிமைநலம் என்றென்றும் பாடிவிடும் அருமையெனச் சொல்லாதார் எவர் இருக்க முடியும்? - கவிஞர் திறமைதனை மெச்சித்தான் ஊர் புகழும் உன்னை!! படகோட்டி என்னும் ஒரு திரைப்படத்தில் எட்டுப் பாட்டு மெட்டுக்குள் நம்மையும் கட்டிப்போடும் முத்துப் பாட்டு வட்டமிடும் வாலிபர் முதல் பாங்கான காளையர் வரை வஞ்சியர் முதல் வளையல் கொஞ்சிடும் ... Full story

மூங்கில் இலைக் காடுகளே …

மூங்கில் இலைக் காடுகளே ...
-- கவிஞர் காவிரிமைந்தன். அடர்ந்து வளர்ந்த மூங்கில்காடுகளில் காற்று மழை புயல்களினிடையே சிக்கிடும்போது ஒரு சில துளைகள் உண்டாகும்! அதில் உண்டான துளைகளின் வழியே காற்று நுழைந்த போது புல்லாங்குழல் நாதம் கண்டறியப்பட்டது, அதுவே பூபாளம் எனப்பட்டது. காலைக் கதிரவன் கடலில் குளித்தெழுந்து வருகின்ற அழகும், அதிகாலை இளங்குயில் பாடி நமை அழைக்கும் இனிமையும் நம் இதயத்திற்கு இதமானவை. எனவேதான் திரைப்படப்பாடல்களில் பெரும்பாலும் தொடக்கம் புல்லாங்குழல் ... Full story

வெள்ளி மணி ஓசையிலே …

வெள்ளி மணி ஓசையிலே ...
-- கவிஞர் காவிரிமைந்தன். கண்ணதாசன் - வாலி இவ்விரு கவிஞர்களின் கைவண்ணங்கள் தமிழ்த்திரை வானில் எழுதியிருக்கும் கோலங்கள் வகை வகையானவை. வண்ணத்தமிழுக்கு மகுடங்கள் போன்றவை. மனதைப் பறிகொடுத்தே ஆகவேண்டிய அளவிற்கு இசையோடு அவை நடனமாடுபவை. பல நேரங்களில் இது யார் பாடல் என்கிற சந்தேகம் தருபவை என்றாலும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவரில்லை என்பதை தம் வசந்த வரிகளால் வரைந்துகாட்டியவர்கள்! கற்பனையில் உருவாகிறது கவிதை என்பதெல்லாம் என்னைப் பொறுத்தவரை உண்மையல்ல. ... Full story

ஆயிரம் கண்ணுக்கு விருந்தாகும் …

ஆயிரம் கண்ணுக்கு விருந்தாகும் ...
-- கவிஞர் காவிரிமைந்தன். தமிழ் இனிமையான மொழி என்பதை காலங்காலமாக கவிதைகள்தான் பறைசாற்றுகின்றன! இனிக்க வைக்கும் இவர்களின் படைப்புகளில் நம் இதயங்கள் மூழ்கித்தான் போகின்றன! அடுக்குமொழிச் சொற்களும் அவற்றுள் ததும்பும் இன்பமும் இன்னும் வேண்டும் என்றே கேட்க வைக்கின்றன. திரைப்படப் பாடலாசிரியர்கள் அவர்களும் தங்கள் பங்கிற்கு இப்பணியைச் செவ்வனே செய்துவருகிறார்கள். மக்களைச் சென்றடையும் ஊடகங்களில் முதன்மை வகிப்பது திரைப்படங்கள் என்கிற பட்சத்தில் இவர்கள் பங்களிப்பு அதன் வெற்றிக்கு மட்டுமல்ல, நம் செவிகளுக்கும் மனதிற்கும்தானே!! ... Full story

