Archive for the ‘அறிந்துகொள்வோம்’ Category

Page 1 of 212

அறிந்துகொள்வோம் – 25 (’மனோன்மணீயம்’ பெ. சுந்தரம் பிள்ளை)

அறிந்துகொள்வோம் - 25 (’மனோன்மணீயம்’ பெ. சுந்தரம் பிள்ளை)
-மேகலா இராமமூர்த்தி சுந்தரத் தமிழால் சிந்தை கவர்ந்தவர்! ’தமிழுக்கும் அமுதென்று பேர்’ என்றார் பாவேந்தர். அந்த அமுதத்தமிழின் சுவையினை முக்கனிகள்போல் மூன்றாய் வகைப்படுத்தினர் நம் முன்னோர். அவை முறையே இயல், இசை, கூத்து எனும் நாடகம் ஆகியவை. ஓசை நயத்தோடு கூடிய பாக்களாகவும், செய்யுளாகவும் பரிமளித்த தமிழ், பின்பு மெல்ல மெல்ல உரைநடையையும் (இயற்றமிழ்) தனக்குள் உள்வாங்கிக்கொண்டது. செய்யுளின் இடையிடையே உரைநடையும் விரவிவரும் பாங்கை ’உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்’ எனும் பெயரான் அழைத்தனர் தண்டமிழ்ப் புலவோர். தமிழின் மற்றொரு பிரிவான நாடகம், உரையும் ... Full story

அறிந்துகொள்வோம் -24 (காப்பியக் கவிஞர் ஹோமர்)

அறிந்துகொள்வோம் -24 (காப்பியக் கவிஞர் ஹோமர்)
-மேகலா இராமமூர்த்தி காலத்தை வென்ற கவின்மிகு காவியங்கள்! மேற்குலகில் கலை, இலக்கியம், நாகரிகம், பண்பாடு, தத்துவம் போன்ற துறைகளின் தாயகமாய்த் திகழ்ந்தவை கிரேக்கமும் உரோமாபுரியும். புராணங்கள் எனப்படும் தொன்மங்களுக்கு இவ்விருநாட்டுக் கதைகளிலும் பெரும்பங்குண்டு. இப்புராணக் கதைகளையே ’இதிகாசங்கள்’ எனும் பெயரால் நாம் இந்தியாவில் அழைக்கின்றோம். நம்மண்ணின் இதிகாசங்களாய்க் கருதப்படும் இராமாயணம், மகாபாரதம் முதலியவற்றிற்கு இணையானவை கிரேக்கத்தின் ஆதிகாவியங்களான இலியடும், ஒடிசியும் (Iliad & Odyssey). இந்த அமர காவியங்களைத் தீட்டிய பெருமைக்குரியவர், ’காவியங்களின் தந்தை’ என்று புகழப்படும் ஹோமர். இவருடைய காலம், கிறித்துவிற்குக் ... Full story

அறிந்துகொள்வோம் – 23 (மாகவி மில்டன்)

அறிந்துகொள்வோம் - 23 (மாகவி மில்டன்)
-மேகலா இராமமூர்த்தி வையம் போற்றும் வரகவி! “அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது; மானிடராய்ப் பிறந்த காலையின் ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது” என்றார் தமிழ்மூதாட்டி அவ்வை. ஞானமும் கல்வியும் வாய்த்த மானிடனே சிறந்த படைப்பாளனாய்ப் பரிணமிக்கின்றான். சிறுமை கண்டு பொங்குகின்றான்; கண்மூடிப் பழக்கமெல்லாம மண்மூடிப் போக வேட்கை கொள்கின்றான். தன் வேட்கையை வெளிப்படுத்த அவன் தேர்ந்தெடுக்கும் சாதனமே மொழி. மொழியின் வடிவங்கள் பல. அவற்றில் முதன்முதலில் மனிதன் பயன்படுத்தியது பாடல் எனப்படும் கவிதை வடிவமே. ஏனெனில் சுருங்கச் ... Full story

