Archive for the ‘ஏனைய கவிஞர்கள்’ Category

சத்தியத்தை நீங்கள் காத்திருந்தால், சத்தியம் உங்களைக் காத்திருக்கும்: கவிஞர் வைரமுத்து

சத்தியத்தை நீங்கள் காத்திருந்தால், சத்தியம் உங்களைக் காத்திருக்கும்: கவிஞர் வைரமுத்து
--நீலமேகம் ராமலிங்கம் சஹஸ்ரநாமன்.   கவிஞர் வைரமுத்து அவர்கள் 1985 ஆம் ஆண்டு , ‘படிக்காதவன்’ திரைப்படத்திற்காக ‘ ஒரு கூட்டுக் கிளியாக, ஒரு தோப்புக் குயிலாக பாடு, பண் பாடு’ என்ற பாடலை எழுதினார். அன்று மகாகவி பாரதியார் ‘குயில்’ பாட்டை எழுதினார். இன்று, கவிஞர் வைரமுத்து ‘ ஒரு கூட்டுக் கிளியாக, ஒரு தோப்புக் குயிலாக பாடு, பண் பாடு’ என்று கூறியுள்ளார்கள். ... Full story

“ஒருவன் ஒருவன் முதலாளி”

--நீலமேகம் ராமலிங்கம் சஹஸ்ரநாமன். கவிஞர் வைரமுத்து ”ஒருவன் ஒருவன் முதலாளி,” என்ற பாடலை 1995 ஆம் ஆண்டு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்த ‘முத்து’ திரைப்படத்திற்காக எழுதினார். ஆஸ்கர் விருது, பத்ம பூஷண் விருது பெற்ற ஏ. ஆர். ரகுமான் இசை அமைத்திருந்தார். எஸ். பி. பாலசுப்பிரமணியன் பாடிய பாடலிது. விதியை மதியால் வெல்லலாம் என்பது எல்லோரும் அறிந்ததே. நமது கவிஞர் வைரமுத்து அவர்கள் ‘விதியை நினைப்பவன் ... Full story

கிருஷ்ணா முகுந்தா முராரி …

கிருஷ்ணா முகுந்தா முராரி ...
-- கவிஞர் காவிரிமைந்தன். கிருஷ்ணா முகுந்தா முராரி ... திரைத்துறையில் நடிப்புலகில் பிரபலமாய் இருந்தவர்கள் அன்றைய காலகட்டத்தில் பாடல் பாடத் தெரிந்தவர்களாகவும் இருக்க வேண்டும் என்கிற எழுதப்படாத விதி இருந்தது. அப்படிப்பட்டவர்கள் கர்நாடக இசையில் விற்பன்னர்களாகவும் இருந்தது தவிர்க்க இயலாத தகுதியாகவும் இருந்தது. குறைந்தது பாடலாசிரியர் எனப்படுபவர் மெத்த இசையறிவு உடையவராக இருந்தார்கள். அவ்வரிசையில் 1944ல் வெளியான ஹரிதாஸ் திரைப்படத்தின் இப்பாடலை இயற்றிய பாபநாசம் சிவன் ... Full story

பாடும்போது நான் தென்றல்காற்று …

பாடும்போது நான் தென்றல்காற்று ...
--கவிஞர் காவிரிமைந்தன். பாடும்போது நான் தென்றல்காற்று ... 'நேற்று இன்று நாளை' திரைப்படத்தில் மக்கள் திலகம் பாடுகின்ற முதல் பாடலாக, மென்மையை மேன்மையாக்கிக்காட்டும் பிரத்தியேக முயற்சியில் புலவர் புலமைப்பித்தனும் மெல்லிசை மன்னரும் ஒருசேர வெற்றி பெற்றிருக்கிறார்கள். பாடும் நிலா பாலு பாடிய இசை அமுதமிது! எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது! மஞ்சள் நிறத்தில் தன் மன்னவன் தோன்ற, கதையின் நாயகி அவனது அன்பில் மலர்ந்த பூவாய் அவன் கரங்களில் தவழ, எண்ணங்களில் எல்லாம் எழுதிவைத்த வரிகள்போல் இதமான வார்த்தைகளால் இங்கே தவழும் தென்றல் காற்று இது!... Full story

பூவண்ணம் போல நெஞ்சம் …

பூவண்ணம் போல நெஞ்சம் ...
-- கவிஞர் காவிரிமைந்தன். பூவண்ணம் போல நெஞ்சம் ... அழியாத கோலங்கள் திரைப்படத்தில் இடம்பெற்ற பாட்டு! இந்திப்பட இசை அமைப்பாளர் சலீல் செளத்ரி இசையில் பிரதாப்போத்தன் – ஷோபா நடிப்பில், ஜெயச்சந்திரன் பி.சுசீலா பாடிய பாடலாய், பூவண்ணம் போல நெஞ்சம்... இளம்காதலர்களின் இனிய உரையாடல்கள் தொடர்ந்தவண்ணமிருக்க, சின்னஞ்சிறு சிரிப்பும் சந்தோஷப்பூக்களும் சிதற, உதடுகளின் அசைவுகள் இன்றி பின்னணியில் மட்டும் குரல்சேர்ப்பு நடக்கிறது. மெளனங்களால் வரையப்பட்ட காதல் கவிதைக்குச் சுகமான மெட்டமைத்து, ... Full story

