Archive for the ‘சொற்சதங்கை’ Category

Page 1 of 512345

கருத்தரங்கிற்கு வாரீர்!

கே. ரவி அனைவருக்கும் வணக்கம். என் இனிய நண்பர்கள் சிலர், சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியோடு இணைந்து, என் படைப்புகள் பற்றி ஒரு முழுநாள் கருத்தரங்கம் ஏற்பாடு செய்துள்ளார்கள். டாக்டர் வி.சி.குழந்தைசாமி, திரு.பி.எஸ். ராகவன், முனைவர் ஒளவை நடராஜன், இலக்கியச் செல்வர் குமரி அனந்தன், திரு.இல.கணேசன் போன்ற பெருமக்கள் முன்னின்று நடத்துமாறு இந்தக் கருத்தரங்கை வடிவமைத்துச் செயலூக்கம் தந்துவருவோர் பாலக்காடு டாக்டர் ராஜாராம் அவர்களும், புதுவை டாக்டர் அ.அறிவுநம்பி அவர்களும். பிப்ரவரி மாதம் 21 சனிக்கிழமை அன்று கருத்தரங்கம் சென்னை எதிராஜ் மகளிர் கல்லூரி வளாகத்தில் ... Full story

காற்று வாங்கப் போனேன் – 53

காற்று வாங்கப் போனேன் - 53
கே. ரவி கேரளாவில், ஆதி சங்கரர் பிறந்த ஊரான காலடியில் எனக்கு ஏற்பட்ட இரண்டு அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 1985 அல்லது 86 என்று நினக்கிறேன். காலடிக்குச் சென்று அங்கிருந்த பூர்ணா நதியில் நீராடி விட்டுச் சிருங்கேரி சங்கர மடத்தாரால் பராமரிக்கப்படும் மண்டபத்தில், சங்கரரின் தாயார் ஆர்யாம்பாள் சன்னிதிக்கு எதிரில், வாராஹி, வைஷ்ணவி, கெளமாரி, ப்ராஹ்மி, இந்திராணி, சாமுண்டி, மாஹேஸ்வரி என்ற ஏழு சக்தி வடிவங்களும் செதுக்கப்பட்ட ஒரு தூணுக்கு ... Full story

உன் கன்னங்களில்!

உன் கன்னங்களில்!
  கே.ரவி     நங்கையுன் கன்னங்களில் பொன்னந்தி வண்ணங்களில் நாணவில்லை வரைந்த பின்னே வானவில்லைக் காணவில்லையடி ஹோ! தங்கத் தடாகத்தில் தாமரைபோல் என் நெஞ்சத் தடாகத்தில் அழகு முகம் பேரொளியாக மலர்ந்த பின்னே வேறொளி இங்கே தேவையில்லையடி ஹோ! (நங்கை உன் கன்னங்களில்)     கங்கையைப் போலுன் அங்கமெலாம் ஒரு காதல் நதிபுரள - என் கண்ணசைவில் ... Full story

காற்று வாங்கப் போனேன் (52)

காற்று வாங்கப் போனேன் (52)
கே. ரவி என்னப்பா 'ஸிந்தடிக் விஷன்' என்றெல்லாம் சொல்லி மிரட்டுகிறாய்? பொறு தம்பி, இன்னும் பெரிய, பெரிய வார்த்தைகள் இருக்கின்றன. ஆனால் சுலபமாகப் புரிந்து கொள்ளும்படிச் சொல்கிறேன். ஒருங்கிணைந்த பார்வை என்பதைப் புரிந்து கொள்ள நாம் வேறெங்கும் செல்ல வேண்டியதில்லை. நம் புலப்பாட்டு இயக்கமே போதும். உளவியல் துறையில் பயிலும் மாணவர்கள் புலன் நுகர்ச்சி எப்படி உண்டாகிறது என்பது பற்றிப் பல்வேறு கொள்கைகளைப் படிப்பார்கள். புலனுகர்ச்சிக் கொள்கைத் திரட்டு, ஆங்கிலத்தில், "தியரீஸ் ஆஃப் பெர்ஸெப்ஷன்" (Theories of Perception) என்று அழைக்கப் படுகிறது.... Full story

அணையாத சுடரேற்றுவேன்!

