Archive for the ‘ஆய்வுக் கட்டுரைகள்’ Category

Page 1 of 1612345...10...Last »

குறுந்தொகை நறுந்தேன் – 12

குறுந்தொகை நறுந்தேன் – 12
-மேகலா இராமமூர்த்தி நாளைக் காலை எவரும் அறியாமல் நான் தலைவியை மலைச்சாரலிலுள்ள வேங்கை மரத்தடிக்கு அழைத்துவருவேன். நீங்களும் அவ்விடம் வந்துவிடுங்கள். அங்கிருந்தே நீங்கள் இருவரும் உங்கள் இல்லறப் பயணத்தை தொடங்கிவிடலாம் என்றாள் தோழி தலைவனைப் பார்த்து. அவள் யோசனைக்கு அமைதியாய்த் தலையசைத்துத் தன் ஆமோதிப்பைத் தெரிவித்தான் தலைவன். அன்றைய இரவுப்பொழுது கழிந்தது. கதிரவன் தன் கிரணங்களை நீட்டிப் புவியின் இருளைத் தொட்டழித்தான். புள்ளினங்கள் மரங்களில் இருந்தபடியே பள்ளியெழுச்சி பாடின. தலைவியைச் சந்திக்க ... Full story

   அறிவியல் தமிழ் – கற்றல் கற்பித்தல் – 1

-முனைவர் ப. ஜெயகிருஷ்ணன் முன்னுரை       மனிதனின் வளமான வாழ்விற்கும் வளர்ச்சிக்கும் அடிப்படையாக அமைவது அறிவியலாகும். அறிவியலை முறையாகப் பெறாத நாடும்,மொழியும் உலக அளவில் தலை நிமிர்ந்து நிற்க முடியாத அளவிற்கு அறிவியல் அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்துள்ளது.. உலகிலுள்ள அனைத்து மக்களும் அறிவியலை அவர்களது மொழிகளில் கொண்டுவரப் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். வளர்ச்சி அடைந்த நாடுகளான  பிரான்ஸ், ரஷ்யா, ஜப்பான் போன்ற நாடுகள் அறிவியல் தொழில்நுட்பக் கல்வியை அவர்களது மொழியிலேயே கற்கின்றனர். கி.பி. 2050-ஆம் ஆண்டில் அறிவியல் தொழில்நுட்பம், கணினி வழிக்கல்வி ஆகியவற்றை முறையாகப் பெறாத ஆறாயிரம் மொழிகளில் ... Full story

பாலக்காடு மாவட்டப் பறையரின மக்களின் தோற்றம் குறித்தக் கதைகள்

-முனைவர் ஆறுச்சாமி. செ.  முன்னுரை      இயற்கை எழில்கொஞ்சும் கேரள மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம்தான் பாலக்காடு மாவட்டம். தமிழகத்தின் மேற்கு எல்லையில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தைக் கிழக்கு எல்லையாகக் கொண்டு அமைந்துள்ளது இம்மாவட்டம். பெயர்க்காரணம்      மாவட்டத்தின் பெயர்க்காரணம் குறித்துப் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. அவை,“முற்காலத் தமிழர் தம் கடவுள் வழிபாட்டில் மரங்கள் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன. பாலை, நெல்லி, வேம்பு, காஞ்சிரம், பனை போன்ற மரங்களின் கீழ் அம்மனைப் பிரதிஷ்டை செய்து வழிபடும் வழக்கம் இருந்துள்ளது. காலப்போக்கில் அந்த அம்மனுடன் சேர்த்து அந்த மரத்துக்கும் முக்கியத்துவம் ... Full story

கொழிஞ்சாம்பாறை வட்டாரத்தில் நிகழ்த்தப்படும் மூவரசர் நாடகம் – 1

கொழிஞ்சாம்பாறை வட்டாரத்தில் நிகழ்த்தப்படும் மூவரசர் நாடகம் - 1
-முனைவர் பா. உமாராணி      ஆதிகாலம் தொடங்கி இன்றுவரை மனிதன் நம்பிக்கைகளின் மீது தன் வாழ்வியல் பண்பாடுகளைக் கட்டமைத்து வருகின்றான். திருவிழாக்கள், பண்டிகைகள் போன்றவை இதன் அடிப்படையில் தோன்றியவையாகும். மனித சமூகம் தேடலில் முடிவு விடைகிடைக்காத செய்திகளுக்குத் தமக்கே உரிய பாணியில் ஒரு நம்பிக்கையை உருவாக்கிக் கொள்கிறது. தாங்கள் உருவாக்கிக் கொண்ட நம்பிக்கைகள் மற்றோரால் பின்பற்றப்படும் பொழுதும் ஏற்றுக்கொள்ளப்படும் போதும் அது சமூக அங்கீகாரத்துடன் செயலாற்றத் தொடங்குகிறது. அத்தகு நம்பிக்கைகள் காலம், இடம், எல்லைகடந்து விரிந்து செயலாற்றுபவையாக உள்ளன. அவ்வகையில் கேரள மாநிலத்தின் எல்லையோரத்தில் அமைந்துள்ள கொழிஞ்சாம்பாறை ... Full story

