Archive for the ‘கவிஞர் வாலி’ Category

Page 5 of 6« First...23456

உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது…

உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது...
-- கவிஞர் காவிரிமைந்தன் உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது... நல்லோர் வாழ வழியில்லாத நாட்டில் நடப்பது என்ன? தன்னலம் தலைவிரித்தாடும் .. பொதுநலம் பூமுகம் வாடும்.. சர்வாதிகாரியின் கரங்களில் சிக்கி ஒரு சமுதாயம் இழிபடும்.. இன்னலைத் தீர்க்க இங்கே எவருமே இல்லையா என்கிற ஏக்கம் குரலாய் மேவிடும் வேளை - பாரில் தேவனாய் தோன்றுவான் ஒருவன்.. புராணங்கள் முதலாக புரட்சியில் பூத்த வரலாறுகள் எல்லாம் இந்த பூமியில் சாட்சியாகவே. தோன்றத்தான் போகிறது சம உரிமை ... Full story

பருவம் எனது பாடல் …..

-- கவிஞர் காவிரிமைந்தன்   பருவம் எனது பாடல் ... - ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்திற்காக - கவிஞர் வாலியின் வரிகள்!!   பருவம் எனது பாடல்.. இப்படத்தில் முதல் பாடல்! முத்தான பாடல்! குழுவினர் நடனத்தோடு அந்தக் குதூகலம் அரங்கேறுகிறது! மாடமாளிகையின் மைய மண்டபம்.. சித்திரம்போல் எழுதிவைத்த சிங்காரியின் வருகையை கலைநுணுக்கங்களோடு கண்ணுக்கு விருந்தாக்கிப் படைக்கிறது! இயக்குனர் பி.ஆர்.பந்துலுவின் கற்பனை காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆம்.. அதோ வருகிறாள் கதையின் நாயகி.. அறிமுகக் கட்டத்தை இப்படி ஆராதிக்க ஒரு கவிஞனால் மட்டுமே முடியும் என்று கருதிதான் பாடல்காட்சியாக அமைக்கப்பட்டிருக்கிறது. ... Full story

தூளியிலே ஆட வந்த வானத்து மின்விளக்கே

தூளியிலே ஆட வந்த வானத்து மின்விளக்கே
கவிஞர் காவிரி மைந்தன் தூளியிலே ஆடவந்த தாய் ஒருத்தி மட்டும்தான் இன்னும் பால்போல் தூய்மையாய் இருக்கி்றாள் இந்தத் தரணியில்! தன் குழந்தை - தன்னுதிரம் என்னும்போதிலே தன்னையே தருகின்ற தாய்மைக்கு நிகராக ஏதுமில்லை! கண்போல் வளர்த்திட வேண்டுமென யாரும் அவளுக்குப் பாடம் கற்றுத் தருவதில்லை! இயல்பாய் அவளின் பரிணாமம் தாய்மைப் பேற்றோடு பின்னிப்பிணைந்திருக்கிறது! எத்தனை துன்பமென்றாலும் அதையெல்லாம் தான் ஏற்று, தன் செல்வம் அனைத்து வகைகளிலும் பாதுகாப்பாய் இருக்க வேண்டி, விரதம் இருப்பதுமுதல்.. மேனியிளைப்பதுவரை.. எதையும் தாங்குகிறாளே தாய்..அவளின் அன்பிற்கு.. கருணைக்கு, சேவைக்கு ... Full story

காதல் ராஜ்ஜியம் எனது அந்தக் காவல் ராஜ்ஜியம் உனது

காதல் ராஜ்ஜியம் எனது அந்தக் காவல் ராஜ்ஜியம் உனது
காதல் ராஜ்ஜியம் எனது அந்தக் காவல் ராஜ்ஜியம் உனது - கவிஞர் வாலி 1975ல் வெளிவந்த மன்னவன் வந்தானடி திரைப்படத்தில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைப்பில் கவிஞர் வாலியின் கைவண்ணம். நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் மஞ்சுளா நாயகியாக திரையில் எழுதப்பட்ட இனிய காதல் கவிதையிது! கொஞ்சும் தமிழெடுத்து காதலியைக் கொஞ்சும் வண்ணங்கள்.. குளிர்நீரில் நீந்தும் பனிக்காற்றில் பொங்கும் எண்ணங்கள்! தமிழின் இனிமை என்னவென்று தாராளம் காட்டும் பாடலில் ஏற்ற இசை கொடுத்து இனிய குரல்களின் சங்கமம் இதோ டி எம். சௌந்தரராஜன் ... Full story

