Archive for the ‘பொது’ Category

Page 1 of 3123

இரு எழுத்தாளர்களின் சந்திப்பு!

-தமிழ்த்தேனீ ஒரு எழுத்தாளர் வருகிறார்; ஒரு எழுத்தாளர் அவரை வரவேற்கிறார். உக்காருங்க  நண்பரே  என்ன  சாப்படறீங்க? ஒண்ணும் வேண்டாம் சார்;  இப்போதான் காப்பி குடிச்சிட்டு வந்தேன். (மனதுக்குள் ஏதாவது குடுத்தா  நல்லாத்தான் இருக்கும்.) முதல்லே இந்தத் தண்ணீரைக் குடிங்க வெய்யில்லே வந்திருக்கீங்க. உள்ளே இருந்து எழுத்தாளர்  மனைவி வருகிறார். அடேடே  வாங்க வீட்டுலே எல்லாரும்  சௌக்கியமா? நல்லா இருக்காங்கம்மா; நீங்க நல்லா இருக்கீங்களா? உங்க வீட்டுக்காரர்  ஜமாய்க்கறார்! எப்பிடித்தான் இவருக்கு இவ்ளோ கற்பனை வருதோ  ரொம்ப ... Full story

இங்கிலாந்திலிருந்து ஒரு மடல். . . . .(236)

அன்பினியவர்களே! அன்பான வணக்கங்கள்.  ஒரு சில வார இடைவெளிக்குப்பின் இம்மடல் உங்களை நாடி வருகிறது. நான் மிகவும் முனைப்பாக ஈடுபட்டிருந்த ஒரு செயல் முடிவடைந்து விட்டது எனும் மகிழ்வில் ஆர்ப்பரிப்பதற்காகக் காத்திருந்த நான் காலத்தின் கோலத்தினாலும் சில மனிதாபிமானமற்ற வெறியர்களின் செயலாலும் கனத்த இதயத்தோடு இம்மடலை வரைகின்றேன்.உள்ளத்தில் ஓர் பதைபதைப்பு, உணர்வில் ஓர் துடிதுடிப்பு. கடந்த திங்கட்கிழமை எனது பேத்தியை மகனின் இல்லத்தில் சென்று பார்த்து விட்டு இரவு நேரம் கடந்து வந்ததினால் நேராக படுக்கைக்குச் சென்று விட்டோம் நானும் எனது மனைவியும்.அடுத்தநாள் காலை முதல்நாள் ... Full story

அன்னை 

அன்னை 
-சித்ரப்ரியங்கா ராஜா அன்பின் உருவம் இன்முகத்தரசி                                    ஈடில்லா குணவதி உத்தம பத்தினி ஊமையாய்ப் பலநேரம் எளிமையின் பிறப்பிடம் ஏற்றத்தாழ்வின்மை என்றும் ஐயம் தீர்க்கும் குரு ஒப்பனையற்ற தேவதை ஓய்வில்லா எந்திரம் ஔடதமாய் ஆயுள் வரை இஃதே அழகு அன்னை இனிதே பணிவோம் உன்னை!     Full story

ஆணடிமைகள்!

-தமிழ்த்தேனீ ஆண்களே விழித்துக்கொள்ளுங்கள்! பாகம் 1: இது பெண்களுக்கு எதிரான கட்டுரை அல்ல; ஆண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் கட்டுரை முயற்சி.  “Henpecked husbands“ என்று இதுவரைக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் “Henpecked Wives“   என்கிற சொல்லைக் கேள்விப்பட்டிருக்கிறோமா? கீழே எழுதியிருப்பதைப் படித்துவிட்டு உடனே பொங்காமல் சொற்களை அவசரப்பட்டு அள்ளித் தெளித்து விடாமல்  தீர ஆராய்ந்து  விவாதிக்க  தைரியமான  உண்மையான ஆண்பிள்ளைகளே வாருங்கள். அப்படி உண்மைகளைத் தைரியமாக சொல்லிவிட்டால் மறுநாளிலிருந்து உணவு கிடைக்குமோ கிடைக்காதோ என்கிற  தார்மீக  பயம் கொண்ட ஆண்பிள்ளைகள் இந்த இழையில் ... Full story

அன்னையர் தினம்!

