Archive for the ‘கவியுள்ளம்’ Category

உன் கன்னங்களில்!

உன் கன்னங்களில்!
  கே.ரவி     நங்கையுன் கன்னங்களில் பொன்னந்தி வண்ணங்களில் நாணவில்லை வரைந்த பின்னே வானவில்லைக் காணவில்லையடி ஹோ! தங்கத் தடாகத்தில் தாமரைபோல் என் நெஞ்சத் தடாகத்தில் அழகு முகம் பேரொளியாக மலர்ந்த பின்னே வேறொளி இங்கே தேவையில்லையடி ஹோ! (நங்கை உன் கன்னங்களில்)     கங்கையைப் போலுன் அங்கமெலாம் ஒரு காதல் நதிபுரள - என் கண்ணசைவில் ... Full story

அணையாத சுடரேற்றுவேன்!

அணையாத சுடரேற்றுவேன்!
-கே. ரவி அணையாத சுடரேற்றுவேன் - நெஞ்சில் அலைமோதும் சொற்களை அக்கினியில் தோய்த்துத் தீக் கணையாக உருமாற்றுவேன் - இமைக்கும் கணத்திலிப் பேரண்டம் உருவான மையத்தில் அணையாத சுடரேற்றுவேன்! விண்மீன்கள் சிறுதுளிகளாய் - வான                             விளிம்புக்கு விரைந்தோடிப் போய்விழுந் தேசிதற எண்ணற்ற உயிர்க்குலங்கள் - வாழும் விண்மீன்களாய் என்றும் ஒளிசிந்திக் ... Full story

தோகமயில் ஒண்ணு!

தோகமயில் ஒண்ணு!
கே. ரவி   "(சிற்றுந்தில் பயணம் செய்த போது, என் தோளில் சாய்ந்த படி அவள் தூங்கிவிட்டாள். என் மனம் பாடியது. ஓ! அது நிகழ்ந்தது ஏறக்குறைய இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்!)   தோகமயில் ஒண்ணு!       தோகமயில் ஒண்ணு தோள்மேல சாஞ்சு தூங்குதடீ எட்டநின்னுக் காத்தும் ஏக்கப்பெரு மூச்சு வாங்குதடீ பூங்குயில் கூவுது ஆராரோ பொன்வண்டு பாடுது தாலேலோ காத்தாச் சிலுக்குறா கண்ணத் தொறந்தா... Full story

மாண்டலின் ஶ்ரீநிவாஸ்

மாண்டலின் ஶ்ரீநிவாஸ்
கே. ரவி   மாண்டலின் ஶ்ரீநினிவாஸ் மாண்டனன் என்பதா மன்புகழ்ப் பொன்னுடல் பூண்டனன் என்பதா   வேண்டலின் வேண்டாமை வித்தாகும் முக்திக்கு காண்டலின் கேட்டலே கருத்துக்கு விருந்தாகும் மாண்டலின் என்பதோர் கருவியா அருவியா ஆண்டவ னேவியந்து அழைத்துவரச் சொன்னானோ   மாண்டலின் ஶ்ரீநினிவாஸ் மாண்டனன் என்பதா மன்புகழ்ப் பொன்னுடல் பூண்டனன் என்பதா   நரம்புகள் மீட்டினான் ரசிகர்க ளின்நாடி நரம்புகள் மீட்டினான் நாதப் பிரளயத்தின் வரம்புகள் உடைந்தன வானமே அதிர்ந்ததாம் திறம்புகல் வதற்கின்னும் தேடுவோம் சொற்களே   மாண்டலின் ஶ்ரீநினிவாஸ் மாண்டனன் என்பதா மன்புகழ்ப் பொன்னுடல் பூண்டனன் என்பதா   தூண்டிலின் முனையிலே துடிக்கும் புழுவென கூண்டிலே அடைபட்டுக் குமுறும் கிளியென தோண்டியைப் போட்டுடைத் தாண்டியென் றாடவா மாண்டிலன் ஶ்ரீநிவாஸ் என்றுதான் பாடவா   கே.ரவி 19-09-2014 Full story

