Archive for the ‘கவிஞர் வாலி’ Category

Page 2 of 612345...Last »

தங்கத் தோணியிலே தவழும் பெண்ணழகே …

தங்கத் தோணியிலே தவழும் பெண்ணழகே ...
--  கவிஞர் காவிரிமைந்தன்.   தங்கத் தோணியிலே தவழும் பெண்ணழகே ... மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் வரலாற்றில் மைல் கற்களாய் அமைந்த திரைப்படங்கள் நாடோடி மன்னன் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன் ஆகியவையாகும். மேலும் இவ்விரண்டு திரைப்படங்களையும் தானே இயக்கிய பெருமையும் எம்.ஜி.ஆருக்கு உண்டு. 1970ல் ஜப்பானில் நடைபெற்ற எக்ஸ்போ 70 எனும் கண்காட்சியை முழுக்க முழுக்க தமிழ் மக்கள் காண வேண்டும் என்று எம்.ஜி.ஆர். விரும்பியதால், இப்படத்தின் திரைக்கதையோட்டம் ஜப்பான் நோக்கித் திரும்பியது. எம்.ஜி.ஆர் ... Full story

நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான் …

நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான் ...
-- கவிஞர் காவிரிமைந்தன். அன்பே வா திரைப்படத்தில் அனைத்துப்பாடல்களும் அற்புத வகையைச் சார்ந்தவை. மெல்லிசை மன்னரும் கவிஞர் வாலியும் இணைந்து தந்த இன்ப நாதங்கள்! ஏவிஎம் தயாரிப்பில் ஏ.சி.திருலோகசந்தர் இயக்கத்தில் ஒரு காதல் கதை சுகமாக பின்னப்பட்டிருக்க, மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும் அபிநய சரஸ்வதி சரோஜா தேவியும் இணைந்து நடித்த இன்னொரு காவியம். அலுப்பில்லாமல் ஒரு திரைப்படம் பார்க்க வேண்டுமெனில் அன்பே வா என்று அடித்துச் சொல்லலாம்! கண்ணைக் கவரும் காஷ்மீரின் அழகு எண்ணம் முழுவதையும் ... Full story

தொட்ட இடம் துலங்க வரும் தாய்க்குலமே வருக …

தொட்ட இடம் துலங்க வரும் தாய்க்குலமே வருக  ...
-- கவிஞர் காவிரிமைந்தன்.    தமிழ்மக்களின் அமோக ஆதரவைப் பெற்ற அரசியல் தலைவியாய் ... எதிர்பட்ட இன்னல்களை எல்லாம் துணிவுடன் எதிர்கொண்ட பெண்ணாய் ... உலக அளவில் புகழ் பெற்ற புரட்சித் தலைவியாய் ... ஐந்தாம் முறை அரியணை காணும் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களுக்கு வாழ்த்துகள்!! தொட்ட இடம் துலங்க வரும் தாய்க்குலமே வருக ... காவியக் கவிஞர் வாலி அவர்களுடன் ஒரு நாள் உரையாடிக் கொண்டிருந்தபோது ... அவர் எழுதிய மன்னன் திரைப்பாடலில் அம்மா என்றழைக்காத உயிரில்லையே என்ற ... Full story

வேண்டும் வேண்டும் உங்கள் உறவு …

வேண்டும் வேண்டும் உங்கள் உறவு ...
-- கவிஞர் காவிரிமைந்தன்.   வேண்டும் வேண்டும் உங்கள் உறவு ... இது அன்பின் பரிபாஷை... ஆழ் மனத்தின் குரல்... மண்ணில் வந்து பிறந்த உயிர்களில் மானுடர்களுக்கான தேவதரு! இன்னும் இன்னும் என்று உள்ளத்தில் தோன்றும் ஊற்று... எழுதிப் படிக்கும்போதே இனிக்கும் அமுதம்! குரலில் பிறந்து வந்தால் மயக்கும் கல்யாணி! மாலைப் பொழுதுகளில் மனதில் புது வருடல்! தேனில் நனைத்தெடுத்த பலாச் சுளை! உயிர்வரை சிலிர்க்கும் உன்னதக் கவிதை! மொத்தத்தில் எனக்கு நீ வேண்டும்... உனக்கு நான் வேண்டும்... கவிஞர் வாலி அவர்கள் வரிகள் தர ... Full story

காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான் …

காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான் ...
-- கவிஞர் காவிரிமைந்தன்.       உந்தன் மடியினில் கிடப்பது சுகம் சுகம் இந்த சுகத்தினில் சிவந்தது முகம் முகம் மனம் இதற்கெனக் கிடந்தது தவம் தவம் ஆனந்தமே இனி இவன் உயிர் போனாலும் என்றும் ஓய்வதில்லை இந்தக் காதல் மழை கடல் நீலம் உள்ள அந்தக் காலம் வரை இது பிறவிகள்தோறும் விடாத பந்தம் பிரிவெனும் ... Full story

நூறாண்டு காலம் வாழ்க …

நூறாண்டு காலம் வாழ்க ...
-- கவிஞர் காவிரிமைந்தன்.   காலமெல்லாம் கவிதை மலர் தோட்டத்திலே கற்பனையால் உச்சங்களை எட்டி ... எட்டி ... நம்மைக் களிப்பினிலே ஆழ்த்திய தொழிலைச் செய்த கவிஞர் அன்றோ வாலி எனும் புலவர் பெருமகன்! ஆழிசூழ் உலகமிதில் அவதரிக்கும் இவர் போன்ற கவியரசர் ஒரு சிலரே! பைந்தமிழில் இவர் புனையும் பாடல்களெல்லாம் பாமரன் வரை முணுமுணுக்கும் மந்திரங்களென்பேன்... சொல்லமுதச் செல்வம்தனை சுமந்து வந்த தெள்ளமுதப் பாவலன்தான் கவிஞர் வாலி! பொன்மனச் செம்மலுக்குப் புகழேணி ... Full story

பச்சைக்கிளி முத்துச்சரம் முல்லைக்கொடி யாரோ..

பச்சைக்கிளி முத்துச்சரம் முல்லைக்கொடி யாரோ..
கவிஞர் காவிரி மைந்தன் உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் என்பது எம்.ஜி.ஆர். அவர்களின் வாழ்க்கையில் மற்றுமொரு மைல்கல் மட்டுமல்ல! தமிழ்த்திரை வரலாற்றிலும் அந்தப்படம் மறக்க முடியாத ஒன்று! மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களை அழைத்து.. இந்தப் படத்திற்கான இசையமைப்பிற்கு முதல் தொகையை வழங்கிய புரட்சித்தலைவர்.. முழுக்க முழுக்க பாடல்களின் வெற்றியை எதிர்பார்க்கிறேன்! பத்துப் பாடல்கள்.. அனைத்தும் முத்துப் பாடல்களாக வரவேண்டும் என்று ... Full story

புதிய வானம் … புதிய பூமி …

புதிய வானம் ... புதிய பூமி ...
-- கவிஞர் காவிரிமைந்தன்.     அன்பே வா திரைப்படத்தில் ஆரம்பப் பாடலிது! உள்ளத்திலிருந்து ஒரு உற்சாகக் கங்கை பிரவகித்து ஓடி வருகிற வெள்ளம்! எழில்சிந்தும் காஷ்மீரின் இதயமாக விளங்கும் சிம்லாவின் அழகிலே நெஞ்சம் மயங்கலாம்! கதிரவன் காட்சிதரும் விடிகாலைப் பொழுதொன்றில் கதாநாயகன் எம்.ஜி.ஆர். கருப்பு சிவப்பு நிறத்தில் உடையணிந்து தலைப்பாகையுடன் கையில் ஒரு சூட்கேஸ் ... என அமர்க்களமாய் குளிர்க்காற்றின் கதகதப்பில் ஓடியாடி வருகின்ற காட்சி! இன்றும் எம்.ஜி.ஆர். ரசிகர்களின் மத்தியிலே உறைந்திருக்கிறது! புதிய வானம் புதிய ... Full story

என்னைக் காதலித்தால் மட்டும் போதுமா?

