Archive for the ‘கிரேசி மொழிகள்’ Category

அன்புள்ள அப்பா

அன்புள்ள அப்பா
  அன்புள்ள அப்பா அமுதசுரபி கட்டுரை தங்கள் மேலான பார்வைக்கு.....! Full story

ஹஸ்தாமலக கீதம்….!

  -------------------------------------------------------------------------------- நொச்சூர் ஸ்ரீவெங்கடராம ஸ்வாமிகளின் ஆங்கில உரையைப் படித்த பாதிப்பில், தமிழில் வெண்பாக்களாகச் செய்துள்ளேன்.... ....மொழிபெயர்ப்பில் மூலமும் என்மூலம் வந்த கற்பனையும் இணைந்துள்ளது(ஸ்ரீ பகவான் ரமண உபயம்)....! ------------------------------------------------------------------------------------- (காப்பு) --------- ‘’அருணா சலர்க்குப்பின், ஆதிசங் கரர்பின் கருணா கரர்காம கோடி -உருவாய் அரனா கவந்து அரணாக நின்றோய் வரனாய்யென் வெண்பாவில் வா’’....கிரேசி மோகன்....! ----------------------------------------------------------------------------------------- ‘’ஆத்திலொரு கால்வைத்து ஆன்மப்போ ராட்டமாய் சேத்திலொரு கால்வைத்த ஜீவனவன் -காத்திருக்கான்... Full story

காமகோடி கட்டுரை…..!

காமகோடி கட்டுரை.....!
Full story

கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

கேசவ் வண்ணம் - கிரேசி எண்ணம்
181119 DWA Parthasarathy -wcol - A4 Canson 200 gsm 300 dpi (After the Vishwaroopa darshan at Parthasarathy temple on 181118. lr பார்த்தன் பார்த்திட பார்த்தனின் சாரதி வேர்த்தல் விலக்கிடும் விஸ்வரூபம், -தீர்த்தம் குளக்கரை அல்லியூரில்(திருவல்லிக்கேணி) கோவிந்தர், நெஞ்ச உளைச்சலை நீக்கும் உரு(உருவம்).....கிரேசி மோகன்....! திருவல்லிக் கேணி வேதவல்லித் தாயார் சன்னிதியில்.... ---------------------------------------------------------------------- வேதவல்லித் தாயே வினைதீர்க்கும் செங்கமலப் பாதவல்லி ... Full story

“சிறுவா புரி சதகம்”

  ------------------------- காப்புச் செய்யுள் ---------------------- "உரைபா ரதத்தை ஒருகொம் பொசித்து தரைசே ரவடித் தருள்வே ழவரே சிறுவா புரியார் சதகம் எழுதத் தருவாய் எனக்குத் தமிழும் திறனும்".... சிறுவாபுரி சதகம்....கந்தரனுபூதி பாதிப்பில்.... "தனியா னைசகோ தரனார் துணையால் வனமா துடல்மே விடவே டுவனாய் தனியாய் வருவேல் தணிகா சலனே வினைதீர்த் திடவா சிறுவா புரியே"....(1) "அடடா எனவூர் அனுதா பமுற ... Full story

முன்னுரை சாம்பியன்ஸ் சென்னை….!

முன்னுரை சாம்பியன்ஸ் சென்னை....!
  குழந்தைகளுக்கு வாழ்த்துக்கள்....!   Full story

கிரேசி மோகனின் குழந்தைகள் தினப்பாடல்!

கிரேசி மோகனின் குழந்தைகள் தினப்பாடல்!
  கிரேசி மோகன் & குருகல்யாணின் - குழந்தைகள் தின பாடல் குழந்தைகளின் மனம்கவர்ந்த கலைமாமணி கிரேசி மோகன் அவர்களின் வரிகளில் இசை அமைப்பாளர் குரு கல்யாண், குழந்தைகள் தினத்தை ஒட்டி (Nov 14 2018) ஒரு தனி பாடல் இசை அமைத்து வெளியிட உள்ளார். இப்பாடல் குழந்தைகளை கவரும் வண்ணம், துள்ளல் இசையாக வந்துள்ளது, இதில் தனித்துவம் மிக்க திரு கிரேசி மோகன் அவர்களுடன் பணியாற்றியது மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த ... Full story

கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

கேசவ் வண்ணம் - கிரேசி எண்ணம்
181107 - Adhara sudha -watercolour - A4 Canson 200gsm 100dpi lr சேதாரம் மேனிக்கே சாவில்லை ஆன்மனுக்கு ஆதாரம் விஷ்ணு அவதாரர், -ஸ்ரீதாரர் (ஸ்ரீதேவியைத் தரித்தவர்) வேகாது, தண்ணீரில் வீழ்ந்தும் நனையாது சாகாத அவ்வுணர்வே சத்து....! சத்துக்கு ஆனந்தம் சித்தின் விளையாட்டு அத்தனையும் வேடிக்கை ஆகப்பார் -புத்தி மனமுள்ளம் நெஞ்சென்ற மாயங்கள் நால்வர் உனையுண்ணத் தூக்கும் உறவு....! உறவும் பகையும் துறவும் தெளிவும்... Full story

டாக்டர் ஸ்ரீதர்….!