இதய வானின் உதய நிலவே …

இதய வானின் உதய நிலவே ...
-- கவிஞர் காவிரிமைந்தன். இதய வானின் உதய நிலவே ... கவிஞர் விந்தனின் வரிகளுக்கு இசையமைத்திருக்கிறார் வேதா, 1950ல் வெளியான பார்த்திபன் கனவு திரைப்படத்திற்காக ஏ.எம்.ராஜா, பி.சுசீலாவுடன் இணைந்து பாடிடும் இப்பாடல் அமைதியாக ஆனந்தமாகக் கேட்கப்பட வேண்டிய ஜீவராகம்! மனதில் தோன்றியதெல்லாம் பாடலில் சொல்லப்பட்ட விஷயங்களாய் ஆரம்போல் கோர்த்துநிற்கும் அழகிய பாடல்!                           ... Full story

நூலுமில்லை வாலுமில்லை வானில் பட்டம் விடுவேனா?

நூலுமில்லை வாலுமில்லை வானில் பட்டம் விடுவேனா?
-- கவிஞர் காவிரிமைந்தன். நூலுமில்லை வாலுமில்லை வானில் பட்டம் விடுவேனா? திரைக்கதை வசனங்களில் புதிய யுக்தி வகுத்து, தனக்கென ஒரு பாதை சமைத்து பயணம் மேற்கொண்ட பல்துறை வித்தகர் டி.ராஜேந்தரின் இரண்டாவது படம் இது என்று நினைக்கிறேன். இரயில் பயணங்களில்... வழக்கம்போல் பாடல்களின் பவனியில் இவர் முன்னணியில்! இசையும் தானே அமைத்திடுவதால் வார்த்தைகள் மாற்றம்செய்வதோ மலரச்செய்வதோ எளிதான பணி!                          ... Full story

சத்தியமே லட்சியமாய் கொள்ளடா

சத்தியமே லட்சியமாய் கொள்ளடா
-- கவிஞர் காவிரிமைந்தன்.  "நீலமலைத் திருடன்" திரைப்படத்தில் கே.வி. மகாதேவன் இசையில் அ. மருதகாசி இயற்றிய பாடலிது. ரஞ்சன் என்கிற நடிகர் கதாநாயகன் (பலருக்கும் இன்றைய காலக்கட்டத்தில் இவரைத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை). டி.எம்.சௌந்தரராஜன் அவர்களின் கம்பீரக் குரலில் உச்சஸ்தாயில் ஒலிக்கும் பாடல். திரையில் கூட ஒரு குதிரைப் பயணத்தோடு நாயகன், அந்த குளம்படிச் சத்தம் இன்றும் நம் செவிகளில் கேட்டுக்கொண்டே இருக்கும்.... Full story

வீசு தென்றலே வீசு …

வீசு தென்றலே வீசு ...
-- கவிஞர் காவிரிமைந்தன்.   கே.வி. மகாதேவன் அவர்களின் இசையில் உருவான கானங்கள் தேவாமிர்தம் வகையைச் சார்ந்தவை! பொன்னித் திருநாள் திரைப்படத்தில் இடம்பெறும் இப்பாடலை எழுதியவர் புத்தனேரி சுப்பிரமணியம். பி.பி.ஸ்ரீநிவாஸ் மற்றும் பி. சுசீலா இணைந்து பாடும் இன்பகீதம். ஏழு ஸ்வரங்களுக்குள் இத்தனைப் பாடல்களா என்று வியக்க வைக்கும் இசை. ஆண் முகம் காணும் பெண் மனம் நாணம் அடைவதும் ஏனோ அதிசயம் தானோ ஆண்மையை வெல்லும் நாணமே எங்கள் அணிகலம் அதுவே துணை பலம் ... Full story

நாளை உலகை ஆளவேண்டும்..உழைக்கும் கரங்களே! – புலவர் புலமைப்பித்தன்

நாளை உலகை ஆளவேண்டும்..உழைக்கும் கரங்களே! - புலவர் புலமைப்பித்தன்
கவிஞர் காவிரிமைந்தன் நாளை உலகை ஆளவேண்டும் கோவை செழியன் அவர்கள் தயாரிப்பில் கே.சி.பிலிம்ஸாரின் உழைக்கும் கரங்கள் திரைப்படம் இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில்!! எம்.ஜி.ஆர். கதாநாயகனாக.. மெல்லிசை மன்னரின் இன்னிசையில் புலவர் புலமைப்பித்தன் வரைந்த பூபாளமிது! உழைக்கும் மக்களுக்காக வரையப்பட்ட உன்னத சாசனமிது!! கே.ஜே.யேசுதாஸ் என்னும் கானப்பறவை தன் கந்தர்வக்குரலில்.. நாளை உலகை ஆளவேண்டும்..உழைக்கும் கரங்களே! நாளை ... Full story