என்னைக் காதலித்தால் மட்டும் போதுமா?
--கவிஞர் காவிரிமைந்தன்.   ஆசைமுகத்திற்காக கவிஞர் வாலி அன்று வரைந்த பாட்டு! காதல் பாடல் என்று வரும்போது பல்லவி என்ன வைக்கலாம் என்று எண்ணிடத் தோன்றிய கணமெ... அன்பு முகம் நோக்கி காதலன் கேட்கும் கேள்வியாய் முதல் வரி அமைந்திட... இன்பபுரி நோக்கி எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும்... வரியும் இனிக்கிறதே! காதலி கூடுகிறாள்... அவள் தானும் சேர்ந்தே பாடுகிறாள்!! காதலியிடம் தான் வேண்டுவன ... Full story

எனக்காக பொறந்தாயே எனதழகி…

எனக்காக பொறந்தாயே எனதழகி...
-- கவிஞர் காவிரிமைந்தன். மென்மையான பாடலுக்கு மக்கள் மத்தியில் என்றைக்குமே வரவேற்பு இருக்கும் என்பதற்கு தற்காலப்பாடல்களில் ஒரு சாட்சி! தாத்தாவிற்கும் பேரனுக்கும் பாட்டெழுத பிரம்மன் அனுப்பி வைத்த காவியக் கவிஞர் வாலி அவர்கள் கைவண்ணத்தில் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையில் எஸ்.பி.சரண், அனு ஆனந்த் குரல்களில் இழைந்தோடும் இந்தத் தென்றல் இதயத்தைத் தொடுகிறது! பண்ணையாரும் பத்மினியும் என்கிற வித்தியாசமான கதையமைப்பில் உருவாகி வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்பிரகாஷ், துளசி ஆகியோர் நடிப்பில் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில் இனிமைதவழும் கானம் இதோ கேளுங்கள்! பருவக் காதலை ஒருபுறம் சொல்லிவிடுகிற இயக்குனர் ... Full story

தென்மதுரை வைகை நதி …

 தென்மதுரை வைகை நதி ...
--கவிஞர் காவிரிமைந்தன்.   வற்றாத ஜீவநதியாய் கவிதை ... வெள்ளம் போலவே கரைபுரண்டு பாய்ந்து வருகின்ற உள்ளம் கவிஞர் வாலியிடம் தஞ்சம் எனும்போது வார்த்தைகளுக்கா பஞ்சம்? தர்மத்தின் தலைவன் திரைப்படத்திற்காக கவிதை ஒன்று கருவெள்ளம்கொண்டபோது ... உயிர் கொண்ட பாட்டு இது! இராகதேவன் இளையராஜாவின் இசையாட்சியில் இதோ வார்த்தை நந்தவனம் பூத்துக் குலுங்குகிறது! வசந்த விழா ஒன்று நடந்து முடிகிறது! மெல்லிய கானம் பிறந்து வருகிறது! நல் உறவுகள் அன்பினிலே பின்னப்பின்ன ஆனந்த லயத்திலே மூழ்கவைக்கும் பாடல்! ... Full story

முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே …

முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே ...
--கவிஞர் காவிரிமைந்தன். வாலிபக்கவிஞர் வாலி அவர்களின் வசந்த வரிகளில் இதோ மற்றுமொரு பாடல்! திரைப்படத்தின் பெயர் கூட “ஆஹா” என்கிறது! இப்பாடலைத்தான் சொல்கிறதோ? இசையமைப்பாளர் தேவா அவர்களின் ரம்மியமான இசையில் இளம்பாடகர் ஹரிகரன் குரலில் ஒலிக்கும் காதல் பாடல்! இளம் உள்ளத்தின் பருவ வாசலில் தோன்றும் அத்தனை உணர்ச்சிகளையும் ஒட்டுமொத்தமாக கவிஞனால் மட்டும் அப்படியே படம்பிடித்துக்காட்ட முடிகிறது! காவியக்கவிஞருக்கு அது கைவந்த கலையாக!... Full story

