Archive for the ‘மகளிர் தினம் (2014)’ Category

ஒரு தாயின் உபதேசம்

ஒரு தாயின் உபதேசம்
விசாலம் {புதிதாக வேலையில் சேரும் பெண்னிற்கு தாயின் பரிவான உபதேசம்}, "அடியே சரோஜா நீ ஒரு பெண் அதை எப்போதும் உணர்ந்து நட, அழகான பெண்,அதுதான் வினை, அழகே ஒரு ஆபத்து நம் போன்ற ஏழைக்கு பேப்பரைப்பார்க்க  எங்கும் ரேப் செய்தி, பாவம் சின்ன குழந்தைகளும் அதில் கைதி நன்கு ஞாபகத்தில் வைத்துக்கொள், நீ வீட்டு வாசலைத்தாண்ட, உன்னை மொய்க்கும் கண்கள் உடன் வரும் , உன்னைத்தொடரும்  ஒரு சோம்பேறிக் கூட்டம், இரட்டை அர்த்தங்களுடன் பாடல் பிறக்கும் இடர்கொடுத்தபடி விசிலும் அடிக்கும் , மனத்திடத்துடன் மேலே நட , மானம் பெரிசாக நினைத்து நட. அங்கு தற்காப்புக்கலை உதவட்டம் அஞ்சா நெஞ்சம் வளரட்டும் ... Full story

ஆனந்த மகளிர் தின வாழ்த்துகள்..

ஆனந்த மகளிர் தின வாழ்த்துகள்..
இராஜேஸ்வரி ஜெகமணி வீ‌ட்டி‌ற்கு‌ள்ளே பெ‌ண்ணைப்பூட்டி வைப்போம் என்ற விந்தை மனிதர்களை மாய்த்துவிட்டு வீறுகொண்டு எழுந்து பெண்கள் சமுதாய‌ம் த‌ற்போது பல்வேறு துறைகளிலும் கோலோச்சிக்கொண்டு வா‌னளாவி பற‌ந்து கொ‌‌ண்டிரு‌க்‌கிறது எ‌ன்றா‌ல், அத‌ற்கு ‌வி‌த்‌தி‌ட்ட ப‌ல்வேறு போரா‌ட்ட‌ங்க‌ளி‌ன் வெ‌ற்‌றி ‌தினமே மக‌ளி‌ர் ‌தினமாகு‌ம். உலக மகளிர் தினம் கொ‌ண்டாடுவத‌ற்கு காரணமான போரா‌ட்டமு‌ம், அத‌‌ன் வெ‌ற்‌றிகளு‌ம் அ‌வ்வளவு எ‌ளிதாக‌க் ‌கி‌ட்டியத‌ல்ல‌். ஆணாதிக்க சமுதாயத்திலிருந்து பெ‌ண்களு‌க்கான உ‌ரிமைகளை வென்றெடுத்த ... Full story

டவுன் வித் அப்ஸ்கர்ட் பிக்ச்சர்ஸ்

தேமொழி மேடையில் பரதநாட்டியம் ஆடிய அந்த மாணவி மெய் மறந்து, கலையுடன் தன்னை இணைத்துக் கொண்டு பரதநாட்டியம் ஆடிக் கொண்டிருந்தாள். அது அந்தப் பல்கலைக் கழகத்தின் முதுகலை மாணவ மாணவியரின் பிரிவுஉபச்சார விழா. அவளும் இறுதியாண்டில் பயிலும் மாணவிதான். ஆடிக்கொண்டிருக்கும் மாணவியை அதன் பிறகு அந்தக் கல்லூரி வளாகத்தில் பார்ப்பதென்பதே அரிதாகிவிடும். அவள் எங்கு போவாளோ, மேற்கொண்டு படிப்பாளோ, பணியில் அமர்வாளோ, கலைப்பயணத்தைத் தொடர்வாளோ என்பது போன்ற கேள்விகள் அவள் ஆடிய விதத்தைக் கண்ட பொழுது மனதில் எழுந்தது. அந்த விழாவில் அந்தத்துறையைச் சார்ந்த அனைவருமே பங்கு ... Full story

