Archive for the ‘கவிஞர் வாலி’ Category

Page 3 of 612345...Last »

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே – கவிஞர் வாலி

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே - கவிஞர் வாலி
கவிஞர் காவிரி மைந்தன் அந்த நாள் ஞாபகம் ..... வழக்கம்போல் இல்லாமல் புதிய யுக்தியில் பாடல்கள் பிறப்பதுண்டு! வாழ்வில் எதார்த்தமாக பேசும் வார்த்தைகளையே பாடலின் உள்ளீடாகத் தரும்போது.. அதையும் சவாலாக எடுத்துக்கொண்டு.. இசையமைத்த விதமும்.. உயர்ந்த மனிதனில் இடம்பெற்ற இப்பாடலை இன்னும் உயரச் செய்திருக்கிறது! நடிகர் திலகமும் மேஜர் சுந்தரராஜனும் இணைந்து தங்கள் பால்யகால நட்புமுடல் பள்ளிப் படிப்பு என - இன்றைய வாழ்வு வரை அலசிடும் அழகையெல்லாம் அப்படியே எழுதிக் காட்டிய வாலி அவர்களையும் அதற்கு அப்படியே ... Full story

உன்னிடம் மயங்குகிறேன்…

உன்னிடம் மயங்குகிறேன்...
-- காவிரிமைந்தன்.   உன்னிடம் மயங்குகிறேன்... தன் மனதை இன்னொருத்தியிடம் என்றைக்குப் பறிகொடுத்து என்னுயிர் நீயென்று பறைசாற்றுகிறோமோ - அன்று முதல் ஆரம்பமாகிறது காதல் தேரோட்டம்! கணம் ஒன்று செல்வதைக் கூட மனம் கனமாக நினைக்கத் தோன்றும்! உளம் ஒன்று இப்படி இருந்ததாக நேற்றுவரை அறிந்திராதவன் இன்று முதல் அதையும் சேர்த்துச் சுமக்கத் துவங்குகிறான்! இயற்கை தந்த இந்த ஈர்ப்பு விசையில் இவன் தன்னைத்தானே சுற்றிக்கொண்டு அவளையும் சுற்றுகிறான் என்று சொல்லலாமா? நேற்றுவரை எனக்கில்லை.. ... Full story

உனக்கென்ன குறைச்சல்.. கவிஞர் வாலி வி.குமார் எம்.எஸ்.விஸ்வநாதன்

உனக்கென்ன குறைச்சல்.. கவிஞர் வாலி வி.குமார் எம்.எஸ்.விஸ்வநாதன்
கவிஞர் காவிரி மைந்தன் உனக்கென்ன குறைச்சல்.. கடந்த காலமோ திரும்புவதில்லை.. நிகழ்காலமோ விரும்புவதில்லை.. எதிர்காலமோ அரும்புவதில்லை.. இதுதானே அறுபதின் நிலை.. வெள்ளிவிழா திரைப்படத்தில் வாலி + விஸ்வநாதன் கூட்டணியில் விளைந்த விளைச்சல்! ஆண்டொன்று போனால் வயதொன்று போகும் என இளமைக்குப் பரிந்து வரிகள் தந்த கவிஞர், முதுமைக்கும் கவிஞர் வாலி தந்திருக்கும் முத்தான வரிகள் - இப்பாடலிலா பிறப்பில் தொடங்கி இறப்பில் ... Full story

இந்திய நாடு என் வீடு, இந்தியன் என்பது என் பேரு…

இந்திய நாடு என் வீடு, இந்தியன் என்பது என் பேரு...
--கவிஞர் காவிரிமைந்தன்.       உள்ளத்துள் உள்ளது கவிதை என்றான் மகா கவி பாரதி.. உணர்ச்சிப் பிழம்பாய் அவன் படைத்த கவிதைகள்தாம் விடுதலை வேட்கைக்கு வித்திட்டன என்பதை நாம் அறிவோம். கவிஞன் என்பவனின் உள்ளம் எத்தகு களமாக அமைகிறதோ அவ்விதமே.. அவனிடமிருந்து கவிதைகள் பூப்பூக்கும் அல்லது கந்தகம் வெடிக்கும். ஏ.சி.திருலோகசந்தர் இயக்கத்தில் நடிகர் திலகம் நடித்த பாரத விலாஸ் திரைப்படத்தில் தேச ஒற்றுமையைக் காட்டும் அருமையான பாடல். இதயம் தொடும் இசையமைப்பை மெல்லிசை மன்னர் வழங்கியிருக்க.. கவிஞர் வாலி அவர்களின் கைவண்ணத்தில் ... Full story

பாட்டுக்கு பாட்டெடுத்து, – கவிஞர் வாலி – படகோட்டி திரைப்பாடல்!!