அறிந்துகொள்வோம் – 22 (சிந்தனையாளர் ரூசோ)

அறிந்துகொள்வோம் - 22 (சிந்தனையாளர் ரூசோ)
-மேகலா இராமமூர்த்தி இருபுரட்சிகளுக்கு வித்திட்ட ஒருவர்! சமூகம் என்ற மக்கள்தொகுதியின் சிந்தனையானது காலந்தோறும் சிறிதளவேனும் மாறிக்கொண்டுதான் இருக்கின்றது. ’பழையன கழிதலும் புதியன புகுதலும்’ காலவோட்டத்தில் இயல்பானதே. ஆனால் இம்மாற்றங்கள் நல்லனவாகவும், மக்களுக்கு நன்மை பயப்பனவாகவும் இருப்பின் வரவேற்கத்தக்கவையே. இவை மெல்லவும் நிகழலாம்; புரட்சியெனும் மக்களெழுச்சி மூலம் ஒல்லையாகவும் நடந்தேறலாம். சமூக மறுமலர்ச்சிக்குக் காரணமாயிருக்கும் இத்தகைய புரட்சிகள் பூக்கவேண்டுமாயின் அதற்கான உந்துவிசையாக யாரேனும் அல்லது எவையேனும் இருத்தல் அவசியம். அவ்வகையில் தம் எழுத்துக்கள் மூலம் ஒரு புரட்சிக்கு…இல்லையில்லை இருபுரட்சிகளுக்கு வித்திட்டார் ஓர் சிந்தனையாளர். அவர்தான் சுவிட்சர்லாந்திலுள்ள ஜெனிவாவில் (Geneva) ... Full story

செவ்வாயில் நீரோட்டம்!

செவ்வாயில் நீரோட்டம்!
ஒரு அரிசோனன் செவ்வாய்-ஆய்வு விண்கலம் அனுப்பி, நாசா, ஜே.பி.எல், யுனிவர்சிட்டி ஆஃப் அரிசோனா இணைந்து அசோசியேடட் பிரஸ் மூலமாக வெளியிடப்பட்ட, தேதி குறிப்பிடப்படாத புகைப்படத்தில் காணப்பட்ட கருமையான கோடுகள் உவர்நீர் ஓட்டத்தினால் ஏற்பட்ட தடங்களே என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். பதினான்கு கோடிமைல்கள் தொலைவிலுள்ள செவ்வாய்க்கோளின் கடுங்குளிரால் உறைந்துபோன தரையில் இப்பொழுது தண்ணீர் நிறைகிறது.  அந்த கிரகத்தில் உவர்நீர் ஓடுவதற்கான வலுவான சான்று இருக்கிறது என்று விஞ்ஞானிகள் அறிவித்திருக்கிறார்கள். செவ்வாயில் உயிரினங்கள் ... Full story

அறிந்துகொள்வோம் -21 (பரிதிமாற் கலைஞர்)

அறிந்துகொள்வோம் -21 (பரிதிமாற் கலைஞர்)
-மேகலா இராமமூர்த்தி தமிழ்வானில் ஒளிரும் எழிற்பரிதி! தொன்று நிகழ்ந்ததனைத்தும் உணர்ந்திடும் சூழ்கலைவாணரும் இவள் என்று பிறந்தவள் என்று உணரமுடியாத தொன்மையுடையவள் நம் தமிழன்னை. நெஞ்சையள்ளும் சிலம்பும், மனங்கவரும் மேகலையும், சிந்தை மயக்கும் சிந்தாமணியும் அன்னையவள் எழிலைக் கூட்டின. தேவாரமும் திருவாசகமும் திருவாய்மொழியும், இன்னபிற பனுவல்களும் பக்திமணம் பரப்பி அவளைப் பரவசமாக்கின. ஆனால் காலப்போக்கில் நம்மனோர் தாய்த்தமிழின் சிறப்பை மறந்து வடமொழிபால் அதிகவேட்கை கொள்வாராயினர். வடமொழியும் தமிழும் கலந்து எழுதுவது மணியும் முத்தும் கலந்ததுபோல் அதிக அழகுடைத்து என்றெண்ணியவராய், ’மணிப்பவள ... Full story

அறிந்துகொள்வோம் – 20 (தமிழ்த்தென்றல் திரு.வி.க.)

