Archive for the ‘திருமால் திருப்புகழ்’ Category

Page 1 of 7712345...102030...Last »

கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

கேசவ் வண்ணம் - கிரேசி எண்ணம்
பீதாம் பரமாட பீலி மயிலாட தோதான தோழர்கள் தோளிலுறி-மீதேறி வெண்ணையை வாரி வழங்கிடும் வாசுதேவக் கண்ணனை நெஞ்சே கருது.... வாய்ப்பூதான் வாடிடுமோ,! வாழ்விலாழ் வாராகும் வாய்ப்பெனெக்குத் தந்திட வாசுதேவா, -நோய்ப்பாயில் கூற்றன்கைப் பாவையாய் தோற்றுக் கிடப்பேனோ ஏற்றம் தரவா எனக்கு....கிரேசி மோகன்....! Full story

கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

கேசவ் வண்ணம் - கிரேசி எண்ணம்
’’சிந்தை வெளிகடந்து மந்தை வெளிபுகுந்து கந்தல் உடையணிந்து கன்றுகளைத் -தந்தையாய், மாதாவாய் காத்து, மடியளிக்கும் நித்திய நூதனரை நெஞ்சே நினை’’....கிரேசி மோகன்....! Full story

ஸ்ரீ அன்னை பிறந்தநாள்

ஸ்ரீ அன்னை பிறந்தநாள்
  வேலை இருக்குது நிரம்ப -என்னை வேகப் படுத்திடு தாயே - பாலை சுரந்திடு தளும்ப -உந்தன் பாதம் பணிந்திடும் சேய்நான் ஆலை கரும்பெனெப் பிழிந்து-எந்தன் ஆவி பிரிந்திடும் முன்னே சோலை நகச்சுவைக் காற்றை - இவன் நாளும் நுகர்ந்திட அருள்வாய்.... அன்னை பிறந்த நாள் ---------------------------- கண்ணை இமைகாக்கும், தென்னை குலம்காக்கும் அன்னை ... Full story

கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

கேசவ் வண்ணம் - கிரேசி எண்ணம்
''சென்ற வருடம் என்று நினைக்கிறேன்....திருவல்லிக்கேணி ஸ்ரீபிரியா நினைவூட்டியும், பாழும் தூக்கத்தால் பெருமாள் கருட வாகனம் பாராது பாழானேன்...இன்று ''கேசவ்'' உபயத்தால் வினதை மகன் முதுகேறி வரும் புள்ளமர்ந்த(கருட வாகனன்) புருஷோத்தமனை தரிசிக்கும் வாய்ப்பு....! பார்த்தசாரதி பெருமாள் கருட வாகனம்.... -------------------------------------------------------- கொள்ளும்புண் ணாக்கும் குதிரைக்(கு) அளித்தன்று வில்விஜயன் தேரை விரட்டியவன் -புள்ளமர்ந்து வல்லிக் ... Full story

கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

கேசவ் வண்ணம் - கிரேசி எண்ணம்
‘’மனப்பால் அபிஷேகம் மாதவர்க்கு, மாடு தினப்பால் கறக்காமல் தூக்கம் : -வனப்பிதை, தந்தகேசவ் வாழ்க, தினம்மடி மோட்சமிடும் கந்தவேளின் மாமன்வாழ் க’’....கிரேசி மோகன்....! Full story

கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

கேசவ் வண்ணம் - கிரேசி எண்ணம்
''ஏகதெய்வம் கண்ணனவர், ஏரார்ந்தக் கண்ணியின் பாகவதத் தாம்பில் பிணைப்புற்ற, -ராகமொன்று, தாளங்கள் வேறாய், தவகோ பியர்களுடன் நீல யமுனா நதி''....கிரேசி மோகன்....! Full story

கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

கேசவ் வண்ணம் - கிரேசி எண்ணம்
’’நீர்கீரிப் பிள்ளை(OTTER) நிமிர்ந்துதன் பிள்ளைக்காய், சார்கூறிக் கேட்டு சலாமிட(கும்பிட) , -தார்கரி வண்ணனை, கீரிக்கும் வாத்சல் யம்காட்டும் கண்ணனை நெஞ்சே கருது’’....கிரேசி மோகன்....! Full story

கேசவ் வண்ணம் – கிரேசி மோகன்

கேசவ் வண்ணம் - கிரேசி மோகன்
’’பசுவு பநிடதம், பால்காரக் கோனார் விசுவனாதர், தோழர் விஜயர் -சிசுவருந்த(கன்று அருந்த) கீதைப்பால் ஊட்டுவது கண்ண பரமாத்மா: பாதை தெரியுது பார்’’....கிரேசி மோகன்....! Full story

கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

கேசவ் வண்ணம் - கிரேசி எண்ணம்
சித்திமகன் உத்தமன் அத்தன் மடியமர தத்துமகன் போல்வாழ்ந்த அத்துருவ -புத்திரனும் தம்புரா(நாரதர்) சொன்னபடி தாவி விசும்பேறி(விசும்பு -வான்) எம்பிரான் மீனால்(மச்சாவதாரர்)விண் மீன்’’....! மாண்டபின் செல்கின்ற மோட்சம் கொடுக்காது ஆண்டுகள் முப்பத்தா றாயிரம் -ஆண்டபின் வானில் துருவ விளங்குவாய் விண்மீனாய் ஆணில்(புருஷோத்தமர்) சிறந்தோன் அளிப்பு....கிரேசி மோகன்....! Full story

VALENTINE DAY வாழ்த்துக்கள்….!

  கிரேசி மோகன் ---------------------------------------------------------------- ''சேனை தளபதியாய் ,சூரனைக் கொன்றுதெய் வானை கரம்பிடித்து, வெட்டியாக. -கானிலே வேலன்TIME PASSசெய்ய வள்ளியைக் காதலிக்க VALENTINE DAYயாச்சு வே''(நெல்லைத் தமிழ்).... காதலும் துறவும்....! ----------------------------------------- ’’ஊரைவிட்(டு) ஓடலால், ஒன்றிக் கலத்தலால் யாரிடமும் கூறாமல் ஏற்பதால் -பாரினில் சாதலை வென்று சமாதியில் நிற்பதால் தீதிலாக் காதல் துறவு’’....கிரேசி மோகன்....   VALENTINE DAY WALKING வெண்பா வழி வாழ்த்துக்கள்....! ----------------------------------------------------------------... Full story

கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

கேசவ் வண்ணம் - கிரேசி எண்ணம்
பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன்அப் பாலுக்கும் அப்பாலே பாதுகாக்கும் -மாலன்டைம்ஸ் நமக்கு என்றும் ‘’கேசவ்வால்’’....! ''VALENTINE நாளின்று வேழம் முதலையை மாலன்டைம்ஸ் ஆக்கி மடியிருத்தும் -நீலன் பழகிடப் ஆனையே, பாய்ந்திடப் பல்முதலை அழகிய சிங்கா அருள்....கிரேசி மோகன்....! Full story

கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

கேசவ் வண்ணம் - கிரேசி எண்ணம்
  "பகவான் உவாச "....! ------------------------------------------------- ''என்னை மறக்கா(து) எதையும் நினைக்காதே உன்னைநான் உச்சிக்(கு) உயர்த்துவேன் -எண்ணை திரியின்றி தானாய் எரியா(து) அதுபோல் திரிநீஎண் ணைநான் தெளி’’....   "வேரோடு கிள்ளி விருட்சம் அகந்தையொடு - போரோடு போராகப் போராடு -வீராநீ! - வெற்றி உனக்கதை வீழ்த்துதல் தானன்றி - சுற்றியுள்ள ... Full story

கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

கேசவ் வண்ணம் - கிரேசி எண்ணம்
''நூதனர் , நித்ய நவனீதர், வந்துசெல்லும் சேதனர், சேஷகுரு வாதனர்(குருவாதபுரீசர்), -யாதவர், மாதவர், கேசவர், மாபா ரதம்செய்து தீதகற்றும் கீதையாம் தேர்’’....கிரேசி மோகன்....! Full story

கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

கேசவ் வண்ணம் - கிரேசி எண்ணம்
’’உலகமோர் கற்பனை , உள்ளமாம் கூனி கலகமது இட்டகண் கட்டு, -திலகமாம் ஆயர் குலத்தோர், அடிவருடும் கன்றதன் நேயர் விருப்பம் நிஜம்’’....கிரேசி மோகன்....! Full story

கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

கேசவ் வண்ணம் - கிரேசி எண்ணம்
''மான்போக பின்னால்ரா மன்போனாற் போலவே ''நான்''போகப் பின்தொடரும் நல்லது: -வான்மேக வண்ணனை மூங்கிலில் வாசிக்கும் நந்தன்சேய் கண்ணனை நெஞ்சே கருது''....கிரேசி மோகன்....! Full story
Page 1 of 7712345...102030...Last »
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.