Archive for the ‘அறிவிப்புகள்’ Category

Page 1 of 212

ஆழ்ந்த இரங்கல்கள் ..

ஆழ்ந்த இரங்கல்கள் ..
அன்புச் சகோதரர், அருமை வெண்பா வித்தகர், ஆழ்ந்த மனப்பக்குவம் கொண்ட நம் கிரேசி மோகன் அவர்களின் அன்புத் தந்தையார் திரு ரங்காச்சாரி அவர்கள் இப்பூவுலகை விட்டு இறையடி நிழலை நாடிச் சென்றுள்ளார். அன்னார் இந்தியன் வங்கியில் முதன்மை மேலாளர் பொறுப்பில் எண்பதுகளில் பணி நிறைவு செய்தவர். அவர்தம் ஆன்மா சாந்தியடையவும்,  குடும்பத்தினர் அனைவரும் மன அமைதி பெறவும் உளமார பிரார்த்திக்கிறோம்.     ஆன்மனுக்குச் சாவில்லை சேதாரம் மேனிக்கேயென  ஆதாரத்துடன் அங்கம் ... Full story

பயிலரங்க அறிவிப்பு மடல்

பயிலரங்க அறிவிப்பு மடல்
  அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல்துறையில் உதவிப் பேராசிரியர்களுக்கான ஏழு நாள் பயிலரங்கம் நடைபெறவுள்ளது.  விருப்பம் உள்ள உதவிப்பேராசிரியர்கள் கலந்துகொள்ளலாம். Full story

வல்லமை அன்பர்கள் சந்திப்பு 2018

பவள சங்கரி   வல்லமை அன்பர்கள் சந்திப்பு, 14.10.2018 ஞாயிறு அன்று பிற்பகல் 3 மணி முதல் 5 மணிவரை சென்னை அண்ணாநகரில், கீழ்க்கண்ட முகவரியில் நடைபெற உள்ளது. White Room for Scientific Tamil Development Manavai Mustafa Scientific Tamil Foundation Trust AE 103, 6th Street, 10th Main Road Anna nagar West, Chennai – 600040 https://goo.gl/maps/8qNo5AEvEgN2 பொது அறிமுகத்திற்குப் பிறகு, செய்த, செய்ய வேண்டிய பணிகளைப் பற்றி ... Full story

வாழ்த்தி வரவேற்கிறோம்!

வாழ்த்தி வரவேற்கிறோம்!
பவள சங்கரி   நம் வல்லமை ஆசிரியர் குழுவில் இணைந்திருக்கும் முனைவர் பா. ஜெய்கணேஷ் அவர்களை வாழ்த்தி வரவேற்கிறோம். முனைவர் பா. ஜெய்கணேஷ் (பா.இளமாறன்) தற்போது காட்டங்குளத்தூர் எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் தமிழ்த்துறையில் துறைத்தலைவராகப் பணியாற்றி வருகின்றார். தமிழ் இலக்கணம், இலக்கியம், பதிப்பு தொடர்பான ஆய்வுகள் பல நிகழ்த்தி நூல்கள் பல வெளியிட்டுள்ளார். தமிழ் இலக்கண உரை வரலாறு : யாப்பியல் உரைகள் ... Full story

வாழ்த்தி வரவேற்கிறோம்!

வாழ்த்தி வரவேற்கிறோம்!
பவள சங்கரி   ஆசிரியர் குழுவில் இணைகிறார் - முனைவர் கல்பனா சேக்கிழார் கடந்த 12 ஆண்டுகளாக அண்ணாமலை பல்கலைக்கழகத் தமிழியல் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். தமிழ், கணினி, மொழியியல் ஆகியவற்றில் முதுகலை பட்டமும்  தமிழில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். இதுவரை ஆறு நூல்களும், 100 க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். 52 தொகுப்பு நூல்களைப் பதிப்பித்துள்ளார்.  பல்வேறு இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். பல்கலைக்கழக ... Full story

ஆசிரியர் குழுவில் இணையும் கவிஞர்!