பஜகோவிந்தம் பஜகோவிந்தம்

பஜகோவிந்தம் பஜகோவிந்தம்
கே. ரவி   ஆதிசங்கரர்இன் பஜகோவிந்தம் பாடல் எப்பொழுதும் என் மனத்துக்கு நெருக்கமான பாடல். அதன் ஈர்ப்பில் நான் எழுதிய ஒரு தமிழ்ப்பாடலை, ரெஹான் இசையில், சுஜாதா குரலில் கேட்கலாமே:   பஜகோவிந்தம் பஜகோவிந்தம்     பஜகோவிந்தம் பஜகோவிந்தம் பாடல்களில் உயர் பாடலிதே நிஜமும் நிழலும் நிதர்சன மாகும் நித்யா னந்த கீதமிதே   உடலும் உயிரும் உறவென் றெண்ணும் மடமை அழிக்கும் மார்க்கமிதே கடவுள் ... Full story

அண்ணாச்சி

அண்ணாச்சி
கே. ரவி   அண்ணாச்சி பழனியிலே தம்பி அத்வானக் காட்டினிலே ஒண்ணாக வைத்துக் கொண்டாடுவோம் ரெண்டு கண்ணாக வீட்டினிலே புள்ளி மானத் தேடி வேட்டைக்குப் போயி வள்ளிமானக் கொண்டுவந்தான் - அண்ணங்காரன் வள்ளிமானக் கொண்டுவந்தான் புலிப்பால் தேடிக் காட்டுக்குப் போயி புலிமேல் ஏறிவந்தான் - சின்னத்தம்பி புலிமேல் ஏறி வந்தான் கோவத்தி லேவெறுங் கோவணத் தோடே குன்றேறி ... Full story

மந்த்ர ரூபம்

மந்த்ர ரூபம்
கே. ரவி   பாடியிருப்பவர்  : எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மந்த்ர ரூபம் {கேட்டு மகிழ சொடுக்குங்கள் மேலே} மந்த்ர ரூபம் மந்த ஹாஸம் மன்மதனை வென்ற சிவ வைராக்யம் - மணி கண்டனே உந்தன் மலர்ப்பதம் - துணை கொண்டவர்க்கு வழி புலப்படும்   தென்றலோடொரு செந்தழலெழுந் தன்று செய்தது நர்த்தனம் - சிவ நர்த்தனம் - அந்தச்... Full story

கண்ணபிரான்

கண்ணபிரான்
கே. ரவி  பாடியவர் : ராஜகோபால் கண்ணபிரான் பாடலைக் கேட்க இங்கே சொடுக்குங்கள்   என் நாவிலே பொன்வீணை நீ - என் ஆவியே உந்தன் ஸ்ருதி - என் நாவிலே பொன்வீணை நீ கண்ணாவுன் மேனி கார்முகில் மின்னல்களே உன் பூந்துகில் ககனமே உந்தன் ... Full story

பெருமாள் பெருமாள்

பெருமாள் பெருமாள்
  கே. ரவி பா டல் : உன்னி மேனன்   பெருமாள் பெருமாள் பாடலைக் கேட்க சொடுக்குங்கள் கலிதீர்க்க வந்தவன் தான் கலிய பெருமாள் வினைதீர்ப்பவன் வெங்கடேசப் பெருமாள் திருமண் ஒளிவீசும் கரிய பெருமாள் தினம்தோறும் நாம்வணங்கும் பெரிய பெருமாள் -- கலிதீர்க்க நின்றதிருக் கோலத்திலே உள்ள பெருமாள் நித்தம்நம்மை வாழவைக்கும் நல்ல பெருமாள் சொர்ணகவ சத்துக்குள்ளே சோதிப் ... Full story

கைகள் குவிக்கும்

கைகள் குவிக்கும்
கே. ரவி   கைகள் குவிக்கும் பாடல் - எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கைகள் குவிக்கும் போதெல்லாம் வடிவேல் - விழிக் கமலம் திறக்கும் போதெல்லாம் கதிர்வேல் நினைவுத் திரை விலகிப் புலனடங்கி ஒரு முனைப்பில் மனம் திளைக்கும் தவம் கூர்வேல் முளைத்த நிலவுப் புன்முறுவல் - ஆறு... Full story

எங்கெல்லாம் இராம நாமம்..

