Archive for the ‘இசைக்கவி ரமணனின் நவராத்திரி கவிதைகள் – பாடல்கள்’ Category

நவராத்திரி – 04

நவராத்திரி – 04
இசைக்கவி ரமணன்     பாதையாய்த் தோன்றிப் பயணமாய் நீள்கிறாள் பக்கத் துணையாய்ப் பரிந்து வருகிறாள் ஆதரவில் அன்னையாய், கண்டிப்பில் தந்தையாய் அக்குவே றாணிவேறாய் அத்தனையும் ஆய்கிறாள் காதலே தேகமாய்க் கட்டழகாய், நெஞ்சின் கவனத்தை ஈர்த்துக் கரத்தில் முகர்கிறாள் சோதனை செய்து புடம்போட்டுக் காய்ச்சுவாள் சுவடு துளியுமின்றிச் சுத்தமாய் நீக்கிடுவாள்   நெற்றித் திரையிலோ நெஞ்சிலோ நேர்வருவாள்... Full story

நவராத்திரி 03 (பாடல்)

நவராத்திரி 03 (பாடல்)
இசைக்கவி ரமணன்   வாக்கிலொளி மின்னவைத்து வாழ்விலிருள் பின்னவைத்து வக்கணையாய் நீ அடிக்கும் கூத்து, இதை வாழ்த்திடுவர் தூற்றிடுவர் பார்த்து, அம்மா போக்கிடமே தெரியாமல் போகும்நதி போலே என்னைப் புரட்டிப் புரட்டி எடுக்கின்றாய், பொருள் புரியவில்லை சிரிக்கின்றாய் பார்க்குமிடம் அத்தனையும் நீக்கமற நீயிருந்தும் ஏக்கமெனும் பேய்க்கெனை நேர்ந்தாயே! உயிரில் எறும்பென எங்கோ ஊர்ந்தாயே! அம்மா சீக்கிரமே ... Full story

உலையுள்ளே உனைக்கண்டேன் – நவராத்திரி கவிதை (2)

உலையுள்ளே உனைக்கண்டேன் - நவராத்திரி கவிதை (2)
இசைக்கவி ரமணன்   உலையுள்ளே உனைக்கண்டேன் உற்ற பிறப்பும் உறுதுயரும் இன்பமும் பெற்றவளே உன்றன் பிரசாதம்! மற்று வினையே தெனக்கு? விதியே தெனக்கு? உனையேநான் என்றேன் உணர். உணர்வின் முனையின் துளியாய்க் கனலும் குணமற்ற விந்தைக் குழந்தாய்! ரணமான நெஞ்சைத் தடவி நினைவைக் குலவியதைப் பஞ்சாக்கித் தீயாய்ப் பருகு. பருகப் பெருகும் பரதாகம்! நெஞ்சம் உருக ... Full story

வருவாளோ? – நவராத்திரிப்பாடல்கள் (1)

வருவாளோ? - நவராத்திரிப்பாடல்கள் (1)
  கங்கைக் கரையின் ஓரத்தில், ஒரு காலை புலரும் நேரத்தில் கன்னங் கரிய சின்னஞ் சிறுமி காலை இணைத்தென் முன்நின்றாள் சிங்கம் பிடரி சிலிர்த்ததுபோல் செங்கதிர் எதிரே பளபளக்க சேவடி ஈரம் என்விழி ஈரம் சேர்ந்த கணத்தினை அவளேற்றாள் சிட்டுக் குருவிச் சிறகு விரலால் செம்மைத் திலகம் ஏற்றினளே! மல்லாந் திருந்த இரவொன்றில் மறந்த கனவின் ... Full story

உன்னிலே நான் துளி என்னில்நீ உயிரொளி (பாடல்)

உன்னிலே நான் துளி என்னில்நீ உயிரொளி (பாடல்)
இசைக்கவி ரமணன் நீ என்பதா? இல்லை நானென்பதா? தனிமையில் உன்னை நான் நானென்பதா? தன்னந் தனிமையில் என்னை நான் நீயென்பதா? உன்விழி அசைவில் என்னுயிர் ஆடும் புன்னகை மலர்ந்தால் புதுக்கவி பாடும் உன்னிலே நான் துளி என்னில்நீ உயிரொளி இன்னமும் ஏனம்மா துன்பத்தின் இடைவெளி (நீ) விரைந்து வரும் அலையில் வீற்றிருக்கும் மலையில் இதயத்திலே இரண்டும் ... Full story

என்னழகியே!

