Archive for the ‘மரபுக் கவிதைகள்’ Category

Page 1 of 1112345...10...Last »

இதோ, நம் வேட்பாளர்!

இதோ, நம் வேட்பாளர்!
மகாதேவ ஐயர் ஜெயராம சர்மா, மெல்பேண் , ஆஸ்திரேலியா தேர்தல்தேர்தல் தேர்தலென்று தெருவெல்லாம் திரிகிறார் ஆளைஆளை அணைத்துபடி அன்புமுத்தம் பொழிகிறார் நாளைவரும் நாளையெண்ணி நல்லகனவு காண்கிறார் நல்லதெதுவும் செய்துவிட நாளுமவர் நினைத்திடார்  ! மாலை மரியாதையெல்லாம் வாங்கிவிடத் துடிக்கிறார் மக்கள்வாக்கை பெற்றுவிட மனதில்திட்டம்  தீட்டுறார் வேலைபெற்றுத் தருவதாக போலிவாக்கை விதைக்கிறார் வாழவெண்ணும் மக்கள்பற்றி மனதிலெண்ண மறுக்கிறார்  ! ஆட்சிக்கதிரை ஏறிவிட அவர்மனது துடிக்குது அல்லல்படும் மனதுபற்றி அவர்நினைக்க மறுக்கிறார் அதிகசொத்து பதவியாசை அவரைசூழ்ந்து நிற்குது அவரின்காசை அனுபவித்தார் அவர்க்குத்துதி பாடுறார் ! அறத்தைப்பற்றி நினைத்திடார் அக்கறையை விரும்பிடார் இருக்கும்வரை அரசியலால் எடுத்துச்சுருட்ட நினைக்கிறார் வாக்களிக்கும் மக்கள்தம்மை போக்குக்காட்டி ஏய்க்கிறார் வாக்குக்கொண்டு போகுமாறு வாக்களிப்போம் வாருங்கள் ! படத்துக்கு நன்றி: http://www.mowval.in Full story

துணை அவள்!

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா (மெல்பேண், ஆஸ்திரேலியா) பெண்புத்தி தனைக்கேட்டால் பின்விளைவு நன்றாகும்! நன்புத்தி நவில்பவளே நம்முடைய தாயன்றோ! துன்மதிகள் தானகல துணிச்சலுடன் நின்றிடுவாள்! துயர்துடைக்கும் கரமாக, துணையாக அவளிருப்பாள்! Full story

பெண்மை போற்றிடு….!

கிரேசி மோகன் வேலை இருக்குது நிரம்ப -என்னை வேகப் படுத்திடு தாயே    - பாலைச் சுரந்திடு தளும்ப - உந்தன் பாதம் பணிந்திடும் சேய்நான் ஆலை கரும்பெனெப் பிழிந்து - எந்தன் ஆவி பிரிந்திடும் முன்னே சோலை நகைச்சுவைக் காற்றை - இவன் நாளும் நுகர்ந்திட அருள்வாய்...! கண்ணை இமைகாக்கும், தென்னை குலம்காக்கும் அன்னை நமைகாக்கும் அற்புதம் -விண்ணை இறங்கவைத்து மண்ணில் இருத்திய தாயின் பிறந்தநாள் இன்றவளைப் போற்று....! உன்னையே நம்பி உனதா யுதமாக அன்னையே வாழ அருள்புரி -முன்னை இருந்த நிலையில் பொருந்தி இருக்க திரும்ப மனதைத் திருத்து....! பொய்தந்த போதுமதை, மெய்த்தவமாய் மாற்றியிரு, கைதந்து காத்துக் கரைசேர்க்கும், -சைதன்ய சக்தியே, அன்னையே, சச்சிதா னந்தத்தின், சித்திநாளில், நீக்கென் சழுக்கு ... Full story

உலகம் அளந்து பார்க்காத ஆழம், பெண்மை!