தலையெழுத்து கொழுந்து பறிப்பது – ஈழத்து மலையகக் கவிதைகள்

தலையெழுத்து கொழுந்து பறிப்பது - ஈழத்து மலையகக் கவிதைகள்
-முனைவர் சு.செல்வகுமாரன் இலங்கை  மலையக மக்களின் வரலாறு நீண்ட நெடிய துயர வரலாற்றைக் கொண்டது. அம் மக்களின் வரலாற்றை ஐந்து நிலைகளில் வகைப்படுத்துவார் மலையக வரலாற்று ஆய்வாளர் சாரல் நாடன். அவை பிரிட்டீஸ் ஆட்சிக்குட்பட்ட காலம் (1820 -1919), உள்ளூர் ஆட்சிக்காகப் பரிசோதனை மேற்பட்டகாலம் (1921 -1947), சோல்பரி அரசியல் திட்ட காலம் (1948 -1977), சிறிமாவோ அரசியல் திட்ட காலம் மற்றும் ஜயவர்த்தனா அரசியல் திட்டகாலமாக (1978 ... Full story

சமூக நோக்கில் கணேசகுமாரனின் ‘எழுத்தாளன்’ புதினம்

சமூக நோக்கில் கணேசகுமாரனின் ‘எழுத்தாளன்’ புதினம்
-முனைவர் ச. அருள்  முன்னுரை எழுத்தாளர் என்பவர் கதை, கவிதை, புதினம் உள்ளிட்ட எழுத்துப் படைப்புக்களைப் படைப்பவர். அவரது படைப்புக்கள் இதழ்கள், நூல்கள் மூலமாக வெளியாகும். இதழ்களில் எழுதும் எழுத்தாளர்களைத் தொழில்முறை எழுத்தாளர்கள் என்றும், சுதந்தர எழுத்தாளர்கள் என்றும் இரு வகையாகப் பிரிக்கலாம். ஒரு சமூகத்தில் சிந்திக்கும் எழுத்தாளன் நேர்மையான எழுத்தைப் பதிவு செய்பவனாகவும் சமரசங்களை ஒதுக்கித் தள்ளுபவனாகவும் வளைந்து கொடுக்காதவனாகவும் இருக்க வேண்டும். ஒரு சாதாரண சமூகத்தில் இருந்து ... Full story

தமிழ் இலக்கியமும் பெண்ணியமும்

தமிழ் இலக்கியமும் பெண்ணியமும்
-இல.மேனகா பெண்ணியம் என்பது பெண்ணின் சமூக நிலையை மறுமலர்ச்சிக்கு உட்படுத்த வேண்டிய தேவையை வலியுறுத்துகிறது. இது பாலினப் பாகுபாடு தொடர்பான சமூகப்பண்பாட்டு வேர்களை இனம் கண்டு கொள்ளவும், குறிப்பாக பெண்களுக்கு எதிரான அடக்குமுறை, சுரண்டல் முறையை உணர்ந்து கொள்ளவும் பெண்ணியம் தெளிவான வரையரை அளிக்கிறது. இது ஆணிய பண்பாட்டுக் கட்டமைப்பில், பாலிய உருவாக்கம் ஊடுருவியிருப்பதையும்,  அதனால் பழைய மதிப்பீடுகள், புதிய பண்பாட்டு மதிப்பீடுகளால் எத்தகைய மாற்றத்தைப் பெறுகின்றன என்பதையும் நன்கு அறிய உதவுகின்றது. இவற்றைத் தொல்காப்பியம், ... Full story

குறுந்தொகை நறுந்தேன் – 11

குறுந்தொகை நறுந்தேன் – 11
-மேகலா இராமமூர்த்தி தோழியின் யோசனைக்குப் பதிலேதும் சொல்லாமல் அமர்ந்திருந்தாள் தலைவி. அவளை அவசரப்படுத்த வேண்டாம் எனக் காத்திருந்தாள் தோழியும். காலம் கடுகிச் சென்றுகொண்டிருந்ததேயொழியத் தலைவியோ வாய்திறப்பவளாகத் தெரியவில்லை. எந்த முடிவுக்கும் வரமுடியாமல் அவள் தடுமாறிக்கொண்டிருந்ததை உணர்ந்த தோழி மீண்டும் பேசலுற்றாள்… ”அருமைத் தோழி! உடன்போக்கைத் தவிர வேறெந்த வழியிலும் இப்போது நீ தலைவனை அடைய இயலாது! ”நான் சொல்வதைக் கேள்! நம் ஊருக்கும் தலைவர் ... Full story