-தமிழ்த்தேனீ உலகிலேயே லாபமில்லா நிறுவனம் அதாவது NON PROFITABLE ORGANAISATION ஆரம்பித்தவர் யார் தெரியுமா? அதாவது எந்த ஒரு லாபமும் இல்லாமல் எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒரு துணைப் பங்குதாரரையும் இணைத்துக்கொண்டு முதன் முதலாக லாபமில்லாத நிறுவனம் தொடங்கித் தங்களுக்கு வரும் பரிசுப் பொருட்கள், சொத்துக்கள் எல்லாவற்றையும் உபயோகிப்பாளருக்கே தந்து நஷ்டத்திலேயே இயங்கி ஆனாலும் மகிழ்ச்சியாக நிறுவனத்தை நடத்தி கடைசியிலே தங்கள் கையிலே ஒன்றுமில்லாமல் லாபம் ஈட்டும் நிறுவனத்துக்கு தள்ளப்படும் ஒரே லாபமில்லாத நிறுவனத்தைத் தொடங்கியவர்கள் இன்னமும் நடத்திக் கொண்டிருப்பவர்கள், இனி எக்காலத்திலும் தளராமல் நடத்தியே தீருவோம் ... Full story

தூரிகை உதறியதில் விழுந்த வர்ணம்!

-ராஜகவி ராகில் மழை இலைகள் பிரார்த்தனை கேட்டு நனைந்த கார்முகிற்செடி குளிர்ந்து குனிந்து தூவுகின்ற துளித் துளி ஈர மல்லிகை! கடல் அலைக் குதிரைப் படை வந்தும் சென்றும் காவல் காக்க தண்ணீர் தேச மன்னன் வாழ்கிறான் மீன் மக்களோடு!  அருவி மலைப் பொந்துக்குள்ளிருந்து புறப்படுகின்ற ஊற்று அரவம் இறங்கி விழுந்து சீறுகிறது... Full story

சாளிக்கிராமம் அடை நெஞ்சே! (பிரயாணக் கட்டுரை)

சாளிக்கிராமம் அடை நெஞ்சே! (பிரயாணக் கட்டுரை)
-என். ஸ்ரீதரன் நேபாள நாட்டிலுள்ள முக்திநாத் என்னும் சாளிகிராமப் பெருமாளைச் சேவிப்பது அவ்வளவு எளிதல்ல. பன்னிரு ஆழ்வாரில் ஒருவரான திருமங்கை ஆழ்வார் ஏராளமான திவ்விய தேச க்கோவில்களைக் குதிரையில் சென்று தரிசித்து மங்களாசாசனம் செய்துள்ளார். சாளிகிராமப் பெருமாளையும் பாடியுள்ளார். அந்தக் காலத்தில் நடந்து சாளிக்கிராமம் போவது மிகவும் கடினம் என்பதால் ’சாளிக்கிராமம் அடை நெஞ்சே’ என்று பாடியுள்ளார். முக்திநாத் பெருமாளைச் சேவிக்க வேண்டும் என்னும் என் நெடுநாளைய ஆசை இந்த வருடம் நிறைவேறியது. ஏப்ரல் 3ஆம் தேதி முதல் ஏப்ரல் 10ஆம் தேதி வரை ஸ்ரீ ... Full story

இங்கிலாந்திலிருந்து ஒரு மடல். . . (234)

