Archive for the ‘கவிஞர் வாலி’ Category

Page 4 of 6« First...23456

சக்கரக்கட்டி ராசாத்தி…

சக்கரக்கட்டி ராசாத்தி...
-- கவிஞர் காவிரிமைந்தன்.     மனம் ஒரு பறவை!  விரும்பும் திசையெல்லாம் பறந்துகொண்டேயிருக்கும்!  மனிதனுக்குத்தான் இறகுகள் இல்லை!  உடலால் பறக்க முடியாவிட்டாலும் உள்ளத்தால் பல தூரம் கடந்து விடுகிறான்.  நனவில் அல்ல!  கனவில்!!  எதார்த்தங்களை வாழ்வில் பார்த்துச் சலித்துப்போன பிறகு  நமக்கும்கூட அப்படிப் பறந்திட எண்ணம் வரும்!  அதுவும் காதல் கொண்ட பருவத்தில் என்றால் எல்லைகள் அங்கே இல்லவே இல்லை! பொழுதுபோக்கிற்காக உருவாக்கப்படும் திரைச் சித்திரங்களில் இந்த எதார்த்தங்களை மீறி கொஞ்சம் மாய ஜாலம் கலந்து மக்களுக்குத் ... Full story

ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது

ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது
-- கவிஞர் காவிரிமைந்தன்.   அன்பின் ஆர்ப்பரிப்பா?  காதல்.. இல்லை.. அது ஆனந்த பைரவியா? எப்போது இது தோன்றுமென்பதை எவரும் முன்கூட்டி சொல்வதில்லை! இந்த ஒற்றைப்பூ நெஞ்சுக்குள் பூத்துவிட்டால் சந்தோஷ மழைக்கென்றுமே பஞ்சமில்லை!  கண்ணுக்கு மட்டுமே முதல் தகவல் கிடைக்க..  அது மனசுக்குள் சென்று செய்யும் கலவரமிருக்கிறதே .. காதலித்தவர்களுக்கே புரியும் - அந்த ஆனந்த அவஸ்தை! பார்வையில் தொடங்கி நெஞ்சப் பரிமாற்றமென காதலின் நிலைகள் பலவும் கவிதையில் கேட்பது இனிமை!  வரைமுறைக்குள் நடக்கின்ற இந்த ... Full story

ஆண்டவன் ஒரு நாள் கடைவிரித்தான் …

ஆண்டவன் ஒரு நாள் கடைவிரித்தான் ...
-- கவிஞர் காவிரிமைந்தன். ஆண்டவன் ஒரு நாள் கடைவிரித்தான் ... அன்பை வாங்கிட எவரும் இல்லை!!!???? ஜீவராசிகள் முதல் மானுடவர்க்கம்வரை வகை வகையான உயிரினங்கள், இயற்கை வளங்கள் முதல் விண்மீன்களென பால்வீதியையும் படைத்தவன்.. விநோதமாக இருக்குமிடம் தெரியாமல் தானிருந்து ஆட்டுவிக்கும் நாடகமே இவ்வாழ்க்கை!  இதில் ஏற்றுள்ள பாத்திரங்களை இயல்பாக நடிப்பதைத் தவிர வேறு வழியில்லாமல் மர்ம முடிச்சுக்கள் இடப்பட்டிருக்கின்றன!  மேலும் இதயத்தையும் மூளையையும் சம்பந்தப்படுத்தி - மனம் என்கிற கடலையும் மனிதனுக்குள் படைத்துவிட்டான்!  ... Full story