அறிந்துகொள்வோம் - 20 (தமிழ்த்தென்றல் திரு.வி.க.)
-மேகலா இராமமூர்த்தி தமிழ்மணம் பரப்பிய குளிர்தென்றல்! வெள்ளையர் ஆட்சியில் தாழ்வுற்று வறுமைமிஞ்சி விடுதலை தவறிக்கெட்டுப் பாழ்பட்டு நின்றது நம் பாரதம். அத்தருணத்தில் மண்விடுதலை பெறுவதற்காகக் கண்ணுறக்கமின்றி உழைத்த உத்தமர்தாம் எத்தனை பேர்! அத்தகையோரில் நாட்டுவிடுதலைக்கு மட்டுமல்லாது, தொழிலாளர் முன்னேற்றம், பெண்கல்வி, பெண்கள் முன்னேற்றம், சமூகச் சீர்திருத்தம், மொழி வளர்ச்சி, சமய நெறி எனப் பல்துறைகளிலும் பார்வையைச் செலுத்திச் சாதனை படைத்தோர் வெகுசிலரே ஆவர். அத்தகு அரிதான மனிதர்களில் ஒருவர்தாம் திருவாரூர் விருத்தாசலக் கலியாணசுந்தரனார் என்ற பெயருடைய திரு.வி.க. அத்தமிழ்மகனாரைப் பற்றிச் சிறிது சிந்திப்போம்!... Full story

அறிந்துகொள்வோம் – 19 (மாமன்னர் அசோகர்)

அறிந்துகொள்வோம் - 19 (மாமன்னர் அசோகர்)
-மேகலா இராமமூர்த்தி யுத்தத்தில் மலர்ந்த புத்தம்! நம் இந்தியத் துணைக்கண்டத்தின் வலிமைவாய்ந்த பேரரசாக முதன்முதலில் திகழ்ந்தது மௌரியப் பேரரசே ஆகும். கங்கைச் சமவெளியில், இன்றைய பீகார், வங்காளம் ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய அன்றைய மகத நாட்டில் முகிழ்த்த இப்பேரரசு தோற்றம்பெறுவதற்குப் பெரிதும் காரணமாயிருந்தவர் அரசியல் தந்திரங்களில் வல்லவரான சாணக்கியர் (கௌடில்யர் என்றும் கூறுவர்) ஆவார். மௌரியர்களுக்கு முன்பு மகதத்தை ஆண்டுவந்த நந்தவம்சத்தின் அரசனான தனநந்தனுக்கும் அவனுடைய அமைச்சராயிருந்த சாணக்கியருக்கும் ஏற்பட்ட முரண்பாட்டினால், நந்த வம்சத்தையே கருவறுக்க முடிவுசெய்தார் சாணக்கியர்.... Full story

அறிந்துகொள்வோம் – 18 (சிக்மண்ட் ஃபிராய்டு)

அறிந்துகொள்வோம் - 18 (சிக்மண்ட் ஃபிராய்டு)
-மேகலா இராமமூர்த்தி மானுட உளவியலுக்குப் புத்தொளி பாய்ச்சியவர் ’கனவு காணுங்கள்!’ என்று இளைஞர்களை அறிவுறுத்தினார் மேனாள் குடியரசுத் தலைவரும், சிறந்த அணுவிஞ்ஞானியுமான அமரர் அப்துல் கலாம். அவர் குறிப்பிட்டது பஞ்சணையில் படுத்தபடிக் காண்கின்ற பயனற்ற பகற்கனவுகளை அல்ல! வாழ்வில் வெற்றிபெறத் தேவையான ஊக்கத்தையும் உற்சாகத்தையும் தரவல்ல இலட்சியக் கனவுகளை! உறக்கத்தின் முக்கிய அங்கமான கனவுகளும், அதில் தோன்றுகின்ற காட்சிகளும் அவற்றின் தன்மைகளைப் பொறுத்துப் பல்வேறு உணர்ச்சிகளை மனிதருக்குள் விதைக்கவல்லவை. எதிர்காலத்தைக் கண்டறியும் ஓர் ... Full story