பொங்கும் கடலோசை – கவிஞர் வாலி

பொங்கும் கடலோசை - கவிஞர் வாலி
கவிஞர் காவிரி மைந்தன் பொங்கும் கடலோசை.. கேளுங்கள் அன்பர்களே! ஒரு பாடல் நம்மை அழைக்கிறது! தேவசுகம் தருகிறது! நாயகன் மனதளவில் சரிந்திருக்கும் நேரத்திலே நாயகி துணைவருகிறாள்! அவனை தூக்கிநிறுத்துகிறாள்! அவன் நெஞ்சம்நோக்கி ஒரு பச்சைக்கிளி பாட்டுப் பண் இசைக்கிறது! ஓ.. அந்த அழைப்பில்தான் எத்தனை உற்சாகம் ஊற்றெடுக்கிறது? ஜலதரங்கம் கலகலக்கத் தொடக்கம் பெறும் பாடலிது! அலைகளிடையே இசை ஒன்று உருவானால் அது எப்படிப் பேசுமோ.. அப்படிப் பேச வைத்திருக்கிறார்.. மெல்லிசை ... Full story

மூன்றுதமிழ் தோன்றியதும் உன்னிடமோ?

மூன்றுதமிழ் தோன்றியதும் உன்னிடமோ?
கவிஞர் காவிரி மைந்தன் மூன்றுதமிழ் தோன்றியதும் உன்னிடமோ? கவிஞர் வாலி தமிழக வரலாற்றில் அரசியலும் சினிமாவும் அளவின்றிப் பின்னிக் கிடக்கிறது. திரைத் துறையில் தடம் பதித்து மக்களுக்கு அறிமுகமானவர்கள் அரசியலிலும் கோலோச்சியது உலக வரலாற்றில் வேறெங்கும் கண்டிராத புதுமை! அதுபோலவே.. அரசியலில் வெற்றிகளை ஈட்டியவர்கள் - திரைப்படத் தயாரிப்பாளர்களாகவும் பரிணாமம் காட்டினார்கள். இதிலே ஆச்சரியம் என்னவென்றால், அரசியிலில் எதிரும் புதிருமாக விளங்கிய இருபெரும் தலைவர்களுமே - தாங்கள் சம்பந்தப்பட்ட திரைப்படங்களில் எழுத ஒப்பந்தம் செய்தது ஒரே கவிஞரைத்தான்! அவர் கவிஞர் ... Full story

இறைவா உன் மாளிகையில்!…

இறைவா உன் மாளிகையில்!...
  கவிஞர் காவிரிமைந்தன்                 இறைவா உன் மாளிகையில்...   வியத்தகு நிகழ்வொன்று தமிழகத்தில் நிகழ்ந்தது.  அதுவும் திரைப்பாடல் ஒன்றில் எழுதிய வரிகள் மக்களின் பிரார்த்தனை கீதமாக முழங்க ஒரு தலைவனின் உயிருக்காக ஜாதி, மதங்கள் கடந்து மக்கள் ஒருமித்த வகையில் கடவுளிடம் கருணை மனு போட்டனர்.  இதுவெல்லாம் சாத்தியமா என்று எண்ணிப்பார்த்தால் வாய்ப்பில்லை என்பதுவே அனைவரின் பதிலாகும்.  ஆனால்,  நடந்தது தமிழ் நாட்டில்.. ஏழைகளின் பங்காளன், தாய்மார்களின் தலைமகன், எங்கவீட்டுப் பிள்ளை, வாத்தியார்.. மக்கள் திலகம்., பொன்மனச்செம்மல், புரட்சி நடிகர் என்றெல்லாம் புகழினை எட்டியதோடு.. ... Full story