அணையாத சுடரேற்றுவேன்!
-கே. ரவி அணையாத சுடரேற்றுவேன் - நெஞ்சில் அலைமோதும் சொற்களை அக்கினியில் தோய்த்துத் தீக் கணையாக உருமாற்றுவேன் - இமைக்கும் கணத்திலிப் பேரண்டம் உருவான மையத்தில் அணையாத சுடரேற்றுவேன்! விண்மீன்கள் சிறுதுளிகளாய் - வான                             விளிம்புக்கு விரைந்தோடிப் போய்விழுந் தேசிதற எண்ணற்ற உயிர்க்குலங்கள் - வாழும் விண்மீன்களாய் என்றும் ஒளிசிந்திக் ... Full story

காற்று வாங்கப் போனேன் – 51

காற்று வாங்கப் போனேன் – 51
-- கே.ரவி. கானல் நீரோ, கற்பகச் சோலையோ இந்தத் தொடரின் கருப்பொருள் இல்லை. இதன் கருப்பொருள் கவிதை. அடாடா! பெரிய தவறு. கவிதை இதன் கருப்பொருள் இல்லை; கதாநாயகி! தானே வெடித்துச் சிதறிய ஒற்றைப் புள்ளியும் அவள்தான். அதிலிருந்து பொலபொலவென்று பிரிந்து பரவும், பரவிக் கொண்டே இருக்கும் பிரபஞ்ச சக்தியும் அவள்தான். "ஊடலும் கூடலும் கோவலர்க் களித்து" என்று இளங்கோ சொன்னது போல் ஊடலும், கூடலும் பாவலர்க்களிக்கும் மாதவிப் பொன்மயிலாளள் அவள்தான். கூடல் மாநகரையே தீக்கிரையாக்கிய கண்ணகியைப் போல், மனக்காட்டை எரிக்கும் அக்கினிக் குஞ்சும் அவள்தான். அவளை ஆராதிக்கவே இந்தத் தொடர்.... Full story

காற்று வாங்கப் போனேன் (50)

காற்று வாங்கப் போனேன்  (50)
கே. ரவி   சொற்களுக்குள் ஏறிக் கொண்டேன். என்ன செய்யப் போகிறாய்? தம்பி, உனக்கும் எனக்கும் பதில் சொல்லவே வந்தது ஒரு கவிதை, 1978-ல்: என் சொற்களுக்குள் ஏறிக்கொள் சொர்க்கத்தைக் காட்டுகிறேன் - என் கற்பனைப் புரவியையுன் கண்களில் பூட்டுகிறேன் மேகங்களிலே தேகம் இழைத்து மேனி படைத்திடலாம் மின்னலைப்போல் துள்ளித்துள்ளி வானில் குதித்திடலாம் நிலாப்பிறையைத் துந்துபியாக்கி நாதம் எழுப்பிடலாம்... Full story

காற்று வாங்கப் போனேன் – 49

கே.ரவி புயல் வந்ததா, முயல் வந்ததா? ஒன்றும் வரவில்லை தம்பி. காத்துக் கொண்டிருக்கிறேன். காலம் மட்டும் நிற்காமல் ஓடிக் கொண்டே இருக்கிறது. நான் காத்துக் கொண்டுதான் இருக்கிறேன். எதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன்? தெரியாது. ஆனால், காத்துக் கொண்டே இருக்கிறேன். சுருதி நாயகன் வரும் வரும் என்பதோர் துணிவால் கருதி மாதிரம் அனைத்தையும் அளக்கின்ற கண்ணாள் என்று கம்பன் சொன்னது போல், நானும் ஓர் அசோக வனத்தில்….! என் நூல்களைப் ... Full story

காற்று வாங்கப் போனேன் (48)