ஆசிரியர் குழுவில் இணையும் கவிஞர்!
பவள சங்கரி   விவேக் பாரதி, "கல்லூரி பயிலும் இளம் மரபு கவிஞர்" துபாய் தமிழர் சங்கத்தின் மூலம் "வித்தக இளங்கவி" என்ற பட்டம் பெற்றவர். "மகாகவி ஈரோடு தமிழன்பன்" விருது பெற்றவர். "முதல் சிறகு" என்னும் கவிதைத் தொகுப்பின் ஆசிரியர். பாரதி மேலே தீராத பற்று கொண்ட இளைஞர். மரபுக் கவிதைகள் மேல் வளர்த்த காதலால் கவிதை பாடும் கவிஞர். ஆர்வமும் திறனும்: தமிழ் மற்றும் ... Full story

ஆய்வேடுகளின் மீதான திறனாய்வு

முனைவர் அண்ணாகண்ணன் தமிழில் முனைவர்ப் பட்ட ஆய்வேடுகளைச் சமர்ப்பித்த பிறகு, பொது வாய்மொழித் தேர்வுக்கு முன், அதனைப் பொதுவில் பார்வைக்கு வைப்பர். அதனைப் படித்து, அதன் மீது யாரும் கேள்வி எழுப்பலாம் என்பது எதிர்பார்ப்பு. ஆனால், நடைமுறையில் இவற்றைப் படிப்பாரும் இல்லை; ஆராய்வாரும் இல்லை. கேள்விகள் அனைத்தும் பொது வாய்மொழித் தேர்வு அரங்கில் ஆய்வாளர் பேசுவதை அல்லது தலைப்பை வைத்தே கேட்கப்படுகின்றன. சமர்ப்பிக்கப்பெறும் ஆய்வேடுகளின் மென்படி ஒன்றினை இணையத்தில் வைத்தால், அதனை உலகில் எங்கு உள்ளவரும் படித்துக் கருத்துக் கூறலாம். இதற்குக் கல்வி நிறுவனங்களும் பல்கலைக்கழக மானியக் குழுவும் முன்முயற்சி எடுக்க வேண்டும். அதற்கு முன்னதாக, ... Full story

பேரூர் சுவாமிகளின் ஆன்மா இறையடி நிழலில் …

பேரூர் சுவாமிகளின் ஆன்மா இறையடி நிழலில் ...
சைவமும் தமிழும் இரு கண்களென போற்றி தொண்டாற்றிய பெருந்தகை தவத்திரு பேரூர் சாந்தலிங்க இராமசாமி அடிகளார் ஐயா அவர்களுக்கு நம் இதய அஞ்சலியை பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம். ஆகச்சிறந்த சொற்பொழிவாளரும், ஆன்மீகவாதியும், பெரிய புராணத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட அடியாரின் ஆன்மா இறையடி நிழலில் சாந்தி பெற உளமாரப் பிரார்த்திக்கிறோம். Full story

ஆகச்சிறந்த ஆன்மாவிற்கு புகழஞ்சலி!

ஆகச்சிறந்த ஆன்மாவிற்கு புகழஞ்சலி!
முன்னாள் பிரதமர், உயர்திரு அதல் பிகாரி வாஜ்பாயி, தமது 93ஆம் அகவையில், இன்று (16/8/2018) மாலை 5 மணிக்கு இயற்கை எய்தினார். தேசிய சனநாயகக் கூட்டணி அரசின் பிரதமராக, 1999 முதல் 2004 வரை கடமையாற்றிய காலத்தில், இந்தியா சந்தித்த பல சோதனைகளை மிகத் திறம்பட நிர்வகித்த பெருமைக்குரிய ஒப்பற்ற அரசியல்வாதி. இவற்றுள் பொக்ரான்-2 அணு பரிசோதனை, பாக்கித்தானுடனான கார்கில் யுத்த வெற்றி, போன்றவை குறிப்பிடத் தக்கவை ! ஆகச்சிறந்த ... Full story

வல்லமை ஆசிரியர் குழுவில் இணைகிறார்கள்!

வல்லமை ஆசிரியர் குழுவில் இணைகிறார்கள்!
வல்லமை நிர்வாகக்குழு - 2018 ஒன்பதாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நம் வல்லமை இணைய இதழின் ஆசிரியர் குழுவில் இன்று புதிதாக பொறுப்பேற்கும், தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக, மொழிபெயர்ப்புத்துறை உதவிப் பேராசிரியர் முனைவர். விஜயராஜேஸ்வரி அவர்களை மகிழ்வுடன் வரவேற்கிறோம். தமிழ் மலையாள மின் அகராதி உருவாக்கம், கணினி மொழியியல், இயந்திர மொழிபெயர்ப்பு – இந்திய மொழிகளுக்கிடையேயான இயந்திர மொழிபெயர்ப்புத்திட்டம் (IL- ILMT Project, Govt.of India ) , மொழியியல் துறை, தமிழ்ப்பல்கலைக்கழகம், பேரா. முனைவர். ச.இராசேந்திரன். 2. ... Full story