செல்லப் பிள்ளை ஸ்ரீதர் ------------------------------- மருந்துக்கு அடங்காதது மந்திரத்துக்கு அடங்கும் என்பார்கள்....டாக்டர்.ஸ்ரீதரிடம் ஆஸ்த்மா மருந்தும் இருக்கு, கற்பகாம்பாள் ஆலய மந்திரமும் இருக்கு....நோயாளியின் ஆஸ்த்மா சாந்தி அடையும் டாக்டர் ஸ்ரீதரால்....அதேசமயம் நோயாளியின் ஆத்மா சாந்தியடையாமல் காப்பாற்றுவாள் கற்பகாம்பாள் தனது செல்லப் பிள்ளை ஸ்ரீதருக்காக....செய்யும் தொழிலே தெய்வம் என்பார்கள்....ஸ்ரீதருக்கோ '' தெய்வம் தொழலே தொழில்''....'' என்னால முடிஞ்சதை செஞ்சுட்டேன் ....இனி ஆண்டவன் விட்ட வழி '' என்பார்கள் மற்ற வைத்தியர்கள்....ஸ்ரீதருக்கோ ஈஸ்வரன் கபாலி கம்பவுண்டர்....ஈஸ்வரி கற்பகாம்பாள் நர்ஸ்....அப்புறம் என்ன சார்.... ஸ்ரீதரிடம் செல்பவர்களுக்கு ... Full story

TOI Interview….!

TOI Interview....!
Full story

”மை LOVE வாப்பூர் டைம்ஸ்’’….!

கிரேஸி மோகன் --------------------------- மயிலாப்பூர்வாசிகளுக்கு நாகேஸ்வரராவ் பார்க்தான் காதல்கோட்டை. கல்லூரி நாட்களில் நான், விச்சு, நடராஜன் மூவரும் வேலை மெனக்கெட்டு பார்க்குக்கு வரும் காதலர்களை வேவு பார்க்கப் போவோம். லவ் டுடே பற்றி எனக்கு தெரியாது. அந்நாளில் மயிலாப்பூர் லவ் மடியாக ஆச்சாரத்தோடு இருந்தது. இரண்டு குழந்தைகளுக்கு இடையே உள்ள போதிய இடைவெளிவிட்டு காதலர்கள் அமர்ந்து (நாங்கள் பார்த்த காதலர்களில் பாதி பேர்கள் நாலு முழ வேட்டி, காலர் அழுக்காகாமல் இருக்க கழுத்தில் கர்சீப், சொக்காயின் கைக்கு வெளியே எட்டிப் பார்க்கும் கைவைத்த உள் பனியன், நெற்றியில் காதல் ... Full story

கல்கியில் கிரேசி!

கல்கியில் கிரேசி!
  Full story

விஜயதசமி வெண்பாக்கள்…..!

விஜயதசமி வெண்பாக்கள்.....!
வெண்பாவில் அம்பாள்    ------------------------------       காப்பு        ------- எருதேறி ஈசன் ,எலியேறி வேழன் முருகேறி காக்க மயிலில் -உருகாது அன்பால் அழைக்கும் அடியேனின் வெண்பாவில் அம்பாளே வா....(1)....28-07-2011 -------------------------------------------------------------- கத்தி , உடுக்கை,கபாலம், திரிசூலம் சக்தி கரமுற்ற ஆயுதங்கள் -பக்தி இலாதோர் இதயச் சிலாவைப் பிளந்து பலாவின் சுளையைப் புதைக்கும்....(2)....03-04-2008 ... Full story

அகல்யா

அகல்யா
  கல்லகலிகைக்கு காலடி மோக்‌ஷம் புள்ளகன்(ஜடாயு) ஏகிட புல்லிட்டு(தர்ப்பை) மோக்‌ஷம் அல்லகல் வித்திடும் ஆதித்ய ரூபம் வில்லகல் மார்பில் வேய்ந்திடும் ராமம்....!(எழுதித் தந்தேன் ‘’கிரிதரிடம்’’....அதற்கு இசையமைத்து எனது எழுத்துக்கு ஊட்டம் கொடுத்தவர் பாடினார் ‘’கிரிதர்’’.....!) ''கல்ராம் அகலிகைக்கு, இல்ராம்வை தேஹிக்கு, கொள்ராம் விபீஷணன் காப்புக்கு, -தொல்ராம் அவதார விஷ்ணு, அனுமான் தனக்கு சிவராம க்ருஷ்ணா ... Full story

Crazy Quotes From Crazy கிழிஞ்ச Coat….!

  தூக்கக் கலக்கத்தில் தோன்றியது....CrazY Quotes From Crazy Coat.... ''ஆறாவது அறிவுடன் நிறுத்திக் கொள்வ்பவன் அடிமுட்டாள் ஏழாவது, எட்டாவது என்று தொடர்ந்து படித்து டிகிரி வாங்குபவனே புத்திசாலி’’....(1) ‘’இளமையில் கல்....முதுமையில் சிலை....நடுவயதில் வாழ்வின் நாராசமான உளியின் ஓசை’’....(2) ‘’பாவம் செய்தவன் நரகம் செல்கிறான் புண்ணியம் செய்தவன் சொர்கம் செல்கிறான் எதுவும் செய்யாதவன் பூமியில் பிறக்கிறான்’’....(3) ’’கெட்ட பழக்கத்தை நாம விடலாம்....பாழாய்ப்போன நல்ல பழக்கமோ நம்மை விட்டால்தான் உண்டு’’....(4) ‘’அளவுக்கு மீறிய பசியில் நஞ்சும் அமிர்தமாகும்’’....(5)... Full story
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.