அன்பினியவர்களே! அன்பான வணக்கங்கள். போனவாரம் மடல் வரையும்போது இவ்வார மடலின் கருப்பொருள் இதுவாக இருக்கும் என்று நான் எண்ணியிருக்கவேயில்லை . இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர்களில் ஒருவரான மறைந்த ஹெரால்ட் வில்சன் அவர்கள் ஒருமுறை பேசும்போது "அரசியலில் ஒருவாரக் காலம் என்பது மிக நீண்ட காலமாகும் " என்று குறிப்பிட்டது நினைவுக்கு வருகிறது. இவ்வாரத்துக்கும், போன வாரத்துக்குமான இடைவெளி இங்கிலாந்தின் அரசியல் உலகில் ஏற்படுத்திய மாற்றம் அது ஒரு மிகநீண்ட காலம் என்பது போன்ற உணர்வைத்தான் ஏற்படுத்துகிறது. மிகச் சிறந்த அரசியல்வாதியான ஹெரால்ட் வில்சன் எதற்காக அப்படிக் குறிப்பிட்டார் என்பதன் அர்த்தமும் தெளிவாகப் புரிகிறது. அது என்ன அப்படியான மாற்றம்? எனும் கேள்வி உங்கள் ... Full story

இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . (233 )

இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . (233 )
அன்பினியவர்களே! அன்பான வணக்கங்கள்!   இதோ அடுத்தொரு சித்திரைத் திங்கள் வாசலில் நான் வரையுமிந்த மடல் மூலம் உங்களுடன் மனம் திறக்க விழைகிறேன். இது தமிழர்களின் வருடப்பிறப்பா? இல்லையா ?எனும் விவாதம் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க இவ்விழாவினில் எமை ஆழ்த்தி அதன்மூலம் கிடைக்கும் ஒரு சிறிய மகிழ்வினை அனுபவிக்கத் துடிக்கும் மக்கள் ஒருபுறமென இச்சித்திரைத் திங்களின் வரவு பல முனைகளில் நிகழ்வுகளை முடுக்கிவிட்டுள்ளது. எது எப்படி இருப்பினும் காலம் காலமாக நாம் கடைப்பிடித்து வந்த ஒரு கலாசார நிகழ்வாக இதனைக் கருதுவது சரியேயாகும். எனது ... Full story

குருவும் சீடனும்!

குருவும் சீடனும்!
-தமிழ்த்தேனீ   சீடன்  : குருவே  நான்  என்னை உணர  என்ன செய்யவேண்டும்? குரு : நீ உன்னை உணர  உள்ளே பார்க்க வேண்டும். சீடன் :   உள்ளே பார்க்க  எப்படிப் பயிற்சி எடுக்க வேண்டும்? குரு : முதலில் வெளியே பார்க்கவேண்டும்  வெளியே பார்த்துப் பார்த்து  உள்வாங்கிக் கொண்டால் அதன் பிறகு உள்ளே பார்ப்பது சுலபமாகிவிடும். சீடன் :  அப்படியானால் ஆலயம் தொழவேண்டுமென்கிறீர்களா? குரு : ஆலயம் தொழலாம்  ஆனால்  ... Full story

நாளொரு பக்கம்: 6: 2017

நாளொரு பக்கம்: 6: 2017
-இன்னம்பூரான்     नभसो भूषणं चन्द्र: नारीणां भूषणं पति: | पृथिव्या भूषणं राजा विद्या सर्वस्य भूषणं ||   நப⁴ஸோ பூ⁴ஷணம்ʼ சந்த்³ர: நாரீணாம்ʼ பூ⁴ஷணம்ʼ பதி: | ப்ருʼதி²வ்யா பூ⁴ஷணம்ʼ ராஜா வித்³யா ஸர்வஸ்ய பூ⁴ஷணம்ʼ || சொல்லுக்கு அலங்காரம்/அணி சேர்ப்பதைப் பற்றி தமிழிலும், சம்ஸ்க்ருதத்திலும்  தண்டியலங்காரம் என்ற இலக்கணநூல் உளது. உவமைதான் எல்லா அலங்காரங்களுக்கும் மூலாதாரம் என்க.  மேற்படி கவிதையில் நிலாவொளி விண்ணுக்கு அழகு அளிக்கிறது என்றும், கணவன் பெண்களுக்கு அழகு தருபவன் என்றும், நாட்டுக்கு அரசன்தான் பூஷணம் (அலங்காரம்) என்றும், ... Full story

இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . ( 232 )

அன்பினியவர்களே! அன்பான வணக்கங்கள். மார்ச் மாதம் கடைசி வாரமாகிய இவ்வாரத்தில் இம்மடல் மூலம் நான் எடுத்து வரப் போகும் விடயம் என்னவாக இருக்கும் என நீங்கள் எண்ணலாம். கடந்த ஞாயிறு அதிகாலை அதாவது 26ஆம் திகதி அதிகாலை ஒரு மணி முன்னோக்கி நகர்த்தப்பட்டு இரண்டு மணியாக்கப்பட்டது. சிலர் என்ன இது என்று புருவத்தை உயர்த்தலாம் . வேறு ஒன்றுமில்லை! வருடாந்தரம் நடைபெறும் ஜரோப்பிய கோடைகால நேரமாற்றம் தான் அது. அட… இதைப் போய் பெரிய விஷயமாகச் சொல்ல வந்திட்டாரா சக்தி? எனத் ... Full story

நாளொரு பக்கம்: 5: 2017

நாளொரு பக்கம்: 5: 2017
-இன்னம்பூரான் மார்ச் 30, 2017 "I speak to everyone in the same way, whether he is the garbage man or the president of the university."  -Albert Einstein, physicist, Nobel laureate (1879-1955) ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஒரு விஞ்ஞானி மட்டுமல்ல; அவர் ஒரு ஆத்மஞானி. சமத்துவத்தை எளிய சொற்களில், அதுவும் தனது பண்பே அதுதான் என்பதையும் இரு வரிகளில் கூறிவிட்டார். அவரது பெளதிக அறிவாற்றல், ஆய்வுத் ... Full story

நாளொரு பக்கம்: 2: 2017

நாளொரு பக்கம்: 2: 2017
-இன்னம்பூரான்   மார்ச் 27, 2017 பிரசுரம்: History is a novel whose author is the people. - Alfred de Vigny, poet, playwright, and novelist (27 Mar 1797-1863) கவிஞர் Alfred de Vigny அவர்களின் 220வது ஜன்மதினம் இன்று. அவரை முன்வைத்து எழுத நேர்ந்திருப்பதை கண்டு மகிழ்கிறேன். ராஜாராணி கதைகளில் கைசரக்கு அதிகம் இருக்கும்; ஏனெனில் புகழ்ச்சி, தற்புகழ்ச்சி, முகஸ்துதி, மர்மங்கள் ஒளிந்து விளையாடுவது எல்லாம் சிம்மாசனத்தில் ... Full story

இங்கிலாந்திலிருந்து ஒரு மடல். . . (231)

இங்கிலாந்திலிருந்து ஒரு மடல். . . (231)
அன்பினியவர்களே! அன்பான வணக்கங்களுடனும் துயரம் மிகுந்த நெஞ்சத்துடனும் உங்கள் முன்னே அடுத்த மடலுடன் நான். இவ்வாரம் வரும் ஞாயிறு அதாவது 26ஆம் திகதி இங்கிலாந்தில் "அன்னையர் தினம்" கொண்டாடப்படுகிறது. அன்னையின் தினத்தின் அருமைகளைப் பற்றியும் எனது அன்னையின் நினைவுகளைப் பற்ரியும் மடல் மூலம் உங்களுடன் உறவாட எண்ணியிருந்த எனக்கு இம்முறை அன்னையர் தினத்தின் போது மூடத்தனமான பயங்கரவாதச் செயலுக்கு தமது உயிரை இழந்து விட்ட துயர எண்ணங்களுடன் மடலை வரைய வேண்டிய நிர்ப்பந்தத்தைக் காலம் என்மீது திணித்து விட்டது. ... Full story
Page 1 of 3123
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.