செல்லக்கிளியே மெல்லப் பேசு…

செல்லக்கிளியே மெல்லப் பேசு...
– கவிஞர் காவிரிமைந்தன்.   வாலி வழங்கிய,  கொடை வள்ளல் எம்.ஜி.ஆருக்கே சமர்ப்பணம் என்ற வரி வரையப்பட்டால் அது சத்திய வாசகமே! கொட்டிக்கவிழ்த்திருக்கிறார் தனது தமிழறிவை! அதுவும் வெற்றி பெற்றுள்ள அனைத்து மெட்டுக்களிலும் தன் தமிழைக் கொடிகட்டிப் பறக்கவிட்டிருக்கிறார் என்பதும் மிகையில்லை!  எத்தகையப் பாடலென்றாலும் எழுதிவிடும் ஆற்றல் இறைவன் இவருக்குத் தந்தது!  தத்தகாரம் போன்ற விவகாரங்களில் இவரது நாடகத்துறை அனுபவம் கைகொடுத்து வந்தது!  தாலாட்டு, காதல், வீரம், சோகம், தத்துவம், கொள்கைப் பாடல்கள் என்று எந்த விதத்திலும் தனது ... Full story

ஜெயிச்சிட்டே! கண்ணா நீ ஜெயிச்சிட்டே! – கவிஞர் வாலி

ஜெயிச்சிட்டே! கண்ணா நீ ஜெயிச்சிட்டே! - கவிஞர் வாலி
கவிஞர் காவிரி மைந்தன் வழக்கமான சினிமாப் பாடல்தான்! ஒரு பாத்திரம் பேசுவதற்கு பதிலாக பாடுகிறது! பாடல் வரிகள் மட்டும் அந்தக் கதாப் பாத்திரத்தையும் மீறி வாழ்க்கையின் கீதையை நமக்குக் காட்டுகிறது! வேதாந்தம் புரிகிறது! ஆதி அந்தங்கள் தெளிவாகிறது! மனிதன் கடவுளை உணருகிறான்! அந்த உணர்வைத்தான் பாடலை வடித்துள்ளார் கவிஞர் வாலி! ஜெயிச்சிட்டே! கண்ணா நீ ஜெயிச்சிட்டே! திறந்துட்டே கண்ணை திறந்துட்டே... Full story

பெளர்ணமி நிலவில் பனிவிழும் இரவில்…

பெளர்ணமி நிலவில் பனிவிழும் இரவில்...
--கவிஞர் காவிரிமைந்தன். கன்னிப்பெண் திரைப்படத்திற்காக நடிகர் சிவக்குமார் வெண்ணிற ஆடை நிர்மலா இணைசேர.. கவிஞர் வாலி எழுதிய பாடலுக்கு மெல்லிசை மன்னர் அமைத்த இசையில் எஸ்.பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி பாடியிருக்கிறார்கள்.  முழுமையான மெல்லிசைப் பாடலிது என்று முழங்குகிறது இசை!    ... Full story

மல்லிகை என் மன்னன் மயங்கும் …

மல்லிகை என் மன்னன் மயங்கும் ...
-- கவிஞர் காவிரிமைந்தன். எத்தனையோ மலர்களிங்கே மண்ணிலிருந்தாலும் மல்லிகைக்கென்று ஒரு மகத்தான இடம் மங்கையரிடம் மட்டுமில்லை,  ஆடவரின் உள்ளங்களிலும் உண்டு!  வெள்ளை நிறத்தில் மொட்டாகக் கூடிச் சரமாய்த் தொடுக்கப்பட்டுப் பின் மெல்ல மெல்ல இதழ் விரித்து மணம்தனைப் பரப்பி மனதையும் மயக்கும் மலரன்றோ? மஞ்சமென்றதும் மல்லிகைதான் முதலில் நினைவுக்குள் தோன்றும்! மங்கையரின் கூந்தலில் பெரும்பாலும் இடம் பெறுகின்ற மலர் - மல்லிகை!  எனவேதான் 'தீர்க்கசுமங்கலி' திரைப்படத்தில் 'புன்னகை அரசி' கே.ஆர்.விஜயா அவர்கள் நடிப்பில் ... Full story

அல்லா அல்லா .. நீயில்லாத இடமே இல்லை..