தன்னுயிர் பிரிவதைப் பார்த்தவரில்லை …

தன்னுயிர் பிரிவதைப் பார்த்தவரில்லை ...
-- கவிஞர் காவிரிமைந்தன். கவிஞர் வாலி எழுதிய இந்தப் பாடலின் பல்லவியைக் கேட்டு கவியரசு கண்ணதாசன் வியந்து வாலி அவர்களைப் பாராட்டினாராம்! உயிருக்கு உயிராக வாழ்ந்திருந்து ஒன்றையொன்று பிரிய நேர்ந்தால் அங்கு உருகிவிடும் துயருக்கு எல்லைகளில்லை. இயற்கை எழுதும் கணக்கும் தீர்ப்பும் மனதுக்கு என்றுமே புரிவதில்லை. உறவின் பிரிவில் துடித்துக் கதறும் உள்ளம் பாவம் இனி என்ன செய்யும்? திரையில் இதுபோல் காட்சிகள் வந்தால் பிரிவின் வழியை வார்த்தையில் சொல்லும் வித்தகம் ... Full story

அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் …

அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் ...
-- கவிஞர் காவிரிமைந்தன். அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் ... பொங்கும் புனல்தானே பாய்ந்துவரும் வெள்ளம்! அணைகளும் தடை செய்ய முடியாத ஆழிவெள்ளம் சூழ்கையில் எல்லாம் அடங்கத்தான் நேருமே! சமுதாய அவலங்களைத் தட்டிக் கேட்கும் எண்ணம் நம் எல்லோருக்கும் இருந்தாலும் நடைமுறையில் அனைவரும் முன்வருவதில்லை! நம் கண் முன்னே நடக்கும் தீயவர்களின் செயல்களைத் தடுத்திடவும் நாம் முனைவதில்லை! எதற்கு வம்பு என்கிற நோக்கில் பெரும்பாலோர் வழிநடக்க, எதிர்த்துக்குரல் கொடுக்க ... Full story

வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா … மார்பு துடிக்குதடி …

வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா ... மார்பு துடிக்குதடி ...
-- கவிஞர் காவிரிமைந்தன்.  இளமை ஊஞ்சலாடுகிறது திரைப்படம்! இயக்குநர் ஸ்ரீதரின் முக்கோணக் காதலின் மற்றுமொரு பரிமாணம்! இசை ஞானி இளையராஜா இசையாட்சி! எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் இழைந்தோடும் குரல்! திரைக் கதையின் முக்கியக் கட்டத்தில் நாயகன் நாயகியை நோக்கிப் பாடுகின்ற இப்பாடல்! பாரதியின் கண்ணம்மா என்னும் பெயரை எத்தனை வாஞ்சையாய் பல்லவியில் பொருத்திப் பாடலை துவக்குகின்றார் கவிஞர் வாலி! மேடைப் பாடகனாய் கமலஹாசன் தன் காதல் தாபங்களைக் காட்டும் அற்றைய நாளின் மிகப் பிரபலமான பாடல்! ... Full story

வேலாலே விழிகள் இன்று ஆலோலம் இசைக்கும் …

வேலாலே விழிகள் இன்று ஆலோலம் இசைக்கும் ...
-- கவிஞர் காவிரிமைந்தன்  அன்பின் பரிபாஷையை உள்ளம் எப்போதும் வரவேற்கும். அது கண்களால் பேசினாலும் சரி, இமைகளால் அசைக்கப்பட்டாலும் சரி, புன்னகையால் பூத்திருந்தாலும் சரி, படைப்பியிலின் நியதிப்படி ஒன்றை ஒன்று நாடும், தேடும், திரைப்படமாக இருந்தால் பாடும்! சரிதானே!! என்னைப்போல் ஒருவன் திரைப்படத்திற்காக நடிகர்திலகம் சிவாஜி கணேசன் அவர்களுடன் உஷா நந்தினி இணைந்து வழங்கிய ஒரு காதல் சித்திரம் இப்பாடல்! சந்தங்கள் நர்த்தனமாடும் இசை அதற்கு ஏற்ப வளைந்து கொடுக்க, ... Full story