இறையடியில் இளைப்பாறும் மூத்த பத்திரிகையாளர் ஞாநி

இறையடியில் இளைப்பாறும் மூத்த பத்திரிகையாளர் ஞாநி
பவள சங்கரி சுயநலத்திற்காக சமரசம் செய்து கொள்ளாத பத்திரிகையாளர், தெளிவான கொள்கையும், துன்பத்தைக்கண்டு துவளாது, உடல் நலிவுற்ற நிலையிலும் இறுதிவரை சமூகச்சிந்தையுடன் தனக்கு நியாயம் என்று பட்டதை துணிந்து பேசி, எழுத்தில் வடித்தும், இறப்பிற்குப் பின்பும் தமது உடலையே தானமாகக் கொடுத்துச்சென்றுள்ள, மூத்த பத்திரிகையாளர் ஞாநி அவர்களின் ஆன்மா சாந்தியடையவும் அவர்தம் குடும்பத்தினர் மனம் அமைதி பெறவும் எல்லாம் வல்ல எம் இறையைப் பிரார்த்திக்கிறோம். வல்லமை ... Full story

பாரதி யார்? – “பாரதி திருவிழா; தேசபக்திப் பெருவிழா”

பாரதி யார்? -
கே.ரவி நிறுவனர் வானவில் பண்பாட்டு மையம் Invitation (அழைப்பிதழை முழுமையாகக் காண) அவன் ஒரு அதிசயம் அவன் ஒரு அதிசயம் அவன் ஒரு அவசியம் அவன் ஒரு அவதாரம்... Full story

திருக்குறளுக்கு சர்வதேச அங்கீகாரம்!

திருக்குறளுக்கு  சர்வதேச அங்கீகாரம்!
                   திருக்குறளுக்கு  சர்வதேச அங்கீகாரம்           இங்கிலாந்து நாட்டில் அனைத்துலகத் திருக்குறள் மாநாடு     இங்கிலாந்து நாட்டின்  லிவர்பூல்  பகுதியில் அமைந்துள்ள  சர்வதேசப் புகழ் பெற்ற ஹோப் பல்கலைக்கழகத்தில் அடுத்த ஆண்டு (2018) ஜூன்  மாதம் 27,28,29 ஆகிய நாட்களில் இரண்டாவது அனைத்துலகத் திருக்குறள் மாநாடு நடைபெறவுள்ளது.    நாகர்கோவிலில் கடந்த மே-மாதத்தில் நடைபெற்ற முதல் அனைத்துலகத் திருக்குறள் மாநாட்டின் தொடர்ச்சியாக இரண்டாவது மாநாடு லிவர்பூலில்  ... Full story

வாழ்த்தி வரவேற்போம்!

வாழ்த்தி வரவேற்போம்!
பவள சங்கரி குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள மேதகு ராம்நாத் கோவிந்த் அவர்களை வாழ்த்தி வரவேற்போம்! எளிமைக்கும், தியாகத்திற்கும் அடையாளமாக விளங்கிய டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் , சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், டாக்டர் சங்கர்தயாள் சர்மா போன்றவர்கள் குடியரசுத் தலைவர்களாக இருந்து நாட்டிற்கு தன்னலமிலாத் தொண்டளித்ததைப்போன்று கட்சிப்பாகுபாடின்றி, நம் இந்திய நாட்டிற்குரிய உயரிய மரபைக்காத்து மக்களுக்காகவே தாம் என்று பணியாற்ற நமது உளமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வோம். பதவியில் ... Full story

வல்லமையாளர் விருது பொறுப்பேற்கும், ‘பேலியோ டயட்’ புகழ் பேரா. செல்வன்

வல்லமையாளர் விருது பொறுப்பேற்கும், ‘பேலியோ டயட்’ புகழ் பேரா. செல்வன்
பவள சங்கரி அன்பினிய நண்பர்களுக்கு, வணக்கம். கடந்த 220 வாரங்களாக வல்லமையாளர் தேர்வை மிகச் சிறந்த முறையில் நடத்தியுள்ள நம் வல்லமை ஆலோசனைக் குழு உறுப்பினர் திரு.திவாகர்,  முனைவர் தேமொழி, உயர்திரு செ.இரா. செல்வக்குமார் அவர்களையும் மனமார வாழ்த்தி, அடுத்து வல்லமை ஆசிரியர் குழு உறுப்பினர் பேரா. செல்வன் அவர்களை இப்பொறுப்பை ஏற்று நடத்த மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். மேலும் இப்பணியில் உதவிய திரு. இன்னம்பூரான், பேராசிரியர் நாகராசன் அவர்களையும் பாராட்டி மகிழ்கிறோம். இதுவரை 220 வல்லமையாளர்களை நாம் பாராட்டி மகிழ்ந்திருக்கிறோம். மேலும் பல வல்லமையாளர்களை திருமிகு ... Full story
Page 1 of 212
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.