-விவேக்பாரதி பெண்மை என்பதோர் ஆயுதம் - நம் பெருமை அளந்திடும் சீதனம் பெண்மை என்பதோர் பூவனம் - அது பேண வேண்டிய தோர்வளம்! பெண்மை காப்பதே நம்கடன் - அப் பேறு வாய்ப்பதே தெய்வதம் பெண்மை வாழ்கெனப் பாடுவோம் - எந்தப் பெண்ணைக் கண்டாலும் போற்றுவோம்! ஆணின் பலமெலாம் ஊனிடம் - பெரும் ஆன்ம பலமெலாம் பெண்ணிடம் காண வேண்டிய கீர்த்திகள் - நம் காரி கைவசம் பூர்த்திகள் பேணும் நல்லறம் பெண்ணிடம் - பல போரும் அமைதியும் பெண்ணிடம் தூணைப் போலதைக் காத்துதான் - எதிர் தோன்றும் போதெலாம் வாழ்த்துவோம்! வானின் மாமழை தாய்க்குணம் - அலை வண்ணக் கடலும் காதல்மனம் சேனை ஆயிரம் ரௌத்திரம் - பல செழுமை பெண்கொளும் பூரணம்! ஞானம் அவர்சொலும் ... Full story

தமிழாட்டாரே

- ஏறன் சிவா அறிவென நினைத்துக் கொண்டு         ஆங்கிலப் பள்ளி நூறு தெருவெலாம் திறந்து வைத்தோம்!          தென்மொழியை மறந்தோம்! பெருமையாய் அதனை எண்ணிப்          பேதமைக் கடல் குளித்தோம்! சிறையினில் மாட்டிக் கொண்டோம்!           செந்தமிழ் நாடிழந்தோம்! அருந்தமிழ் வேண்டா மென்று           அயலாரின் சூழ்ச்சி தன்னில் அறிவினை இழந்து விட்டோம்!         ... Full story

காலை நடை

-விவேக்பாரதி நடக்க நடக்க நீண்டிடும் சாலை நடுவில் எத்தனை நிறுத்தங்கள்! நாடிய சிலவும் வேண்டிய சிலவும் நகர்ந்து போகும் வழக்கங்கள்! வெடித்த சாலை வெண்ணீர்ப் பாலை வேகக் காற்றும் இடையிடையே மெலிந்த தென்றல் சோலைக் காட்சி மெதுவாய்ப் படரும் வழிவழியே! பூவின் வாசம் ஓரிடத் தில்நான் புயல்வ சத்தில் ஓரிடத்தில் புன்னகை மட்டும் மாறா மல்நான் புரியும் நடைதான் யாரிடத்தில்? தாவும் குரங்காய் மனமும் செல்லத் தண்ணீர் தேடும் நிமிடங்கள் தடித்துப் புடைக்க உண்டக ளைப்பில் தடுமா றுகிற பயணங்கள்! முதுகு வளைய மூட்டை தூக்கி முறுவ லிப்பதும் நானேதான் முடியா தெனவென் மனத்துச் சுமையால் முனகி நிற்பதும் நானேதான் அதுவாய் வந்தோர் தனிவே தாளம் அழுத்திக் கட்டிப் பிடிக்கிறது ஆயிரம் கதைகள் கேட்டுக் கேட்டே அழுகைக் கவிதை கொடுக்கிறது!! 11.02.2019 Full story

தோழா கேள்

- ஏறன் சிவா எதிர்பார்த்த உன்வெற்றி இடம்மாறிப் போகலாம்! புதிதாகத் தோல்விகளும் போர்த்தொடுத்து நிற்கலாம்! சதியெல்லாம் உனக்கெதிராய் சாட்டையைச் சுழற்றலாம்! சிதறாதே! சிதையாதே! சிறகுண்டு பறந்துபோ! நெஞ்சத்தில் உதிப்பதெல்லாம் நேராமல் தவறலாம்! பஞ்சுபோன்ற உன்னிதயம் பாரத்தைச் சுமக்கலாம்! நஞ்சுணவை அமிழ்தமென்று நம்பினோரே ஊட்டலாம்! அஞ்சாதே! துஞ்சாதே! அத்தனையும் கடந்துபோ! நாளெல்லாம் உன்நிலையோ நலிந்துகொண்டே இருக்கலாம்! மாளாத துயரத்தில் மனம்சிக்கித் தவிக்கலாம்! தாளாத உன்மேனி தளர்ந்தொருநாள் முடங்கலாம்! வீழாதே! தோழா..கேள் விடிவுவரும் தொடந்துபோ! -06/02/2019 Full story

காலம்

-ஏறன் சிவா ஓடும் காலம் ஒருநாளும் உனக்காய் மட்டும் நிற்காது! தேடித் துன்பம் வரும்முன்னே தீர்த்துக் கட்ட முடியாது! கூடி நேரம் வருமென்று காலம் கடத்தல் கூடாது! ஓடி நாளும் தேயாமல் உண்மை வழியில் போராடு! Full story