புது மாப்பிள்ளை, பெண்ணுக்கு

நிர்மலா ராகவன் உங்கள் திருமணத்துக்கு நாள் குறித்தாகிவிட்டது. நீங்கள் மாப்பிள்ளையாகின், சற்று வீரமாக, பொறுப்பானவனாக உணர்வீர்கள். ஏனெனில், இதுவரை பெற்றோர், அவர்களது பெற்றோர், ஆசிரியர்கள் யாவரும் சொற்படி நடந்த உங்களுக்கு, இப்போது நம் அதிகாரத்தைப் பிரயோகிக்க ஒரு நல்ல சந்தர்ப்பம் என்ற பெருமை எழக்கூடும். புது மனைவியிடம், `உனக்கு சிவப்புப் புடவைதான் அழகாக இருக்கிறது. பச்சை வேண்டாமே!’ என்னும்போது, `கணவருக்குத்தான் நம்மீது எவ்வளவு ஆழ்ந்த அன்பு!’ என்று அவளும் உங்கள் விருப்பப்படியே நடக்கிறாள். தான் சொல்வதை மந்திரமாக ஏற்று நடக்கும் மனைவியால் உங்கள் சுயமதிப்பு கூடுகிறது. அவளை இன்னும் ... Full story

பெண்கள் உலகின் கண்கள்

   விமலா ரமணி மீண்டும் ஒரு மகளிர் தினம். ஒவ்வொரு   வருடமும் நாம் இந்த நாளைக் கொண்டாடுகிறோம். ஆனால் இந்த நாளில் என்ன சாதிக்கறோம்  ? பெண்மைக்கு  என்ன பெருமை சேர்க்கிறோம்? எத்தனையோ தடைகளைத் தாண்டி வந்த பெண்மைக்கு என்ன மதிப்புத் தருகிறோம் ? இன்றும் செய்தி  தாள்களைப் புரட்டினால் ஆங்காங்கே பெண்கள் கற்பழிக்கப் பட்ட செய்திகள்.. கணவனால் கொடுமைப் படுத்தப் பட்ட பெண்கள்.. வரதஷிணைக் கொடுமைக்காக எரிக்கப்பட்ட பெண்கள் தந்தையே  தன் மகளைக் கற்பழிக்க முற்பட்ட  ... Full story

மகளிர் அடைந்துள்ள ஏற்றங்களும், எதிர்நோக்கும் மாற்றங்களும்!

மேகலா இராமமூர்த்தி மகளிர் தமது அடிப்படை உரிமைகளை அடைவதற்கும், வாழ்வில் சந்தித்த பல்வேறு அவலங்களை அகற்றுதற்கும் பெருமளவில் போராட்டங்களை நடத்தவேண்டிய சூழல் சென்ற நூற்றாண்டில் நிலவியது. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி என்ற அம்மையார் (a freedom fighter, significant women activist and a social reformer) பெண்களுக்கெதிரான தேவதாசி முறையை ஒழித்துப் பள்ளியறைப் பதுமைகளாக இருந்த பெண்கள் பள்ளிக்கூடங்களில் கல்வி கற்பதற்கு வழிகோலினார். பகுத்தறிவுப் பகலவனான தந்தை பெரியார் ஆண்களுக்கு நிகராகப் பெண்களும் நடத்தப்பட வேண்டும்; அவர்தம் விருப்பங்கள் மதிக்கப்பட வேண்டும் என்று கொள்கை முழக்கமிட்டார்.... Full story

பெண் சுதந்திரம் எதுவரை?

தஞ்சை வெ.கோபாலன் பெண்ணுரிமை, ஆண் பெண் சமத்துவம் போன்ற கருத்துக்கள் பல வடிவங்களில் விவாதிக்கப்படுகின்றன. பெண்ணியம் என்பது ஆண்களுக்குச் சமமானது, எந்த விதத்திலும் பெண்கள் ஆண்களுக்குக் குறைந்தவர்கள் இல்லை என்பது போன்ற கருத்துக்கள் இன்று நிலைபெற்றுவிட்டது. இன்னும் சில நேரங்களில் நவீன யுகப் பெண்கள் மேடைகளில் முழங்கும் கருத்துக்களைக் கேட்கும்போது இந்த நாட்டில் இன்னமும் பெண்கள் கவணைகளில் அடைக்கப்பட்ட மாடுகள் போல அடைக்கப்பட்டிருக்கிறார்களோ, எந்தவித சுதந்திரமும் இவர்களுக்கு இல்லையோ என்றுகூட கவலை கொள்ள வைத்து விடுகிறது. ஆனால் நாட்டு நடப்பைக் கூர்ந்து கவனித்தால் நிலைமை அப்படி ... Full story