காற்று வாங்கப் போனேன்   (48)
கே.ரவி என் நூல்களை அனுப்பியதுமே படித்து விட்டுத் தம் கருத்துகளைக் கடிதங்களாக எனக்கு அனுப்பிய சான்றோர் பெருமக்களில், லலிதா பாரதி அம்மையாரையும், நான் பெரிதும் மதிக்கும் இலக்கியப் படைப்பாளர்களான அமரர் தொ.மு.சி.ரகுநாதனையும், அமரர் தி.க.சிவசங்கரனையும், பாரதி கலைக் கழக நிறுவனர் பாரதி சுராஜ் அவர்களையும், முனைவர் தெ.ஞானசுந்தரம் அவர்களையும், டாக்டர் பிரேமா நந்தகுமார் அவர்களையும், குறிப்பிடாமல் இருக்க முடியாது. லலிதா பாரதி அம்மையாரின் வாழ்த்தை அவருடைய தாத்தாவின் வாழ்த்தாகவே, அதாவது, என்றைக்குமே இளமையாகவே நம் நெஞ்செல்லாம் நிறைந்துவிட்ட பாரதியின் வாழ்த்தாகவே ... Full story

காற்று வாங்கப் போனேன் – 47

காற்று வாங்கப் போனேன்  - 47
கே. ரவி "அப்ப, கணம் என்பது ஒரு நிமிடத்தை விடக் குறைவான நேர அளவா?" சிகாமணி கொட்டாவி விட்டுக் கொண்டே கேட்டதும் தலையில் அடித்துக் கொள்கிறேன். தலைதானே சிகாமணியின் தலைமைச் செயலகம்! கிழிஞ்சுது கிருஷ்ணாவதாரம். எல்லாவற்றையும் கேட்டுவிட்டு விஷயத்தைக் கோட்டை விட்டுவிட்டாயே, சிகாமணி! கணம் என்பது ஓர் அளவவே இல்லை. அது ஒரு புள்ளி. கணிதத்தில் புள்ளிக்கு எப்படிச் சுற்றளவு, ஆரம் எதுவும் கிடையாதோ, அப்படித்தான் கணமும். இடத்துக்குப் புள்ளி எப்படியோ, காலத்துக்குக் கணம் அப்படி. ஆனால், சாதாரண அளவுகோல்களுக்குச் சிக்காத புள்ளியும், கணமும் 'நுட்ப ... Full story

காற்று வாங்கப் போனேன் – 46

காற்று வாங்கப் போனேன் - 46
கே. ரவி என்ன, வக்கீல் புத்தியைக் காட்டி விட்டேனோ? கட்சி பேசுவது, சாட்சி சொல்வது என்றெல்லாம் பழக்க தோஷத்தில் எழுதி விட்டேனோ? சாட்சி சொல்வது என்றதும் என் நினைவில் நிழலாடும் ஒரு நண்பர், ஒரு பிரபல நடிகர். அவர் இப்பொழுது நம்மிடையே இல்லை; ஆனால், தமிழ் மக்கள் நெஞ்சங்களில் எல்லாம் நீங்கா இடம்பெற்று விட்டவர். அவர் என் கட்சிக்காரராகவும் வந்து சேர்ந்தார், 1980-களில். அவருடைய திரையரங்கம் குறித்து ஒரு வழக்கு ஏற்பட்டு, அதில் நான் அவருக்காக வாதாடும் வழக்குரைஞனாகப் பொறுப்பேற்றுக் கொண்டேன். நாலைந்து நாட்கள் அவர் ... Full story

தோகமயில் ஒண்ணு!