ஆய்ச்சியர் மத்தொலி

ஆய்ச்சியர் மத்தொலி
-மீனாட்சி பாலகணேஷ் தொல்காப்பியம் மாயோனாகிய திருமால், சேயோன் எனப்படும் முருகன், வேந்தன் எனப்படும் இந்திரன், வருணன் ஆகியோரை நானிலத் தெய்வங்களாகக் காட்டுகின்றது. 'மாயோன் மேய காடுறை உலகமும் சேயோன் மேய மைவரை உலகமும், வேந்தன் மேய தீம்புனல் உலகமும் வருணன் மேய பெருமணல் உலகமும் முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல்'  (தொல்காப்பியம்- அகத்திணையியல் -  பொருளதிகாரம்) பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐவகை நிலங்களையும் அவை பற்றிய செய்திகளையும் பாடல்களில் இணைத்துக் கூறுவதுண்டு என முன்பு கண்டோம். முருகனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்ட பிள்ளைத்தமிழ் நூல்களில் குறிஞ்சிநிலம் பற்றிய செய்திகள் ... Full story

தமிழ் – மலையாள மொழிகளில் செயல் வினைமுற்றுக்கள் (Indicative Verbs in Tamil and Malayalam)

-முனை. விஜயராஜேஸ்வரி  தமிழ் மொழியின் சொல் வகைகளை இலக்கணவியலாளர்கள் பலவாகப் பிரிப்பர். பழந்தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம் தமிழ் மொழியின் சொல் வகைகளைப் பெயர் வினை இடை உரி என்று நான்கு வகைகளாகப் பிரிக்கின்றது. அவற்றுள் வினைச்சொற்கள் மிக முக்கியமானதொரு சொல் வகையாகும். தொல்காப்பியம் இதனை, ”வினை எனப்படுவது வேற்றுமை கொள்ளாது நினையுங் காலை காலமொடு தோன்றும்”   (தொல்.சொல். 683) என்பார். தமிழ் வினைச்சொற்கள் வேற்றுமை உருபுகளை ஏற்காமல்; காலங்காட்டும் இடைநிலைகளை ஏற்று வரும் என்பது தொல்காப்பியனாரின் கருத்து. கால இடைநிலைகளை ஏற்கவல்லதாயும்; பாலிட விகுதிகளை ஏற்க வல்லதாயும் அமையும் கிளவிகள் வினைச்சொற்கள் ... Full story

இணையத்தமிழ் இதழ்களில் படைப்பிலக்கியத் தொகுப்பு முயற்சிகள் – 2

-முனைவர்.வே.மணிகண்டன் வார்ப்பு இதழ் அறிமுகம் வார்ப்பு 1998-ஆம் ஆண்டின் முற்பகுதியில் 'நிக்குமோ நிக்காதோ' என்ற பெயரில் மூன்று கவிஞர்களின் கவிதைகளுடன் தொடங்கப்பட்டது. 2000-ஆம் ஆண்டு 'நிக்குமோ நிக்காதோ' என்ற பெயரில் இருந்து டப்ளின்.காம்  என்ற இணையத் தளப்பெயருக்கு வார்ப்பு மாறியது. அம்மாற்றம் பெரிய மாற்றத்தைக் கவிஞர்கள், இணையப்பயனர்கள் மத்தியில் ஏற்படுத்தவில்லை. பிறகு கவிஞர் இசாக் அவர்களின் ஆலோசனைப்படி கவிஞர் மாலியன் அவர்களால் 'வார்ப்பு' என்ற பெயர் சூட்டப்பட்டது. தொடக்கத்தில் இலவச இணைய வழங்கியில்; தொடங்கப்பட்ட வார்ப்பு படிப்படியாக வளர்ச்சி நிலையை அடைந்தது.வார்ப்பு இதழின் பதிப்பாசிரியரான பா.மகாதேவன், உதவி ஆசிரியர்களான ... Full story