அல்லா அல்லா .. நீயில்லாத இடமே இல்லை..
--கவிஞர் காவிரிமைந்தன்.   ரம்ஜான் வாழ்த்துகள்!!! உடலுக்கு ஒன்பது வாசல் மனதுக்கு எண்பது வாசல் உடலுக்கு ஒன்பது வாசல் மனதுக்கு எண்பது வாசல் உயிருக்கு உயிராய்க் காணும் ஒரு வாசல் பள்ளிவாசல் கடவுள் அமைத்த மேடை இவ்வுலக வாழ்க்கை என ஒரு மதம் சொல்கிறது.  இறைவனின் படைப்பில்தான் எத்தனை எத்தனை உயிரினங்கள்.. தோன்றியது.. ஆதாம் ஏவாளில் என இன்னொரு மதம் சொல்கிறது.. இன்னும் எத்தனை ... Full story

அம்மா என்றழைக்காத உயிரில்லையே…

அம்மா என்றழைக்காத உயிரில்லையே...
--கவிஞர் காவிரிமைந்தன் கண்கள் பனிக்கும்! கருவறையில் உன்னைச் சுமக்கும் நொடி முதலாக தன்னை மறக்கும்! உன்னை நினைக்கும்! வண்ணக் கனவுகள் ஆயிரம் கண்டு உன்னை வளரத்திடும் பெண்மையின் பூரணம் தாய்!  கடவுள் ஒவ்வொரு வீட்டிலும் எடுக்கின்ற அவதாரம் ‘தாய்’ என்பதும் மிகையில்லை!  கருணை, அன்பு, பாசம், நேசம் என்று எத்தனையோ சொற்கள் தாயிடம்தானே குடிகொண்டுள்ளன. "அம்மா" என்கிற ஆதாரச் சொல்லிலே அன்பின் அடையாளங்கள்!  ‘அம்மா’ என்று அழைக்கும்போதே.. நமக்குள் எத்தனை சுகஸ்வரங்கள்?  பூமியைக்கூட தாய் என்றுதானே நாமும் அழைக்கிறோம்!  அறிவியல் ... Full story

எனக்கொரு காதலி இருக்கின்றாள்…

எனக்கொரு காதலி இருக்கின்றாள்...
--கவிஞர் காவிரிமைந்தன். ஏதோ ஒரு சில பாடல்களில் மட்டும்தான் இசையும் கவிதையும் தங்களைப்பற்றி சிலாகித்துக்கொள்ளும் இதுபோல! எடுத்த எடுப்பிலேயே.. கவிதையே பல்லவியாகிறது பாருங்கள்! எனக்கொரு காதலி இருக்கின்றாள் அவள் ஏழு சுரங்களில் சிரிக்கின்றாள். மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்து பாடும்நிலா பாலசுப்பிரமணியனுடன் இணைந்து பாடிய பாடல்! இசையமைத்த பின் எழுதப்பட்டதா.. எழுதிய பின் இசையமைத்தார்களோ.. எதுவாயினும் கவிஞர் வாலியின் கற்பனா சக்தியும் மெல்லிசை மன்னரின் இசைப் பிரவாகமும் இங்கே நம்மை ... Full story

அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்……

அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்......
--காவிரிமைந்தன்.       திருமுருகன் அழகினில் மயங்காதவர் யார்? அழகுக்கு மறுபெயரே முருகன்தானே!  அன்னவர்தம் சரண்புகுந்தார் எனும்போது அவன்மீது ஆசைவைத்து நாயகி பாடுகின்றாள் ஒரு பாடல்!  'பஞ்சவர்ணக்கிளி' திரைப்படத்தில் இடம்பெற்ற பாட்டு!  கவிஞர் வாலி அவர்கள் வரைந்திருக்கும் ஓவியமாய், சுகமான சொற்களிலே சொக்க வைக்கிறார்!  பி.சுசீலா குரலிலே தேன்மழை பொழிகிறார்!  மெல்லிசை மன்னர்கள்  இசையமைத்திட இனிதாய் ஒரு பாடல் அரங்கேறுகிறது!  நம் மனதில் இன்றும் அக் ... Full story

நான் ஏன் பிறந்தேன்!!!