தோகமயில் ஒண்ணு!
கே. ரவி   "(சிற்றுந்தில் பயணம் செய்த போது, என் தோளில் சாய்ந்த படி அவள் தூங்கிவிட்டாள். என் மனம் பாடியது. ஓ! அது நிகழ்ந்தது ஏறக்குறைய இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்!)   தோகமயில் ஒண்ணு!       தோகமயில் ஒண்ணு தோள்மேல சாஞ்சு தூங்குதடீ எட்டநின்னுக் காத்தும் ஏக்கப்பெரு மூச்சு வாங்குதடீ பூங்குயில் கூவுது ஆராரோ பொன்வண்டு பாடுது தாலேலோ காத்தாச் சிலுக்குறா கண்ணத் தொறந்தா... Full story

காற்று வாங்கப் போனேன் (45)

காற்று வாங்கப் போனேன்  (45)
கே. ரவி என்னைய்யா இது, சோகத்தைக் கூட ரசிக்கணும்னு சொல்றீக! ஏன் ரசிக்கக் கூடாது. இலக்கிய ரசனை என்பது சந்தோஷ சமாச்சாரம் மட்டுமே என்பது தப்புக் கணக்குத் தம்பி! இலக்கிய ரசனை என்பது, தன் வாழ்வில் தன் அனுபவமாக வராத ஒரு நிகழ்வை, இன்னொருவர் அனுபவித்த ஒன்றை, அந்த இன்னொருவருக்குள் எப்படியோ நுழைந்து, ஏறக்குறைய அவர் அனுபவித்தபடியே அனுபவிப்பது. அங்கே பார், அந்த மங்கை அழுது புலம்பிக் கொண்டிருக்கிறாள். அவளருகே ஒருவன் குருதி வெள்ளத்தில் இறந்து கிடக்கிறானே! யாரவன்? அவள் ... Full story

காற்று வாங்கப் போனேன்! (44)

காற்று வாங்கப் போனேன்! (44)
கே. ரவி இப்பொழுதெல்லாம் கவிஞன் என்று ஒருவன் தன்னைச் சொல்லிக் கொண்டால், மரபுக் கவிதைகள் எழுதும் கவிஞனா, இல்லை, புதுக்கவிதைகள் எழுதும் கவிஞனா என்ற கேள்வி உடனே கேட்கப்படுகிறது. பெரிய விவாதங்களைத் தவிர்த்து எளிமையாகச் சொல்வதென்றால், தமிழ் யாப்பிலக்கண நூல்களில் சொல்லப்படும் செய்யுள் வகைகளில் எழுதப்படும் கவிதைகள் மரபுக் கவிதைகள் எனவும், அப்படியின்றி எந்த யாப்பிலக்கணக் கட்டுப்பாடுகளுக்கும் அடங்காமல், கிட்டத்தட்ட உரைநடை வடிவில் எழுதப்படும் வெளிப்பாடுகள் புதுக்கவிதைகள் எனவும் பொதுவாகக் குறிக்கப் படுகின்றன. நான், சாந்தோம் உயர்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பில் சேர்ந்த போது சரியாகத் ... Full story

காற்று வாங்கப் போனேன் (43)

காற்று  வாங்கப் போனேன்  (43)
கே.ரவி 'கடவுள் உண்டா, இருந்தால் காட்டு' என்று வெறிகொண்டு அலைந்த நரேந்திரனையும் நான் பார்த்ததில்லை. அவனுக்குத் தொடுகுறி மூலமாக அநுபூதி தந்து, அவனை விவேகானந்தன் ஆக்கிய காளி கோயில் பூசாரியையும் நான் பார்த்ததில்லை. ஆனால், பராசக்தியைப் பார்ப்பதொன்றே தன் வாழ்வின் லட்சியம் என்று சொல்லி, மற்ற எல்லாவற்றையும் அலட்சியமாகப் பார்த்த ஒருவனை, ஏறக்குறைய நரேந்திரன் போலக் காட்சி தந்த ஒரு நண்பனை, நான் கண்டு வியந்தேன். அவனும் டாக்டர் நித்யானந்தத்தின் சீடனாக வந்தடைந்தான். 'உனக்கு என்ன வேண்டும்?' என்று டாக்டர் கேட்ட போதெல்லாம், "பராசக்தியைப் பார்க்க வேண்டும்" ... Full story
Page 1 of 512345
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.