எங்கெல்லாம் இராம நாமம்..
எழுதியவர் : கே.ரவி   பாடியவர் : எஸ்.பி.பாலசுப்பிரமணியம் எங்கெல்லாம் ராம நாமம் அங்கெல்லாம் ஆஞ்ச நேயம் எங்கெல்லாம் ஆஞ்ச நேயம் அங்கெல்லாம் நாத யோகம் ஆஞ்ச நேயம் ஶ்ரீ ஆஞ்ச நேயம் நெஞ்செல்லாம் பக்தி பாவம் நித்ய ப்ரும்மச் சாரி ரூபம் அஞ்சனா தேவி பாலன் அன்பினால் ராம தூதன் ராம தூதன் ஶ்ரீ ராம தூதன் சஞ்சலம் என்று சொன்னால் சஞ்சீவி ... Full story

சாஹஸ மோஹினி நீ

சாஹஸ மோஹினி நீ
கே.ரவி     ========================================= பாடலைக் கேட்க: http://www.vallamai.com/wp-content/uploads/2014/06/Saahasa-Mohini_new2.mp3 =========================================   சாஹஸ மோஹினி நீ - என் மானஸ வீணையின் நாள நரம்புகள் ராகம் இசைத்திட ராஜஸம் பயில் சாஹஸ மோஹினி நீ காலையிலே செந்தாமரை நீ - பகல் வேளையிலே பொன்னோவியம் நீ - அந்தி மாலையிலே நீலோத்பலம் நீ - பின் இரவினிலே வரும் பேரமைதி சாஹஸ மோஹினி நீ... Full story

அமரத்வனி

அமரத்வனி
கே. ரவி   (35 ஆண்டுகளுக்கு முன் ஷோபனா எழுதி என் இசையமைப்பில் எங்கள் இனிய நண்பர் ராஜு என்ற திரு.கே.எஸ்.ராஜகோபால் பாடிய ஒரு பாடல் இது. 1980-களில் வெளியான 'அமரத்வனி' என்ற இசைப்பேழையில் உள்ளது. ராஜு ஒரு பெரிய வங்கியின் மேலாளராகப் பணியில் இருந்தார். திரைப்படங்களிலும் சில பாடல்கள் பாடியிருக்கிறார். இவர் பாடிய பாடல்களில், "கீரை அறுக்கையிலே கிழக்கு வெளுக்கையிலே" என்ற பாடல் மிகவும் பிரபலமானது. தமிழ்ச் செய்தி வாசிப்பாளர் சந்தியா ராஜகோபாலின் கணவர் இவர்.) பாடலைக் கேட்க: http://www.vallamai.com/wp-content/uploads/2014/05/04.Layame-Sivame.mp3   ஷோபனா ரவி ... Full story

பொன் மழையெனத் தா கவிதைகளே!

பொன் மழையெனத் தா கவிதைகளே!
கே. ரவி   (23-05-2014 வல்லமை இதழில் "வாணியைச் சரண்புகுந்தேன்" என்ற தலைப்பில் வெளியான இசைக்கவி ரமணனின் உள்ளத்தைக் கொள்ளைகொள்ளும் கவிதையும், சிந்தனையைத் தூண்டும் கட்டுரையும் அற்புதம். 1993-ல் என் இசையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இனிய குரலில் பாடி வெளிவந்த 'தெய்வ கானாம்ருதம்' இசைப்பேழையில் இடம்பெற்ற என் கலைமகள் கவிதையை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.) பூமலர்வது போலுயிரிடை நீமலர்வதனால் நீமலர்ந்ததும் மனமுழுவதும் தீவளர்வதனால் தீமலரென நானழைத்ததும் வாகலைமகளே தீச்சுடரிடை தேன்மழையெனத் ... Full story

வெடித்துப் பிறந்தவள்

வெடித்துப் பிறந்தவள்
  கே. ரவி எங்கும் பரவசம் எல்லாம் அதிசயம் தங்கும் வரையித் தரையே நிச்சயம் ஒவ்வோர் அடியாய்த் தாங்கிக் கொண்டு ஓலமெல் லாமுள் வாங்கிக் கொண்டு வெவ்வே றான மரஞ்செடி கொடிகள் விதவித மான காய்கனி வகைகள் வளர விரிந்து தன்மடி தந்து மெளன மேவடி வாக இருக்கும் பூமித் தாய்க்கிங் கீடிணை யுண்டோ காற்று வந்து புழுதி வாரித் தூற்றி ... Full story
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.