என்னழகியே!
இசைக்கவி ரமணன்   மதுவெழுந்து மலராகி மலர்விரிந்து மனமாகி மனமுழுதும் உனதானதே மகரந்தம் கனவாகி இதழ்யாவும் நினைவாகி மணமெங்கும் பெயர்வீசுதே இதுவரையில் கதையொன்றை இங்கங்குமாகவே எழுதியகை இளைப்பாறவே இமையடியில் மைதொட்டுன் விரலெழுதத் துவங்கியதும் இதயத்தில் குயில்கூவுதே இதுகேட்டு முகில்சூழ இணைகூடும் தருணமென இளையமயில் நடமாடுதே இமைக்காத தேவர்க்கும் விண்மின்னும் மீனுக்கும் இதுவிந்தை யானதம்மே எதுசெய்தும் தீராத ... Full story

அன்பில் ஒன்றான சங்கம்

அன்பில் ஒன்றான சங்கம்
இசைக்கவி ரமணன் கனவிலே மேவும் விடியலில் வந்து காதில் கவிதைகள் சொல்கிறாய், அதை நினைவிலே பாடி வைக்கிறேன், உனை நாளெலாம் தேட வைக்கிறாய் மனதிலே தைத்த முள்ளினை, உன் மலர்விரல் என்று கிள்ளுமோ? துளி மனமிலாத பெரும் மர்மமே! அது மறந்து பிள்ளையைத் தள்ளுமோ? துருவமாய் அன்னை பிள்ளையா? இந்தத் துயரை மிஞ்சும்துயர் உள்ளதா? கருவமா? இது ... Full story

சக்தி முற்றம்

சக்தி முற்றம்
இசைக்கவி ரமணன்   இருள் இருளே அஞ்சிப் பதறும் பேரிருள் இழைபிரியாமல் எழுந்து பரவி இனியொரு திசையே இலாதபடி இருந்தும் அசைந்தும் பராவி அவாவி ஏதுமே இலாத இலாத எதிரை இருக்க வைத்துக் கரைத்துக் குடிக்கும் இருள் ஒருநாள் ஆயிர மாயிரம் கோடிக் கதிர்கள் வாயினைத் திறந்து வற்றாச் செம்மைப் பாயினை விரித்த பயங்கரி, எனது... Full story

ஏழையினை மறந்துவிடாதே!

ஏழையினை மறந்துவிடாதே!
இசைக்கவி ரமணன்   உன்களிப்பு தர்மம் உன்விருப்பம் சிருஷ்டி உன்னிமைப்பு மாயம் உன்னிமைப்பே முக்தி! என்னசொல்லி என்னசெய்து உன்னை அறிவது? எங்கு மெதுவு மானவுன்னை என்று காண்பது? என்றோநீ வைத்தபுள்ளி எட்டும்வரையிலே, நீ எழுதும்கதை சொந்தக்கதை யாகத் தொடருது உன்னை மீறி எண்ணமொன் றிருக்க முடியுமா? உனதல்ல எனதென்று தடுக்க முடியுமா? உள்ளமென்னும் பள்ளமெங்கும் பாயும் வெள்ளமே!... Full story

என் காளிக்கு..