பசியின் வலி

- ஏறன் சிவா பசிக்குப் படையல் படைத்திங்குப்        பண்பைக் காத்தார் நம்முன்னோர் புசிக்கும் சோறும் பொய்யாகப்        புவியில் மாறிப் போனதன்றோ? பசுவும் நெகிழிப் பை..தின்னல்        பார்க்க நெஞ்சம் பதைக்கிறதே! இசையும் மனமும் இருக்கிறதே       இனியும் பொறுக்க மறுக்கிறதே! 02/04/2018 Full story

அரசியல் அம்மானை – 1

அரசியல் அம்மானை - 1
-வெ.விஜய் மூன்று அரசியல்வாதிகள் பேசுகிறார்கள் ------------------------------------------------------------------- நாட்டினை ஆள்கின்ற நாம்தானே எப்போதும் ஓட்டுக்குப் பணம்தந்(து) உயர்வானோம் அம்மானை! ஓட்டுக்குப் பணம்தந்(து) உயர்வானோம் யாமாகில் வீடில்லா மக்களெல்லாம் வெம்புவரே அம்மானை? வீதியிலே அவர்கிடந்து வேகட்டும் அம்மானை(1) சாலையெல்லாம் பழுதாகச் சாக்கடையே நீராக வேலையேதும் நடத்தாமல் வீற்றிருந்தோம் அம்மானை! வேலையேதும் நடத்தாமல் வீற்றிருந்தோம் யாமாகில் காலினைப் பிடித்தவர்கள் கத்துவரோ அம்மானை? கடைசிவரை அவரெல்லாம் கருவாடே அம்மானை!(2) பயணச் சீட்டுகளில் பாதிவிலை ஏற்றிவிட்(டு) அயர்ந்து தூங்கிடுவோம் அப்பொழுதே அம்மானை அயர்ந்து தூங்குவ(து) அப்பொழுதே யாமாகில் துயரம் பிடித்தவர்கள் தொல்லையராய் அம்மானை? துப்பாக்கிக் கொண்டவரைத் துளைத்தெடுப்போம் அம்மானை(3) கையூட்டு வாங்கியே காலத்தை ஓட்டினோம்!நாம் பொய்களைப் பேசாத பொழுதில்லை ... Full story

வேண்டுவன

வேண்டுவன
-கவிஞர் ஏறன் சிவா  நூல்பல கற்க வேண்டும் நுண்மைகள் அறிய வேண்டும் தோள்களில் வலிமை வேண்டும் தொய்விலா நிலையும் வேண்டும் சூழ்ச்சிகள் உணர வேண்டும் சுடர்மிகு அறிவு வேண்டும் வேல்விளை யாட்டும் வேண்டும் வெற்றியின் நட்பு வேண்டும்! கூரிய பார்வை வேண்டும் கொள்கையில் தெளிவு வேண்டும் சீரிய திறமை வேண்டும் செந்தமிழ் துணையாய் வேண்டும் நேரிய சிந்தை வேண்டும் நெற்றியில் ஒளியும் வேண்டும் பாரினை வெல்லும் பாட்டை பராசக்தி அருள வேண்டும்! -30/01/2019 --------------------------------------------- கவிஞரைப் பற்றி சிவா செங்கோட்டையன், 2/382, கொண்டக்காரனூர், சின்னப்பம்பட்டி(அ), ஓமலூர்(வ), சேலம்(மா), -- 636306 தொழில் -- விசைத்தறி நெசவாளர் படிப்பு -- இயந்திரவியல் பட்டதாரி Full story