பாட்டுக்கு பாட்டெடுத்து, - கவிஞர் வாலி - படகோட்டி திரைப்பாடல்!!
கவிஞர் காவிரி மைந்தன் படகோட்டி திரைப்பாடல்கள் அனைத்தையும் வரைந்த கவிஞர் வாலிக்கு முழுக்க முழுக்க புகழ்மாலை சூட்டிய பாடல்கள்! அன்றைக்கும் இன்றைக்கும் என்றைக்கும் வாலியின் வாடாமலர்கள் இவை என்றால் அது மிகையில்லை! விஸ்வநாதன் ராமமூர்த்தி இருவரின் இசையில் விளைந்த அற்புதவிளைச்சல் எக்காலத்திற்கும் இப்பாடல்களை பவனிவரச் செய்கிற பணியை இனிதே செய்துகொண்டிருக்கிறது! டி.எம்.செளந்திரராஜன் பி.சுசீலா குரல்களில் உள்ள மாயம் என்ன.. எங்கே நாம் அறிந்துகொள்ள முடிகிறது? அந்த மயக்கத்திலிருந்து விடுபடுவதொன்றும் அத்தனை ... Full story

புத்தம் புதிய புத்தகமே.. – கவிஞர் வாலி

புத்தம் புதிய புத்தகமே.. - கவிஞர் வாலி
கவிஞர் காவிரி மைந்தன் சமுதாயத்திற்காக ஆண், பெண் என்கிற உயிரினங்கள் தோன்றிய நாள் முதல் தொடர்ந்து வருகின்ற காதலைப் பற்றி எழுதிக் குவித்த கவிஞர் பெருமக்கள், புலவர் பெருமக்கள் தொகை கணக்கிலடங்காது! இன்னும் இன்னும் எழுதிடவு இனிப்பானது காதலைத்தவிர வேறில்லை! அந்தக் காதல்பற்றிய பாடல்கள் திரைப்படங்களில் இல்லாமலிருக்கவும் வழிகளிலில்லை. ஆனால், கற்பனைகளின் உயரம், கவித்துவச் சொற்களின் தன்மை, புதிய கோணத்தில் தான் வைக்கும் வார்த்தைகள் - அதுவும் இசைக்கோர்வைக்கும் ... Full story

தாமரைக் கன்னங்கள்..

தாமரைக் கன்னங்கள்..
 காவிரி மைந்தன் எண்ணங்களைப் பதிவு செய்ய எழுத்து கைகொடுக்கிறது! அதைப்பல வண்ணம்கலந்து சொல்வதுதான் கவிதை!  இது மொழியின் நாகரீக அடையாளம்!  வரம்பில்லாத உச்சம்!  காலம் காலமாக.. எழுதப்பட்டு வந்தாலும் இன்னுமிருக்கிறது மிச்சம்! அன்றுதொட்டு அழகுணர்வு கவிதையின் அச்சாரமாய் விளங்கி வருகிறது!  சொல்லும் பாவனையும் சொற்களின் பயன்பாடும் ஒன்றிணையும்போது வித்தகமாய் விளைந்துவிடுகிறது கவிதை! அதைச் செப்புகின்ற பாவலனின் மனவளம், கற்பனா சக்தி, கவித்துவத்திறன் இவைகளால் கவனரதம் நகர்கிறது! பெண்களின் கண்களிலே விழுந்து.. அதைக் கடந்து செல்ல முடியாத ... Full story

ஆனந்தம் விளையாடும் வீடு… ‘நீதானே எங்கள் திருக்கோயில் விளக்கு’.. நீயில்லை என்றால் தெரியாது கிழக்கு’