ராணி அப்பக்கா தேவி

ராணி அப்பக்கா தேவி
பார்வதி இராமச்சந்திரன் நம் நாட்டில், சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட எத்தனையோ வீரப் பெண்மணிகளை நாம் அறிவோம்!... ஆயினும் அவ்வளவாக அறியப்படாத சிலரின் வீர வரலாறுகளும் இருக்கத்தான் செய்கின்றன. அவர்களில் ஒருவரே, கர்நாடகாவின் கடற்கரையோரப் பகுதிகளில், ஒரு சிறு பிராந்தியத்தை அரசாண்ட ராணி அப்பக்கா தேவி.. 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த அப்பக்கா தேவி, இந்திய சுதந்திரப் போரில் ஈடுபட்ட வீராங்கனைகளுள் ஒருவர். போர்ச்சுகீசிய அரசாங்கத்தின் ஆதிக்கத்தை எதிர்த்துப் போரிட்ட தீரப் ... Full story

சுதந்திர மகளிர் தினம்..!

சுதந்திர மகளிர் தினம்..!
ஜெயஸ்ரீ ஷங்கர் மகளிர் தினம் ...! கேட்பதற்கு நிறைவான வார்த்தையாக இருந்தாலும் சிறிது முரண்பாடாகத் தான் தோன்றுகிறது. அறிவுப்பூர்வமாகப் பார்த்தால் இதில் ஒரு விசேஷமும் இருப்பதாகத் தெரிவதில்லை. இது சும்மா மனதை மயக்கும் மாய வார்த்தை. அழும் பள்ளி சிறுமிகளுக்கு சாக்லேட் கொடுப்பது போலத் தான். ஒரு விதமான ஈசல் சந்தோஷம். தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்ளும் வித்தை. அப்படி என்ன தான் இருக்கிறது இந்த மகளிர் தினத்தில்?  வருடத்தின் ஒருநாள் மகளிர் ... Full story

கண்ணாடிக் கூரை

ஞா. க​லையரசி கண்ணாடிக் கூரை  (GLASS CEILING) மகளிர் தினம் நெருங்கும் இந்நாளில், ஆங்கிலப் பத்திரிக்கைகளில் அடிக்கடிக் கண்ணில் படும் சொற்கள் இவை. 1971 ஆம் ஆண்டில் குளோரியா ஸ்டீனெம் (Gloria Steinem) என்பவர் தாம் மிஸ் இதழில் முதன்முதலில் இச்சொற்களைப் பயன்படுத்தினார் என்றும் 1984 ல் கே பிரியான்ட் (Gay Bryant) என்பவர் தாம், ஓர் இண்டர்வியூவில் இவ்வாறு சொன்னார் என்றும்,இணையத்தில் வெவ்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. கண்ணாடிக் கூரை என்றால் என்ன? பெரிய வணிக நிறுவனங்களிலும், கம்பெனிகளிலும் மிக உயர்ந்த ... Full story

பெண்ணியத்தை ஆண்கள் ஹைஜாக் செய்தது எப்படி?

செல்வன் மேலைநாடுகளில் பெண்ணிய இயக்கங்கள் ஏற்படுத்திய தாக்கம், அதன் விளைவால் பெண்கள் மத்தியில் ஏற்பட்ட மாற்றத்தை அலசுவது இக்கட்டுரையின் நோக்கம். 20ம் நூற்றாண்டில் பின்நவீனத்துவம், மார்க்சிசம் முதலானவை பெண்கள் முன்னேற்றத்தில் பெரும் திருப்பத்தைக் கொண்டுவந்தன. விவாகரத்து பெரும் பாவம், கல்யாணத்துக்கு முன் செக்ஸ் தவறு என்ற கன்சர்வேடிவ் சிந்தனைகள் 60களில் குறையத் துவங்கின. திருமணம் செய்யாமல் கூடிவாழ்ந்து குழந்தை பெறத் துவங்கினார்கள். பணியிடங்களில் ஆணுக்குச் சமமாக பெண்கள் பணிக்கு வந்தார்கள். ஆண் செய்யும் எந்த பணியையும் பெண்ணும் செய்யலாம் எனும் ... Full story