செந்தாமரையே செந்தேனிதழே …

செந்தாமரையே செந்தேனிதழே ...
-- கவிஞர் காவிரிமைந்தன். புகுந்தவீடு என்னும் திரைப்படத்தில் இடம்பெற்ற ஏ.எம்.ராஜா, ஜிக்கி பாடிய பாடலிது! பாடலை இயற்றியவர் விசித்ரா. பாடலின் பல்லவி முதலாக பற்றிக் கொள்கிற இனிமை, இறுதிவரை தொடர்கிறது. பாடிய குரல்கள் தரும் மயக்கத்தில் இப்பாடலைக் கேட்பவரும் மயக்கத்திற்கு அடிமையாகிறோம். அடிமனதை வருடுகின்ற சுகம்தருகிறார் இசையமைப்பாளர் சங்கர் கணேஷ். மெல்லிசை என்னும் சொல்லுக்குப் பொருள் சொல்லும் இன்னிசையிது என்று ரசிகர்கள் சத்தியம் செய்யலாம். தமிழ் மொழியின் இனிமையைப் பறைசாற்ற சான்று பகரும் தமிழ்த்திரையிசைப்பாடல்களில் ... Full story

தென்றலில் ஆடும் கூந்தலில் கண்டேன்

தென்றலில் ஆடும் கூந்தலில் கண்டேன்
கவிஞர் காவிரிமைந்தன் சோளிங்கர் கம்பைன்ஸ் தயாரிப்பில் சாகித்ய அகாடமி விருதுபெற்ற அகிலனின் கணையாழி நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்! எம்.ஜி.ஆர். நடித்து வெளியான கடைசித் திரைப்படமிது என்கிற பெருமையும் இதற்கு உண்டு! சரித்திர காலப் பின்னணியில் கவித்துவ பலத்துடன் புலவனாக - கதையின் நாயகன் இடம்பெற இடம்பெற்ற இரண்டு காதல் பாடல்களும் உயிர்பெற்று நம் கண்முன்னே உலவுகின்றன என்றால் மறுப்பதற்கில்லை! அமுதத் தமிழில் எழுதும் கவிதை ... Full story

சித்திரச் செவ்வானம் சிரிக்கக்கண்டேன் …

சித்திரச் செவ்வானம் சிரிக்கக்கண்டேன் ...
-- கவிஞர் காவிரிமைந்தன். சித்திரச் செவ்வானம் சிரிக்கக்கண்டேன்... முழுநிலாக்கோலம்போல் முகமிருக்க, மோகனராகத்தை மனம் படிக்க, கடற்கரை அலைகளும் மெட்டமைக்க, வருகின்ற பாடல் கதை சொல்கிறது! காற்றினிலே வரும் கீதம் என்கிறது! முத்துராமன், கவிதா ஜோடி எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில், ஜெயச்சந்திரன் குழுவினரோடு பாடிய பாடல், இளையராஜாவின் இதமான இசை கவிதையைக் கைப்பிடித்து வருகிறது! ... Full story

பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும் …

பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும் ...
-- கவிஞர் காவிரிமைந்தன்.     பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும் ... இம் என்னும் முன்னும், உம் என்னும் முன்னும் இசை பிறக்கும் மெல்லிசை மன்னரின் ஆர்மோனியத்தில்! அவரின் இசை சாம்ராஜ்ஜியத்தில் பூத்த பாடல்கள் என்றும் வாடதவை. நம்மை முணுமுணுக்க வைப்பவை. எம்.ஜி.ஆர். என்னும் கதாநாயகனுக்காக அவர் இசைத்த கானங்கள் காலங்களைத் தாண்டி வாழுபவை. எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுபவை. அவர் அடிக்கடி சொல்லுகின்ற வார்த்தை, இறக்கும் மனிதர்கள் ... Full story

தங்க நிலவே உன்னை உருக்கி …

தங்க நிலவே உன்னை உருக்கி ...
-- கவிஞர் காவிரிமைந்தன்.     தங்க நிலவே உன்னை உருக்கி ... பாடல்களாலேயே திரைப்படம் வெற்றியின் எல்லையைத்தொட முடியும் என்று நிரூபித்தவர் விஜய தே.ராஜேந்தர் ஆவார். மற்றுமொரு பாசமலர் என்று பேசப்படும் அளவில் தங்கைப் பாசத்தை திரையில் வடித்திருப்பார். ஆற்றல் என்று சொல்லும்போது, ஒருவருக்கு கதை சொல்லத்தெரியும் அல்லது எழுதத் தெரியும். ஒருவருக்கு இசையமைக்கத் தெரியும். ஒருவருக்கு பாடத் தெரியும். ஒருவருக்கு வசனம் எழுதத் தெரியும். ஒருவருக்கு நடிக்கத் தெரியும் ... Full story
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.