நீராழி மண்டபத்தில் தென்றல் நீந்தி வரும் நள்ளிரவில் …

நீராழி மண்டபத்தில் தென்றல் நீந்தி வரும் நள்ளிரவில் ...
-- கவிஞர் காவிரிமைந்தன். நீராழி மண்டபத்தில் தென்றல் நீந்தி வரும் நள்ளிரவில் ... 1970ல் வெளிவந்த தலைவன் திரைப்படத்திற்காக எம்.ஜி.ஆர். வாணிஸ்ரீ நடிக்க, எஸ்.பி.பாலசுப்பிரமணியம், பி.சுசீலா குரல் கொடுக்க, கவிஞர் வாலியின் பாடலிது! மெல்லிசை மன்னருக்கு குருவாய் விளங்கிய எஸ்.எம்.சுப்பையா நாயுடு அவர்களின் இசையில் உருவான கானமிது! வண்ணக்கனவுகளில் வலம் வந்த எம்.ஜி.ஆரின் காதல் பாடல்களுக்கு முன்னோடியாய் கறுப்பு வெள்ளை காலத்திலும் இதுபோன்ற இன்னிசையில் ... Full story

முழுநிலவின் திருமுகத்தில் களங்கமில்லையோ …

முழுநிலவின் திருமுகத்தில் களங்கமில்லையோ ...
-- கவிஞர் காவிரிமைந்தன்.    திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் அவர்களது இசையில் எப்போதும் ஒரு மயக்கம் பெறலாம். வசந்த மாளிகை முதலான வெற்றிப் படங்களும் சங்கராபரணம் போன்ற சங்கீதத் திரைப்படங்களும் அவருக்கே உரித்தானவை. அவர்தம் இசையில் உருவாகிய பாடல்களில் கர்நாடக சங்கீதம் கலந்திருப்பது இசை ரசிகர்களுக்கு நிச்சயம் பரிச்சயம். மன்னவன் வந்தானடி திரைப்பாடல் திருவருட்செல்வரில்கூட 'கல்யாணி ராகத்தில் உருவானது' என்று பெருமிதத்துடன் பகிர்ந்துகொள்வர். இப்போது நாம் காணவிருக்கும் திரைப்படப்பாடல் "முழுநிலவின் திருமுகத்தில் களங்கமில்லையோ..." பால்குடம் திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடலுக்கு வரிவடிவம் தந்தவர் கவிஞர் வாலி ஆவார். இசைவடிவம் தந்தவர் கே.வி.மகாதேவன் ஆவார். ... Full story

அறிவுக்கு வேலை கொடு…பகுத்தறிவுக்கு வேலை கொடு…

அறிவுக்கு வேலை கொடு...பகுத்தறிவுக்கு வேலை கொடு...
திரைப்படப் பாடல்களில் இடம்பெறும் வரிகள் வெறும் பொழுதுபோக்குக்கு மட்டுமல்ல.. வாழ்க்கை முழுமைக்கும் வழிகாட்டும் விளக்காக அமைய முடியும் என்பதற்கு சான்று பகரும் பாடல்களை கவிஞர் பெருமக்கள் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், கவியரசு கண்ணதாசன், கவிஞர் வாலி போன்றோர் வழங்கியிருக்கிறார்கள். சமுதாய அவள்கள், சீர்கேடுகளைச் சாடுவதும் அவற்றை சீர் செய்ய மொழியைப் பயன்படுத்துவதும் இவர்களின் தலையாய கடமைகளில் ஒன்றானது. அவ்வாறு அமையும்போது செம்மை மொழிவளத்தால் இசைக் கோர்வையுடன் கை கோர்க்கும் வார்த்தைச் சரங்களை ... Full story

அயோத்தி அரண்மனை பஞ்சணையில் …

அயோத்தி அரண்மனை பஞ்சணையில் ...
-- கவிஞர் காவிரிமைந்தன்.       இசையெனும் இன்பநதியில் இதயம் மூழ்கிவிட்டால் மனம் இன்பலஹரியில் மோகனம் பாடும்! பாண்டித்துவம் பெற்ற விற்பன்னர்கள் மட்டுமே அனுபவித்துவந்த இசையை, பாமரனும் அனுபவிக்கும்வண்ணம் வழி வகை செய்தது திரையிசையால் மட்டுமே சாத்தியமானது. தமிழ்த் திரையிசை இதுநாள் வரை எத்தனையோ ஜாம்பவான்களைக் கண்டிருக்கிறது! அவர்கள் ஒவ்வொருவரின் பாணியும் தனித்துவம் மிக்கதென்பதும் மறுக்க முடியாதது. இந்தச் சரித்திரத்தில் இசையமைப்பாளர் வி.தக்ஷிணாமூர்த்தி ஏனைய ... Full story
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.