நவகண்டம் – அரிகண்டம்

நவகண்டம் - அரிகண்டம்
பவள சங்கரி ‘நவகண்டம்’ என்பதன் பொருள் நவம் - ஒன்பது, கண்டம் -துண்டங்கள். ஒரு வீரர் தம் உடலை 9 துண்டங்களாகத் தாமே வெட்டிக்கொண்டு உயிர் துறப்பது. ‘அரிகண்டம்’ என்றால் ஒரு வீரன் தம்மைத்தாமே வாளால் கழுத்தை அறுத்துக்கொண்டு உயிர் தியாகம் செய்வது. தலையை ஒரு கையால் பிடித்துக் கொண்டோ, தலையை ஓரிடத்தில் இழுத்துக் கட்டியோ மறுகையால் வாள் கொண்டு கழுத்தினை அறுத்து பலி கொடுப்பது. ... Full story

இணையத்தமிழ் இதழ்களில் படைப்பிலக்கியத் தொகுப்பு முயற்சிகள் – 1

 -முனைவர்.வே.மணிகண்டன் தமிழ் இலக்கிய உலகின் இன்னுமொரு பரிணாம விளைவு இணையத்தமிழ். தொழில்நுட்ப வளர்ச்சியின் முன்னேற்றம் ஊடகங்களின் வளர்ச்சியினையும் அடுத்த நிலைக்குக் கொண்டு சென்றிருக்கிறது. ஓலைச் சுவடிகள், பக்கங்களாக மாறி இன்று இணையத்தமிழ் வரை வளர்ச்சியடைந்துள்ளது. இணையத்தைப் பொறுத்தவரையில் உலகின் பல பாகங்களிலும் வாழும் இணையப் பயனாளர்களிடம் இணையத்தமிழ் இதழ்களை மிக எளிதாக எடுத்துச் செல்லும் சக்தி படைத்தது. தகவல்களின் சுரங்கமாக விளங்கும் இணையத்தில் வலையேற்றப்படும் இணையத்தமிழ் இதழ்களில் உடனுக்குடன் படைப்புகள் வெளியிடவும், இலக்கிய விவாதங்களையும், கருத்துப் பரிமாற்றங்களையும் நடத்த முடிகிறது. படைப்பிலங்கியங்களுக்கு பெரும்பான்மையான இணைய இதழ்கள் முக்கியத்துவம் ... Full story

குறுந்தொகை நறுந்தேன் – 10

குறுந்தொகை நறுந்தேன் – 10
-மேகலா இராமமூர்த்தி தலைவன் ஊர்திரும்பிவிட்ட நற்செய்தியை முதலில் அறிந்தவள் தோழியே. அதனைச் சொல்லித் தலைவியை மகிழ்விக்கவேண்டும் எனும் எண்ணத்தோடு தலைவியின் இல்லம்நோக்கி விரைந்துவந்தாள். அயலார் தலைவியை மணம்பேசிவிட்டுச் சென்றபின் தலைவி முன்புபோல் அதிகமாய் வீட்டைவிட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை; இற்செறிக்கப்பட்டாள். (இல்லத்திலேயே இருக்குமாறு வலியுறுத்தப்படுதல்). அவளின் மலரன்ன முகத்தில் நொதுமலர் மணம்பேசிச் சென்றதிலிருந்தே மலர்ச்சியில்லை; உடல் மெலிந்தும் உளம் நலிந்தும் ஓர் நடைப்பிணமாகவே அவள் நடமாடி வந்தாள் எனலாம். தலைவியைக் கண்ட தோழி, அவள் உளமறியாது, ... Full story

மகாகவி பாரதி – பாவலர் துரையப்பா பிள்ளை: நவீன தமிழ்ப் புத்திலக்கிய முன்னோடிகள்

-ர. சுரேஷ்        தமிழகத்தில் மகாகவி பாரதியும் இலங்கையில் பாவலா் துரையப்பா பிள்ளையும் சமகாலத்தில் வாழ்ந்த கவிஞா்கள் ஆவா். தமிழகத்தில் நவீன தமிழ்க்கவிதையின் முன்னோடி பாரதி என்றால் இலங்கையில் நவீன தமிழ்க்கவிதையின் முன்னோடி என்று பாவலா் துரையப்பா பிள்ளையை ஆய்வாளா்கள் குறிப்பிடுவா். மகாகவியைப் போலவே சமூக, அரசியல், பொருளாதார, சமயச் சிந்தனைகள் பாவலா்க்கும் உண்டு. இதனை அவா்தம் கவிதைகளை வாசிக்கும் யாவரும் அறியலாம். சிறப்பாக தேசப்பற்று, சமூகச் சீா்த்திருத்தக் கருத்துகள் இருவருக்கும் பொதுவான அம்சங்களாக விளங்குகின்றன. ஓப்பிட்டளவில் கருத்தொற்றுமை, பொருளொற்றுமை, நடையொற்றுமை போன்றவையும் இருவா் கவிதைகளிலும் ஒருமித்துக் காணப்படுகின்றன. எனவே ... Full story
Page 1 of 1612345...10...Last »
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.