தமிழ்த் தொழுகை

-விவேக்பாரதி தொழுதால்நான் தமிழ்த்தாயைத் தொழவேண்டும்! - புதுத் தோரணமாய் அவள்புகழை நடவேண்டும் - இனி அழுதாலும் தமிழில்தான் அழவேண்டும் - அந்த ஆனந்தம் போல்மண்ணில் எதுவேண்டும்? - வந்து முழுதாக எனைவார்த்த செந்தமிழே - நாவை முத்துரத மாக்கிவைத்த முத்தமிழே - உன்னை மொழியாகக் கொண்டதலால் இச்சிறுவன் - எந்த முக்தியையும் பெற்றதில்லை வான்தமிழே! பாரதியின் பாட்டுவழி உள்வந்தாய் - அந்தப் பாட்டமுதம் வழியென்னுள் கள்தந்தாய் - ஒரு காரணமில் லாமலுயர் பொன்தந்தாய் - ஆ ககனத்தைக் கைசேர்க்கும் கவிதந்தாய் - உனைச் சாரதியாய் நான்கொண்ட தேதிமுதல் - உமை சன்னிதிக்கு மட்டுந்தான் கால்பயணம் - மீதி நேரமெல்லாம் நீயோட்டும் வெள்ளிரதம் - இது நேர்ந்துவிட நான்செய்த தென்னதவம்? தொட்டாலே பொன்னாக்கும் வித்தையினை ... Full story

இனிக்கும் பொங்கல்

இதங்கள் ஆயிரம், விதங்கள் ஆயிரம், பதங்கள் ஆயிரம் உண்டு! உதிக்கும் ஞாயிறு, தழைக்கும் தாவரம், செழிக்கும் பூதலம் இன்று! துதிக்கும் கோகுலம், அனைத்தும் ஓர்குலம், உயிர்க்கும் மானுடம் இன்று! புதுக்கும் திங்களே, வெளுக்கும் கங்குலே, இனிக்கும் பொங்கலே இன்று!அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்! Full story

அந்த வருடம், புதிய வருடம்

சத்தியமணி வருவது யாரோ??...புது வருடமா!! தருவது தானோ ?? இனிய வரமா!! முகங்களைப் பார்த்து முறுவல் பெறுமா? உறவுகள் கூடி விருந்து தருமா? எந்நேரமும் வாட்ஸ்அப் வாட்ஸ்அப் வாட்ஸ்அப் எப்போதுமே ஃபேஸ்புக் ஃபேஸ்புக் ஃபேஸ்புக் இல்லையென்றால் ச்சேட்டிங் ச்சேட்டிங் ச்சேட்டிங் மிச்சமெல்லாம் ஸ்லிப்பிங் ஸ்லிப்பிங் ஸ்லிப்பிங் தங்க நேரம் வீணாகிக் கழிகின்றதே வாழ்வு வெறும் வயதாகி வளர்கின்றதே... (வருவது யாரோ?) தாயுடன் பாட நேரமில்லையா? தந்தையுடன் பேச வார்த்தையில்லையா? உறவுகள் ஒன்றாய்க் கூடவில்லையே? நனவுகள் நட்டம் பார்க்கவில்லையே? இந்த வருத்தம் நீக்கிடுமோ அந்த வருடம் புதிய வருடம் (வருவது யாரோ?) அறிவினில் பெற்றது அதையும் மறந்தோம் பிரிவினில் விட்டது எதையும் தொலைத்தோம் அனுபவம் கொடுத்ததை எங்கு நினைத்தோம் அதற்கும் மேலே தனித்துத் தவிர்த்தோம் இந்த வருத்தம் நீக்கிடுமோ அந்த வருடம் ... Full story

அவனருள் கும்பிடடா!

அவனருள் கும்பிடடா!
நல்லவை சுமந்து நன்மைகள் ஆற்றின் நாடு போற்றுமடா – நல்லது அல்லவை சுமந்து அல்லல்கள் வளர்ப்பின் அகிலம் தூற்றுமடா!   பிறப்பின் பயனும் பிறர்க்கெனச் சொல்லும் பணியை ஆற்றிடடா – தனிச் சிறப்பை அதிலும் செலுத்தியும் வாட்டும் சிறுமை தூற்றிடடா!   வாழ்வின் பயனும் புகழெனச் சொல்லும் வாழ்வை அமைத்திடடா – மிகத் தாழ்வுறும் நினைவை அறவே தள்ளியும் தர்மம் சமைத்திடடா!   ஏற்றமும் இறக்கமும் இரட்டைப் பிறவிகள் என்பதை அறிந்திடடா – நிலை மாற்றியும் இயற்கை காட்டுதல் உணர்ந்து மமதை எறிந்திடடா!   காற்று என்றும் ஓர்திசை தன்னில் காலமும் வீசாது – நலம் ஆற்றும் செயலில் நன்மைகள் ... Full story
Page 1 of 1112345...10...Last »
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.