வெண்ணிலா வானில் வரும்வேளை…

வெண்ணிலா வானில் வரும்வேளை...
-- கவிஞர் காவிரிமைந்தன். மலரிதழ் திறப்பு எப்போது தெரியுமா? மனிதர்கள் கண்டதுண்டா? இயற்கையின் நிகழ்வினில் எல்லாம்.. எப்போதும் ஒரு ரகசியப் பதிவாகவே இருக்கும்! அவையவை தத்தம் இயல்பினில் இயங்கிக் கொண்டிருக்க.. கவிஞர்களின் கற்பனை வலை விரிப்பில் மட்டும் கருத்து முத்துக்கள் - அந்த ரகசியங்களை பகிரங்கப்படுத்திக் கொண்டிருக்கும்! வெண்ணிலா வானில் வரும் வேளையில் நான் விழித்திருந்தேன் எண்ணிலாக் கனவுகளில் எதையெதையோ நினைத்திருந்தேன் ‘மன்னிப்பு’ திரைப்படத்திற்காக ஒரு மந்தகாசப் பாடல் ஒன்றை கவிஞர் வாலி அவர்கள் ... Full story

பொழுதெல்லாம் பேசச் சொல்லும் …

பொழுதெல்லாம் பேசச் சொல்லும் ...
-- கவிஞர் காவிரிமைந்தன்.  அண்மையில் நான் இணையதளமொன்றில் கேட்கக் கிடைத்த புதையல் இந்தப் பாடல் என்பேன்! எத்தனை அருமையான இப்பாடல் இதுவரை கேட்டது கிடையாது என்பதை என்னால் நம்பவே முடியவில்லை! ‘தங்கத் தம்பி’ என்கிற திரைப்படத்தில் தமிழ்த்திரையில் என்றும் வலம்வந்துகொண்டிக்கிற டி.எம்.செளந்திரராஜன் பி.சுசீலா ஆகியோரின் வளமையான குரல்களில்.. கேளுங்கள் புதிய உலகம் நுழைந்ததுபோலிருக்கும்! பல்லவி தொடங்கி சரணங்கள் எல்லாம் செந்தமிழின் சுகமிருக்கிறது! இசையோ நம்மைக் கட்டி இழுக்கிறது! திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் அமைத்த இசையில் ... Full story

தங்கப்பதக்கத்தின் மேலே..

தங்கப்பதக்கத்தின் மேலே..
கவிஞர் காவிரி மைந்தன் தங்கப்பதக்கத்தின் மேலே.. ‘எங்கள் தங்கம்’ திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள காதல்ரசம் ததும்பும் கனிவான பாடல்! இதயம் தொடுகின்ற இனிய கலை காதலென்பதை இதுபோன்ற பாடல்கள் ஒவ்வொன்றும் நிரூபிக்கின்றன. அட்டியின்றி அவள் அழகை வர்ணிக்கக் காதலன் முற்படும்போது வட்டியும் முதலுமாக அவளும் திருப்பித்தரும் பேரழகு இப்பாடலெங்கும் வியாபித்திருக்கிறது. நாயகனும் நாயகியும் இணைசேர்ந்து இயற்றமிழை உச்சரிக்க நடப்பது அங்கே நாட்டியம் தமிழன்றோ? இவற்றை ஒருங்கிணைக்கும் இனிய பணியை இசைத்தமிழ் இனிதே நிறைவேற்றிட மற்றொரு வெற்றிப்பாடல் மக்களை ... Full story
Page 2 of 612345...Last »
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.