நான் ஏன் பிறந்தேன்!!!
--கவிஞர் காவிரிமைந்தன். நான் ஏன் பிறந்தேன்!!! பத்துத் திங்கள் சுமந்தாளே அவள் பெருமைப் படவேண்டும் உன்னைப் பெற்றதனால் அவள் மற்றவராலே போற்றப்பட வேண்டும் க‌ற்ற‌வ‌ர் ச‌பையில் உன‌க்காக‌ த‌னி இட‌மும் த‌ர‌ வேண்டும் உன் க‌ண்ணில் ஒரு துளி நீர் வந்தாலும் உல‌க‌ம் அழ‌ வேண்டும் கவிஞர் வாலி அவர்கள் இயற்றி மக்கள் திலகம் நடித்து வெளியான ... Full story

அழகு தெய்வம் மெல்ல… மெல்ல…

அழகு தெய்வம் மெல்ல... மெல்ல...
--கவிஞர் காவிரிமைந்தன். காதலிலே கடிதம் என்பது இன்ப ஊற்று! -  இப்படி எழுதப்பட்டால்.. காதலிக்கு மடல் தீட்டுவதென்பது - ஒரு சாதாரண மனிதனையும் கவிஞனாக்கும் படலம்! மடை திறந்த வெள்ளம் பெருகிவர வார்த்தை நதி ஓடிவருகிறதே.. அவள் உள்ளம் தொட!!  இந்தப் பகீரத முயற்சி - பலபேரை கவி எழுத வைத்திருக்கிறது எனவேதான்.. கவிஞர்கள் பிறப்பது காதலில் என்பார்கள்! ‘பேசும் தெய்வம்’ என்கிற திரைப்படத்திற்காக கவிஞர் வாலி வரைந்த மடலிது!  இசைவடிவம் திரையிசைத்திலகம் ... Full story

இசை ஞானி இளையராஜா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

 இசை ஞானி இளையராஜா அவர்களுக்கு  இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ... கவிஞர் வாலி இசை ஞானி இளையராஜா ஜெயச்சந்திரன் பி. சுசீலா உள்ளத்து உணர்வுகளில் பொங்கி வருவது கவிதை! கால வெள்ளத்தில் கோடிக்கணக்கான மறைந்த போதிலும், தங்களது பூவுலக வாழ்விற்குப் பின்னரும் புகழ் உலகில் வாழ்பவர்கள் மிகக் குறைவே! எனினும் கவிஞர்கள் என்று போற்றப்படும் படைப்பாளர்கள் தங்களது படைப்புகளால் யுகங்களைக் கடந்து நினைக்கப்படுவதும் அவர்தம் வரிகளால் வாசிக்கப்படுவதும் பிற துறைகளில் சாதனைப் படைத்தவர்களைக் காட்டிலும் ... Full story

ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல.. கவிஞர் வாலி!…

ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல.. கவிஞர் வாலி!...
கவிஞர் காவிரிமைந்தன் ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல.. உள்ளத்து உள்ளது கவிதை என்பார் நாமக்கல் கவிஞர்.  அது ஊற்றுக்கண் திறந்ததும் புனலாய் வெளிப்பட்டு உருவாகும் வெள்ளம்!  கவிஞர்தம் நெஞ்சமும் அப்படித்தான்!  உள்ளத்துள் தான் உணர்ந்ததை உணர்வின் வெளிப்பாடல் கவிதை வடிவில் மொழி பெயர்த்துவிடுகிறான்! இதில் திரைப்படப்பாடலாசிரியரோ.. ஒருவகையில் கதையை, கருவை, கதாபாத்திர இயல்புகளை பாடல்வரிகளில் பிரதிபலிக்க வேண்டிய பணியில் ஈடுபட்டு சொற்சித்திரம்தனை இசைக் கோர்வைக்குள் அமைத்திட ஒரு வகையில் தவமே கொள்கின்றான்.  இந்தக் கற்பனைக் கலவையில் உருவாகிடும் பல்லாயிரம் பாடல்களில் - திரையில் தோன்றும் ... Full story
Page 4 of 6« First...23456
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.