அறிந்துகொள்வோம் – 17 (இராபர்ட் கால்டுவெல்)

அறிந்துகொள்வோம் - 17 (இராபர்ட் கால்டுவெல்)
-மேகலா இராமமூர்த்தி தமிழின் பெருமையைத் தரணிக்கு உணர்த்தியவர் நம் அன்னை பூமியாம் பாரதம் பல்வேறு மொழிகளைப் பேசுகின்ற மக்களைத் தன்னகத்தே கொண்டது. வேற்றுமைகளுக்கிடையே காணக்கிடைக்கின்ற இந்த ஒற்றுமைப் பண்பே அதன் சிறப்பாகும் என்பது அறிஞர்கள் துணிபு. மகாகவி பாரதியும், ‘செப்புமொழி பதினெட்டுடையாள் எனில் சிந்தனை ஒன்றுடையாள்’ என இந்தியத்தாயின் இயல்பை விதந்தோதியிருக்கின்றார். எனினும், எல்லா மொழிகளுக்கும் ஒரே மாதிரியான மதிப்பும் செல்வாக்கும் மக்களிடத்து நிலவுகின்றதா என்று சிந்தித்துப் பார்த்தால் ’இல்லை’ என்ற விடையை எளிதில் ... Full story

அறிந்துகொள்வோம் – 16 (ஹைப்பாட்டியா (Hypatia))

அறிந்துகொள்வோம் - 16 (ஹைப்பாட்டியா (Hypatia))
-மேகலா இராமமூர்த்தி மதவெறியால் மாய்ந்த மாதரசி! புவியையே புரட்டிப்போட்ட புரட்சியாளர், தத்துவத்துறையில் முத்திரை பதித்த வித்தகர், பல்கேள்வித் துறைபோகிய நல்லறிஞர் என்றெல்லாம் போற்றப்படுவோர் யார் என்று ஆராய்ந்தால் அவர்களில் அநேகர் ஆண்களாகவே இருந்துவிடக் காண்கிறோம். இவற்றைக் காண்கையில், ஏன்…பெண்களில் சீரிய சிந்தனை வாய்க்கப்பெற்றோர், அறிவுத்தளத்தில் ஆற்றலோடு இயங்கக்கூடியோர் யாருமே இல்லையா? என்றொரு ஏக்கம் நம் மனத்தின் ஓரம் மெலிதாய் எட்டிப்பார்க்கின்றது. அந்த ஏக்கத்தைப் போக்கிப் பெண்ணினத்தைப் பூரிக்கச்செய்யும் பெயர்தான் ’ஹைப்பாட்டியா’ (Hypatia). ஆம்! பேரறிவோடும், பெரும் புலமையோடும்,  தன் ... Full story

அறிந்துகொள்வோம் – 15 (சர்வபள்ளி இராதாகிருஷ்ணன்)

அறிந்துகொள்வோம் - 15 (சர்வபள்ளி இராதாகிருஷ்ணன்)
-மேகலா இராமமூர்த்தி வல்லமை வாசகர்கள் அனைவருக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்!   நானிலம் போற்றும் நல்லாசிரியர்! மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையில் அன்னை தந்தைக்கு அடுத்த உயரிய இடம் வழங்கப்படுவது குரு என்று போற்றப்படும் ஆசிரியர்களுக்கே. ‘ஆசு’ எனப்படும் அறியாமைக் குற்றந்தன்னை மாணாக்கர் மனத்தினின்று இரியச் (விலக) செய்பவரே ’ஆசிரியர்’ ஆவார். கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர் என்பார் தெய்வப் புலவர். எனவே கல்வியெனும் ... Full story