ஆனந்தம் விளையாடும் வீடு...  'நீதானே எங்கள் திருக்கோயில் விளக்கு'.. நீயில்லை என்றால் தெரியாது கிழக்கு'
காவிரி மைந்தன் கணவன் - மனைவி என்கிற பந்தமுடன் தொடங்கும் இல்வாழ்க்கை இனிமையானது!  இனிதானது!  'சம்சாரம் என்பது வீணை;  சந்தோசம் என்பது ராகம்' என்பார் கண்ணதாசன். பருவகாலங்களில் இருபாலரும் கனவாய்ச் சுமந்திடும் இல்லற வாழ்வு இனிதாய் துலங்கும் திருநாள் வருமே!  திருமணம் எனுமே!  சுற்றம் சூழ நட்பும் பேண புதிய வாழ்க்கைக் கதவு திறக்கப்படுமே!  அவன் என்பது அவளுக்காகவும்.. அவள் என்பது அவனுக்காகவும் என ஒரு அழகிய வட்டம் தோன்றும்.ஒருவருக்கொருவர் புரிந்து அனுசரித்து விட்டுக் கொடுத்து வாழுகின்ற தம்பதியர் மட்டுமே இல்வாழ்க்கையில் முழுமையாக வெற்றி பெறுவார்கள்.... Full story

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே!

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே!
--கவிஞர் காவிரிமனிதன். இதோ எந்தன் தெய்வம் முன்னாலே... ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்றார் பேரறிஞர் அண்ணா! பிறர் தேவை அறிந்துகொண்டு வாரிக்கொடுப்பவர்கள் தெய்வத்தின் பிள்ளையல்லவா என்பார் கவியரசு கண்ணதாசன். இருப்பவன் இல்லாதவனுக்குக் கொடுப்பதைவிட சிறப்பேது? வலது கை கொடுப்பது தன் இடது கை அறியாது என வாழ்ந்த கர்ண பரம்பரைகளும் இங்கு உண்டு. அன்னதானம் செய்வது ஆலயம் தொழுவதிலும் சால நன்று! அதனினும் எழுத்தறிவித்தல் மேலும் உயர்ந்தது. கல்விச் செல்வம் ... Full story

அந்த மாப்பிள்ளை காதலிச்சான் …

அந்த மாப்பிள்ளை காதலிச்சான் ...
-- கவிஞர் காவிரிமைந்தன் மெல்லிசை மன்னர்கள் என்கிற பட்டம் சென்னை என்.கே.டி.கலா மண்டபத்தில் வழங்கப்பட்டது. நெற்றியிலே ஒரு திலகம் எப்படித் திகழுமோ அப்படி கவிஞர் வரையும் பாடல் வரிகளிலும் சில நட்சத்திரமாய் மின்னும். எழில் முகம், செவிகள், என ஏனைய இடங்களிலிருந்தாலும் பளிச்சென்று படுவது அந்தத் திலகம்தான்! அதுவும் அந்நாளில் கோலோச்சியிருந்த கவிஞர் கண்ணதாசன், விஸ்வநாதன் ராமமூர்த்தி ஆகிய இருவருக்கும் திருவல்லிக்கேணி என்.கே.டி.கலா மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மெல்லிசை மன்னர்கள் பட்டம் வழங்கியபோது ஆற்றிய ... Full story

மெல்லப்போ.. மெல்லப்போ…

கவிஞர் காவிரிமைந்தன் மெல்லப்போ.. மெல்லப்போ... ‘மெல்லிசை மன்னர்’ என்கிற பட்டம் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களுக்கு எப்படிப் பொருந்துகிறது என்பதற்கு இந்த ஒரு பாடல் ஒன்றே போதும் கட்டியங்கூற! பாடலின் இடையே பயன்படுத்தப்பட்டிருக்கும் வயலின் சோலோ.. பிரத்யேகமாக உபயோகப்படுத்தப்பட்டிருக்கும் வண்ணம் உச்சிமுகந்து பாராட்டச் சொல்கிறது! மென்மையான வார்த்தைகளைத் தந்து மெல்லிய பூங்காற்றுபோல இசையம் தொடர மென்மை என்பது என்ன என்பதை இப்பாடலில் கேட்டுத்தெரிந்து கொள்ளலாம். கவிதையில் இன்பம் இருக்கிறது என்கிறார்களே.. அது என்ன.? இப்பாடல் வரிகளைப் பார்த்தாலே சுகம் கிடைக்கிறது! கேட்டாலே பூரணம் பிறக்கிறது!... Full story