என் காளிக்கு..
இசைக்கவி ரமணன்   பச்சைரத்தம் சொட்டச்சொட்டப் பட்டைநாக்கு பளபளக்கப் பரபரப்பாய் எதைவிழுங்கப் பார்த்திருக்கிறாய்? நீ படைக்குமுன்னே யாவும்விழுங்கித் தீர்த்திருக்கிறாய்! அச்சமஞ்சும் உன்வடிவை அகம்குலைக்கும் உன்னுருவை அள்ளிப்பருகத் துள்ளிவந்த பிள்ளையைப் பாராய்! அவன் அழகுத்தமிழின் மழலைகேட்க அம்மா வாராய்! இச்சைபோன்ற இடரையெலாம் மிச்சமின்றி விழுங்கிவிடு என்னையுன்றன் பிள்ளையாக வளையவரவிடு, என்றுமெதிரில் நின்றுனன்பில் அளையும்சுகம்கொடு! கச்சைக்கட்டிக் கொண்டுவரும்... Full story

பாதமலர் போதும்

பாதமலர் போதும்
இசைக்கவி ரமணன்   மலருக்குத் தேனழகோ மணமழகோ நிறமழகோ? என் மனதுக்கு நீயன்றி மற்றழகொன் றேது? மறையெல்லாம் சொன்னாலும் மற்றொருசொல் லேது? சிலருக்கே திருவுண்டு சிலருக்கே அறிவுண்டு சிலருக்கோ நீசிரித்துச் சேர்ந்த அருளுண்டு சிறுபிள்ளை என்னெஞ்சில் நீதானே உண்டு! நாடகமாய் இவ்வையம் பூடகமாய் மனிதமனம் கூடெங்கும் நுழைந்துமலர் சூடுமுன் கரத்தால், உன்னைத்... Full story

சிக்காத அமரியல்லவா!

சிக்காத அமரியல்லவா!
இசைக்கவி ரமணன் ஏறெழுந்து வந்துநெஞ்சைக் கூறுபோடும் தங்கமே! என்றன் கனவில் கவியில்வந்து இடிசிரிக்கும் சிங்கமே! என்னை ஏறெடுத்துப் பார்த்துவிட்டால் ஏதுனக்கு பங்கமோ? எனக்கும் உனக்கும் இடையினிலே எவர்வகுத்த சுங்கமோ! தேரெழுந்த தாயிதயம் ஊர்திரண்ட தாகமனம் யாரெந்தக் கொடியசைக்கக் காத்திருக்கிறாய்? அடி யாமளையே யார்வரவைப் பார்த்திருக்கிறாய்? தேரழுந்தித் தெருநொறுங்கி ஊர்சிரிக்கவா? என்றோ தீர்ந்தகதை தொடர்தல்கண்டு பார்விழிக்கவா? கார்குழலை மின்னெடுத்துக் கட்டமுயலும் ... Full story

உன்றன் பிள்ளை நான் (பாடல்)

உன்றன் பிள்ளை நான் (பாடல்)
இசைக்கவி ரமணன்   உந்தன் பிள்ளை நான், என்றும் எந்தன் அன்னை நீ ஏங்கியேங்கி அழுவதுதான் என்றன் வாழ்க்கையோ? என்னைப் பார்த்துச் சிரிப்பதுதான் உன்றன் பாசமோ? என்ன சொந்தமோ? என்று வந்த பந்தமோ? மந்திரங்க ளாலுனக்கு மாலை சூட்டுவார், கனல் மணமணக்கும் சொல்லெடுத்துக் காலில் தூவுவார் சந்திரனை சூரியனைச் சடையில் பூட்டுவார், அந்தி சாயும்பொழுதில் தேன்குழைத்துச் சாந்து சாற்றுவார்... Full story

என்னெதிரே வா உடனே!

என்னெதிரே வா உடனே!
இசைக்கவி ரமணன்   கண்ணிருந் தென்னபயன்? நீ காட்டவில்லை உன்வடிவை, நீ பெண்பிறந் தென்னபயன்? என் பேதைமையைத் தீர்க்கவில்லை மண்ணிருந் தென்னபயன்? இன்னும் மண்டியிட வில்லைவிண் எண்ணரிய பேரழகே! என்னெதிரே வா உடனே! உன்னருகே நானிருந்தால், அடி உனக்குமொரு துணையிருக்கும் என்னருகே நீயிருந்தால், அடி என்றென்றும் தமிழிருக்கும் வன்னங்கள் களைந்தாலோ, அடி வானுண்மை புரிந்துவிடும் இன்னுமென்ன தயங்குகிறாய் என்னெதிரே வா உடனே! வில்லாலே உயிர்கொல்வார்... Full story
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.