அறிந்துகொள்வோம் -14 (கார்ல் மார்க்ஸ்)

அறிந்துகொள்வோம் -14 (கார்ல் மார்க்ஸ்)
-மேகலா இராமமூர்த்தி பாட்டாளி வர்க்கத்தின் பிதாமகன்! பரந்துவிரிந்த இப்பூவுலகில் வாழும் மாந்தர்கள் பலகோடி; அவர்களில், அல்லற்பட்டு ஆற்றாது அழுதுநிற்கும் மக்களின் எண்ணிக்கைக்கும் குறைவில்லை. ஆனால் அவர்களின் துயர்துடைக்க, அவர்தம் வாழ்வில் ஒளிதுலங்கக் கரம் நீட்டுவோர், வழிகாட்டுவோர் எத்தனை பேருளர் என்று ஆராய்ந்துபார்த்தால் ’வெகு சிலரே’ கிட்டுவர். அத்தகைய வெகுசிலரில் ஒருவராய், தொழிலாளர்களின் தோழராய், பாட்டாளிகளின் கூட்டாளியாய்த் திகழ்ந்தவர்தான் வரலாற்று நாயகர் காரல் மார்க்ஸ்! ஜெர்மனியின் ரைன்லாந்தில் ... Full story

அறிந்துகொள்வோம்!

அறிந்துகொள்வோம்!
-மேகலா இராமமூர்த்தி உட்டோபியாவில் ஓர் உலா! உலகமக்கள் அனைவருக்கும் தற்போது பரவலாகப் பரிச்சயமாகிவிட்ட ’தத்துவம்’ எனும் துறையை மேற்குலகுக்கு முதன்முதலில் அறிமுகப்படுத்தியது கிரேக்கமே (Greece) ஆகும். இத்துறையைக் குறிப்பிட ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படும் Philosophy என்ற சொல்லானது Philo + Sophy என்ற இருசொற்களின் இணைப்பாகும். ’Philo’ என்பது காதலையும், ’Sophy’ என்பது அறிவையும் குறிக்கும் கிரேக்கச் சொற்கள். ஆதலால், ’அறிவின் மீது கொள்ளும் அளவற்ற காதலே' (Love of Wisdom) தத்துவமாகும் என்பது தெற்றெனப் புலப்படுகின்றது. இவ்வாறு அறிவுத்தேட்டத்தோடு ... Full story

அறிந்துகொள்வோம்!

அறிந்துகொள்வோம்!
-மேகலா இராமமூர்த்தி தமிழன்னையின் தவப்புதல்வர்! நம் தாய்த்திருநாடாம் இந்தியா சுதந்திரக்காற்றைச் சுவாசிக்கத் தொடங்கி நாளையோடு (2015 ஆகஸ்ட் 15-ஆம் நாளோடு) 68 ஆண்டுகள் நிறைவுற்றுவிட்டன. இவ்வேளையில், சுதந்திரப் பயிரைத் தண்ணீர்விட்டு வளர்க்காமல் தம் கண்ணீரால் காத்த விடுதலைவீரர்கள் அனைவரையும் நன்றியோடு நினைவுகூர்ந்து போற்றுதல் நம் கடன்! இந்தியா எங்கிலுமே அன்று கொழுந்துவிட்டு எரிந்த விடுதலை வேள்வியில் நம் தமிழகத்து தீரர்களும் திரளாகப் பங்குகொண்டு தம் இன்னுயிரைத் துச்சமென மதித்து அவ் வேள்வித்தீக்கு நெய்வார்த்தனர். தம் எழுத்துக்களாலும் ... Full story
Page 1 of 212
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.