மலரே குறிஞ்சி மலரே…

மலரே குறிஞ்சி மலரே...
-- கவிஞர் காவிரிமைந்தன்.     அழகிய பூக்கள் இயற்கையின் எழிலை தினம்தோறும் கொட்டித் தீர்க்கின்றன!  மலையில் பிறக்கும் மலரிது!  அதுவும் பன்னிரு ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் மலர் எனும்போது அதன் மகத்துவம் கூடுகிறது!  தொடங்கிடும் பல்லவியே இந்த மலரை ஏந்திவருகிறது!  பாடல் பிறக்கிறது! கவிஞர் வாலியின் கரங்களிலே.. மெல்லிசை மன்னரின் இன்னிசையோடு மலையோரம் வீசுகின்ற மந்தகாசக் காற்றுபோல நம்மைநோக்கி நடைபோடும் தென்றலிது!  மலரைப்  பெண்ணுக்கு உவமையாக்கிவிடும் கவிஞர்களின் வரிசையில் வாலியின் கரம்பட்டு இந்தக் குறிஞ்சிமலர் ... Full story

என்ன விலை அழகே!!!

என்ன விலை அழகே!!!
-- கவிஞர் காவிரிமைந்தன்.     கவிதை என்னும் கனிமொழியில் தினம் உருகிக் கிடப்பதால் வாலி அவர்களின் வார்த்தைகள் அனைத்தும் முத்து முத்தாகவு உதிர்கின்றன!  அழகு என்னும் ஆபரணத்தை மங்கை அணிந்து வரும் போதிலே அதை வர்ணிக்க வேண்டும் என்றால் சொல்லவும் வேண்டுமோ? “பல்லவன் சிற்பிகள் அன்று பண்ணிய சிற்பத்தில் ஒன்று பெண்ணென வந்தது இன்று சிலையே!” என்று  வார்த்தையில் வரைந்தளிக்க வாலியால்தான் முடிகிறது! காதலர் தினம் பாடல் தினம்தோறும் பாடலாம் போல்! படைத்தான் ... Full story

சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ?

சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ?
-- கவிஞர் காவிரிமைந்தன். முத்தாரம் சிரிக்கின்ற சிரிப்பல்லவோ? முழு நெஞ்சைத் தொடுகின்ற நெருப்பல்லவோ? ஒளியும் இருளும் சந்தித்துக் கொள்ளும் இனிய மாலை நேரம்.. கதிரும் மேற்கில் மறைந்து இருளே உலகை ஆளும் .. கடலின் அலைகள் வழக்கம்போல் வந்து  சிந்து பாடும் வானின் நிலவும் வந்து தன் எழில் முகத்தை அங்கே காட்டும்.. இவைகளுக்கு இடையில் தலைவன்  அங்கே வந்து சேர்ந்துவிட்டால் இன்பத்திற்கே  திறந்து வைத்த உலகம் இதுவே எனலாம்! எழிலாள் முகத்தை ... Full story

மையேந்தும் விழியாட மலரேந்தும் குழலாட …

மையேந்தும் விழியாட மலரேந்தும் குழலாட ...
-- காவிரிமைந்தன். பரிமாறும் நேரத்தில் பசியாறினேன்... மையேந்தும் விழியாட மலரேந்தும் குழலாட ... "பூஜைக்கு வந்த மலர்" திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலிது! பி.பி.ஸ்ரீநிவாஸ்- பி.சுசீலா குரல்கள் இழைந்து தரும் விருந்து!  இதயமலர்கள் இரண்டு இணைந்து திரையில் தோன்ற இசையின் கோலம் புல்லாங்குழலில் புறப்பட்டு வருகிறது. ஆண்மையும் பெண்மையும் சந்திக்கும் அந்தப்புரமென்றும், தனிமையில் இருவரும் ஒருவருக்கொருவர் அறிமுகமாகும் சொந்தப்புரமென்றும், மல்லிகை மலரணை பூத்திரி, ராத்திரி என்கிற வார்த்தைகள் சரளமாய் வந்துபோகுமென்றும், பருவம் சுமந்துவந்த கனவுகளெல்லாம் ... Full story
Page 3 of 612345...Last »
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.