பாட(ல்) பெறாத தலைவிகள்

ரஞ்சனி நாராயணன்   ஒவ்வொரு வருடமும் மகளிர் தினம் என்றால் பல பெண்கள் என் நினைவிற்கு வருவார்கள். முதலில் என் பாட்டி, பிறகு என் அம்மா, என் அக்கா. இவர்கள் எல்லோரையும் பற்றி பதிவுகள் எழுதியிருக்கிறேன். இன்னும் பல பக்கங்கள் எழுதலாம். ஆனால் இந்த மகளிர் தினத்திற்கு எனது தோழிகள் மற்றும் எனது மாணவிகள் சிலரைப்பற்றி எழுதலாம் என்று நினைத்திருக்கிறேன். மகளிர் நலம் பற்றிய கட்டுரையில் இவர்களின் பங்களிப்பு என்ன என்று தோன்றுகிறதா? தொடர்ந்து படியுங்கள் புரியும். முதல் அறிமுகம் ... Full story

” சார் ! சார் ! ஒரு கதை கேளுங்க சார் ! “

 ” சார் ! சார் ! ஒரு கதை கேளுங்க சார் ! “
கமலாதேவி அரவிந்தன் ” சின்னாங்கு இல்லேலா ! அல்லாம்மா வேணாம்லா ! பின் நவீனத்துவம்னா என்னாலா ! சாந்த லெட்சுமிக்குத் தத்தாவ்லா ! ” ” இந்த தாமானுக்குப் போக எப்படியும் முக்கால் மணி நேரமாவது ஆகும். 120 ரிங்கிட்டுக்குக் குறையாது.” டேக்சி ஓட்டுநர் சொல்ல ,முப்பந்தைந்து ஆண்டுகட்கு முன்பு படித்த மலாய்மொழியில் உரையாடுவது ஸ்வேதாவுக்கு இன்பமாகத்தான் இருந்தது. ஆனால் சுட்டெரிக்கும் வெயிலில் ... Full story

மகளிரைப் போற்றுதும்!

இரா.தீத்தாரப்பன் மகளிரை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மேம்படுத்த பல அரிய முயற்சிகள் செய்தவர் நம் திருவள்ளுவர். மகளிரை அடிமை போல நடத்துவதை அன்றே கண்டித்தவர். " சிறைகாக்கும் காப்பு எவன்செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை." என்ற குறளில் தங்களைக் காத்துக் கொள்வதில் பெண்கள் தலையானவர்கள் என்று சொல்லிவிட்டு வேறு ஒரு குறளில் " ஒழுக்கமாக இருந்து பெருமை பெறவேண்டுமென்றால் அதை ஒரு பெண்ணிடமிருந்து கற்றுக்கொள்" என்று ஆணைப்பார்த்துச் சொல்லுகிறார். அந்தக் ... Full story

பெண்ணின் ராஜாங்கம்!

ஷைலஜா தமிழ் இலக்கியங்களின் சிறப்பே அதனை நாம் ஆழ்ந்து படிக்கும் போது அதில் வரும் சில அழகிய காட்சிகள் மனதைவிட்டு நீங்காமல் அப்படியே பதிந்துவிடுவதுதான். பெரும்புலவர் ஒருவர் தாம் எழுதிய கதையில் வரும் கதாநாயகியின் பெண்மைத்தன்மையை இப்படித்தான் அழகாக படம்பிடித்துக்காட்டுகிறார். அந்தக்கதையின் கதாநாயகி ஒருமகாராணி. தன்னுடைய சிறந்த நான்கு குணங்களை நாற்படையாகவும், தன்னுடைய ஐம்புலன்களையும் சிறந்த அமைச்சர்களாகவும் பெற்று ஆட்சி செய்வதாக தன் கவிதைகளில் வர்ணித்துள்ளார். ரத கஜ துரக பதாதி என்று சொல்லப்படும் நால்வகைப்படையும் அவளுடைய சிறந்த குணமாகிய அச்சம் நாணம் மடம் ... Full story
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.