அன்புள்ள மான்விழியே…ஆசையில் ஓர் கடிதம் – கவிஞர் வாலி

கவிஞர் காவிரி மைந்தன் அன்புள்ள மான்விழியே...ஆசையில் ஓர் கடிதம் - கவிஞர் வாலி - மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் -மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் - நடிகை பாரதி - குழந்தையும் தெய்வமும் திரைப்பாடல். ஒரு காதல் பாடல் மனதை வருடிக் கொண்டே இருக்குமா? இன்பரசத்தை இதயம் முழுவதும் அள்ளித்தெளிக்கும் வண்ணக் கோலமிதோ! கவிஞர் வாலியின் கரங்களில் முளைத்து வந்த வசந்த கீதமிது! மக்கள் கலைஞர் ஜெய்சங்கருடன் நடிகை பாரதி இணைந்து திரையில் தோன்றிய கோலமிது! மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் குழந்தையும் தெய்வமும் திரைப்பாடல். காதலியிடம் ... Full story

நாளை நமதே… இந்த நாளும் நமதே

கவிஞர் காவிரி மைந்தன் மக்கள் திலகம் என்னும் அடைமொழி எம்.ஜி.ஆர். அவர்களுக்கு கல்கண்டு தமிழ்வாணன் அவர்களால் வழங்கப்பட்டது. எம்.ஜி.ஆர் அவர்களின் மாபெரும் வெற்றிப்படங்களுக்குப் பாடல்கள் இயற்றிப் பெரும்புகழ் ஈட்டியவர் கவிஞர் வாலி அவர்கள் என்பதை வரலாறு சொல்கிறது. திரைப்படப் பாடலாசிரியர்கள் பல நூறு பேர்கள் வந்தாலும் தங்கள் தடங்களைப் பதித்துவிட்டுப் போனாலும் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரை மட்டுமே காலம் இன்று கணக்கில் வைத்திருக்கிறது. ஏன்.. எப்படி.. எண்ணிப்பார்த்தால், திரைப்பாடல்கள் என்கிற வரையறைகளை வகுத்துக்கொள்ளாமல், வாழ்க்கையின் எல்லைகளை.. இன்ப துன்பங்களை ... Full story

நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா – கவிஞர் வாலி மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்.. ஏ.சி.திருலோகச்சந்தர்.. ஏவிஎம்…

கவிஞர் காவிரி மைந்தன் தலைவன் - தலைவியின் உறவும் பிரிவும் சமூக வாழ்க்கைத் தொடங்கிய காலம் முதல் தொடர்கிறது. தலைவன் - தலைவியின் உறவும் பிரிவும் சமூக வாழ்க்கைத் தொடங்கிய காலம் முதல் தொடர்கிறது. சங்க காலப் புலவர்களும் சளைக்காமல் இதுபற்றிப் பாடிக் குவித்துள்ளார்கள். அகவியல் சார்ந்த காதலில் உறவது தருவது இனிமையென்றால் பிரிவது தருவது கொடுமையன்றோ? விதவிதமாக விளக்கங்கள், புதுவிதமான கற்பனைகள், கவிஞர்களுக்கு கைகொடுத்துக் கொண்டேதான் வருகிறது. இதற்கான வரவேற்பும் பொது மக்களிடம் என்றுமே குறைவதில்லை. அண்மையில் கவிஞர் யுகபாரதி ... Full story

ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை….

 கவிஞர் காவிரி மைந்தன் வரம்புகள் மீறாமல் வார்த்தைகளைப் பிரயோகப்படுத்த வேண்டும். அதிலும் வசப்படுத்தும் வரிகள் அமைக்க வேண்டும். கத்திமேல் நத்தை நகர்வது போன்றதொரு வித்தைதான் இது! மேயர் மீனாட்சி திரைப்படத்தில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வாணிஜெயராம் குரல்களில் மெல்லிசை மன்னர் வடித்த இசையில்.. மன்மத அம்புகள் பாய்ந்திடும்போதும் இலையிடையே காய்போல் இலக்கியம் அறிந்த கவிஞருக்கு உரித்தான பாணியில் ரத்தினச் சுருக்கமாய் வார்த்தைகள் வாய்திறக்கின்றன! உரிமையத் தந்து உடமையைத் தந்து நங்கை நாயகன் வசமானபின் சங்கமத்திருக்கோலம் சரிவிகிதக் கலவைதானே! இப்பிறவி மட்டுமின்றி ... Full story

கன்னி நதியோரம் மின்னி விளையாடும்..- கவிஞர் வாலியின் கைவண்ணம்!

கவிஞர் காவிரி மைந்தன் நீர்க்குமிழி என்னும் திரைப்படத்தை யாரும் மறக்கத்தான் முடியுமா? நகைச்சுவைத்திலகம் நாகேஷ் தான் ஒரு நவசர நாயகன் என உறுதிசெய்த படமாகும். முதல் பாதியில் வயிறு குலுங்க சிரிக்க வைத்து.. பிற்பாதியில் உள்ளம்கலங்கி அழவைத்துவிடுகிற அவரது நடிப்பை இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் பெற்றுத்தந்தார் என்றே சொல்ல வேண்டும். ஆடி அடங்கும் வாழ்க்கையடா என்கிற பாடலையும் இந்தப் படம் தாங்கி வந்தது. தான் சிகிச்சை பெறும் மருத்துவமனையின் உரிமையாளரின் புதல்வி வெளிநாடு செல்லும் முன் நடக்கின்ற ஒரு இனிய விழாவில் .. ஆடலும் பாடலும் ... Full story

ராமன் எத்தனை ராமனடி

கவிஞர் காவிரி மைந்தன் காலமகள் தந்த கவிதைக் கோமகன் கவியரசு கண்ணதாசன் திருவுருவச்சிலை திறந்துவைத்த பெருமகிழ்வில் .. கலைவாணர் அரங்கில் முழுநாள் வைபவங்கள்! கவியரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம், இசைவிருந்து நடைபெற்ற நாள் 11.12.1994. திரைவரலாறுகளைத் தன் விரல்நுனியில் வைத்திருக்கும் திரை அகராதி அருமைக்குரிய பிலிம்நியூஸ் ஆனந்தன் அவர்களின் ஆலோசனையேற்று திராவிடக் கவிஞர்கள் மூவரைத் தேர்ந்தெடுத்து ‘கண்ணதாசன் விருதுகள்’ வழங்கிப் பெருமையுற்ற கவியரங்கில்.. திருமிகு ஆருத்ரா.. தெலுங்குக் கவிஞர் - பின்வருமாறு கூறினார். தமிழ் கலந்த தெலுங்கில் அந்த இனியமகன் செப்பியதாவது.. "நானும் கவிஞர் கண்ணதாசனும் நல்ல ... Full story

ஒரு தரம்.. ஒரே தரம்.. -கவிஞர் வாலி….

கவிஞர் காவிரி மைந்தன் ஒரு தரம்.. ஒரே தரம்.. ஒரு தரம் ஒரே தரம் .. என்று தொடங்குகிறது.. பல்லவி.. சுமதி என் சுந்தரிக்காக.. காதல் சுகம் என்னவென்று அறியவிரும்புவர்கள் கண்டிப்பாக கேட்க வேண்டிய பாடல்! ஆயகலைகள் அறுபத்து நான்கு என்கிறார்கள்.. அது சரி .. காதல் என்பது எந்தக் கலை? ஆணுக்கும் பெண்ணுக்கும் கண்ணுக்குத் தெரியாத பந்தம் வளர்த்து.. கணநேரப் பிரிவைக்கூடத் தாங்கமுடியாமல் வலிக்கிறதே.. அது எப்படி? இருவேறு உடல்களுக்குள் இயங்கிக் கொண்டிருந்த இதயங்கள் இடம்மாறித் துடிக்கிறதே அது ... Full story

ஆயிரம் இரவுகள் வருவதுண்டு

கவிஞர் காவிரி மைந்தன் கற்பகம் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் முழுக்க முழுக்க கவிஞர் வாலியின் கைவண்ணமாகும். இசை மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்.. டி.கே.ராமமூர்த்தி. இன்னுமொரு விசேஷம் என்னவென்றால் பாடல்கள் எதிலும் ஆண்குரல் இல்லை. இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அவர்களின் லேடீஸ் சென்டிமென்ட் படம் இது என்றால் அது மிகையில்லை. புதுமுக நாயகியாக புன்னகை அரசி கே.ஆர்.விஜயா.. நடிகையர்திலகம் சாவித்திரி.. ஜெமினி கணேசன் முத்துராமன் என்கிற நட்சத்திரப் பட்டாளத்துடன் அன்றைய நாளில் வெற்றியைக் குவித்த படம்! பாடல்கள் நான்கே நான்கு! அனைத்தும் அமர்க்கள ... Full story
Page 5 of 6« First...23456
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.